Tuesday, January 14, 2025

ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்

மௌலவி பி.ஜே அவர்கள் என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற 1 மணித்தியாலங்கொண்ட ஒரு சீடியைப் பற்றி மௌலவி பி.ஜே முஜாஹித்திற்கு எதிராக சீடி பேசியிருக்கிறார் என தீர விசாரிக்காமல் பேசிவருவதாகக் கேள்விப்படுகின்றேன்.

உண்மையென்ன?
SLTJ பற்றியும் என்னைப் பற்றியும் சில விமர்சனங்கள் மௌலவி பி.ஜே யிடம் இருப்பது பற்றி மௌலவி பி.ஜே SLTJ தலைவர் வஸ்னி நிஸாரிடத்தில் சொன்னபோது அது பற்றி அவருடன் பேசுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சென்னைத் தலைமையகத்திற்கு சென்றிருந்த SLTJ தலைவர் வஸ்னி நிஸாரோடு நடந்த கலந்துரையாடல் வஸ்னி நிஸாரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தகவலிற்காக மாத்திரம் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு சில தவறான நோக்கங்களைக் கொண்டோரால் பரிமாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த வடிவம் எடுத்திருக்கின்றது.

சீடியில் என்ன பேசப்பட்டுள்ளது?
இவ்விடயத்தை நானே அறிமுகப்படுத்தி விரிசலைப்பெரிதுபடுத்த எனது மனம் எனக்கு இடந்தரவில்லை, சமாதான நோக்கம் கருதி அதனைத் தவிர்த்துக் கொள்கின்றேன். அந்த ஓடியோவிற்குப் பின் பலவிதமான கடிதப்பரிமாற்றங்கள் SLTJயிற்கும் TNTJயிற்கும் இடையில் நடந்தன. இது சம்பந்தமாக என்னிடம் SLTJயினர் ஒரு விளக்கக்கடிதம் ஒன்றை வேண்டினர். அக்கடிதம் TNTJ தலைமையகத்திற்கு அவர்களுடைய கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தை அந்த ஓடியோவிற்குரிய பதிலாக இங்கே பதிவுசெய்கிறேன்.

முஜாஹித் இப்னு ரஸீன்,
37, தக்கியா வீதி,
போருத்தோட்ட,
கொச்சிக்கடை.
mujahid@mujahidsrilanki.com

05-01-2009.

எனது ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்’ சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

TNTJ யினர் எனது நிலைப்பாடுகள் பற்றி விமர்சித்தெழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில்வேண்டியதிற்கிணங்க இம்மடலை வரைகிறேன். அம்மடல் நான் TNTJ யின் மார்க்க சம்பந்தமான நிலைப்பாடுகளில் முரண்படுவதை விமர்சித்து எழுதப்பட்டிருந்ததை அவதானித்தேன்.

TNTJ யோடு தவ்ஹீத் மௌலவிமார்கள் மார்க்க விடயங்களில் முரண்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் அதனை எழுதவில்லை. மாற்றமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் TNTJ யோடு இணைந்து செயல்படுவதாலும் TNTJ யோடு இணைந்து செயற்படும் கிளையோ, கிளையின் அங்கத்தவராக இருக்கும் மௌலவியோ ஜமாஅத் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்வதாயின், என்ன அடிப்படையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அந்தக் கருத்தை முன்வைக்கின்றார் என ஜமாஅத் உலமாக்களோடு கலந்துரையாடிய பின்னரே அவர் அந்தக் கருத்தைச் சொல்வது, சொல்லாமல் இருப்பது என்ற முடிவுகளுக்கு வரவேண்டும்’

இதுவே அந்தக் கடிதத்தின் சுருக்கமாக நான் காண்கிறேன்.

கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:-

நான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகர் என்ற தகவலிலே அல்லது எண்ணப்பாட்டிலேதான் அக்கடிதம் எழுதபட்டிருக்கிறது. அழைப்பு இதழை பொறுப்பேற்றிருப்பதும், மத்ரஸாவின் அதிபராக இருப்பதும், ஜமாஅத்தின் பெரும்பாலான பிரச்சாரங்களில் பங்கேற்பதும் இதனை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது.

எனவே, முதலில் எந்த இயக்கத்திலும் நான் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகராகவோ, ஊதியம் பெறும் பிரச்சாரகராகவோ இல்லையென்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலைப்பாடு இஸ்லாத்தில் அது தடையென்பதற்காக அல்ல. தனிப்பட்ட எனது சுயமுடிவு. அவ்வாறு அங்கத்துவம் பெறுவதில் பல்வேறுபட்ட அணுகூலங்கள் இருப்பதுபோல் பிரதிகூலங்களும் இருக்கின்றன. எனது வாழ்வாதாரப் பிரச்சினைகளை எப்பொழுதும் தனிப்பட்ட ரீதியில் தீர்த்துக்கொள்வதையே தீர்க்கமான முடிவாகக் கொண்டுள்ளேன். இதன் அடிப்படையிலேதான் நான் தஃவாக் களத்தில் இதுவரை காலமும் இயங்கிவருகின்றேன்.

மார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும்

01-உளத்தூய்மையோடும்.

02-உரிய முயற்சியோடும்.

03-சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு முரண்படுகிறதா? எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா? அல்லது அதற்கு முரண்படுகிறதா? என்றோ, அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகின்றதா? என்றோ பார்க்கமாட்டேன்.

இதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.

அதே நேரத்தில் எனது ஆய்வின் முடிவை யார் கலந்துரையாட விரும்பினாலும் அது யாராக இருந்தாலும் நான் தயாராகவும் இருக்கின்றேன். (எந்தக் கலந்துரையாடலாயினும் அது வீடியோப்பதிவு செய்யப்படுவதையே நான் விரும்புகின்றேன்.)அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிற்கு எனது ஆய்வுகள் முரண்படக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியமே தவிர வேறு எவரோடு முரண்பட்டாலும் அந்த முரண்பாடுகள் ஐம்பதல்ல ஐந்நூறாக இருந்தாலும் அதுபற்றி எனக்கு கவலைகிடையாது; நான் கவலைப்படவும் கூடாது.

கடைசியாக, நான் இரண்டு முகத்தோடு நடந்ததாக மௌலவி பீ.ஜே அவர்கள் குறிப்பிடும் அனைத்தும் தவறான செய்திகள் என்பதையும் அதற்கு சில பொய்யர்களின் தகவலைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

நான் மிகவும் வேதனைப்படுகின்ற விடயம் எனக்கும் மௌலிவ பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்குமிடையில் இருந்த ஓர் அறிவுப்பூர்வமான நற்புறவு இதுபோன்ற வதந்திகளால் சிதைக்கப்பட்டதுதான். இந்த நிகழ்வு எனது நிலையிலுள்ள ஒரு மாணவனுக்கு துரதிஷ்டமே. ஆனாலும் அல்லாஹ் நாடியவைகளே இவ்வுலகில் நடக்கும்.

இறுதியாக, மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன், மார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் ஸுன்னாவையும்

  1. உளத்தூய்மையோடும்.
  2. உரிய முயற்சியோடும்.
  3. சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா? எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா? என்றோ அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்கிறார்களா? என்றோ பார்க்கமாட்டேன்.

இதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.

இறுதி வரைக்கும் அல்லாஹ் சொல்வதும் அவனது தூதர் சொல்வதுமே மார்க்கம் என்ற முடிவில், உறுதியோடு மரணிக்க எனக்கும் உங்களுக்கும் பிரார்த்தித்த வண்ணம் இம்மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு

முஜாஹித் இப்னு ரஸீன்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts