دلائل النبوة للبيهقي محققا (5. 382)
بَابُ وَفْدِ نَجْرَانَ (1) وَشَهَادَةِ الْأَسَاقِفَةِ لِنَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّهُ النَّبِيُّ الَّذِي كَانُوا يَنْتَظِرُونَهُ، وَامْتِنَاعِ مَنِ امْتَنَعَ مِنْهُمْ مِنَ الْمُلَاعَنَةِ ومَا ظَهَرَ فِي ذَلِكَ مِنْ آثَارِ النُّبُوَّةِ.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ: مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ:وَفَدَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ نَصَارَى نَجْرَانَ بِالْمَدِينَةِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ النَّدِيِّ، قَالَ: لَمَّا قَدِمَ وَفْدُ نَجْرَانَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وسلم دَخَلُوا عَلَيْهِ مَسْجِدَهُ بَعْدَ الْعَصْرِ، فَحَانَتْ صَلَاتُهُمْ، فَقَامُوا يُصَلُّونَ فِي مَسْجِدِهِ فَأَرَادَ النَّاسُ مَنَعَهُمْ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعُوهُمْ فَاسْتَقْبَلُوا الْمَشْرِقَ فَصَلُّوا صَلَاتَهُمْ.
‘நஜ்ரான் தூதுக் குழுவின் வருகை, அவர்களின் மத குருமார்கள் அவர்கள் எதிர்பார்த்திருந்த நபி முஹம்மதே என்று சாட்சி பகர்தல், அவர்களில் நபியவர்களை மறுத்தோறும் நபியவர்களின் முபாஹலா அழைப்பை ஏற்காமை….. பற்றிய பாடம்’
‘நஜ்ரானிலிருந்து மதீனாவிற்கு நபியவர்களை சந்திக்க ஒரு கிறிஸத்தவ தூதுக் குழு வந்தது. அஸரிற்குப் பின்னர் நபிகளாரின் பள்ளிவாயிலில் நுழைந்தபோது அவர்களின் வணக்க நேரம் வந்ததும் பள்ளிவாயலிலே வணங்க எழுந்து நின்றார்கள். மக்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது நபியவர்கள் ‘அவர்களை விடுங்கள்’ என்றார்கள். அதன் பின் அவர்கள் கிழக்கை நோக்கி தங்கள் வணக்கத்தை மேற்கொண்டார்கள்.
ஆதாரம்: தலாஇலுன் நுபுவ்வா : 5-382 இமாம் பைஹகியுடையது
“இந்த செய்தியில் நபியவர்கள் பிறமதத்தினரின் வணக்கத்தை அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டிய பள்ளிவாயலில் அனுமதித்துள்ளார்கள். இது நபியவர்களின் உயர்ந்த மத சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. அதே போன்று பிறமத குருக்களை நமது பள்ளிவாயல்களில் அவர்களின் கொள்கைகளைப் பேசவும் அவர்களை நாம் கௌரவப்படுத்தவும் ஆதாரமாகக் கொள்ள முடியும் என சிலர் வாதிக்கின்றனர். இதில் அவர்கள் பல மோசமான தவறுகளை விடுகின்றனர்.
அவர்கள் இந்த செய்தியின் தொடர்ச்சியை அவதானிக்காமல் புறக்கணிக்கின்றனர். இமாம் பைஹகியின் தலைப்பே அதனை நமக்கு உணர்த்துகிறது. ‘நஜ்ரான் தூதுக் குழுவின் வருகை, அவர்களின் மத குருமார்கள் அவர்கள் எதிர்பார்த்திருந்த நபி முஹம்மதே என்று சாட்சி பகர்தல், அவர்களில் நபியவர்களை மறுத்தோறும் நபியவர்களின் முபாஹலா அழைப்பை ஏற்காமை….. பற்றிய பாடம்’ நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவே அவர்கள் வந்துள்ளனர். அவர்களை தமது பள்ளியில் கண்ணியப்படுத்தி அவர்களுக்கு வெள்ளைத் துணி விரிக்கவோ அவர்களது கொள்கையைச் சொல்லவோ நபியவர்கள் அழைக்கவில்லை. இன்னும் அவர்களின் மத குருமார்கள் நபியவர்களே அவர்கள் எதிர்பார்த்த இறைதூதர் என்றும் சாட்சி பகர்கின்றனர். மறுத்தவர்களை நபியவர்கள் முபாஹலாவிற்கு அழைத்தும் உண்மையை அவர்களது உள்ளங்கள் அறிந்திருந்ததால் அந்த முபாஹலா அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. இந்த வடிவம் எமக்கு உணர்த்துவது நபியவர்கள் பிறமத குருக்களிடத்தில் மார்க்கத்தை சமாளித்துள்ளார்கள் என்பதையா மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பதில் அவர்களுக்கு இருந்த துணிவையா?. வணங்க அனுமதித்ததையும் சிறு நீர்கழிக்க அனுமதித்ததாக வரும் செய்தியையும் ஒரே நிலையிலேயே பார்க்க வேண்டும். சிறு நீர் கழிக்க அனுமதித்ததை வைத்து எனவே பிறமதத்தினர் முஸ்லிம்களின் பள்ளியில் சிறு நீர் கழிக்கலாம் என்ற முடிவு எடுத்தல் எவ்வளவு முட்டால்தனமோ அதை விட சற்றுங்குறையாத முட்டால்தனமே பிறமதத்தினர் அவர்களது வணக்கங்களை நமது மஸ்ஜித்களில் செய்ய அனுமதிக்கலாம் என்ற முடிவுக்கு வருவது.
இவையனைத்தையும் நாம் சொன்னது இந்த ஹதீஸை அவர்கள் வாதிப்பது போன்று புரிந்துகொள்ள முடியாது என்பதை விளக்கவே தவிர இது ஆதாரப் பூர்வமான செய்தி என்பதற்கு அல்ல இந்த செய்தி மிக பலஹீனமான செய்தி. நஜ்ரான் தூதுக் குழுவின் வருகை சம்பந்தமான முழுமையான செய்திகளை
ஸீரது இப்னு ஹிசாம் 2:175,
இப்னு ஸஃத் 1:357,
புதூஹுல் புல்தான் லில் பலாதிரி : 70
போன்ற நூற்களில் காணாம். இந்த செய்தியை நபிகளார் காலத்தில் நடந்ததாக அறிவிப்பவர் முஹம்மத் இப்னு ஜஃபர் இப்னு ஸுபைர் . இவர்கள் நம்பகமான அறிவிப்பாளராக இருப்பினும் இந்த செய்தியை இவர் பெற்ற வழியைக் கூறவில்லை. இவர் நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களில் ஒருவரல்ல. அல்லது நபியவர்களின் மிகப் பெரிய தோழர்களை சந்திக்கின்ற காலத்தில் வாழந்தவர்களில் ஒருவரும் அல்ல நபித் தோழர்கள் காலத்தில் வாழ்ந்த தாபிஈன்களில் இளவயதினரது காலத்தில் வாழ்ந்தவர். இந்த செய்தியின் காலத்திற்கும் இவரிற்குமிடையில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளியுள்ளது. எனவே இச்செய்தியை இவருக்கு யாரேனும் இட்டுக்கட்டியும் சொல்லியிருக்க முடியும். இது போன்ற செய்திகளை ஹதீஸ்கலையில் முஃலல் என்பார்கள்.
எனவே இது போன்ற கோளாறுள்ள செய்திகளை கோளாறுள்ள சிந்தனைகளுக்கு முன்வைக்காமல் நேர்மையாக சிந்திக்குமாறு அவர்களை உபதேசிக்கிறோம். கிறிஸ்தவ பாதிரிகளுடன் சமரசம் செய்ய இவ்வளவு பிரயத்தனம் எடுக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகளுடன் பகமை பாராட்டுவது ஆச்சரியமே