Thursday, November 21, 2024

அறிஞர் அபூ இஸ்ஹாக் அல் ஹுவைனி … எழுதிய மறுப்பு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு-par1

உஸ்தாத் கஸ்ஸாலியவர்கள் சமகாலத்தில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவர். இவர் பல சிறந்த பண்புகளைக் கொண்ட இஸ்லாமியப் பிரச்சினைகளை சிறந்தவிதத்தில் கையாண்டவர்களில் ஒருவர். கேட்போரின் காதுகளை ஆக்கிரமிக்கின்ற கவர்ச்சி மிக்க பேச்சாளர். அதிகமான உள்ளங்களுக்கு அல்லாஹ் இவர் மூலம் வாழ்வளித்துள்ளான். இவருடைய ஜும்ஆ உரைகளுக்கு இதில் விஷேட பங்குண்டு. மதச்சர்பற்றோர், கிறிஸ்தவ, யூத சக்திகளிடமிருந்தும், ஏனைய இஸ்லாமிய விரோத சக்திகளிடமிருந்தும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் இவருக்கு பாராட்டத்தக்க பங்குண்டு.

     அது போன்று இஜ்திஹாதிற்குற்படும் மஸ்அலாக்களை இஸ்லாமிய அகீதாப் பிரச்சனைகள் போன்று மாற்றும் இளைஞர்களை நெறிப்படுத்துவதில் பரிய பங்களிப்பு செய்துள்ளார். மார்க்கம் புறக்கணிக்கப்டுகின்ற இது போன்ற சூழலில் இந்த நடைமுறை இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சிக்கு எந்தப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை. இது போன்ற முயற்சிகளுக்காக உஸ்தாத் கஸ்ஸாலியை நாம் பாராட்டுகிறோம். அவருக்காக இறைவனிடம் தவ்பீக்கை கேட்கிறோம்.

இது ‘ஹதீஸ்களை அறிஞர்களுக்கும் பிக்ஹுத் துறை அறிஞர்களுக்கும் மத்தியில் ஸுன்னா’ என்ற நூலிற்கான மறுப்பின் ஆரம்பப் பகுதி. தாபிஈ முஹம்மதிப்னு ஸீரீன் அவர்களின் ‘உன் சகோதரனனின் நலவுகளை மறைத்து அவனுடைய மிகமோசமான தவறுகளை நீ கூறுவதுதான் உன் சகோதரனுக்கு நீ செய்யும் அநியாயமாகும்’ என்ற கூற்றுக்கமைவாகவே உஸ்தாத் கஸ்ஸாலியவர்களிடம் நானறிந்த சில பாராட்டத்தக்க அம்சங்களை அவருக்கான இந்த மறுப்பில் பதிவு செய்துள்ளேன்.

      தனது இந்த நூலில் உஸ்தாத் அவர்களுக்கு குழப்பமாகிப் போய் முன்வைத்த சில பிரச்சனைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்க நான் அவருக்கோர் துணையாக இருக்க வேண்டும் என என்னால் முடியுமான அளவு ஆர்வம் எடுத்துள்ளேன். ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் எவருக்கம் எற்படும் குழப்பங்களே உஸ்தாத் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த விளக்கக் குழப்பங்களாகும். இத்தகைய குழப்பமுள்ளவர் தான் அறியாதுவிட்டால் அது பற்றிய அறிவுள்ளவரிடம் கேட்பது கடமை. இதில் குறையேதுமில்லை. மாற்றமாக அவ்வாறு நடப்பவரின் நேர்மையான போக்கையே அது குறிக்கும். நேர்மை ஓர் அரிதான பண்பு.

     இந்த மறுப்பில் இயன்றளவு உஸ்தாத் அவர்களுடன் நளினமான போக்கைக் கடைபிடித்துள்ளேன். எதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோ அதிலேயே என் கவனத்தைக் கூடுதலாக செலுத்தியுள்ளேன். ஆனால் சில இடங்களில் உஸ்தாத் அவர்களின் போக்கிக்கேற்ப நானும் கடுமையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தியுள்ளேன். உஸ்தாத் பிறரை அளந்த அளவுகோளின்படியே நாமும் அவரை அளந்திருந்தால் விமரிசனத்தால் பொரிந்து தள்ளியிருப்போம். ஆனாலும் கவிஞர்(ஸுஹைர் இப்னு அபீ ஸல்மா) சொல்வது போன்று:

இன்னல் தருபவர் என்று தெரிந்திருந்தும் மனதிற்கெடுக்காமல் மன்னித்து விட்டீர்
இன்னொருவரை சங்கைப்படுத்தவே இவருடன் இரக்கமாய் நடந்துகொண்டீர்.

இந்த மறுப்பை எழுதுமாறு பலர் என்னிடம் வேண்டிய போது நேரமின்மை, வேலைப்பழு காரணமாக மறுத்துவிட்டேன். அல்லாஹ்வுக்காக கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் இதை எழுதுமாறு என்னை சிலர் வினயமாய் பணித்தனர். இது பர்ழ் கிபாயா என்றும் அவர்கள் நம்புவதாகச் சொன்னார்கள்.

     அடிப்படைக் கோட்பாடுகளை, மார்க்க ஆதாரங்களை கடுமையாக வரையரையில்லாமல் விமரிசிக்கும் போக்கும் முஸ்லிம் சமூகத்தின் அறிஞர்ளை விமரிசிக்கும் முறையில் காணப்படும் அலட்சியமான துணிவும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் முஸ்லிம் சமூகத்துக்கு இதனால் எற்படப் போகும் ஆபத்தை நானும் அறிந்ததால் இந்த முன்னரையை எழுதுகிறேன். தகவல்களை முன்வைப்பதிலும் விமரிசிப்பதிலும் அறிவியல் அமானிதத் தன்மையை இழந்தநிலையில் உள்ள உஸ்தாத் அவர்களின் குழறுபடிகளில் சிலதைத் தெளிவுபடுத்துவதற்காக சுருக்க முன்னுரையாக இதை எழுதினேன். இப்புத்தகம் இன்ஷா அல்லாஹ் இரு பகுதிகளாக வெளிவரும். சத்தியத்தை ஆதாரத்துடன் அறிவதை நோக்கமாகக் கொண்டவருக்கு ஒரு விளக்கமாக அமையும் வகையில் இந்த முன்னுரையை எழுதியுள்ளேன்;.

தமக்கு அநீதியிழைக்கப்பட்டால் அவர்கள் உதவி பெறுவார்கள் (42:39)  என்பது இறை வனம். ‘உன் சகோதரன் அநியாயக்காரனாகவுள்ள நிலையிலும், அநியாயமிழைக்கப்பட்டவனாயுள்ள நிலையிலும் நீ அவனுக்கு உதவி செய் என்று நபியவர்கள் கூறினார்கள். ‘அவன் அநியாயக்காரனாகவுள்ள நிலையில் எவ்வாறு அவனுக்கு நான் உதவுவது? என்று வினவப்பட்டது. ‘அநியாயத்திலிருந்து அவனை தடுப்பதே அவனுக்கு நீ செய்யும் உதவி'( புகாரி, அஹ்மத், திர்மிதீ அனஸ் வழியாகவும் முஸ்லிம், அஹ்மத், தாரமீ ஜாபிர் வழியாகவும் இதனைப் பதிவு செய்துள்ளனர்.) என்பது நபிமொழி இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் வகையிலும் இந்த மறுப்பை எழுதுகிறேன். அவரை உண்மையின் பக்கம் திரும்பச் செய்வது எனது நோக்கம். இதனால் அவரின் தகுதிக்கு கலங்கம் ஏற்ட்டுவிடாது இன்ஷா அல்லாஹ்.

     முஹத்திஸுன்(புகாரி போன்ற ஹதீஸ் துறை அறிஞர்)களுக்கும், புகஹா(இமாம் அபூஹனிபா போன்ற சட்டத்துறை அறிஞர்) களுக்குமிடையில் முறைகேடான வகையில் இவர் பகைமை பாராட்டியமை எனக்கு வேதனையளிக்கிறது. இவரிடம் இது போன்றவைகள் வெளிவந்தமை என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ‘தான் சுமந்துள்ளவற்றின் கருத்தையறியாத வெறும் பரிமாற்றிகள்’ என்று முஹத்திஸுன்களை இவர் சித்தரிக்கிறார். இது மிகப்பெரும் அவதூறாகும். குறைவான வாசிப்பே இதற்கான குறைந்த பட்சக் காரணமெனலாம். இது உஸ்தாதவர்களின் அனைத்து எழுத்துக்களிலும் உலாவுகின்ற ஒரு ரீங்காரமாகும். சுமார் பத்து வருடங்களுக்கதிகமாக அஹ்லுல் ஹதீஸ்களை, அதிகமான முஸ்லிம் நாடுகளில் ஸலபிகள் என அழைக்கப்படுவோரை தாக்கி வருகிறார். ‘தனக்குள்ள நோயை எனக்குள்ளதாய் சொல்லி நழுவிவிட்டாள்’ என்ற முதுமொழிக்கொப்ப தனக்குள்ள நோய் அவர்களிடமிருப்பதாய் விமரிசித்து வருகிறார்.

   மார்க்க அறியாமையில் அவதியுறுகின்ற குறிப்பிடத்தக்களவிலான புத்திஜீவிகள் வட்டமொன்று இவருடைய இந்தப் புத்தகத்தினால் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். ‘உஸ்தாதவர்கள்தான் நேர்மையான ஆய்வாளர் அல்லது இத்துறையில் ஆழ்ந்து ஆய்வு செய்யக் கூடியவர்’ என்றெண்ணிய சிலர் ‘இது நெருக்கமானோரால் வீசப்பட்ட அம்பு’ என்று கூறி உஸ்தாதவர்களின் இப்புத்கத்தினால் பெருமூச்சு விட்டுள்ளனர்.

‘யூதர்கள், கிறிஸ்தவர்கள், மதச்சார்பற்றோர் போன்றோருக்கு மறுப்புச் சொல்வதும், இலக்கியவாதிகளின் பாணியில் பொதுவான இஸ்லாமிய நூற்களை எழுதுவதும்தான் உஸ்தாதவர்களின் துறையாகும். ஷரீஅத் சட்டங்களில் ஆழமாய் ஆய்வு செய்தல், ஆதாரங்களைத் திரட்டுதல் அல்லது அறியப்பட்ட ஆதாரங்களை வைத்து அவற்றிலிருந்து சரியான ஒரு தீர்வை எடுத்தல் போன்ற விடயங்களில் உஸ்தாதவர்கள் ஒரு மிஸ்கீன் அல்லது அதை விடக்கீழ்நிலையிலுள்ளவர்’ என்பது இந்த நூலை வாசிப்பதன் மூலம் என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.

   உஸ்தாதவர்களின் தகவல் பெருமானத்தை நமது இந்த மறுப்பின் மூலம் நீங்கள் கண்டுகொள்வீர்கள். தனக்குறிய துறையில் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு சிறந்து விளங்குபவராக உஸ்தாதவர்கள் இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் அவரோ தன் பாதங்களுக்குக் கீழிருப்பதைப் பார்க்காது பாய்ந்துவிட்டார். உஸ்தாத் அவர்கள் அடிக்கடி விமரிசிக்கும் ‘முரண்படுபவனை அவமதித்தல்’ என்ற அடிப்படையயை தானே செயல்வடிவம் கொடுக்கம் வகையில் உஸ்தாதவர்களிடம் இந்த நூலில் எந்தவிதமான பெறுமானமுமில்லாதுபோன பெரிய அறிஞர்களல்ல சாதாரணமாக பள்ளிமாணவர்கள் கூட விடாத தவறுகளை உஸ்தாதவர்கள் விட்டுள்ளார்கள். மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் பிரபல்யம் தன் தவறுகள் வெளிப்படாது செய்துவிடும் என நினைத்துள்ளார் போலும்.

  (எகிப்திய சஞ்சிகை) ஸஹீபத்துல் அஹ்ராம் என்ற பத்திரிகையில் உஸ்தாதவர்களின் புத்தகத்தை ‘வெடிகுண்டு’ என வர்ணித்து பத்திரிகையாளர் பஹ்மீ அல் ஹுவைதீ எழுதியிருந்ததை நான் வாசித்தேன். இந்த பஹ்மியின் தகவல் பெறுமானம் மட்டமானது என்பதையும் இவர் போன்றவர் தீர்ப்பு வழங்கும் தகுதியற்றவர் என்பதையும் நாம் அறிந்துள்ளதனால் இவரின் இந்த மதிப்பீட்டை கணக்கில் எடுக்கத் தேவையில்லை. இந்த நூலை வெடிகுண்டு என அழைப்பது சரியானதாயின் அந்த வெடிகுண்டு மக்கள் பரிபாசையில் அழைக்கப்படும் புஸ்வானத்திற்கு சமனாகும். அதன் வெடிச்சப்தம் பெரியது. எந்த விளைவும் இருக்காது. இதனை பஹ்மி உற்பட அனைவரும் அறிந்திருப்பார்கள். பஹ்மி அவர்களின் வெடி குண்டு வர்ணிப்பு ஸம்ஸம் நீரில் சிறு நீர் கழித்துவிட்டு சாபங்கள் மூலமாவது நான் பிரபல்யமடைய வேண்டும் என்று பதிலளித்ததாகச் சொல்லப்படும் மனிதனை என் நினைவிற்குக் கொண்டுவந்தது.

உஸ்தாதவர்களின் இந்த நூலிற்குறிய விமரிசனங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts