Tuesday, December 3, 2024

கடமையான குளிப்பு முறை என்ன?

 

 

1.விந்து வெளிப்படல்

2.மாதவிடாய்
3.பிரசவத்தீட்டு
4. உடலுறவு

போன்ற காரணங்களுக்காய் குளிப்புக் கடமையாவது நாமனைவரும் அறிந்ததே.இதில் எவ்வாறு அக்குளிப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முறையையும் நபிaகளார் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். இதில் உடலுறவு மற்றும் ஸ்கலிதம் போன்ற நிலைகளால் விந்து வெளிப்படல் போன்ற காரணங்களால் குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்கான முறை பற்றி இங்கே பார்ப்போம்.

1.முழு உடம்பும் நனையும் அளவில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவரது குளிப்புக் கடமை நீங்கி விடும். அதன் மூலம் அவருக்குத் தொழவும் முடியும். குளிப்புக் கடமை நீங்குவதற்கு முன்னால் வுழூச் செய்தே ஆகவேண்டும் என்ற கடமையோ வலது புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கடமையோ மர்மஸ்தான உருப்பைத் தனியாகக் கழுவவேண்டும் என்ற நிபந்தனையோ கிடையாது. முழு உடம்பையும் தண்ணீர் நனைத்தாலே குளிப்புக் கடமை நீங்கி விடும் என்பதற்கு பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன.

صحيح البخاري ـ 256 – قَالَ لِي جَابِرُِ وَأَتَانِي ابْنُ عَمِّكَ يُعَرِّضُ بِالْحَسَنِ بْنِ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ قَالَ كَيْفَ الْغُسْلُ مِنْ الْجَنَابَةِ فَقُلْتُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ ثَلَاثَةَ أَكُفٍّ وَيُفِيضُهَا عَلَى رَأْسِهِ ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ فَقَالَ لِي الْحَسَنُ إِنِّي رَجُلٌ كَثِيرُ الشَّعَرِ فَقُلْتُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْكَ شَعَرًا

‘என்னிடத்தில் ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் கூறினார்கள் ‘உன் தந்தையின் சகோதரர் மகனான முஹம்மத் இப்னுல் ஹனபியா என்னிடத்தில் கடமையான குளிப்பு எப்படி எனக் கேட்டார். நபியவர்கள் 3 கையளவு கொள்ளக் கூடிய தண்ணீர் எடுத்து அதைத் தங்கள் தலையில் ஊற்றுவார்கள்இ பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன்.” அப்போது ‘நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?” என ஹஸன் அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்” என நான் (ஜாபிர்) கூறினேன்.

அறிவிப்பவர்: அபு ஜஃபர் ஆதாரம்:புகாரி:256

صحيح مسلم للنيسابوري – 766 – عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ تَمَارَوْا فِى الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ بَعْضُ الْقَوْمِ أَمَّا أَنَا فَإِنِّى أَغْسِلُ رَأْسِى كَذَا وَكَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَمَّا أَنَا فَإِنِّى أُفِيضُ عَلَى رَأْسِى ثَلاَثَ أَكُفٍّ ».

‘மக்கள் நபியவர்களிருக்கும்போது குளியல் முறை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் ‘நானோ என்தலையை இவ்வாறு கழுவுகிறேன்” என்று கூறினார். அப்போது நபியவர்கள் ‘நானோ என் தலையில் இரு கைகள் நிறம்ப தண்ணீர் ஊற்றுவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் ஆதாரம்:முஸ்லிம் 545

صحيح مسلم للنيسابوري – 767 – عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ ذُكِرَ عِنْدَهُ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ فَقَالَ « أَمَّا أَنَا فَأُفْرِغُ عَلَى رَأْسِى ثَلاَثًا ».

நபியவர்களிடத்தில் பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை பற்றிப் பேசப் பட்டது. அப்போது அவர்கள் ‘நானோ என் தலையில் 3 முறை தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் ஆதாரம்: முஸ்லிம் 546

صحيح مسلم للنيسابوري – 768 – عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ وَفْدَ ثَقِيفٍ سَأَلُوا النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالُوا إِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ فَكَيْفَ بِالْغُسْلِ فَقَالَ « أَمَّا أَنَا فَأُفْرِغُ عَلَى رَأْسِى ثَلاَثًا ». قَالَ ابْنُ سَالِمٍ فِى رِوَايَتِهِ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو بِشْرٍ وَقَالَ إِنَّ وَفْدَ ثَقِيفٍ قَالُوا يَا رَسُولَ اللَّهِ.

ஸகீப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபியவர்களிடம் ‘எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும் நாங்கள் எப்படிக் குளிப்பது’ என வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘நானோ என் தலையின் மீது 3 முறை தண்ணீர் ஊற்றுகிறேன்” என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ஆதாரம்:முஸ்லிம் 547

صحيح مسلم للنيسابوري – 769 – عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا اغْتَسَلَ مِنْ جَنَابَةٍ صَبَّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَفَنَاتٍ مِنْ مَاءٍ. فَقَالَ لَهُ الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ إِنَّ شَعْرِى كَثِيرٌ. قَالَ جَابِرٌ فَقُلْتُ لَهُ يَا ابْنَ أَخِى كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ.

‘நபியவர்கள் பெருந்தொடக்கிற்காகக் குளித்தால் இருகைகள் நிறம்பத் தண்ணீர் அள்ளி தமது தலையில் 3 முறை ஊற்றுவார்கள்” என்று ஜாபிர் அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 548

صحيح مسلم للنيسابوري – 764 – عَنْ سَفِينَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُغَسِّلُهُ الصَّاعُ مِنَ الْمَاءِ مِنَ الْجَنَابَةِ وَيُوَضِّؤُهُ الْمُدُّ.

‘நபியவர்கள் ஒரு ஸாவு தண்ணீரில் பெருந்தொடக்கிற்காகக் குளித்துவிடுவார்கள். ஒரு முத்து தண்ணீரில் வுழூச் செய்து விடுவார்கள்” என ஸபீனா ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம் : முஸ்லிம் 543

صحيح مسلم للنيسابوري – 770 – عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِى فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ قَالَ « لاَ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِى عَلَى رَأْسِكِ ثَلاَثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ ».

‘அல்லாஹ்வின் தூதரே நான் தலை முடியை இருக்கமாகப் பிண்ணிக்கொள்பவள். பெருந்தொடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்து விட வேண்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் “இல்லை நீ இருகையளவுத் தண்ணீரை உன் தலை மீது 3 முறை ஊற்றினால் போதும் பிறகு உன் உடல் மீது தண்ணீர் ஊற்றிக்கொள் சுத்தமாகிவிடுவாய்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா ஆதாரம்: முஸ்லிம் 549

صحيح مسلم للنيسابوري – 773 – بَلَغَ عَائِشَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ فَقَالَتْ يَا عَجَبًا لاِبْنِ عَمْرٍو هَذَا يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ أَفَلاَ يَأْمُرُهُنَّ أَنْ يَحْلِقْنَ رُءُوسَهُنَّ لَقَدْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَلاَ أَزِيدُ عَلَى أَنْ أُفْرِغَ عَلَى رَأْسِى ثَلاَثَ إِفْرَاغَاتٍ.

‘அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் பெண்கள் குளிப்பின்பொழுது தம் பிண்ணலை அவிழ்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்த செய்தி ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் ‘இந்த இப்னு அம்ரைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பெண்கள் குளிப்பின்பொழுது தமது பிண்ணல்களை அவிழ்க்குமாறு பணிக்கிறாரே. ஏன் தலையை மழிக்குமாறு பெண்களுக்கு அவர் கட்டளை இட வேண்டியதுதானே. நானும் நபியவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் 3 முறைத் தண்ணீர் ஊற்றுவதை விட கூடுதலாக நான் வேறொன்றும் செய்யவில்லை.” என ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 550

எனவே கடமையான குளிப்பின் போது ஆணாயினும் பெண்ணாயினும் முழு உடலும் நனையும் அளவில் தலையிலும் உடலிலும் தண்ணீர் ஊற்றிக்கொள்வதே அவர்கள் சுத்தமாகிவிடப் போதுமானதாகும் என்பது வெள்ளிடைமழை.

2.மேலே சொல்லப்பட்ட முறை ஒருவர் ஜனாபத்திலிருந்து சுத்தமாவதற்கான நிபந்தனையாகும். அதனையே நபியவர்கள் குளிப்பு பற்றி வினபுவர்களுக்குப் பதிலாகவும் கூறினார்கள். ஆனாலும் நபியவர்கள் குளிக்கும் போது அதிகமான நேரங்களில் அவரது குளிப்பு பற்றி இதைவிடப் பல கூடுதலான அம்சங்கள் பல ஆதாரப் பூர்வமான செய்திகளில் வந்துள்ளன. பின்வருமாறு அவைகளை வரிசைப்படுத்தலாம்

1.வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி தமது இருகைகளையும் கழுவி பின்னர் மர்மஸ்தானத்தைக் கழுவுதல்.

2.இடது கையை சுவரில் அல்லது நிலத்தில் தேய்த்துச் சுத்தப்படுத்தல் மறுபடி அக்கையைக் கழுவுதல்

3.தொழுகைக்காக செய்யும் வுழூவைப் போன்று வுழூச் செய்தல்.இதன் போது உருப்புக்களை ஒரு முறையோ மூன்று முறையோ கழுவலாம்.

4.சில சமயங்களில் மேற்சொன்ன வுழூவின்போது காலை மாத்திரம் கழுவாமல் குளிப்பின் பின் கழுவுதல்.

5. பின் தண்ணீரின் மூலம் தலையைக் கோதிக் கழுவுதல்.

6.அதன் பின்னர் தலையின் மீது ஆகக் குறைந்தது 3 முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். சில அறிவிப்புக்களில் தலையின் வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள் என்றும் வந்துள்ளது.

7.குளிப்பின் பின் நபியவர்கள் எப்பொழுதும் வுழூச் செய்யவில்லை.

மேற் சொன்ன அனைத்து முறையும் புகாரி மற்றும் முஸ்லிமில் சுத்தம் பற்றிய பாடத்தில் குளிப்பு என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டவைகள். எனவே குளிப்பை இந்த வடிவிலே நபியவர்கள் அதிகமாகச் செய்துள்ளதால் இதையே நாம் கூடுதலாகச் செய்ய சிரத்தை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts