Thursday, November 21, 2024

குர்ஆன் ஸுன்னா மற்றும் வரலாற்று ஒளியில்  ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்”

 

சூனிய உலகம் ஒரு பார்வை.

இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த உரையின் ஆரம்பத்தில் தௌஹீத் பிரச்சாரத்தின் போது மாற்றுக் கருத்துள்ள சகோதரர்களால் முன்வைக்கப்படும் நமக்கெதிரான சில வாதங்களுக்கு பதில் சொல்லப்பட்டது. அந்த உரையின் முதல் பாகமான அப்பகுதியை ” மூட நம்பிக்கை ஒழிப்பிற்கே முதற்பங்கு”  என்ற தலைப்பில் 3 தொடர்களாகத் தந்தோம். கீழே உள்ள தொடர்கட்டுரை  ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின்  2ம் பாகத்தின் எழுத்து வடிவமாகும்.அப்பகுதியை “சூனிய உலகம் ஒரு பார்வை” எனும் தலைப்பில் பகுதி பகுதியாக இங்கு பதிவு செய்கிறேன் இன்சா அல்லாஹ்.

சூனிய உலகுபற்றி இப்பகுதியில் சற்று விரிவாக ஆராய்வோம். ‘உலகம்” எனும் சொல்லானது நாம் வாழும் புவியைச் சுற்றியுள்ள கிரகங்களை மாத்திரம் குறிப்பதில்லை. மொழி ரீதியாக சடங்களல்லாத சிலவற்றுக்கும் ‘உலகம்” என்றழைக்கின்ற வழமை புழக்கத்திலுள்ளது. மது அறுந்துவது பொதுவாக வெறுக்கத்தக்கதாயினும் மது அருந்துபவனுக்கு அதன் தரம், சுவை, வகை போன்ற விவரங்களடங்கிய மதுபான உலகொன்றைப்பற்றிய தகவல்களனைத்தும் தெரிந்திருக்கும். இவ்வாறுதான் கிரிக்கட் விளையாடும் ஒருவனுக்கு அதுவே வாழ்க்கையாகவிருக்கும் அதற்காக அவன் எதையும் செய்யத்துணிந்திருப்பான் அதைப்பற்றிய ஓருலகையே அறிந்திருப்பான். இதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘கிரிக்கட் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்?” என்று அவன் கூறுவான். விளையாட்டை ரசிப்பவர்களை விட விளையாடுபவர்களுக்கு அது ஓருலகமாகவே இருக்கும். தஃவாப்பணி செய்பவர்களைப்பார்த்து ஏனையவர்கள்’ இவர்களுக்கேன் இந்த வேளை எங்களைப்போன்று கணக்குகளைப்பார்த்துக் கொண்டு, அலுவலகமொன்றில் வேலை செய்து கொண்டு இருக்கலாமல்லவா? ஓன்றை ஸஹீஹ் என்பதும், மற்றொன்றை லயீப் என்பதும் ஹராம் என்பதும் ஹலால் என்பதும் இவர்களுக்கு வேறு வேளையில்லையா” என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தஃவாத்துறை என்பது ஓருலகமாகும். அதிலுள்ளவர்களுக்கே அதைப்பற்றி தெரியும். இவை போலதான் சூனியம் என்பதும் ஓருலகமாகும். எனவே முதலில் சூனியம் பற்றி நாம் என்ன தெரிந்திருக்கின்றோம் என்பதைப்பற்றி ஆராய்வோம்.

  1. சூனியம் என்றால் வித்தை காட்டுதலா?

சூனியம் என்றால் வித்தை காட்டுதல் என்பது சிலரின் நம்பிக்கை. இது தவறாகும். வித்தை காட்டுவதுதான் சூனியமென்றால் இதற்காக அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை அனுப்பி தடியைப்பாம்பாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாமே இதைக்கற்று விரைவில் வித்தையைக் கண்டுபிடித்திடலாம். அல்லது வித்தை காட்டப்படும் இடத்துக்கு சற்று உயரச்சென்று பார்த்தால் என்ன நடைபெறுகின்றது என்பதை இலகுவில் அறிந்திடலாம். ஆகவே வித்தை காட்டுவதை சூனியமென்பது தவறாகும். வித்தை காட்டுவதால் ஒருவர் காபிராக முடியாது. வித்தை காட்டுவது ஒரு பெரும் பாவம் அல்லது குப்ர் என்று சொல்லவும் முடியாது. ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க அவனுடைய கண்களை வித்தைக்குற்படுத்தி, எப்படி அவனை ஏமாற்றலாம் என்பதைப்படிப்தே கண்கட்டி வித்தையாகும்.  இதைப்படிப்பதற்கு ஷைதானுடைய துணையெல்லாம் தேவையில்லை. முயன்றால் கற்று விடலாம். இதை சூனியமென்பது தவறாகும்.

  1. பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால் அது சூனியமா?

இன்னொன்றையும் நாம் சூனியமென்று விளங்கி தை;துள்ளோம். ஏதோ ஓரிடத்தில் பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால், வீட்டுக்கு முன்னால் குழிதோண்டப்பட்டிருந்தால், வீட்டு வாசலில் மிருகங்கள் சிறு நீர் கழித்திருந்தால் இவற்றையும் நாம் சூனியமென்று நம்புகின்றோம். தாம் சூனியக்காரர்கள் என்று தங்களைத்தாங்களே கூறிக்கொள்ளும் சில ஏமாற்றுப்பேர்வழிகளால் மக்களைப் பயமுறுத்த செய்யப்படும் வேடிக்கைகளே இவையாகும். உண்மையில் இவை சூனியமல்ல. இவர்களை நம்பிய சிலர் இவர்களிடம் சென்று ‘இவர்களைச் சூனியம் செய்து பிரித்துவிடுங்கள்” என்று கூறுவார்கள். தாம் சூனியக்காரர்கள்தான் என்று அவரை நம்பவைப்பதற்காக உரிய நபர் பாவித்த சீப்பை எடுத்து வாருங்கள், புடவைத்துண்டை எடுத்து வாருங்கள் என்று வந்திருப்பவரிடம் கூறுவார்கள். பின்னர் சூனியம் செய்து விட்டதாகக் கூறியதும் உரிய நபருக்கு  நோயேற்பட்டால் சூனியம் செய்ததாலேயே இது ஏற்பட்டது என்று கூறுவார்கள். இவ்வாறு சூனியம் செய்வோரில் பெரும்பாலானோர் பொய்யர்களாகும். ஏமாற்றுவதற்காகவென்று சில வித்தைகளைப்படித்து வைத்திருப்பார்கள். மூலகங்களை ஒன்றோடென்று கலந்தால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிய இரசாயனவியலை ஓரளவு தெரிந்துவைத்திருப்பார்கள்.

உதாரணமாகச் சொல்வதானால் இமாம் இப்னு தைமியா அவர்கள் ரிபாஇய்யா தரீக்காவுடைய ஒரு ராதிபுக்குச் அவர்களுடைய போலிச் சடங்குகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தச் செல்கிறார். அங்கே ஒருவர் நெருப்பினுள் தன் கைவிரலை விட்டு மக்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். இதைக்கண்ட இமாம் இப்னு தைமியா தவளையிலிருந்து பெறப்படும் ஒரு வகை எண்ணெய்யை உடலில் தேய்த் நெருப்பில் விட்டால் நெருப்புக்காயங்கள் ஏற்படாது அதனாலேயே இவர் இவ்வாறு செய்கிறார் என்று மக்களுக்கு உண்மையை விளக்கினார்கள். இது போன்ற சில வித்தைகளைக்கற்று வைத்திருப்பவர்களின் செயல்பாடுகளை சூனியம் என்று நாம் கூறுவது தவறாகும். ஆகவே சூனியம் பற்றி மக்களிடையே காணப்படும் பயத்தைப் பயன்படுத்தி தந்திரங்களைப்புரிந்து மக்களை ஏமாற்றுபவர்களையே நாம் சூனியக்காரர் என்று சொல்கிறோம் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கெகிராவையில் ஒருவர் ஆறு ஜின்களை வைத்திருப்பதாகவும் அவற்றில்; ஒரு ஜின்  ரவுடி எனவும் ஏனையவைகள் வைத்தியர்களெனவும் அந்நபர் கூறியதை நம்பி மக்கள் வெள்ளம் அவரிடம் அலைமோதியது. தான் சூனியக்காரனே என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக கண்ணில் கருமொழியை இல்லாமற்செய்தல், தன் தொண்டைக் குழியை நடுங்கச்செய்தல் போன்ற தந்திரங்களைப்பயன்படுத்தியுள்ளார். இத்தகையவர்களிடம் சென்று நம்மிடமுள்ள சாதாரண அறிவை வைத்து வாதித்து இது பெய்யென்பதை நிரூபித்துவிடலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து ஒரு மௌலானா இலங்கைக்கு வந்ததும் இவரிடம் மருத்துவம் பெற மக்கள் அலைமோதியதும் நாம் அனைவரும் அறிந்ததே. தப்லீக் ஜமாஅத்தின் முக்கிய மௌலவி ஒருவரே அவரை இங்கு அழைத்து வந்தார். போதைப் பொருட்களை விற்கும் ஒருவரின் வீட்டிலேயே அவர் தங்கினார். இவரைப்பார்ப்பதற்காக மக்கள் திரளாக வரிசையாக நின்றிருப்பார்கள். திடீரென ஒருவர் வாகனத்தில் கொண்டு வரப்படுவார். அவருக்குக் கால் முடமாகவிருக்கும் அல்லது கண் குருடாகவிருக்கும் இவரின் பரிதாப நிலையைப்பார்த்து மௌலானாவிடம் செல்ல மக்கள் இடம் கொடுத்துவிடுவார்கள். சில நிமிடங்களின் பின்னர் இந்நபர் நோய் குணமானவராக நன்றாக வெளியில் வருவார். இவரைப்பார்த்த மக்கள் ‘இப்போதுதான் நோயோடு உள்ளே சென்றார் திரும்பி வரும் போது நோய் குணமாகிய நிலையில் வருகின்றாரே” என்று ஆச்சரியப்படுவார்கள். இதை நம்பிவிடுhர்கள். ஆனால் உண்மையில் இது முன்கூட்டியே அந்த மௌலானாவினால் திட்டமிடப்பட்டதொன்று என்பதை யாரும் அறியவில்லை. இதைச்சொன்னால் இப்போதும் சிலர் நம்பத்தயாரில்லை. பகுத்தறிவையிழப்பதனால் ஏற்படும் அவலமே இதுவாகும்.

ஆகவே எந்தவேளையிலும் நமது பகுத்தறிவை நாம் இழந்து விடலாகாது. பெரும் பெரும் பணக்காரர்கள் கூட வெளிநாடுகளிலிருந்து வரும் தங்கல்மாருக்குப்பயந்து  தமது பகுத்தறிவையிழந்து அவர்களுக்குப்பணிவிடை செய்வதைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் படித்த ஒரு கலாநிதியாகினும் தனது வீட்டிலே ஒரு சிலையை வைத்து, அதை அலங்கரித்து, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அதை அழகுபடுத்தி வைத்து அதை வணங்குவார். ஆனால் அவர் வீட்டு நாய் சிலையில் சிறு நீர் கழித்து விடும் அவரைக்கண்டதும் அது பயந்து ஓடிவிடும். அவரோ அந்தச்சிலையை கழுவி, சுத்தப்படுத்தி மீண்டும்  வணங்குவார். சிலையால் எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்துதான் நாய் சிலையில் சிறு நீர் கழித்தது. மனிதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்துதான் அந்த நாய் கலாநிதியைக் கண்டதும் ஓடியது. ஒரு நாய்க்கு இருக்கும் பகுத்தறிவு கூட  இந்தக்கலாநிதிக்குக்கிடையாது என்பது இதிலிருந்து விளங்குகின்றது. அதனாலேயே அல்லாஹ் இவர் போன்றோரை மிருகங்களைவிட மோசமானவர்கள் என அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். ஆனால் ஒரு சாதாரண முஸ்லிம் கூலித்தொழிலாளி கூட இதை நன்கு தெரிந்திருப்பான். ஆனால் இந்தக்கலாநிதிக்கு இந்த அறிவு கிடைக்கவில்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு  அல்லாஹ் வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் பாதுகாப்பு பகுத்தறிவே. இதையிழப்பது போன்ற பெரிய குற்றமொன்று கிடையவே கிடையாது. சாஸ்த்திரகாரர்களுக்குப் பயந்தவர்கள் கூட நம்மில் இருக்கிறார்கள். ஆகவே நாம் இது விடயத்தில் மிக அவதானமாகவிருக்க வேண்டும்.  எனவே போலியானவற்றுக்காக நாம் நமது பகுத்தறிவை இழந்து விடக்கூடாது. ஆகவே மேற்கண்டவைகளை யாரேனும் சூனியமென்று கூறினால் அது மிகப்பெரும் தவறாகும்.

அதற்காக நமது சிந்தனைக்குப்படாதவற்றை நம்பக்கூடாது என்று பொருளல்ல. நெப்தியூன் என்று ஒரு கோளுண்டு என்று ஒருவர் சொன்னால் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி என் சிந்தனைக்கு விளங்கவில்லை. அதை நான் காணவில்லை. எனவே அதை நான் நம்பமாட்டேன் என்று அவர் கூறிவிடக்கூடாது. அதை ஆராய்ந்து படித்துத் தெரிந்த பின்புதான் நம்புவேன் என்று கூறுவதுதான் அறிவுபூர்வமானதாகும்.

3.அதற்கு முன்பு சூனியமென்பது மார்க்க விவகாரமா? உலக விவகாரமா?

சூனியத்துக்கென்று தனியான ஒரு வரலாறுண்டு. சூனியம் உலகத்தில் இஸ்லாம் பரவாமல் இருக்க பரப்பிவிட்ட தவறான அறிமுகங்கள் பல. அதை அடிப்படையிலிருந்து பார்ப்போம். அதற்கு முன்பு சூனியமென்பது மார்க்க விவகாரமா? உலக விவகாரமா? என்பதை நன்கு அறியவேண்டும். தொழுகையில் ஐந்து ரக்அத்துக்கள் உண்டா? இல்லையா? என்றால் அது மார்;க்க விடயமாகும். ஸகாத் என்பது உண்டா? இல்லையா? என்றால் அது மார்;க்க விடயமாகும். ஆடு எனும் படைப்பு உண்டா? இல்லையா? என்றால் அது உலக விடயமாகும். மாடு எனும் படைப்பு உண்டா? இல்லையா? என்றால் அது உலக விடயமாகும். பூமி சூரியனைச் சுற்றுகின்றதா? சூரியன் பூமியைச் சுற்றுகின்றதா? என்றால் அது உலக விடயமாகும். ஆடென்று, மாடென்று ஒரு படைப்பு உலகில் இல்லை என ஒருவர் கூறினால் அதனால் அவர் காபிராகிவிடமாட்டார். அதே நேரம் தொழுகை என்றொன்றில்லை என்று ஒருவர் கூறினால் அவர் காபிராகிவிடுவார். எனவே உலக விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காபிராகிடமாட்டார். மார்க்க விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காபிராகிவிடுவார்;. சூனியம் ஒர் உலக விடயம்தானே அதை இல்லையென்று சொல்வதால் எவ்வாறு ஒருவர் எவ்வாறு மார்க்க விடயத்தில் தலையிட்டவராக ஆகுவார்? என்று ஒருவர் கேட்டால், ஆடென்று ஒன்றில்லையென ஒருவர் கூறினால் அவரைக்; காபிர் என்போம். ஏனெனில் நாற்பது ஆடு இருந்தால் ஓராடு ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது நபிமொழி. ஆகவே ஆடில்லையென்று சொல்வதால் ஸகாத் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். மாடில்லைனெ;று சொல்பவருக்கும் இதே பதில்தான். அவ்வாறுதான் பன்றி என்றொன்றில்லையென்று ஒருவர் கூறினால் அவரையும் காபிர்; என்போம். ஏனெனில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பன்றியைப்பற்றிக் கூறியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் சூனியம் மார்க்கத்தோடு தொடர்பு படுகின்றது. மனிதனுக்கும் ஜின்னுக்கும் தொடர்புண்டா என்றால் அது உலக விடயமாகும். மார்க்கத்தில் அது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது மார்க்க விடயமாகின்றது. சூரியன் நிற்கின்றதா சுழல்கின்றதா எனில் அது உலக விடயமே. எப்போது அது மார்க்க விடயமாகின்றது என்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் சூரியன் தனது தங்குமிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றான். யாராவது இதை மறுத்தால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். எனவே வஹியாகக் கூறப்பட்ட ஒரு விடயத்தில் தலையிடுவது, மாற்று விளக்கம் கொடுப்பது போன்றவை வழிகேடுகளுக்கும், இறை நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே சூனியம் மார்க்கப்பிரச்சினையாகின்றது.

4.தெரிந்து புரிந்தவைகளும் தெரியாமல் புரியாதவைகளும் 

உலகில் பலருக்கும் தெரிந்த விடயங்களை எவரும் இல்லையென்று கூறுவதில்லை. எல்லோருக்கும் தெரியாத, புரியாத சில விடயங்களும் உலகில் காணப்படுகின்றன. தனக்குத் தெரியாது என்பதற்காக அப்பொருள் இல்லையென்று கூறமுடியாது. எனவே நமது அறிவுக்குப்படாதவற்றையெல்லாம் இல்லiயெனக் கூறிவிடக்கூடாது. இவை பற்றி எனக்குத்தெரியாது ஆனால் இருப்பதாகச் சொல்கிறார்கள் எனக்கூறுவதே பொருத்தமாகும். சிலருக்கு மட்டுமே தெரியக்கூடிய சில அறிவுகளும் உலகில் இருக்கவே செய்கின்றன. நாம் ஒரு வைத்தியரிடம் செல்கின்றோம் அவர் சில மாத்திரைகளை நமக்குத் தருகின்றார் உடனே இவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்று நாம் அவரிடம் கேட்கப்போவதில்லை. ஏனெனில் இதுவிடயத்தில் நம்மை விட அவருக்கே முழுமையாகத்தெரியும் என்பதால் நாம் அவ்வாறு கேட்பதில்லை. ஆபிரிக்காவில் ஒரு மரமுண்டு இரத்த வாடையடித்தால் அவ்விடத்தை நோக்கி அம்மரத்தின் கிளைகள் நகரும் என்று ஒருவர் கூறினால் நாம் சிரித்து விடக்கூடாது. நமக்கு இது தெரியாது போனாலும் தாவரவியல் ஆய்வு செய்வோருக்கு இது பற்றித்தெரிந்திருக்கும் என்பதை உணரவேண்டும். இது போன்ற ஒன்றே சூனியம். பகுத்தறிவு ரீதியான சம்பந்தம் அந்த தீய சக்திக்கு உண்டு எனினும் புரிந்துகொள்ளக் கடிமானது. உலக மோகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றே சூனியம்.

5.சூனியமும் உலகமோகமும்

ஈமான் இருந்தாலேயே இந்த உலகமோக நோயிலிருந்து தப்பலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

உங்களுக்கு மத்தியில் பெருமையடித்துக் கொள்வதும், அதிகம் குழந்தைகள் பெறவேண்டும், அதிகம் சொத்து செல்வங்களோடு வாழவேண்டும் என்பதுதான் இந்த உலக வாழ்க்கையாகும் என்று குறிப்பிடுகின்றான். (ஹதீத்:20)

ஈமானுள்ளவர்களுக்கு இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறிவிட்டு ஈமானிருந்தாலும் இதிலிருந்து தப்பமுடியாமற்போகலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ .الزخرف : 33

இறை நிராகரிப்பாளர்களுக்கு வெள்ளியினாலான கூரைகளை அமைத்துக் கொடுத்திருப்போமானால் முழு மனித சமுதாயமும் ஒரே சமூகமாக மாறியிருப்பார்கள்என்று கூறுகின்றான். அதாவது காபிர்களுக்கு வெள்ளியால் கூரை போட்டுக் கொடுத்திருந்தால் முஸ்லிம்களும் காபிர்களாகியிருப்பார்கள். காபிர்களிலும் ஏழைகளிருப்பதால்தான் அவ்வாறேட்படாதிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நம்மில் பலர் மேற்கு நாடுகளின் அபிவிருத்திகளைப்பார்த்து பிரமித்து முஸ்லிம் நாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதைப் பார்க்கின்றோம். மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை வைத்து ஈமானைத் தரக்குறைவாகப் பார்க்கின்றனர். ஆகவே உலக மோகமென்பது இயல்பானது இறை நம்பிக்கை மூலமே இதைக்கட்டுப்படுத்தலாம். இறை நம்பிக்கை இல்லாது போனால் இது விடயத்தில் மனிதன் படுமோசமானவனாக மாறிடுவான். சிலரிடம் நல்லது, கெட்டது என்ற இரு குணங்களும் காணப்படும். ஆனால் சிலரின் உள்ளம் இறந்ததாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் இதை வரண்ட  உள்ளம் என்று செல்கின்றான். இத்தகையோர் உலக மோகத்துக்காக எதையும் செய்வார்கள். உலகை தான் அடைய வேண்டும் என்ற வேட்கைதான் எதையும் செய்யும் துணிவை அவனுக்கு ஏற்படுத்தியது எனலாம். உலகம் தேவையென்ற  முடிவுக்கு ஒருவன் வந்துவிட்டால் தன்னையிழந்தாவது அதையடைய முடியுமெனில் அதையும் அவன் செய்வான்.

மனிதனைப் பொருத்தமட்டில் ஆசைக்குக் கட்டுப்போடாதவிடத்து எதையும் செய்யும் படுமோசமான நிலைக்கு அவன் ஆகிவிடுவான். சூனியத்தின்பால் மக்கள் நாட்டம் கொள்ள செய்தான் பயன்படுத்திய மிகப்பெரும் ஆயுதமே உலகமோகமாகும். நான் விளக்கப் போகும் வரலாறு நெடுகிலும் காணப்பட்ட சூனியம் சூனியக்காரர்களின் செயல்பாடுகளுக்கும் இதுவே நோக்கமாகும். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் நல்ல வசதிவாய்ப்புக்களோடு அவருக்கு வாழமுடியுமாயினும் இந்நிலையை அடைவதற்காய் அவர்படும் கொடுமைகள் மிகப்பயங்கரமானதாகும். ஒருவன் சூனியக்காரனாக வேண்டுமெனில் தனது வாழ்க்கையை செய்தானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சூனியக்காரனின் தோற்றத்தை வைத்தே அவன் யார் என்பதை முடிவு செய்திடலாம்.

5.சூனிய உலகின் வரலாறு

சூனியம் இஸ்லாத்துக்கு மட்டும் எதிரியல்ல. மனித குலத்துக்கே அது எதிரியாகும். ஐரோப்பிய நாடுகளின் ஆரம்ப காலப் பகுதிகளில் சூனியக்காரர்களைத் தண்டிப்பதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் காணலாம். சைதான் ஒருவனை வழிகெடுத்துவிட்டால் அத்தோடு நின்றுவிடமாட்டான் அவரைக்காபிராக்கி, சீர்கெடுத்து, கேவலப்படுத்திவிடுவான். அது அவனுடைய இயல்பாகும்.

செய்தானுக்கும் மனித சமூகத்திற்கம் இடையிலான பகைமை

செய்தானுக்கு மனிதனிடம் எதுவிதத்தேவையும் கிடையாது. ஆதம் (அலை) அவர்களுக்கு ஒரேயொரு ஸ{ஜூதைக் கூட செய்வதற்கு அவன் மனிதனுக்குக் கட்டுப்படவில்லை. இதற்காக அல்லாஹ் அவனுக்கு வழங்கியிருந்த அனைத்தையும் இழக்கவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டாலும் கூட அவன் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தான். இப்படிப்பட்டவன் மனிதனுக்கு வசப்படுவானா? மனிதன் சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து விடுவானா? என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. சுவனம், நரகம் அனைத்தும் தெரிந்தும் தனது கௌரவத்துக்காக இவையனைத்தையும் துறந்து வந்தவன் எவ்வகையிலும் தன்கௌரவத்தையிழந்து ஒரு மனிதனுக்குக் கீழ்படியமாட்டான். அறிவிலும் மனித குலத்தை விடத்தேர்ந்தவனாகவே அவன் காணப்படுகின்றான். இறையச்சமில்லாது ஓர் அறிவுக்கு சிறப்பிருக்குமென்றால் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் அறிவில் சிறந்தவனாக சைய்தான் இருப்பான் என்று ஓர் அறிஞர் சொல்லுமளவுக்கு அறிவாற்றல் கொண்டவனாக செய்தான் காணப்படுகின்றான்.

சைய்தான் தான் நமை வழிகெடுக்கின்றான் என்று தெரிந்தும் கூட நாம் பாவம் செய்கின்றோம். ஆசையை நம் உள்ளங்களில் அவன் ஏற்படுத்தியதும் நாம் எதையும் செய்வதற்கு முனைந்துவிடுகின்றோம். நிறையச் சம்பாதிப்பது எப்படி? எவ்வாறு மக்களை ஏமாற்றுவது? போன்ற எண்ணங்களை ஒருவன் உள்ளத்தில் சைய்தான் ஏற்படுத்தி உலக மோகத்தின் உச்சகட்டத்தை அவனுள்ளத்தில் உண்டாக்கிவிட்டானெனில் அவனுக்கு ஒன்றுமே புரியாது. கட்டுக்கடங்காதவனாக மனிதன் ஆகிவிடுகின்றான். இந்த உச்சகட்ட உலக மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு சைய்தான் மனிதனுக்கு வழங்கியதே சூனியமாகும். ஆக மனித குலத்துக்கே இது மிகப்பெரும் எதிரியாகும்.

சூனியக்காரர்களும் மன்னர்களும்

பண்டைய உலக வரலாறுகளில் மன்னர்கள் தமக்குப் பக்கத்தில் சூனியக்காரர்களை வைத்திருந்ததைக் காண்கின்றோம்:

மூஸா நபியின் பிறப்பு இந்த வருடத்தில் நிகழும் என சூனியக்காரர்களே பிர்அவ்னுக்குச் சொன்னாதாக வரலாறு சொல்கிறது. உண்மையாகவே அது நடைபெற்றது. எந்தவித மறைவான அறிவுமில்லாத மனிதர்களால் இதை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று வினவினால் சைதானின் மூலமாகவே இது அந்த சூனியக்காரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.அதற்காக சைதானுக்கு மறைவான அறிவுண்டு என்ற அர்த்தம் கிடையாது. மாறாக சில செய்திகளை அவன் அறிந்திருப்பதற்கான சாத்தியக்கூருகள் இருக்கின்றன என்பதுவே இங்கே கவனிக்கப்படவேண்டியதாகும். மூஸா என்றொருவர் பிறப்பார் என்று சூனியக்காரர்கள் சொன்னதும் பிர்அவ்ன் அதை உடனே நம்பியமைக்கு சூனியக்காரர்கள் மீது பிர்அவ்னுக்கிருந்த நம்பிக்கைதான் காரணமாகும்.

யூஸ{ப் நபியின் காலத்து மன்னன் கண்ட கனவுக்கு யூஸ{ப் நபி விளக்கம் சொன்னதும் அந்த மன்னன் நம்பியதும் யூஸ{ப் (அலை) நபியென்பதற்காகவல்ல. மன்னனின் பார்வையில் அவர் ஒரு சூனியக்காரனாகவே விளங்கினார். அதனாலேயே அவர் சொன்ன விளக்கத்தினடிப்படையிலான தீர்வை அந்த மன்னன் நடைமுறைப்படுத்தினான் எனக் கருத இடமுண்டு.

மூஸாவுடன் போட்டியிட்டு நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்கு நீ என்ன பிரதியுபகாரம் செய்வாய்” என்று சூனியக்காரர்கள் பிர்அவ்னிடம் கேட்ட போது அவன் கூறியதெல்லாம் என்னோடு மிக நெருக்கமானவர்களாக நான் உங்களை வைத்திருப்பேன் என்பதைத்தான். அக்காலத்தில் மன்னர்களுடன் சூனியக்காரர்களுக்கிருந்த நெருக்கத்தையே இது எடுத்துக்காட்டுகின்றது. அதற்காகத்தான் அந்த சூனியக்காரர்கள் கயிறுகளைப் போடுகின்றார்கள் அவை பாம்புகளாகக் காட்சியளிக்கின்றன. இதை வித்தையென்று சொல்ல முடியாது. ஏனென்றால் வித்தையெனும் போது கையிறுமிருக்க வேண்டும், பாம்புமிருக்க வேண்டும். அப்போதுதான் கையிறு போட்டவாறு விளங்கி பாம்பு தென்படும் கயிற்றைப் போட்டு கையிற்றைப் பாம்பாய் காட்டுவது வித்தையல்ல. புறாவைப் பெட்டியிலிட்டு பூனையாகக் காட்டினால் அங்கு புறாவும் இருக்க வேண்டும். பூனையும் இருக்க வேண்டும். இதுவே வித்தை காட்டுதலாகும். புறாவை ஒருவனுக்குப் பூனையாகக் காட்ட முடியாது. அவ்வாறு முடியுமெனில் சூனியத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பெரிய வெட்டை வெளியில் யாரும் வித்தை காட்டுவதில்லை. வித்தைகாட்டும் இடம் பொதுவாக அடைத்தும், மறைத்தும் காணப்படும். ஆனால் அந்த சூனியக்காரர்கள் முற்ற வெளியில் பகிரங்கமாக எல்லோருக்கும் முன்னிலையிலேயே கையிறுகளைப் போடுகின்றனர். அவை பாம்புகளாக காட்சியளிக்கின்றன. இங்கே, அவர்கள் கையிறுகளைப் போட்டார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாகும்.

ஆகவே மனிதன் தனக்குள் இருக்கும் உச்ச கட்ட ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கையாளும் வித்தியாசமான ஆயுதமே சூனியமாகும்.

 

 

 

ஆரம்ப கால ஐரோப்பாவில் 

இங்கிலாந்து,
ஸ்கொட்லாந்து,
வட அமெரிக்கா,

ஜமேக்கா

போன்ற நாடுகளில் சூனியம் பரவிக்காணப்பட்டது. ஜமேக்காவில் இன்றும் கூட சூனியம் காணப்படுகின்றது. சூனியக்காரர்களின் அட்டகாசத்தால் மரண தண்டனை எனும் சட்டம்இந்நாடுகளிலே அமுலுக்கு வந்தது. 18ம் நூற்றாண்டில்தான்  இந்த சட்டம் மாற்றப்பட்டது. சூனியக்காரர்களின் உடலில் காணப்படும் ஒரு வகை அடையாளத்தை வைத்தே அவர்கள் இணங்காணப்பட்டார்கள். உண்மையான சூனியக்காரர்களுக்கு அவர்களின் உடலில்  அடையாளம் காணப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். வில்லியம்(William), புறோவர் (Brower)போன்ற வரலாற்றாசிரியர்கள் தமது புத்தகத்திலே இது தொடர்பில் தமது கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். வில்லியம் என்பவர் தனது பினோமினா ஒப் ஜமேக்கா(phenomena of Jamaica )என்ற நூலில் தென்னமெரிக்காவுடைய உண்மையான வரலாறுகள் பற்றிப் பல அரிதான குறிப்புகளை எழுதியுள்ளார். பொதுவாக வரலாறுகளில் முழுக்க முழுக்க உண்மையில்லாது போனாலும் அரைவாசிகளாவது உண்மையானவை என நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் நூதன சாலைகளில் ஆரம்ப காலங்களில் வாசிக்க முடியாத மொழியால் போடப்பட்டுள்ள கையொப்பங்களடங்கிய ஆவனங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. நமக்கென்றால் இவை தேவையில்லாதவைகளாக இருக்கலாம் ஆனால் இங்கிலாந்து, ஸ்கெட்லாந்து நாட்டவருக்கு இவை அரிதான ஆவனங்களாகவும், அவசியமானவைகளாகவும் விளங்குகினன்றன.

மனித குலத்துக்கே சூனியம் மிகப்பெரும் ஆபத்தானது என்பதால் மேற்கூறப்பட்ட சில ஐரோப்பிய நாடுகளில் விசாரனையின் போது சூனியக்காரர்களின் நகம், முடி போன்றவை பிடுங்கப்பட்டன. சூனியம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்களுக்குக் காண்பிப்பற்காக சூனியக்காரர்கள் பகிரங்கமாகவே தூக்கிலடப்பட்டார்கள். இவ்வாறு தண்டனைகளைப் பொறுக்க முடியாது அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக சூனியக்காரர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். அதாவது மக்களுக்கு நலவு செய்வதற்காக white megic கெடுதி செய்வதற்காக black megic என்று சூனியத்தை இரண்டாகப் பிரித்து நாட்டுக்கு நலவு செய்வதற்காகவும், நாட்டின் சௌகரியங்களுக்காகவும் தாம் white megic ஐ பயன்படுத்துவதாகவும் இதனால் மக்களுக்குப் பாதகங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். இதையறிந்த சில அரசுகள் சூனியக்காரர்களைத் தண்டிக்கவில்லை. என்றாலும் இந்த ஏமாற்று வேலைகளை அரசுகள் நம்பவில்லை. இலங்கைக்கு இவ்வாறான வரலாறுகள் இல்லாவிட்டாலும் அடிமைக் கலாசாரம் தலைவிரித்தாடிய ஐரோப்பிய நாடுகளில் கி.பி 18ம் நூற்றாண்டு வரைக்கும்சூனியக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தன. பிற்காலங்களில்தான் இச்சட்டத்தில் தளர்வுகள் ஏற்படலாயின.

சைதான் வழிகெடுப்பதாலேயே சூனியக்காரர்கள் உருவாகின்றார்கள் என்றால் தற்போது சூனியக்காரர்களின் தொகை கூடியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு ஏற்படவில்லையே உண்மையான சூனியக்காரர்கள் குறைந்துள்ளனரே? என்ற கேள்வியெழலாம். மனிதனைப்பொருத்த மட்டில் வாழ்வின் சௌகரியங்களுக்காக எதையும் இழப்பான். இருந்தாலும் சௌகரியங்களின் உச்சகட்டத்தை அவன் அடைகின்ற போது அதற்கான வழிகளை அல்லாஹ் ஏற்படுத்துகின்ற போது சௌகரியங்களை அடையும் கஷ்டமான வழிகளை விட்டு விலகப்பார்ப்பான். ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டான் என்பதற்கதாக உடனே அதற்குக் கூலியாக சூனியத்தை சைதான் அவனுக்குக் கற்றுக்கொடுக்கமாட்டான். அவன் தன்னிடம் அடிமையாக மண்டியிட்டு, கேவலப்பட்ட பின்புதான் அவனுக்கு சில உதவிகளைப்புரியும் அளவுக்கு சைதான் வருவான். இந்தக் கடின நிலையும் இளகு வழியில் சௌகரியச் சிந்தனையில் இந்தச் சமுதாயம் ஆற்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் பல காரணங்களை நமது தொடரில் புரிந்துகொள்ள முடியும்.

சூனியத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பிபாபில என்று ஓரிடத்தை சொல்லிக் கூறுகிறான். சில இடங்கள் சிலதுக்குப் பேர் போனவை என்றடிப்படையில் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றான். ஆகவே சூனியமென்பது இன்று சொல்லப்படுவது போன்று வித்தைகாட்டுதல் என்பதல்ல. மாறாக மனித குலத்துக்கு எதிராக ஊடுருவுவதற்கு செய்தான் கண்டுபிடித்த ஒரு வழியாகும் என்பதை நாம் விளங்கவேண்டும். இவைகள் சூனியப் பரம்பலையும் அதன் பின்புலத்தையும் விளங்கிக்கொள்ள சில குறிப்புக்களே.

  1. சூனியம் எவ்வாறு சாத்தியமாகும்?

சூனியம் எவ்வாறு சாத்தியமாகும் என நாம் நினைக்கலாம். மனிதனைச் சுற்றி காந்த அலையொன்று இருப்பதை தற்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடித்து வருகின்றது. மனிதன் இயங்கவேண்டுமெனில் இரத்தமும் நீரும் சரிவிகிதத்தில் மாறிக்கொண்டிருக்க வேண்டும். நஞ்சு குடித்த ஒருவருக்கு நன்றாக தண்ணீர் கொடுப்பார்கள். சிலருக்கு வைரசுகள் மூளைக்குச் சென்றுவிட்டால் முள்ளந்தண்டிலிருந்து நீரை எடுப்பார்கள் அதிசயிக்குமளவுக்கு நீர் வந்திருப்பதைப்பார்க்கலாம். தலையிலோ உடம்பிலோ இரத்தம் குத்தியெடுக்கும் மருத்துவத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள். இதற்கு ஹிஜாமா எனப்படும். சர்வதேச சுகாதர தாபனமும் இதை அனுமதித்துள்ளது. அசுத்தமான இரத்தம் உடம்பிலிருந்து வெளியேறுவதனால் பல நோய்கள் குணமாகின்றன. மனித உடலில் காணப்படும் இரத்தமும் நீரும் வெளியிலுள்ள காந்த சக்தியால் தாக்குமுறும் இயல்பு கொண்டவை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒத்த வயதையுடைய இருவர் கடைக்குச் சென்று ஒரு சட்டை பார்க்கிறார்கள். ஒருவருக்கு அது பிடிக்க அடுத்தவருக்கு அது பிடிக்காமல் போகின்றது. காரணம் என்னவெனில் ஆளுக்கேட்ப கவரும் தன்மையில் காணப்படும் மாறுதல்களேயாகும்.   பாதையில் நாம் செல்லும் போது ஒருவரைக்கண்டால் அவரைக்கண்டதுமே அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. இதற்கு முன்னர் அந்நபருடன் எந்தத் தொடர்புமே நமக்கு இருந்திருக்காது. ஆனாலும் அவர் மீது நமக்கு வெறுப்பேற்பட்டு விடுகின்றது. நமைச் சூழவுள்ளகாந்த அலைகளே இகற்குக் காரணமாகின்றன. மூவர் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நபரைப்பற்றிப் பேச முற்படும் போதே அந்நபர் அவ்விடத்துக்குப் பிரசன்னமாகின்றார். இது எப்படி நிகழ்ந்ததெனில் அவர் புறப்படும் போதே அவர்கள் அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் காந்த அலைகளின் பறிமாற்றத்தால் அவரைப்பற்றிய பேச்சு அவர்களிடத்தில் உண்டாகின்றது. இதைத்தான்“Telepathy” என அழைப்பார்கள்.

ஆக நம்மைச்சூழ ஓரலை வட்டத்தை அல்லாஹ் வைத்துள்ளான் ஆகையால்தான் உண்மையாக சூனியம் செய்யும் எவனும் சூனியம் செய்யப்படும் நபர் பாவித்த ஆடை, அவரின் முடி, நகம் போன்றவற்றை எடுத்து வரச்சொல்கின்றான். நபியவர்களுக்கும் இவ்வகையில்தான் சூனியம் செய்யப்பட்டது. ஒருவரின் சட்டையை வைத்து இது யாருடையது என்பதை இன்றைக்கு இலகுவாய்க் கண்டுபிடித்திடலாம். இதனடிப்படையிலேயே மோப்ப நாய்கள் மூலம் தடயங்களை வைத்து ஆட்களை அடையாளம் காண்கிறார்கள். ஆரம்பகாலங்களில் இதை நம்பமுடியாது போனாலும் இன்றைக்கு இது மிகச்சுலபமாகிடடது. இதை நாம் சைதானுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிய அறிவு அவனுக்கு எப்போதோ தெரிந்திருக்கின்றது. ஒருவனுக்குப்பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் அவனிடமுள்ள பொருளொன்று அதற்கு அவசியமாகின்றது. சூனியக்காரன், சைதான், சூனியம் செய்யப்பயன்படும் பொருள், சூனியம் செய்யப்படும் நபர் ஆகிய நான்கு அம்சங்களில்தான் சூனியம் தங்கியுள்ளது. தன்னை வணங்கும் சைதானிய அடியார்களுக்கு அவனின் உதவியின் வடிவமே இது. அந்த உதவிக்கான சைத்தானியக் கல்வியே சூனியம். ஒருவேடிக்கை என்னவெனில் சைதான் தனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும் தான் சொல்வதை அவன் செய்வதாகவும் கூறி சிலர் மக்களை வழிகெடுக்கின்றனர். ஒரேயொரு ஸ{ஜூதைக் கூட ஆதம் நபிக்கு செய்ய விரும்பாத அவன் எவ்வாறு ஒரு மனிதனுக்கு வசப்படுவான் என்பதுதான். சைதான் மனிதனுக்கு அடிபணியமாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே அவன் வசப்படுவான். பத்ர் போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த  போது இங்கு வந்த சைதான் நீங்கள் காணாதவற்றை நான் காண்கின்றேன் என்று கூறி விலகிக்கொண்டான். அதாவது மலக்குமார் இறங்கி வருவதை அவன் கண்டதாலேயே இவ்வாறு விலகிச்சென்றான். இதை அல்லாஹ் சூறா அன்பாலிலே சுட்டிக்காட்டுகின்றான்.

ஆகவே அனைத்து நன்மைகளுக்கும் எதிரானவனே ஷைதானாகும். தீமைகளனைத்தையும் ஒருவன் செய்து சைதானை எப்படி அனுகுவது என்பது பற்றிப்படிப்பதுவே சூனியக்கலையாகும். சூனிய உலகு பற்றிய தகவல்களைக் கொண்டமைந்ததே இப்பகுதியாகும். இதில் முடிவுகள் ஏதுமில்லை இது சூனிய உலகு பற்றிய ஓர் அறிமுகம் மாத்திரமே.

அல்குர்ஆன் சுன்னாவின் பார்வையில் சூனியம்

சூனியம் தொடர்பாக அல்குர்ஆனும், ஹதீதும் என்ன கூறுகின்றன என்பது பற்றி இப்பகுதியில் விரிவாகப்பார்ப்போம். அரபுமொழி அடிப்படையில் என்ன காரணத்தினால் ஏற்படுகின்றது என்பது பற்றி அறியமுடியாததும், அற்பமானதும், மிக இரகசியமானதுமான ஒரு விடயம்என்று சூனியத்துக்கு விளக்கமளிக்கலாம். பேச்சிலே சூனியமிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியிருப்பதும் மேற்கூறியது போன்று மொழி அடிப்படையிலான சூனியத்தையே. இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட சூனியத்தை நபியவர்கள் இந்த ஹதீதில் குறிப்பிடவில்லை. ஒருவர் ஆக்ரோசமாகப் பேசும் போது அதைக்கேட்போரும் ஆக்ரோசப்படுகிறார்கள். ஒருவர் அமைதியாகப் பேசும் போது அதைக்கேட்போரும் அதே நிலையிலேயே செவிமடுக்கின்றனர். எனவே பேசுபவரின் உரையின் தன்மைக்கேட்ப அதைக்கேட்போரும் தமை அறியாமலேயே அவ்வுரைவசப்படுகிறார்கள். இதைத்தான் பேச்சிலே சூனியமுண்டு என்று நபியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். “ஸலாத்” என்ற சொல்லுக்கு அரபு மொழியிலே பிராத்தித்தல் என்று அர்த்தமாகும். ஆனால் அல்குர்ஆனில் பல இடங்களில் வரும் ஸலாத் என்ற பதம் தொழுகையைத்தான் குறிக்கின்றது. இதைப்போலவே “ஸகாத்” என்ற சொல்லுக்கு அரபு மொழியிலே தூய்மை என்பது கருத்தாகும். ஆனால் அல்குர்ஆனில் இவ்வருத்தமில்லாது ஸகாத் கடமையைக் குறிக்கவே இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புரிந்து கொள்ள முடியாத, காரணமில்லாத விடயங்களுக்கு அரபியில் ஸிஹ்ர் என்று சொல்வர்.

மார்க்க அடிப்டையில் பார்க்கின்ற போது அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் சூனியம், அல்லது சூனியக்காரன் என்ற சொல்லைப்பயன்படுத்தியுள்ளான். சூனியத்தால் ஏதும் தாக்கங்கள் ஏற்படுமா? என்பதற்கு அப்பால் சூனியம் என்ற ஓன்று உண்டென்பதையே இது உணர்த்துகின்றது.

وَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ وَإِنَّا بِهِ كَافِرُونَ الزخرف : 30

அவர்களிடத்தில் உண்மை வந்த போது இது சூனியம் இதை நாம் நிராகரிக்கின்றோம் என்று இறை நிராகரிப்போர் கூறினார்கள்.(ஸ{க்ரூப் : 30)

சூனியம் மனித குலத்துக்கே எதிரானதென்று ஏலவே நாம் விளங்கினோம். ஆகவேதான் காபிர்கள் இறைத்தூதர்களைப் பார்த்து நீங்கள் சூனியக்காரர்கள் நீங்கள் கூறுவது இறைசெய்தி கிடையாது நீங்கள் காட்டுவதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத சில அற்புதங்களைத்தான். ஆகவே நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கின்றோம் என்று கூறியதாக அல்லாஹ் மேலுள்ள வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ الأنعام : 7

காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலும் இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை என்று ஏக இறைவனை மறுப்போர் கூறியிருப்பார்கள். (அன்ஆம் : 08)

வானிலிருந்து நேரடியாகவே வேதம் இறக்கப்பட்டாலும் அதையும் இவர்கள் சூனியம் என்று கூறுவார்கள். இது செய்தானின் மிகப் பெரும் சூழ்ச்சியாகும். நபிமார்கள், அவர்களுக்கு எதிராகசூனியக்காரர்கள்அற்புதங்கள், அதற்கு எதிராக சூனியம், ஆகவே அற்புதங்களை ஏற்கமுடியாது போனதற்கு சூனியம் காரணமாகியது. அற்புதங்கள் காட்டியும் நபிமார்களை ஏற்க முடியாது போனது அவர்கள் சூனியக்காரர்களாகப் பார்க்கப்பட்டமையாகும். இது சைதானால் மனிதர்களுக்கு மத்தியில் பரப்பப்பட்ட சூழ்ச்சி என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். எனவே சூனியம் என்ற ஒன்று உன்டு என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாகவுள்ளன. சூனியம் ஒரு மிகப்பெரும் வரலாற்றுச் செய்தி என்பதற்கு கீழே நாம் கூறவுள்ள சில செய்திகள் ஆதாரமாகவிருக்கும். இவைகள் மொழிரீதியான சூனியம் பற்றிய மொழி ரீதியான சில தகவலுக்காய்.

இரண்டாவதாகசூனியத்தால் எந்தளவுக்கு மனிதர்களில் தாக்கம் செலுத்த முடியும் என்பதைப்பார்ப்பதற்கு முன்னர் சூனியத்தால் மனிதனுக்குக் பாதிப்பு ஏற்படுமா? அல்லது ஏற்படாதா? ன்பது தொடர்பில் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று தேடும் போது கீழ்வருகின்ற ஹதீதுகளை அவதானிக்க முடியும்

صحيح البخاري بابُ العَجْوَةِ 5445- حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ

عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

தினமும் யார் ஒவ்வொரு நாள் காலையிலும் அஜ்வா வகை சேர்ந்த ஏழு பேரீத்தம் பழங்களை சாப்பிடுகின்றாரோ, அந்த நாளில் அவருக்கு நஞ்சோ, சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது.ஆறிவிப்பவர் : ஆமிரிப்னு ஸஃத் (ரழி) ஆதாரம்: புஹாரி5445

சூனியத்துக்கும் ஒரு தாக்கமிருக்கிறது, நஞ்சுக்கும் ஒரு தாக்கமிருக்கிறது ஆனால் அஜ்வா என்ற பேரீத்தம் பழங்களை சாப்பிட்ட அந்த தினத்தில் அவற்றால் தாக்கம் செலுத்த முடியாது என்பதை இந்த ஹதீஸில் விளங்க முடிகின்றது. ஒருவர் இந்த அஜ்வா பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு நஞ்சைக் குடித்தால் இவருக்கு நஞ்சு பாதிப்பை ஏற்படுத்துமா? ஏன்ற கேள்வியெழலாம். இதற்கான பதில் இந்த உரையின் கடைசிப்பகுதியான மருத்துவம் என்கின்ற பகுதியில் தெளிவுபடுத்துவேன். அந்த சந்தர்ப்பம் வரும் போது அதைப்பார்ப்போம்.

மூன்றாவதாக, சூனியம் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அல்லாஹ் சூறதுல் பகராவில் 102ம் வசனத்தில் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை பதினொரு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம். இப்பகுதிகளனைத்தையும் அல்குர்ஆன் அஸ்ஸ{ன்னாவைக் கொண்டு இங்கு விளங்கப்படுத்தினால் சூனியம் பற்றி அல்லாஹ் கூறுவதைத் தெளிவாக விளங்கலாம். அவ்வசனங்களை ஒவ்வொன்றாக அவதானிப்போம்.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ 1

{லைமானின் ஆட்சியில் செய்தான்கள் ஓதி வந்ததை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.

இந்த வசனத்தின் அடுத்த பகுதியில் وَمَا كَفَرَ سُلَيْمَانُ{லைமான் ஏக இறைவனை நிராகரிக்கவில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் ஏன் இப்படிக் கூறவேண்டும் இந்த வசனத்துக்கும் முன்னர் நாம் பார்த்த வசனத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை இங்கு கவனிப்போமானால், முதலில் ஸ{லைமான் (அலை) அவர்களின் ஆட்சி எப்படியிருந்தது என்பதை அறிவது அவசியமாகின்றது. அல்லாஹ் அவரின் ஆட்சியைப் பற்றி அல்குர்ஆனில் கூறும் போது,

وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ الأنبياء : 79 ، 80

பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். ஆவை (இறைவனைத்) துதித்தன. நாம் (எதையும்) செய்யக் கூடியவராவோம். (அல் அன்பியா: 79)

என்று ஸ{லைமான் (அலை) அவர்களின் தந்தை தாவூத் (அலை) அவர்களுக்கு செய்த அருட்கொடைகளைக் கூறிக்காட்டுகின்றான். தொடர்ந்தும் அல்லாஹ் நபி ஸ{லைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றிக் கூறும் போது,

وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ الأنبياء : 81

வேகமாக வீசும் காற்றை ஸ{லைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(அல் அன்பியா: 81)

ஸ{லைமான் (அலை) அவர்களை நபியென்று நம்பாதவன் அவர் காற்றில் பறந்து செல்வதைப் பார்த்து ‘இவரொரு சூனியக்காரர் அதனால்தான் இப்படி பறந்து போகின்றார்” என்று கூறுவான். மற்றொரு வசனத்தில்

وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ النمل : 16

தாவூதுக்கு ஸ{லைமான் வாரிசானார்.மக்களே பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும். என்று அவர் கூறினார்.” (அந்நம்ல் : 16)

தொடர்ந்தும் அல்லாஹ் கூறும் போது,

وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ النمل : 17

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸ{லைமானுக்ககாகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணிவகுக்கப்பட்டனர். “(அந்நம்ல் : 17)

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ النمل : 18

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே உங்கள் குடியிருப்புக்குள் நுழையுங்கள் ஸ{லைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாதுஎன்று ஓர் எறும்பு கூறியது. (அந்நம்ல் : 18)

இது ஸ{லைமான் நபியவர்களுக்குத் தெரிகிறது அவர் உடனே சிரித்தவராக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். ஹ{த் ஹ{த் என்ற பறவை ஸ{லைமான் நபியவர்களிடம் வந்து உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியை நான் சொல்லப் போகிறேன் என்று ஸபா நாட்டு அரசியின் செய்தியைச் சொன்னதும், பிரமுகர்களே அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்ததை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று ஸ{லைமான் கேட்டார்.” (அந்நம்ல் : 38) “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன், வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. (அந்நம்ல் : 39) தூரப் பிரதேசங்களிலிருந்து மிக அவசரமாகப் பொருட்களைச் சுமந்து வரும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம். இத்தகைய ஆற்றல் கொண்ட ஜின் வர்கத்தை அல்லாஹ் ஸ{லைமான் நபியவர்களுக்கு மட்டுமே வசப்படுத்திக் கொடுத்தான். பலம்பொருந்திய இத்தகைய ஜின் வர்கத்தை அற்பமான மனிதனால் வசப்படுத்த முடியாது. قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ………. النمل : 40 ‘கண் மூடித்திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது கூறியது………” இவ்வாறு கூறியது மனிதர் ஒருவர்தான் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் அதை ஏற்கமுடியாது. ஏனெனில் ஸ{லைமான் (அலை) அவர்களை விட சிறந்த, இத்தகைய ஆற்றல் கொண்ட ஒருவர் அங்கு இருக்க முடியாது. ஆகவே அவ்வாறு கூறியது ஜின் ஒன்றுதான். فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي ……….النمل : 40 “தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை…….” என்றார். قَالَ نَكِّرُوا لَهَا عَرْشَهَا نَنْظُرْ أَتَهْتَدِي أَمْ تَكُونُ مِنَ الَّذِينَ لَا يَهْتَدُونَ النمل :41  ‘அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள் அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப்பார்ப்போம்என்றார். (அந்நம்ல் : 41) فَلَمَّا جَاءَتْ قِيلَ أَهَكَذَا عَرْشُكِ قَالَتْ كَأَنَّهُ هُوَ وَأُوتِينَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ النمل : 42 “அவள் வந்த போது உனது சிம்மாசனம் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டகப்பட்டது. அது போல்தான் இருக்கிறதுஎன்று அவள் கூறினாள். இவளுக்கு முன்பே நாம் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாம் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம். (என்று ஸ{லைமான் கூறினார்.) (அந்நம்ல் : 42) பின்னர் அல்லாஹ் ஸ{லைமான் (அலை) அவர்களின் மாளிகையைப் பற்றிக் கூறும் போது, قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَنْ سَاقَيْهَا قَالَ إِنَّهُ صَرْحٌ مُمَرَّدٌ مِنْ قَوَارِيرَ النمل : 44 ‘இம்மாளிகையில் நுழைவாயாக என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை என்று அவர் கூறினார். (அந்நம்ல் : 44)

இது போன்ற மிகப்பிரமாண்டமான ஆட்சியை உலக வரலாற்றில் வேறெவரும் பெற்றிருக்கவில்லை. பெறவும் முடியாது. மேலே நாம் பார்த்தவை அனைத்தும் சூறத்துந்நம்லில் வரும் வசனங்களாகும். சூறா ஸாதிலே அல்லாஹ் ஸ{லைமான் நபியவர்களின் ஆட்சி வல்லமை பற்றிக் கூறும் போது,

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ص : 35

என் இறைவா என்னை மன்னித்து விடு எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்எனக் கூறினார். (ஸாத் : 35)

இது ஸ{லைமான் நபியவர்கள் கேட்ட துஆவாகும் இதை எங்களுக்குக் கேட்டகலாகாது. அல்குர்ஆனை ஓதும் போது இதை ஓதலாம். துஆவாக கேட்க முடியாது. ஏனெனில் இது ஸ{லைமான் நபியவர்களுக்கு மட்டுமே உரிய துஆவாகும். அல்லாஹ் அவரின் ஆட்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.

فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ ،وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ ،وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ، هَذَا عَطَاؤُنَا فَامْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ ص : 36 – 39

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிட்ட சிலரையும் வசப்படுத்திக் கொடுத்தோம். இது நமது அருட்கொடை கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம் அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம். (ஸாத் : 36-39)

இந்த ஷெய்தான்கள் என்ன வேலைகளையெல்லாம் அவருக்குச் செய்து கொடுத்தன என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது,

يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ سبأ : 13

அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே நன்றியுடன் செயற்படுங்கள் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே எள்ளனர்.என்று கூறுகின்றான். (ஸபஉ:13)

வரலாற்றை நாம் பார்ப்போமானால், தாவூத் (அலை) அவர்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்களே யூதர்களும், கிறிஸ்தவர்களும். இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இஸ்ஹாக் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரே அவர்களிருவருமாவர். இஸ்ஹாக் (அலை) அவர்கள் சிரியாவிலும், இஸ்மாயீல் (அலை) அவர்கள் மக்காவிலும் வாழ்ந்தார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன் யஃகூப் (அலை) அவர்கள், அவரின் மகன் யூஸ{ப் (அலை) அவர்கள், ஸகரிய்யா (அலை) அவர்கள், யஹ்யா (அலை) அவர்கள் என ஈஸா (அலை) அவர்கள் வரைக்கும் அனைவருமே நபிமார்களாகும். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களோடு நபிப் பரம்பரை முடிந்து விட்டது. அதனால்தான் இறுதி நபியும் எங்களிலிருந்துதான் வருவார் என்று யூத, கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எண்ணியதற்கு மாற்றமா இஸ்மாயீல்(அலை) அவர்களின் பரம்பரையில் இறுதி நபி வந்ததால் பொறாமையின் காரணமாக அவரை நிராகரித்தார்கள். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ البقرة : 146 “தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவர்கள்” (பகறா :146)

இத்தகைய ஒர் ஆட்சியை நாம் நினைத்துப் பார்க்கின்ற போது, காற்றில் பறக்கவேண்டும், ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை வரலாம். காரூனிடமிருந்த செல்வத்ததைப் பார்த்து ‘காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போல எங்களுக்கும் இருக்கக் கூடாதா?” என அக்காலத்து மக்கள் ஆசைப்பட்டதைப் போல ஸ{லைமான் (அலை) அவர்களின் ஆட்சிவல்லமையைப் பார்த்தும் ஆச்சரியப்பட்டார்கள். சூனியத்தல் தான் இவர் இந்நிலையை அடைந்தார் என்று ஈமான் கொள்ளாத மக்கள் நம்பினார்கள். இந்த ஆசையை மக்களிடம் கண்ட ஷெய்தான்கள், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூனியத்தைப் படித்தால் இந்நிலையை நீங்கள் அடைவீர்கள்என்று மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத்தான் அல்லாஹ் {லைமானின் ஆட்சியில் ஷெய்தான்கள் ஓதி வந்ததை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள். ஸ{லைமான் நிராகரிக்கவில்லை” என்று சூனியத்தால் இத்தகைய அருள் ஸ{லைமான் (அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை, தான் செய்த அருளினாலேயே ஸ{லைமான் (அலை) அவர்களுக்கு இத்தகைய சிறப்புக்கள் கிடைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இதுவே وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ என்ற வசனத்துக்குரிய விளக்கமாகும்.

  1. وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102 மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷெய்தான்களே நிரகரித்துவிட்டனர்.

சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததனால் ஷெய்தான்கள் காபிர்களானார்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். ஷெய்தான் மனிதனுக்கு இலகுவில் வழிப்படமாட்டான். அவனுக்கு ஒருவன் முழுமையாகக் கட்டுபட்ட பின்பே ஷெய்தான் ஒருவனுக்கு உதவி செய்வான். ஸ{லைமான் நபியவர்கள் காலத்தில் மனிதர்கள் தன்னை வணங்கும் முறைகளை ஷெய்தான் சூனியத்தை மனிதர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் பரப்பினான். இன்றும் கூட சில நாடுகளில் சூனியக்காரர்கள் பிடிபட்ட போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைக் காணும் போது ஆச்சரியமாகவுள்ளது. சவுதி அரேபிய அரசின் ஏவல், விளக்களுக்கான அமைப்பினால் சூனியக்காரர்களைப் பிடிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வமைப்பினால் சூனியக்காரார்களிடமிருந்து வீடியோகிளிப்புக்கள் தடயப்பொருட்கள், குர்ஆன் வசனங்கள் தலை கீழாய் எழுதப்பட்ட ஆடைகள், ஷிர்க்கான வசனங்கள் எழுதப்பட்ட ஆடைகள், சிறுநீர், மலம் போன்ற நஜீஸ்களால் துடைக்கப்பட்ட குர்ஆன் பகுதிகள், ஈய உருக்குகள் போன்ற தடயப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது. வித்தை காட்டுவோருக்கு எதற்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்? ஆகவே சூனியம் எனபது வித்தையல்ல. அது மனித குலத்துக்கு விரோதமான பாதகச் செயல் என்பதாலேயே இவ்வாறு சூனியக்காரர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது.

இலங்கையிலும் அல்குர்ஆனை வைத்து மருத்துவம் செய்கின்ற சிலரிடமும் ஏழு கடல் மண் என்று ஒரு மூட்டையளவிற்கு மண் அகப்பட்டிருக்கின்றன. தாயத்துக் கட்டுவதற்குக் கூட பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கையைப் பொருத்தமட்டில் தாம் சூனியம் செய்பவர்களாகக் கூறுபவர்களில் பெரும்பாலானோர் பொய்யர்களே. அரபு நாடுகளிலிருந்து இங்கு வந்து சூனியம் செய்து விட்டு போகின்றவர்களும் உள்ளனர்.இவர்களிடமிருந்து பெறப்படும் தடயங்களைப் பார்க்கும் போது நாடுகள் வேறுபட்டாலும் இவர்களிடம் காணப்படும் பொருட்கள் ஒன்றுபட்டதாக, ஒரேமாதிரியானதாகவுள்ளன. ஆகவே சூனியம் என்றொரு உண்மையான தீங்கு விளைவிக்குங் கலை உலகில் இருக்கின்றது என்பதை இத்தரவுகள் நிரூபிக்கினறன. சிறுவர்களின் கைகளில் சதுரக் கோட்டை வரைந்து குறி பார்த்தல், நட்சத்திரங்களை வைத்துக் குறிபார்த்தல் போன்ற அனைத்துமே ஷெய்தான்களின் துணையினால் நடைபெறுபவைகளே.

இக்கலைகளை மனிதர்கள் படிப்பதை ஷெய்தான் எதிர்பார்க்கின்றான். இவற்றைப்படித்து ஒட்டுமொத்தமாகவே ஒருவன் ஷெய்தானுக்கு வழிப்பட்டு விட்டால் அவனுடைய குடும்ப வாழ்வில் நிம்மதியிருக்காது. அவனுக்குக் குழந்தை பிறக்காது, வெறிபிடித்தவனாக அலைவான், ஷெய்தான் இவனை மென்மேலும் கேவலப்படுத்துவான். மனிதனுக்கு ஷெய்தான் சேவை செய்யவோ கட்டுப்படவோ மாட்டான். அற்பமான சில விடயங்களை ஒருவனுக்குக் கொடுத்து அதன் மூலம் அவனை அடிமைப்படுத்துவான்.

3- وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ البقرة : 102 “(ஜிப்ரீல், மீகாயீல் எனும்) இரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்பட வில்லை.” ‘ஷெய்தான்களே மறுத்தனர்

என்று அல்லாஹ் இவ்வசனத்தின் இதற்கு முந்திய பகுதியில் கூறிவிட்டு மக்களிடையே வெளிப்பட்டு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த அந்த ஷெய்தான்கள் யார் என்பதைக் கூறும் போது ஹாரூத் மாரூத் என்பவர்கனைக் கூறுகின்றான் என்பதே அகீதாவுக்கும் மிக நெருக்கமான கருத்தாகின்றது. ஏனெனில் ஸ{லைமான் (அலை) அவர்களை அம்மக்கள் சூனியக்காரன் என்று எண்ணினார்கள். ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய மலக்குமார்களுக்கும் இம்மக்கள் எதிரானவர்கள் என்பதால் இவ்விடயத்தில் இவ்விரு மலக்குமார்களையும் சம்பந்தப்படுத்தினார்கள். ஆகவேதான் சுலைமான் நபி சூனியத்தால் அந்த பலமிக்க ஆட்சியைப் பெறவுமில்லை. அவ்விரு மலக்குமார்களுக்கும் சூனியம் அருளப்படவில்லை; என்பதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ  البقرة : 102 .4

நாங்கள் படிப்பினையாக இருக்கின்றோம். எனவே (இதைக்கற்று இறைவனை) மறுத்து விடாதே என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.

ஷெய்தான் மனிதர்களை வழிகேடுக்கும் போது இது போன்ற நல்ல வார்த்தைகளைச் சொல்லியே வழிகெடுக்கின்றான் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ ، وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ الأعراف : 20 ، 21
இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத்தடை செய்யவில்லை என்று கூறினான். நான் உங்கள் .ருவருக்கும் நலம் நாடுபவனேஎன்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.

5- فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ البقرة : 102


கனவனுக்கும்,மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.

கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது மிக இலகுவானதாகும். இருவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டால் போதுமாகும். ஆனாலும் இதை மனிதனுக்கு ஷெய்தான் இலகுவாய் கற்றுக்கொடுக்கமாட்டான். குப்ர் செய்யவேண்டும், சூனியத்தை முழுமையாக நம்பவேண்டும், அதற்காகக் கேவலப்படவேண்டும் இவ்வனைத்தையும் மனிதன் செய்தாலேயே சூனியத்தை மனிதனுக்குக்கற்றுக்கொடுக்கின்றான். ஒரு முறை நபியவர்கள் தனது மனைவி ஸபிய்யா(ரழி) போகும் போது இரு நபித்தோழர்கள் அதைக்காண்கிறார்கள் அவர்களைக் கண்ட நபியவர்கள் ‘இருவரும் கொஞ்சம் நில்லுங்கள”; என்று கூறிவிட்டு திரும்பி வந்து ‘அது ஸபிய்யா தான்” என்று கூறினார்கள். இதைக்கேட்ட அந்நபித்தோழர்கள்’ நபியவர்களே நாங்கள் சந்தேகம் கொள்வோமா?” என்று கேட்டார்கள் அதற்கு நபியவர்கள்’ ஷெய்தான் மனிதனின் ரத்த நாலங்களிலெல்லாம் ஓடுகின்றான்” என்று கூறினார்கள். ஒரு வாதத்துக்காக நபிவர்கள் அந்த நபித்தோழர்களிடம் இவ்வாறு சென்று, இச்செய்தியை அந்நபித்தோழர்கள் மக்களிடையே பரப்பி, அது நபியவர்களின் மனைவிமாருக்குக் கேள்விப்பட்டிருப்பின் அங்கு குடும்ப வாழ்வு சிதைவுற வாய்ப்புண்டு. நபியவர்களைப் பொருத்தமட்டில் சிந்தனையோடு செயல்படுவார்கள். நமைப்போன்றவர்களுக்கு இவ்வாறான ஒன்று ஏற்பட்டால் விளைவு மிக மோசமாகிவிடலாம்.

ஆகவே கணவன், மனைவிக்கிடையில் சந்தேகம் ஏற்படவைப்பது ஷெய்தானுக்கு பெரிய வேளை கிடையாது. ஆனால் மனிதனுக்காக அதைச்செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு அம்மனிதன் வழிப்பட்டு, சூனியத்தைப்படித்து, அவனிடம் கேவலப்படவேண்டும். இதையே ஷெய்தான் மனிதனிடம் எதிர்பார்க்கின்றான்.

அல்லாஹ் அல்குர்ஆனில் ஸிஹ்ருத்தக்யீல் என்றொருவகை சூனியத்தைக் குறிப்பிடுகின்றான். கயிரைப் போட்டு பாம்பாகத் தோற்றமுறச் செய்ததையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். ஏனெனில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெட்டவெளியில் ‘பிர்அவ்னுடைய கன்னியத்தைக்கொண்டு” என்று கூறி அந்த சூனியக்காரர்கள் அனைவரும் ஒரே முறையில் கையிற்றை மட்டுமே மூஸா நபியவர்களுக்கு முன்னால் போட்டார்கள் அவை உடனே பாம்புகளாகக் காட்சியளித்தன. இந்த சூனியத்தால் மூஸா நபியவர்களுக்கே பயமேற்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே இங்கு மூஸா நபியவர்களுக்கு சூனியம் பாதித்திருக்கின்றது. நபிமார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அல்லாஹ் வஹி மூலம் உதவி செய்வான். எனையவர்கள் இவ்வாறு சூனியத்தால் பாதிக்கப்பட்டால் சில வேளை தப்பலாம் அல்லது மரணித்தும் போகலாம். ஆல்லாஹ் மூஸா நபியவர்களைப்பார்த்துமூஸாவே நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்களே வெற்றி பெறுவீர்கள் உங்களது வலது கையில் உள்ளதைப் போடுவீராக அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும்” என்று கூறுகிறான்.

சூனியக்காரர்களுக்கு கையிற்றைப் பாம்பாக மாற்ற முடியாது. ஆனால் பாம்பு போல காட்ட முடியும். இந்த சூனியம் ஒருவருக்கு வைக்கப்பட்டால் பாதையில் செல்லும் பெண்ணொருவரை மனைவியாகக்காண்பான் மனைவியை மனைவியாகக்காணமாட்டான். ஏனெனில் அவனுக்கு இந்த சூனியத்தால் மாற்றிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாம் தலைகீழாய் தோற்றமளிப்பதுவே இந்த சூனியத்தின் பாதிப்பாகும். இதையே அல்லாஹ் மிகப்பெரும் சூனியம் என்று கூறுகின்றான். நபிமார்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தஃவா செய்தும் அந்த மக்கள் நிராகரித்தமைக்கு இந்த சூனியமே காரணம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏனெனில் சூனியத்தாலும் இவ்வாறு செய்யலாம் என்று நபிமார்களைப்பார்த்து அம்மக்கள் நினைத்தனர். இவை அல்குர்ஆன் நமக்குக் கூறும் செய்திகளாகும். இந்த வகை சூனியம் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

صحيح البخاري  – (17  449)
– 6994  حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ

யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் செய்தானால் என்னைப் போன்று தோற்றமளிக்க முடியாது.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)

ஆதாரம் : புஹாரி

செய்தானால் நபியவர்கள் போன்று தோற்றமளிக்க முடியாது ஆனாலும் மற்றவர்களைப் போன்று தோற்றமளிக்க அவனால் முடியும் என்பதை இங்கு கவனிக்கலாம். நபியவர்கள் ஸிஹ்ருத்தக்யீலால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு கீழ்வரும் செய்திகள் சான்றாகின்றன.


صحيح البخاري  – (8  213)

– 3175 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ
நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். எந்தளவுக்கெனில் நபியவர்கள் சில வேளைகளைச் செய்ததாக நினைத்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)

ஆதாரம் : புஹாரி

அடுத்து வரும் பகுதியில் இந்த ஹதீஸ் தொடர்பில் தனியாகவே ஆராய்வோம்.நபிமார்கள் பலவேறு அற்புதங்களைப் புரிந்து தாம் இறைத்தூதர்களே என்பதை நிரூபிக்க முனைந்த போதெல்லாம் மக்கள் அதனை ஏற்காமைக்குக் காரணம் சூனித்தாலும் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தலாம் என்று அந்த மக்கள் எண்ணியமைதான். இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு விளக்குகின்றான். ஈஸா நபியவர்களைப்பற்றிக் கூறும் போது,

تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْد وَكَهْلًا   المائدة : 110
தொட்டிலிலும், இளமைப்பருவத்திலும் நீர் மக்களிடம் பேசனீர்.

وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ المائدة : 110

என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி பிறவிக்குருடையும், வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும்  எண்ணிப்பார்ப்பீராக இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்)  வெளிப்படுத்தியதையும் எண்ணிப்பார்ப்பீராக இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர் அப்போது இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லைஎன்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர்; கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப்பார்ப்பீராக.” (அல்மாயிதா : 110) என்று கூறுகின்றான்.

மூஸா நபியவர்களைப்பற்றிக் கூறும் போது,

فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ  وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ  قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ الأعراف : 107 – 109
“அவர் அப்போது தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. ஆவர் தனது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். ஏன்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று பிர்அவ்னிடம் சமுதாயப்பிரமுகர்கள் கூறினர்”. (அல்அஃராப் : 107- 109)

பின்னர் அம்மக்கள் மூஸா நபியைத் தோற்கடிப்பதற்காக அனைத்து சூனியக்காரர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அவ்வாறே சூனியக்காரர்கள் ஒன்று சேர்ந்து கையிறுகளைப் போடவே அவை பாம்புகளாகத் தோன்றுகின்றன. மூஸா நபியவர்கள் தனது தடியைப் போட்டதும் அது அனைத்து பாம்புகளையும் விழுங்கி விடுகின்றது. இதைக்கண்ட சூனியக்காரர்கள் வியந்து மூஸா (அலை) அவர்களை நபியாக நம்பிவிடுகிறார்கள். அப்போது அவர்களைப் பார்த்து பிர்அவ்ன்,قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ طه : 71 நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பிவிட்டீர்களா?” அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களது குருவாவார்.எனக் கூறுகின்றான். அதாவது முஃஜிஸாக்களைக்காட்டினால் அவை சூனிமென்றே மறுக்கப்பட்டன என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

பிர்அவ்னை 5 விடயங்களைக் கொண்டு சோதித்ததாக கூறுகின்றான்.فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ   الأعراف : 133 ، 134 “எனவே அவர்களுக்கெதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, போன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்(அல்அஃராப் : 133-134)

வேறோரிடத்தில் இது பற்றி அல்லாஹ் கூறும் போது,وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ  وَقَالُوا يَا أَيُّهَ السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ  فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ الزخرف : 48 – 50 “எந்தச் சான்றை நாம் அவர்களுக்குக் காட்டினாலும் அதற்கு முன் சென்றதை விட அது பெரியதாகவே இருந்தது. அவர்கள் திருந்துவதற்காக அவர்களை வேதனையால் பிடித்தோம். சூனியக்காரரே உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதி பற்றி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நாங்கள் நேர் வழி பெறுவோம்என்று அவர்கள் கூறினர். அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கிய போது உடனே அவர்கள் மீறுகின்றனர்”. என்று கூறுகின்றான்.

ஷெய்தான் அல்லாஹ்விடம் வாக்களித்ததை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ  إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ   الحجر : 39 – 41 அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத்தவிர அனைவரையும் வழிகெடுப்பேன். (அல் ஹிஜ்; : 39-41) என்று செய்தான் கூறினான். لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ   الأعراف : 16 அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்துகொள்வேன்” (அல்அஃராப் : 17) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ النساء : 119 “அவர்களை வழிகெடுப்பேன். (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.(அந்நிஸா : 119) என்று அவன் கூறினான்.

இவை அல்லாஹ்விடம் செய்தான் போட்ட சபதமாகும். மனிதர்களை இவ்வாறு மாற்றுவதற்கு செய்தான் பயன்படுத்திய ஆயுதமே இந்த சூனியமாகும். எந்தவொரு நபி வந்தாலும் அவரைப்பார்த்து சூனியக்காரன் என்று அம்மக்கள் சொன்னதும் இதனால்தான். இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ القمر : 2 அவர்கள் சான்றைக் கண்டால் இது தொடர்ந்து நடக்கும் சூனியம்எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். (அல்கமர் : 02)

كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ الذاريات : 52 இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (தாரியாத் : 52)
அல்லாஹ் நபியெனும் போது செய்தான் அவரை சூனியக்காரன் என்றான். அல்லாஹ் முஃஜிஸா எனும் போது செய்தான் அதனை சூனியம் என்றான். இதுதான் செய்தான் அல்லாஹ்வுடன் செய்த போராட்டமாகும்.

சூனியத்தால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி அல்லாஹ் பேசும் போது,وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ البقرة : 102″அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. (பகரா : 102)அல்லாஹ்  நாடினாலேயே சூனியத்தால் பாதிப்பையுண்டு பன்னலாம் என்பதை அல்லாஹ் இதனூடே சுட்டிக்காட்டுகின்றான். சாப்பிட்டால் பசி போகும் என்பது விதியாகும் ஆனாலும் அல்லாஹ் நாடினால்தான் அது நடைபெறும். தாகித்தால் தண்ணீர்அருந்த வேண்டுமென்பது உலக நியதி ஆயினும் அல்லாஹ் நாடினாலேயே அது சாத்தியமாகும். இதைப்பற்றி அல்லாஹ் கூறும் போது, إِنَّمَا النَّجْوَى مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ  المجادلة : 10 “இரகசியம் போசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷெய்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் நாட்டமின்றிஅவர்களுக்கு சிறிதளவும் அவனால் தீங்கிழைக்க முடியாது.
(அல்முஜாதாலா : 10)

உண்மையில் கூட்டாக சிலர் இருக்கும் போது ஒருவரை விட்டுவிட்டு மற்றையவர்கள் ரகசியமாய் பேசும் போது தனியான அந்நபருக்குக் கவலையேற்படுவது சாதாரமானதே ஆனாலும் அதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறும் என்பதே இங்கே அவதானிக்க வேண்டியதாகும்.

மற்றுமோரிடத்தில் அல்லாஹ் கூறும் போது,             وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ يونس : 100அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்தவொரு ஆத்மாவுக்கும் ஈமான்கொள்ள முடியாது. (யூனுஸ் : 100)

அல்லாஹ் நாடினால்தானே ஈமான் கொள்ள முடியும் ஆகவே இஸ்லாத்தைத் தேடிப்படிக்க வேண்டிய அவசியமில்லை நாம் குப்ரிலேயே இருந்திருவோம் என்று மேலுள்ள வசனத்திலிருந்து விளங்க முடியாது. மாறாக மார்க்கத்தைத் தேடிப் படிக்க வேண்டும். என்றாலும் அல்லாஹ் வின் நாட்டம் இதற்கும் அவசியமாகின்றது.

சுருக்கம்

நோய்கள் உண்டாவதற்கு உலகில் சில காரணங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருப்பது போல சூனியமும் சில பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகின்றது. அதுவும் அல்லாஹ் நாடினாலேயே நடைபெறுகின்றது. அல்லாஹ் நாடாவிட்டால் எந்தப்பெரும் சூனியத்தாலும் தாக்கம் செலுத்த முடியாது. மேலே கூறப்பட்ட தரவுகளைப்படிக்கும் போது சூனியத்துக்கென தனியான வரலாறொன்று உண்டென்ற முடிவுக்கு வரலாம். மனிதர்களை வழிகெடுப்பதற்காக ஷெய்தான் இறுதியாகப் பயன்படுத்தும் மிகப்பெரும் சூனியக்காரனே தஜ்ஜாலாகும். தஜ்ஜால் பல அற்புதங்கயைப் புரிவான் அதற்கு ஷெய்தான் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவான். துங்கம் வெள்ளிகளெல்லாம் தஜ்ஜாலின் கைகளிலிருக்கும். இன்றைக்குள்ள தொழிநுட்பத்தால் மனிதனால் மழையைப் பொழிய வைக்க முடிகிறதெனில் ஷெய்தானுக்கு இதுவொன்றும் பெரிதல்ல. ஷெய்தானின் ஆற்றலைப்பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் வானத்தின் எல்லை வரைசெல்வார்கள் என்று சொல்கிறான். செய்தான்களின் உதவியிருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே இவையும் சாத்தியமாகின்றன. இந்த தஜ்ஜாலை அதிகமாக நம்புகின்றவர்களாக பெண்களே இருப்பார்கள். இதற்குப்பயந்து ஆண்களெல்லாம் தமது பொறுப்பிலிருக்கும் பெண்களைக் கட்டிவைப்பார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். சூனியக்காரர்களுக்குப்பின்னால் கூடுதலாகச் செல்பவர்கள் பெண்கள்தான் என்பதை இன்றைக்கும் நாம் பார்க்கின்றோம். ஆகவே சாரம்சமாகக் கூறுவதானால் உலகில் ஏனைய நோய்களுக்கு சில காரணங்கள் இருப்பது போல சூனியமும் சில நோய்களுக்கு காரணமாகின்றது. ஆனால் இதற்கு சடரீதியில் மருத்துவம் கிடையாது. ஆண்மீகத்தின் மூலமே வைத்தியம் செய்யலாம். இதற்கும் ஒரு மருத்துவத்தை செய்தான் ஏற்படுத்தி விட்டான். சூனியத்தை சூனியத்தால் எடுப்பது என்பதே அதுவாகும். ஆனால் அல்குர்ஆன் மூலம் செய்யப்படும் மருத்துவமே இதற்கு உகந்ததும் சிறந்ததுமாகும்.

 நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறும் ஹதீஸ் தொடர்பாக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான சரியான பதில்களை இப்பகுதியில் வழங்கலாம் என நினைக்கின்றோம். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

صحيح البخاري ـ  5766 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ

“நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது. ஒரு நாள் நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் என்னிடம் “ஆயிஷாவே உனக்குத் தெரியுமா? நான் எந்த விடயத்தில் அல்லாஹ்விடம் தீர்ப்புக் கேட்டேனோ அல்லாஹ் எனக்கு அந்த விடயத்தைக் காட்டித்தந்து விட்டான்” எனக் கூறினார்கள். ஆல்லாஹ்வின் அது என்ன என்று நான் கேட்டேன். ஆதற்கு நபியவர்கள் “ இருவர் என்னிடம் வந்தார்கள். ஒருவர் என் தலைக்குப்பக்கத்திலும் மற்றையவர் என் கால்களுக்குப்பக்கத்திலும் அமர்ந்தனர். பின்னர் அவர்களிலொருவர் மற்றையவரிடம் “ இவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?” எனக் கேட்டார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதற்கு மற்றையவர் “இவருக்கு சூனியம் வைத்தவர் யார்? எனக் கேட்க, “ஸ{ரைக் கோத்திரத்தைச் சேர்ந்த லபீதிப்னுல் அஃஸம் என்ற யூதர் தான் இவருக்கு சூனியம் செய்தார்” என்று அடுத்தவர் கூறினார். “இவருக்கு எதிலே சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என அவர் மீண்டும் கேட்க, “முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். “அந்தப்பாலை எங்கேயுள்ளது?” என்று மீண்டும் அவர் கேட்கவே, “அர்வான் என்ற கிணற்றுள் அது வைக்கப்பட்டுள்ளது” என்று மற்றையவர் கூறினார். பின்னர் நபியவர்கள் தனது தோழர்களுடன் அந்தக்கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த பேரீத்தம் கொப்புகளைப்பார்த்து விட்டு ஆயிஷா நாயகியிடம் திரும்பி வந்து “சூனியம் வைக்கப்பட்டுள்ள அக்கிணற்றின் நீர் மருதானி கலந்தது போன்றிருந்தது. அந்த பேரீத்தம் கொப்புகள் ஷெய்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் “ அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவற்றை வெளியெடுத்தீர்களா?” எனக்கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதில் கூறிவிட்டு “அல்லாஹ் என்னை குணப்படுத்திவிட்டான். எனவே மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்துவதை நான் வெறுக்கிறேன்” என்று சொல்லி விட்டு அதைப் புதைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள்”.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)

ஆதாரம்    : புஹாரி

இந்த சம்பவம் புஹாரியில் வார்த்தை வித்தியாசங்களுடன் பல இடங்களில் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் நமக்குப்பல படிப்பினைகளுள்ளன. நபியவர்கள் தனக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்த அந்தப் பொருட்களைப் பிரித்துப் பார்க்கவுமில்லை. வெளியிலெடுக்கவுமில்லை. பார்த்து விட்டு வருகிறார்கள். சூனியமென்பது அவிழ்க்கப்பட்டால்தான் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை இந்த ஹதீஸ் உடைக்கிறது. ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் குணப்படுத்துவான். சூனியத்தை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிகப்பெரும் சான்றாகவுமுள்ளது. அத்துடன், ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பின் அதை சூனியக்காரன்தான் எடுக்க வேண்டும் என்பது பொய்யென்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. ஒருவருக்கு நோயேற்படுவதற்கு கிருமிகள், சூழல், மனோநிலை போன்றன காரணமாகின்றதைப் போலவே சூனியமும் ஒருவருக்கு நோயேற்படுவதற்குக் காரணமாகின்றது என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது.

இந்த ஹதீஸி அறிவிப்பாளர் வரிசையைக் குறை கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். முஃதஸிலாக்கள் போன்ற போலிப் பகுத்தறிவுவாதிகளே இவ்வாறு இதன் அறிவிப்பாளர் வரிசையை விமர்சிப்போராகும் என்பதனால் நாம் இவ்விமர்சனத்துக்கு பதில் கூற விளையவில்லை.

ஆனாலும் தௌஹீத் சகோதரர்களில் சிலர்  இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி இங்கு சிறிது ஆராய்வோம்.

மேற்படி ஹதீஸில் சில வார்த்தைக் குழப்பங்களுள்ளதாக விமரிசிக்கின்றனர்:

1.நபியவர்களுக்கு நாற்பது நாள்தான் இந்த நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும்ஆறு மாதங்கள்தான் நபியவர்களுக்கு இந்நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் உள்ளன.

2.அதுபோலவே நபியவர்கள் அக்கிணற்றுக்குச் சென்று சூனியத்தை எடுத்தார்கள் என்று சில அறிவிப்புக்களிலும், நபியவர்கள் கிணற்றுக்குப் போய் எடுக்கவில்லை என்று சில அறிவிப்புக்களிலும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புக்களில் நபியவர்கள் தனது தோழர்களை கிணற்றுக்கு அனுப்பினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களே போனார்கள்எனவும் கூறப்படுகின்றது.

3.சில அறிவிப்புக்களில் நபியவர்கள் சூனியத்தை தாமாக அகற்றினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபியவர்களிடம் சூனியத்தை அகற்றுவீர்களா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான வார்த்தைக் குழப்பங்களை வைத்து இந்த ஹதீஸை சிலர் பலவீனப்படுத்துகின்றனர். ஒரு ஹதீஸைப் பொருத்தமட்டில் அதனுடைய அறிவிப்பாளர் வரிசை சஹீஹாக இருந்து, அந்த சம்பவம் சஹீஹாக இருந்து அந்த ஹதீஸின் கிளைகளில் காணப்படும் இது போன்ற வார்த்தைக் குழப்பங்களை வைத்து ஹதீஸ் பலவீனப்படுத்தப்படும் முறையொன்று கிடையாது. ஏனெனில் ஒரு பக்கமளவில் நீண்டிருக்கும் ஹதீஸ்களை நீங்கள் உற்று நோக்கினால் இது போன்ற வார்த்தைக் குழப்பங்கள் அதில் காணப்படும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்:

நபியவர்கள் தனது மனைவியொருவரின் வீட்டில் தேன் குடித்ததாக வரும் ஹதீஸில்ஸைனப் (ரழி) அவர்களின் வீட்டிலா? ஹப்ஸா (ரழி) வீட்டிலா இது நடைபெற்றது என்ற கருத்து வேறுபாடுள்ளது.

அவ்வாறுதான் அத்தஹிய்யாத்திலே விரலை எவ்வாறு வைப்பது என்று பார்க்கும் போதும் சைக்கினை எனவும் அசைத்தல் எனவும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இவ்வேறுபாடுகளை வைத்து யாரும் ஹதீஸை பலவீனப்படுத்துவதில்லை. கருத்துக்களுக்குள் பொருத்தம் காணவே முயற்சிப்பர்.

நபியவர்களின் சூரிய கிரகணத் தொழுகை தொடர்பான ஹதீஸில் நபியவர்கள் மூன்று ருகூஉ செய்ததாகவும் முஸ்லிமில் அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன இதை வைத்து முழு ஹதீஸையுமே நாம் பலவீனப்படுத்துவதில்லை.

இது போன்ற பெரிய ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் இது போன்ற சில வார்த்தைக் குழப்பங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹதீஸின் அடிப்படை சரியானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக அவ்வாறான முரண்பட்ட வார்த்தைகளைக் கூறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த அறிவிப்பாளர்கள் கூறும் வார்த்தைகளை வைத்தே ஏனையவைகளை நாம் முடிவுசெய்ய வேண்டும்.

மேலே நாம் பார்த்த ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து உர்வா அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஹிஷாம் அறிவிக்கின்றார். ஹிஷாமிடமிருந்து உஸாமா, ஸுப்யான் அத்தௌரி போன்ற பலர் அறிவிக்கின்றனர். இவற்றுள் ஸுப்யான் அல் உயைனாவுடைய அறிவுப்புத்தான் முழுமையானதாக, நேர்த்தியானதாக இருக்கின்றது. ஆகவே இவ்வார்த்தை முரண்பாடுகளை வைத்து இந்த ஹதீஸை  நாம் பலவீனப்படுத்த முடியாது. இன்னும் இந்த ஹதீஸிற்கு வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் உள்ளன. அவைகளின் உடன்பாடு முரண்பாடுகளை வைத்தும் வார்த்தையின் பொருத்தமான வடிவத்தை முடிவு செய்யலாம். எனவே இந்த அளவுகோள் தவறானது.

அடுத்ததாக இந்த ஹதீஸின் கருத்துக்களைக் கவனித்து சிலர் இந்த ஹதீஸைப் பின்வருமாறு பலவீனப்படுத்துகின்றனர் :

நபியவர்கள் ஒன்றைச் செய்ததாகக் கற்பனை பன்னுகிறார்கள் ஆனால் அதை அவர்கள் செய்திருக்கவில்லை. செய்யவில்லை என்று நினைக்கின்றார்கள் ஆனால் அதைச் செய்துள்ளார்கள். இத்தகைய பாதிப்புக்கள் ஒருவருக்கு சூனியத்தால் ஏற்பட்டிருக்குமானால் அவருடைய நபித்துவத்தில் சந்தேகம் எழ வாய்ப்புண்டு. ஏனெனில் இக்காலப்பிரிவில் வஹியாக அல்லாஹ் இறக்கியதை இல்லையென்று அவர் சொல்லியிருக்கலாம், வஹியல்லாததை வஹியென்று அவர் கூறியிருக்கலாம் ஆகவே இந்த ஹதீஸை ஏற்கமுடியாது என்பதே அந்த வாதம்.

இந்த வாதங்களையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் உலகியல் ரீதியாக நபியவர்கள் ஒரு மனிதனாகவே இருந்தார்கள். மற்றைய மனிதர்களுக்கு வரும் பாதிப்புக்கள் நபியவர்களுக்கும் வரவே செய்தன. மறதி, ஒன்றை மாற்றிக் கூறுதல், நோய் போன்ற பலவீனங்கள் நபியவர்களுக்கும் இருந்தன. வஹி விடயத்தில் மாத்திரமே நூறு வீதம் நபியவர்களுக்கு எவ்விதத் தவறும் ஏற்படாது என்று நாம் நம்பவேண்டும்.  உதாரணமாகக் கூறுவதானால் ஸஹீஹ{ல் புஹாரியில் 460 வது ஹதீஸை எடுத்துக்கொள்வோம். அபூஹ{ரைரா (ரழி)அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.

“ஒருமுறை நபியவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டு ரக்அத்தோடு ஸலாம் கொடுத்து விட்டார்கள். அதற்குப் பின்னால் கோபமான முகத்தோடு ஒதுங்கி அமர்ந்து கொள்கிறார்கள். இதைப்பார்த்த நபித்தோழர்களுக்குக் குழப்பமாக இருந்தது. அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) போன்றோர் நபியவர்களிடம் இதைப்பற்றிக் கேட்க அஞ்சினார்கள். இச்சந்தர்ப்பத்தில் ‘துல் யதைன்’ என்ற நபித்தோழர் தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?”என்று நபியவர்களிடம் கேட்டார். அப்போது நபியவர்கள் நான் மறக்கவுமில்லை தொழுகை சுருக்கப்படவுமில்லை என்று கூறுகிறார்கள். அப்போது மற்றைய நபித்தோழர்களும் இரண்டு ரக்அத் தொழுத விடயத்தைக் கூறியதும் நபியவர்கள் எழுந்து விடுபட்டவற்றைத் தொழுதார்கள். என்று அந்த ஹதீஸ் இடம் பெறுகிறது.

இப்படி எத்தனை விடயங்களை நபியவர்கள் மறந்தார்களோ?” “மறதியால் எத்தனை விடயங்களைக் குறைத்தார்களோ?” எனக் கூறி மேற்சொன்ன வாதத்தினடிப்படையில் இந்த ஹதீஸையும் மறுக்கலாம். இவை மனித பலவீனங்களாகும். ஆனால் இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களின் வஹியுடைய பகுதியை நாம் குறை காண முடியாது.

இன்னும் சொல்வதென்றால், ஒரு முறை நபியவர்கள் தன்மீது ஒன்றை ஹராமாக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ் உனக்கு ஹலாலாக்கியதை ஏன் நீர் ஹராமாக்கின்றீர் என்று உடனே அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். உங்களின் மனைவியின் திருப்தியை நாடி  இப்படிச் செய்கிறீரே என்று அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். ஆகவே அதை வைத்துநபியவர்கள் இப்படி இன்னும் பலவற்றை ஹராமாக்கியிருக்கலாமல்லவா?” என்று கூறி இந்த அல்குர்ஆன் வசனத்தை மறுக்கமுடியாது.

எனவே மனிதன் என்ற அடிப்படையிலான பலவீனங்கள் நபியவர்களிடம் இருந்துள்ளன. இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களுக்கு வழங்கப்பட்ட வஹியைக் குறைகாண முடியாது ஏனெனில் வஹி விடயத்தில் நபியவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது. எங்களில் ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டால் நபியவர்களுக்குப் போன்று உடனடியாக ஜிப்ரீல் (அலை) மூலம் எங்களுக்கு சூனியத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் சொல்லித்தரப்பட மாட்டாது. மூஸா நபியவர்களுக்கு தடியைப் போடச்சொல்லி அது பாம்பாகி உடனடியாக சூனியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகள் காட்டிக்கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் சொல்லித்தரப்படுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. நபிமார்களாயின் இதைப்போன்ற பாதுகாப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் ஆதாரமாகவுள்ளது. மூஸா நபியவர்களுக்கும், ஏனையோருக்கும் கயிறு பாம்பாக விளங்கியது. ஆனால் மற்றவர்களுக்கு அதிலிருந்து விடுதலைபெற முடியவில்லை. மூஸா நபியவர்கள் விடுதலை பெற்றார்கள். இது அல்லாஹ் செய்த அற்புதமாகும். இவ்வாறுதான் நபியவர்களுக்கும் சூனியம் செய்யப்பட்டது. மற்ற மக்களால் அதிலிருந்து உடனடியாக விடுதலைபெற முடியாது. ஆனால் நபியவர்களுக்கு சூனியம் எதில், எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் வஹி மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டு சூனியத்திலிருந்து உடனடியாகப் பாதுகாப்பளிக்கப்பட்டது. ஆகவே நபியவர்களுக்கும் மறதி, நோய், தெரியாமல் ஒன்றைக் கூறிவிடுதல் போன்ற மனித பலவீனங்கள் இருந்துள்ளன. எனவே நபியவர்கள் இது போன்று பலதை தவறாகக் கூறியிருக்கலாமல்லவா என்று சொல்வோமானால் இன்னும்பல ஹதீஸ்களை மறுக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

அடுத்ததாக இந்த ஹதீஸ் பின்வரும் அல்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாக சிலர் பின்வருமாறு வாதிடுகின்றனர்:

“نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا الإسراء : 47

“சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாய்க் கூறியதையும், உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். (அல் இஸ்ரா: 47)

இவ்வசனத்தைப் பார்க்கும் போது நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்கள்’ என்று கூறியவர்கள் அநியாயக்காரர்களே ஆகவே சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் மேலே பார்த்த ஹதீஸை வைத்து நாம் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கின்றது என்று கூறுவோமானால் அந்த அநியாயக்காரர்களுடன் நாம் உடன்படுகின்றோம். எனவே இந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது.” என இவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான வாதம். காபிர்களெல்லாம் நபிமார்களை சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று கூறவில்லை. சூனியக்காரர்கள் என்றுதான் கூறினார்கள். எந்த நபி வந்தாலும் சூனியக்காரன் அல்லது பைத்தியகாரன் என்றே சொன்னார்கள். சூனியம் வைக்கப்பட்டவன் என்றும் அவர்கள் சொல்லவில்லை.

இவ்வசனத்தில் மஸ்ஹுர் என்று அல்லாஹ் கூறுவது சூனியவயப்பட்டவர்’, ‘சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்தில்தானே தவிர ‘சூனியம் செய்யப்பட்பவர்’ என்ற கருத்திலல்ல. கீழே நாம் கூறும் சான்றுகள் இதை உறுதிசெய்கின்றன.

மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பார்த்து இரு சூனியங்கள்வெளிப்பட்டுவிட்டன என்றுதான் அந்த மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மூஸாதான் இந்த சூனியக்காரர்களுக்கெல்லாம் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார் என்று பிர்அவ்னும் சொன்னான். பேன், தவளை, இரத்தம் போன்றவற்றை அல்லாஹ் அவர்களின் வீடுகளில் உண்டாக்கிய போது பிர்அவ்னும் அந்த மக்களும் மூஸா நபியைப்பார்த்துசூனியக்காரனே என்றுதான் அழைத்தனர். ஏனைய நபிமார்களும் இவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். காரணம் அந்த நபிமார்கள் காட்டிய அற்புதங்களே. நபியவர்கள் சந்திரனைப்பிளந்து காட்டினார்கள், மிஃராஜ் சென்றார்கள், அவர்களின் கைவிரல்களிலிருந்து நீர் வடிந்தது. இவற்றையெல்லாம் நபித்தோழர்களும் கண்டார்கள். அந்த மக்களும் கண்டார்கள். அற்புதங்களை நம்பாத அந்த மக்கள் நபியவர்களைப்பார்த்து சூனியக்காரன் என்றனர். ஓருவரை சூனியக்காரன்; என்று சொல்வதோடு மஸ்ஹுர் என்றும் சொன்னால் அதற்குசூனியத்திற்குட்பட்டவர் என்பதுவே அர்த்தமாகும். இதுவே சரியனதாகும். ஒருவரை சூனியக்காரன்என்றும் சூனியம் வைக்கப்பட்டவன்என்றும் சொல்ல முடியாது.அல்லாஹ் இதைப்பின்வருமாறு குறிப்பிடுகின்றான். மூஸா நபியை சூனியக்காரன்என்றழைத்த அந்த சமூகம் இன்னும் எவ்வாறு அழைத்தது என்பதை அல்லாஹ் கூறும் போது,

وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا  الإسراء : 101

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக மூஸாவே உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் பிர்அவ்ன் கூறினான். (அல் இஸ்ரா: 101)

இந்த வசனத்தில் மஸ்ஹுர் என்று கூறப்படுவது சூனியம் செய்யப்பட்டவர் என்ற கருத்திலா?,சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்திலா? என்பதை நாம் நன்கு அவதானிக்க வேண்டும். சூனியம் செய்யப்பட்டவர் அற்புதங்கள் காட்ட முடியாது, அவர் நோயாளியாகத்தான் இருக்க முடியும். மூஸா நபியவர்கள் அற்புதங்களைக் காட்டுகிறார்கள் அப்போது அம்மக்கள் “மூஸாவே நீ சூனித்திற்குட்பட்ட மனிதராகவே இருக்கிறாய்” என்றுதான்  சொன்னார்கள்.ஸாஹிர்என்றால் சூனியக்காரன்’. ‘மஸ்ஹுர்என்றால் சூனியம் வைக்கப்பட்டவன்.இதுவே சரியான கருத்தாயினும் இந்த இடத்தில் மஸ்ஹுர்என்ற வார்த்தை ஸாஹிர்என்ற கருத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது. என்பதை நாம் விளங்க வேண்டும். அற்புதங்களைக் காட்டும் ஒருவரைப்பார்த்து மஸ்ஹுர் என்று அவர்கள் கூறியது அவர் சூனியத்திற்குட்பட்டதனால்தான். நோயாளி என்பதாலோ, அவர் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ அவர்கள் அவரை அவ்வாறு கூறவில்லை.
அல்லாஹ் மேலும் கூறும் போது,

وَقَالُوا مَالِهَذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ لَوْلَا أُنْزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا, أَوْ يُلْقَى إِلَيْهِ كَنْزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورً

االفرقان : 7 ، 8

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார். கடை வீதிகளில் நடமாடுகிறார். இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு, இவருடன் சேர்ந்து அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர். அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்திருக்கக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (அல்புர்கான்: 7,8)

எனவே அல்குர்ஆனில் எந்த இடத்திலாவது நபிமார்களுக்கு மஸ்ஹுர்; என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தால் அது சூனியக்காரர்அல்லது சூனியத்திற்குட்பட்டவர் என்ற கருத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. மாற்றமாக ‘சூனியம் செய்யப்பட்டவர்’, ‘நோயாளி’ என்ற கருத்திலல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கலாம்.

ஆரம்பத்தில் நாம் பார்த்த ஹதீஸின் பிரகாரம் நபியவர்களுக்கு சூனியத்தினால் உண்டான பாதிப்பு என்னவெனில் ஒன்றை செய்ததாக நபியவர்கள் நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஓன்றை செய்யவில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். இந்த நிலையைக் காபிர்கள் விமரிசித்ததாகக் குர்ஆன் கூறவில்லை. நபியவர்கள் காட்டிய அற்புதங்களை வைத்தே அவர்கள் நபியவர்களைமஸ்ஹுர் சூனியவயப்பட்டவர் என்று சொன்னார்கள் இதையே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆகவே நபியவர்களுக்கு நடந்ததும், காபிர்கள் சொன்னதும் வெவ்வேறாகும். எனவே இந்த ஹதீஸ் அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறமுடியாது.  இந்த ஹதீஸில் எவ்வித முரண்பாடுகளுமில்லை என்பதால்தான் ஹதீஸ் கலை வல்லுனர்களான இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் ஆகியோர் தமது கிரந்தங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். இதுதான் இந்த ஹதீஸ் பற்றி வைக்கப்படுகின்ற விமரிசனத்திற்கான எமது சுருக்க பதில்.

சூனியம் ஒரு கொடிய பாவம்

ஒருவருக்கு சூனியத்தால் நோயேற்பட்டு விட்டது என்று நாம் வைத்துக் கொள்வோம். எதனால் இந்த நோய் ஏற்பட்டது என்று தெரியாத நிலையில் உடனே அவரை பெரும் பெரும் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள் ஆனாலும் அவர் குணமடையவில்லை. ஒரு சாதரணக் குடிசையிலுள்ள, வித்தியாசமான தோற்றத்தையுடைய ஒருவரிடம் அவரைக் கொண்டு செல்கிறார்கள் அவர் குணமடைந்து விடுகிறார். இதற்கென்ன காரணம் என்பதைப் பார்ப்போமானால், ஷெய்தான் மனிதனில் ஏற்படுத்தும் தாக்கம் இரு வகைப்படும். ஒரு மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஷெய்தான் அறிந்துள்ளான். அதை ஷெய்தான் உபயோகிக்கின்றான். நாம் முன்னர் கூறியதைப் போல மனித உடலுக்கு இரத்தம், நீர் ஆகியன அத்தியாவசியமானவைகளாகும். இரத்த நாளங்களிலெல்லாம் ஷெய்தான் ஓடிக்கொண்டிருக்கிறான் என ஹதீஸில் வருகிறது. ஆகவே ஷெய்தானுக்கு என்ன மாறுதல்களை ஏற்படுத்தலாம் என்பது தெரியும். நாம் ஒன்றை நினைக்கும் போது அதற்கு மாற்றமான ஒன்றை நமதுள்ளத்தில் தோன்ற வைக்க ஷெய்தானுக்கு ஆற்றலுண்டு. இதையே நாம் ‘வஸ்வாஸ்’ என்கிறோம். இவ்வாற்றல் கொண்ட ஷெய்தான் நமைச் சூழவிருக்கும் காந்த அலைகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தினால் நமதுடலில் மாறுதல்களை உருவாக்கலாம் என்பதை அறிந்துள்ளான். இவ்வகையில் ஷெய்தான் ஏற்படுத்தும் நோய் ஒரு வகையாகும். இந்நோய் ஏற்பட்ட ஒருவரை நீங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றாலோ, அல்லது அல்லாஹ்விடம் துஆச்செய்து அல்லாஹ் அதை ஏற்றுக்கொண்டால் , அல்லாஹ் நாடினால் இது குணமாகிவிடும்.

இதுவல்லாத இன்னொன்றும் உள்ளது ஷெய்தான் தனது மேலதிக ஆளுமையைப் பயன்படுத்தி ஒரு மனிதனில் ஏற்படுத்தும் அபரிமிதமான தாக்கங்களே அது. இவ்வகையைப் பொருத்தமட்டில் நீங்கள் எங்கு சென்றாலும் இதைக் குணப்படுத்த முடியாது. இரு இடங்களில் இது குணமடைய வாய்ப்புண்டு. ஒன்று ஷிர்க்கின் பால் செல்வது. அதாவது தாயத்துப் போட்டால் குணமாகும். ஷிர்கான வாசங்களை மொழிவதனால் குணமாகும். இறை நம்பிக்கையை எப்போது அந்த நபர் இழப்பாரோ அப்போது குணமாகும். ஜின்பிடித்த சிலருக்கு தாயத்தைப் போட்டதும் அடங்கிவிடுவர். தாயத்தைக் கழட்டிவிட்டால் மறுபடியும் ஆடத்துவங்கிடுவர் இதை நாம் நேரில் கூட காணலாம். சிலர் இதை வைத்து தாயத்தை ஓர் அற்புதாமாகக் கூறுவர். தௌஹீத் கருத்திலுள்ள சிலருக்கு இதனால் பயமேற்படடதைக் கூடக் கண்டிருக்கிறோம். இது ஷெய்தான் மனிதனை தன்னை வணங்க வைக்கும் சந்தர்ப்பமாகும். இவ்வகையிலும் ஒருவர் குணமடையலாம். இது குணாகும் 2வது வழி இறைவனை நெருங்குவது அவனைப் பிரார்த்திப்பது குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது .இவ்வகை நோய்கள் குணமாக அல்குர்ஆனும், ஸ{ன்னாவும் நமக்குப் பல வழிகாட்டல்களைத் தந்துள்ளன. அவை பற்றி நாம் பின்னர் தனியாக ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது இந்த இரண்டாவது முறையில் பாதிப்படையச் செய்வதே. அதாவது சூனியக்காரர்களினால் குணமடையும் முறையாகும். சூனியக்காரர்கள் நம்மை எவ்வாறு வழிகெடுக்கின்றார்கள். நமது உள பலவீனங்களை வைத்து ஷெய்தான் நம்மை எவ்வாறு குப்ரின்பால் கொண்டு செல்கின்றான் என்பது பற்றி நாம் விரிவாக அறியவேண்டியுள்ளது. உலகில் நமக்குப் பயனளிப்பவைகள் அனைத்தும் ஹலால் எனவும், நமக்குப் பயனளிக்காதவைகள் ஹராம் எனவும் நாம் நம்பியுள்ளோம் இது மாற்றப்பட வேண்டிய ஒரு தவறான நம்பிக்கையாகும். உலகில் பயன் தருபவையனைத்தும் ஹலால் என்றால் வட்டி ஹலாலாக இருந்திருக்கும். பாதிப்பை ஏற்படுத்துபவை ஹராமாக இருக்குமென்றால் வியாபாரம் ஹராமாக இருந்திருக்கும். வட்டியெடுத்தால் செல்வந்தனாகலாம். வியாபாரம் செய்தால் ஓரளவுக்குத்தான் முன்னேறாம். நலவு, பாதிப்புக்களை வைத்து இஸ்லாம் ஹலால், ஹராமை வகுக்கவில்லை. ஒருவருக்கு பசியேற்படுகிறது அவர் நாய்க்கறி சாப்பிடுகிறார் அவருக்குப் பசி போய்விடுகிறது. இங்கு நாய்க் கறி உண்பதால் அவருக்கு நன்மையொன்று ஏற்பட்டதென்றாலும் நாய்க்கறி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆகவே நலவு, கெடுதியை வைத்து இஸ்லாம் ஹலால், ஹராமைத் தீர்மானிக்கவில்லை என்பதை தெளிவாக நாம் விளங்க வேண்டும். அல்லாஹ்வும் தூதரும் பயன்தரும் ஒன்றை ஹராமாக்கினால் அது ஹராமாகும். தீங்கு தரும் ஒன்றை ஹலாலாக்கினால் அது ஹலாலாகும். தீமையான ஒன்று ஏன் ஹலாலானது நன்மையான ஒன்று ஏன் ஹராமானது என்பது பற்றி நம்மால் எதுவும் கூறமுடியாது.

அல்லாஹ் மனிதனுக்கு இரு பாதைகளைக் காட்டியிருப்பதாகக் கூறியுள்ளான். விபச்சாரம் அடுத்தது திருமணம், களவு அடுத்தது வியாபாரம், கொலை அடுத்தது மன்னிப்பு இப்படி எதை எடுத்தாலும் இரு பாதைகளையும் அவை இரண்டிலும் சமமான வெற்றியையும் அல்லாஹ் வைத்துள்ளான். இணை வைப்பவர்கள் ஆட்சியதிகாரத்திலும், அல்லாஹ்வை நம்பி வாழ்பவர்கள் வறிய நிலையிலுமுள்ளார்கள் இதை வைத்து சரி, பிழையைத் தீர்மானிக்க முடியாது. நோய் நிவாரணத்துக்கு ஹராமானது ஹலாலானது என இரு பாதைகளை அல்லாஹ் உலகில் வைத்துள்ளான். பசி தீர்ப்பதற்கு ஹராமானது ஹலாலானது என இரு பாதைகளை அல்லாஹ் உலகில் வைத்துள்ளான். ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ் அவருக்கு குறிப்பிட்ட ஒரு தினத்தில் அது குணமடையும் என்பதை எழுதியிருந்தால் அல்லாஹ் இரு பாதைகளை நமக்கு வகுத்துள்ளான். இரண்டில் எதை அவர் தெரிவு செய்தாலும் குறிப்பிட்ட அத்தினத்தில் அவருக்கு அந்த நோய் குணமாகும். குணமாகாது என அல்லாஹ் எழுதியிருந்தால் இரு பாதைகளில் எதை அவர் தெரிவு செய்தாலும் அவருக்கு நோய் குணமாகாது. ஆகவே தனக்கேற்பட்ட ஒரு நோய்க்காக ஒருவர் தாயத்துப் போடுகிறார். அல்லாஹ் நிர்ணயித்த அந்த தினம் வந்ததும் அவருக்கு நோய் குணமாகின்றது. தாயத்துப் போட்டதால்தான் எனக்கு நோய் குணமாகியது என்று அவர் கூறமுடியாது.

இந்த அடிப்பைடையை நாம் நன்கு தெரிந்திருப்போமானால் ஜின், சூனிய வைத்தியம் செய்வதாக் கூறி ஏமாற்றுவோரிடம்  செல்லமாட்டோம். ஒரு முஃமினைப் பொருத்தளவில் இம்மையை விட மறுமையிலேயே அவனுக்கு நல்வாழ்வுள்ளது. மறுமையிலிருக்கும் நல் வாழ்வுக்கு முரணில்லாத ஒரு நல்வாழ்வு அவனுக்கு இவ்வுலகில் கிடைக்குமானால் அதை அவன் எடுத்துக்கொள்வான். மறுமை வாழ்வுக்கு ஈறு விளைவிக்கும் ஒரு நல்வாழ்வு இவ்வுலகில் அவனுக்குக் கிடைத்தால் அவன் அதைப் புறந்தள்ளிவிடுவான். அல்லாஹ் தனது திருமறையில் “நீங்கள் முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்க வேண்டாம்” என்றே கூறுகிறான் சுகதேகிகளாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறவில்லை. நோயில்லாமல் வாழ்வதற்காக நாம் எடுக்கும் பிரயத்தனங்கள் ஏராளம். அதே நேரம் இபாதத் விடயங்களில் இதே முயற்சிகளை நாம் மேற்கொள்வதில்லை. நபியவர்கள் கூட ஒரு காய்ச்சலில்தான் மரணித்தார்கள். நோயொன்று ஏற்படுத்தும் போது இதைக் குணப்படுத்தியே ஆகவேண்டும் என ஒருவர் நினைத்தால் அவர் ஒரு மறுமை நம்பிக்கையற்றவராகவே இருக்க முடியும். அல்லாஹ் நாடியிருந்தால்தான் இந்த நோய் குணமாகும் என்று நம்பி ஹலாலான வழிமுறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஹலாலான வழிமுறைகள் மூலம் நோய் குணமாகாத போது ஹராமான வழிமுறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முயற்சிப்போமானால் நமது மார்க்கத்தை நாம் விற்கின்றோம் என்பதுவே அதற்கருத்தமாகும். உலக நலவிற்காக மறுமை நலவுகளை இழக்கிறோம் என்பதுவே அதற்கருத்தமாகும்.

குணமாக வேண்டும் என்ற நோக்கில்தான் நாம் சூனியத்தின் பால், ஜின் வைத்தியத்தின் பால் செல்கிறோம். நாம் மறுமையை நம்பியவர்கள் இவ்வுலகில் கஷ்டம் ஏற்படுகின்றது என்பதற்காக நாம் வட்டியின் பால் சென்று விடலாகாது. ஏனென்றால் கஷ்ட, நஷ்டங்களைக் கொண்டும் அல்லாஹ் முஃமின்களைச் சோதிப்பான் இதில் பொறுமையாளிகளுக்கே வெற்றியுண்டு. நஷ்டத்துக்காக வட்டியின் பால் சென்றவனுக்கல்ல. இந்த அடிப்படையை நாம் தெளிவாக விளங்கவேண்டும். ஏனென்றால் நம்மில் பலர் தாயத்தால் நோய் குணமாகாது என்றுதான் கூறுகின்றனர். அப்படியாயின் குணமாகினால் அது ஹலாலகிடுமா? என்று நாம் அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது. குணமகினாலும் குணமாகாவிட்டாலும் தயத்து ஹராமாகும்.

ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைவதற்கும் அல்லாஹ் இரு வழிகளை வைத்துள்ளான். ஓன்று ஷிர்க்கான வழியாகும். மற்றது அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லித் தந்த வழியாகும். அதாவது இசையோடும், சினிமாவோடும் வாழும் ஒருவருக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைச் சொல்லி நல் வழியில் இஸ்லாத்துக்கு எடுக்கலாம். இதே நபருக்கு இசை கலந்த, இஸ்லாம் சாயம் பூசப்பட்ட பாடல்களைக் காட்டி இஸ்லாத்துக்குள் எடுக்கலாம். இதனால் இஸ்லாத்தைத் தழுவி திருந்தியவருக்கு நன்மையிருந்தாலும்  இவரைத் திருத்தியவருக்கு  பாவமே கிடைக்கும். ஏனென்றால் எப்படியாவது ஒருவரை இஸ்லாத்துக்குள் எடுத்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. நல்வழியில் அழைப்பு விடுக்குமாறுதான் கூறியுள்ளான்.; யூனுஸ் நபி எவ்வளவோ முயற்சித்தும் அவருடை சமூகத்துக்கு நேர்வழி கிடைக்காத போது சில நொடிகளில் அந்த சமூகத்துக்கு எவ்வாறு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அதைப் போல யாருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கு நேர்வழி கொடுப்பான். இங்கு நாம் செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே.

இது போலவே நோயுமிருக்கிறது. நோய் உடலிலும் ஏற்படலாம், உள்ளத்திலும் ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வும் தூதரும் காட்டிய வழிகளைக் கொண்டே நாம் இந்நோய்களுக்கு நிவாரணம் காண முயற்சிக்க வேண்டும். முடியாத போது முடியமான முயற்சிகளை மேற்கொள்வதுடன் அல்லாஹ்விடம் துஆச்செய்வதுதான். ஐயூப் நபிக்கு சதை கரையும் நோயிருந்தது. இன்றைக்கும் இந்த நோய் இருக்கிறது. கோடியில் ஒருவருக்கே இது ஏற்படும் இந்நோயிற்கான மருந்தின் பெறுமதி இந்திய ரூபாவில் சுமார் இரண்டு இலட்சங்களாகும். இந்தியாவில் இலவசமாக இந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள். இத்தகைய பாரதூரமான நோய் தனக்கு ஏற்பட்ட போது ஐயூப் நபி ஏழு வருடங்களாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஆனாலும் அவரால் நோயிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இயலவில்லை. ஆகவே அல்லாஹ் கத்ரில் எழுதியிருந்தால் நோய் குணமாகும். எழுதிராவிட்டால் குணமாகாது. மறுமைக்காகத்தான் நாம் வாழ்கின்றோம் என்ற பலமான நம்பிக்கையினடிப்படையில் அமைந்த வாழ்வே இங்கு நமக்கு அவசியமாகும். இந்த மன உறுதி நம்மிடமிருந்தால் நாம் ஏமாறாமல் இருப்பதற்காக சில ஆலோசனைகளை நான் சொல்கிறேன்.

சூனியம் செய்வதாகக் கூறுவோரிடம் சென்று பார்க்கும் போது தாவரங்கள், சில வகைக் காய்கள், குர்ஆன் அட்டைகள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். தாம் நாட்டு வைத்தியம் செய்வதாகவும், குர்ஆனிய மருத்துவம் செய்வதாகவும் காட்டுவதற்கே அவர்கள் இவைகளை வைத்துள்ளார்கள். மக்கள் தமை நம்பவேண்டும் என்பதற்காக இவை போன்ற மேலும் சில ஆவனங்களை அவர்கள் வைத்திருப்பார்கள். ஆனால் இவைகளனைத்தும் பொய்யாகும். அவர்கள் சூனியக்காரர்கள்தான் என்பதற்கு அடையாளம் என்னவெனில் அவர்களிடம் மருத்துவம் செய்வதற்காக யாராவது சென்றால்

அவருடை தாய், தந்தை இருவரின் பெயர்களைக் கேட்பார்கள். இதுவொன்று.

அடுத்ததாக சீப்பு, ஆடைத்துண்டு, முடி, நகம் போன்றவைகளைக் கேட்பார்கள்.

அல்லது ஆடு, கோழி போன்ற பிராணிகளை அறுத்து ஏதாவதோர் இடத்தைக் கூறி அங்கே அதைப் போடுமாறு சொல்வார்கள். அதாவது ஷெய்தானுக்கு தாமாக செய்ய வேண்டிய வணக்கங்களை மக்கள் மூலம் அவர்கள் செய்கிறார்கள். நமக்கு தொழுகை, ஸகாத் போன்ற கடமைகள் இருப்பதைப் போல ஷெய்தானை வணங்கும் அவர்களுக்கும் சில கடைமைகளுண்டு.

மிருகங்களின் இரத்தங்களைக் கொண்டு வரச்சொல்வார்கள். காயங்களுக்கு அதனைப் பூசுவார்கள். மேனியிலே  பூசுவார்கள்.

சில நேரம் குறியீடுகள், அடையாளங்கள் போன்றவற்றை எழுதி தண்ணீர்ப் பாத்திரத்திலிட்டுக் குடிக்குமாறு நோயாளியிடம் சொல்வார்கள்.

நட்சத்திர ஒளியில் இவற்றை வைக்கச் சொல்வார்கள்.

கைகளை நீட்டச் சொல்லி கைகளை வாசித்து நோயிருப்பதாகச் சொல்வார்கள். இவர்களிடம் காணப்படும் விஷேட அம்சம் யாதெனில்

ஒருவர் அவர்களிடம் சென்றால் அவர் எங்கிருந்து வந்துள்ளார். ஏதற்காக வந்துள்ளார். அவருக்கு என்ன நோயிருக்கிறது போன்ற தகவல்களைச் சொல்வார்கள்.  ஷெய்தானுக்கு அடிமையாகியுள்ள இவர்களுக்கு ஷெய்தான் இவை போன்ற அற்ப உதவிகளைச் செய்து கொடுக்கிறான். ஷெய்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறிக்காட்டுகிறான்.

هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ  تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ الشعراء : 221 ، 222 ஷைதான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?, இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.(அஷ்ஷ{அரா : 221-222)

சிலர் தாயத்துக்களை எழுதி ஒரு பையிலிட்டுக் கொடுப்பார்கள்.

இன்னும் சிலர் ஆடைகளில் முழுவதுமாக இது போன்ற அடையாளங்களை எழுதிக் கொடுப்பார்கள்.

இன்னும் சிலர் குர்ஆன் தாளில் மாதவிடாய் இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டுவரச்சொல்வார்கள். இது இலங்கையிலும் நடந்துள்ளது. ‘நஊது பில்லாஹி மின்ஹா’ இது எவ்வளவு பாரதூரமானது என்பதைப் பாருங்கள். எப்படியாவது தமது நோய் குணமாக வேண்டும் என்று அலைபவர்களை இத்தகைய கேவல நிலைக்கு இலகுவாய் கொண்டு சென்றிடலாம்.

சிறு நீர் கழித்து தொடைத்து விட்டு வருமாறெல்லாம் இந்த சூனியக்காரர்கள் கூறுவார்கள்.

குர்ஆனை தழைகீழாய் எழுதச் சொல்வார்கள். எந்தளவுக்கு இஸ்லாத்தைக் கேவலப்படுத்த முடியுமோ இந்தளவுக்கு இவர்களை நெருங்கலாம்.

நாம் மேலே கூறிய இவைகளனைத்தும் கற்பனைகளல்ல. சவுதி அரேபியாவிலிருக்கும் ஏவல் விலக்களுக்கான அமைப்பு என்ற நிருவனம் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைத்த தகவல்களே இவைகளாகும்.

ஈயத்தைக் கரைத்து ஊற்றுமாறு சொல்வார்கள்.

மிருகங்களின் தோல்களை வாகனங்களில் கட்டச் சொல்வார்கள்.

இவற்றின் மூலம் உங்களுக்கு இவ்வுலகில் சிலவேளை குணமேற்பட்டாலும் மறுமையில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். وَمَا كَفَرَ سُلَيْمَانُ ஸ{லைமான் ஏக இறைவனை மறுக்கவில்லை.

அல்லாஹ் தொடர்ந்தும் பின் வருமாறு கூறுகிறான்.

وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ البقرة : 103 அவர்கள் நம்பிக்கை கொண்டு இறைவனை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?
(
அல்பகரா : 103)

சூனியம் எவ்வளவு பாரதுரமானது என்பதை நபியர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

صحيح البخاري – (17  234)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அவை என்னவென்று நபித்தோழர்கள் கேட்ட போது அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம், அல்லாஹ் தடை செய்த ஆத்மாக்களைக் கொலை செய்தல், வட்டி சாப்பிடல், அனாதையின் சொத்தைச் சாப்பிடல், யுத்தத்திலிருந்து விரண்டோடுதல், பத்தினிப் பெண்களை அவதூறு கூறுதல்என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)
ஆதாரம்    : புஹாரி

மேலுள்ள ஹதீஸில் நபியவர்கள் சூனியத்தை இரண்டாவது மிகப்பெரும் பாவமென வகைப்படுத்தியிருப்பது சூனியத்தின் பாரதூரத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே சூனியத்தை நம்பி ஏமாந்து போகும் சசேகாதரர்கள் இத்தரவுகள் மூலம் சூனியம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூனியத்தினால் நோய் நிவாரணம் பெற முயல்வது பசிக்காகப் பன்றியதைப் புசிப்பது  போலாகும். இத்தகையோர் மறுமையில்  நஷ்டவாளிகளே.

 

سنن أبى داود-ن – 3907 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُسَدَّدٌ – الْمَعْنَى – قَالاَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ ».
யார் நட்சத்திரக் குறி பார்த்தலைக் கற்கிறாரோ அவர் சூனியத்தைப் படித்தவர் போலாவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ்

ஆதாரம்    : அபூதாவுத்

நட்சத்திரக் குறி பார்ப்பது, சூனியம் செய்வதைப் போன்றது என்பதன் மூலம் சூனியத்தின் அகோரம் இந்த ஹதீஸில் தெரிகிறது.

ஆகவே நோய் குணமாகிறது என்பதற்காக சூனியத்தின் பால் செல்லும் சகோதரர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அவர்கள் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தார்கள். அதனால் அவர்களுக்குக் குணமேற்பட்டது. ‘நபியவர்களுக்கு சூனியம் காட்டப்பட்டது எங்களுக்கு அவ்வாறு காட்டப்படுமா?’ என சிலர் வினவலாம். நபியவர்களுக்கு  சூனியம் காட்டப்பட்டது என்பது உண்மைதான். அதற்காக நபியவர்கள் அதைப் பிரிக்கவோ வெட்டவோ முயற்சிக்க வில்லை. அல்லாஹ்வின் உதவிக்காக பிராத்தனையில்தான் ஈடுபட்டார்கள் சூனியம் தனக்குக் காட்டப்பட்ட போதும் மாற்று வழி காண நபியவர்கள் நினைக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே சூனியத்துக்கு இதுவே சரியான நிவாரணம் என்பதுடன் மறுமையை நம்பியவர்களின் வழியும் இதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts