Thursday, November 21, 2024

முஸ்லிம்கள் நல்லதெனக் கண்டால் அது நல்லது என்ற ஹதீஸின் தரம் என்ன?

முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நல்லதெனக் கருதிச் செய்தால் அது நல்லதுதான் என்ற ஒருசெய்தியை தவறாகப் புரியப்பட்டு வரும் “ “ஒற்றுமை” என்ற வாதத்திற்கு ஆதாரமாக சில சகோதரர்கள் முன்வைக்கிறார்கள்.அந்தச் செய்தியின் தரம் என்பதைப் புரிந்துகொள்ள பின்வரும் தகவல் நமக்குத் துணை புரிகிறது.

“ “முஸ்லிம்கள் எதை நல்லவிடயம் எனக்கருதுகிறார்களோ அது அல்லாஹ்விடத்தில் நல்லவிடயமாகும். முஸ்லிம்கள் எதை பாவமாகக்கருதுகிறார்களோ அது அல்லாஹ்விடத்திலும் பாவமாகும்.”

என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப்படுகிறது.இது மிகவும் பலஹீனமான ஒரு நபிமொழியாகும்.இதனை இமாம் கதீப் அல் பக்தாதீ அவர்கள் தனது (அல் பகீஹ் வல் முதபக்கீஹ் 2-100) நூலில் நபித்தோழர் அனஸ் (ரழி) வழியாக இடம்பெறச் செய்துள்ளார்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில்:-

1-ஸுலைமான் இப்னு அம்ர் அந்நகஈ என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய்யர் ஆவார்.

2- இந்த வாசகம் இப்னு மஸ்ஊதின் சுய கூற்றாய் இடம்பெறும் ஒரு அறிவிப்பு உள்ளது.

3- அதுவே சரியான அறிவிப்பு என இமாம் இப்னு அப்தில் ஹாதீ குறிப்பிடுகிறார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts