Saturday, December 21, 2024

இறந்தபோன பெற்றோர்களுக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாமா?

இறந்தவருக்காக அவர் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைக்காது மரணித்தால் மாத்திரம் அதை செய்வது அவர்களது பிள்ளைகளுக்கு வசதியிருப்பின் ஆணாயினும் பெண்ணாணினும் கடமையாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்குச் சொல்கிறது.

صحيح البخاري ـ 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ

ஜுஹைனா கோத்திரப் பெண் ஒருவர் நபியவர்களிடம் வந்து, என் தாய் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்து மரணிக்கும வரை நிறைவேற்றவில்லை அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா என வினவினார்.அதற்கு நபியவர்கள், உங்கள் தாய் மீது கடனிருந்தால் நிறைவேற்றுவீர்களல்லவா! அது போன்று அல்லாஹ்வுக்கு இதை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றலுக்கு மிகத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ்தான் என பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{    (புகாரி:1852

இந்தச் செய்தியில் பகரமாக ஹஜ்ஜுசெய்கின்றவர் மகளாகவும் இருக்கலாம் என்பதும் தெளிவாகிறது.

உம்ராவைப் பொறுத்தவரை இறந்தவருக்காகச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் உயிரோடிருக்கும் தந்தையோ தாயோ உம்ராவிற்கு உடல் சக்திபெறாதவர்களாக இருந்தால் அவர்களுக்காக பிள்ளைகள் உம்ராச் செய்யலாம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.


سنن الترمذي لمحمد الترمذي –  930 – حدثنا يوسف بن عيسى حدثنا وكيع عن شعبة عن النعمان بن سالم عن عمرو بن أوس عن أبي رزين العقيري أنه أتى النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله! إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن قال حج عن أبيك واعتمر قال أبو عيسى هذا حديث حسن صحيح وإنما ذكرت العمرة عن النبي صلى الله عليه و سلم في هذا الحديث أن يعتمر الرجل عن غيره و أبو رزين العقيري اسمه لقيط بن عامر

அபு ரஸீன் அல் அகீரி என்ற நபித்தோழர் கூறுகிறார். நான் நபியவர்களிடம் சென்று ‘எனது தந்தை ஹஜ்ஜோ உம்ராவோ பிரயாணமோ செய்ய சக்தியற்ற வயது முதியவர்” என்றேன். அதற்கு ‘ உன் தந்தைக்கு பகரமாக நீங்கள் அவருக்காக ஹஜ் செய்யுங்கள் உம்ரா செய்யுங்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் திர்மதி: 930

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts