(ஒரு அரபுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பிது. ஒவ்வொரு தந்தைக்கும் சிறந்ததொரு பாடத்தை சொல்கிறது)
மகனே என்னை மன்னித்துவிடு!
உனது கருத்த முடிகள் உன் இளமையான நெற்றியில் பரந்த நிலையில் நீ ஆழ்ந்த துயிலில் இருக்கிறாய் ஆனாலும் நான் உன்னோடு பேச விரும்புகிறேன்.
நான் உனது அறைக்கும் அமைதியாக தனியாக வந்து அமர்ந்திருக்கிறேன் மகனே!
சில நிமிடங்களுக்கு சில தாள்களை நூலகத்தில் புறட்டிக் கொண்டிருந்தேன். வேதனை அலைகள் என்னை ஆட்கொண்டன. அதனால் நான் உனக்கு செய்த தவறை உணர்ந்த நிலையில் உன் அருகில் வந்திருக்கிறேன்.
தாள்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது எதை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன் தெரியமா என்னருமை மகனே!
ஒரு முறை நீ பாடசாலை ஆடைகளை அணியும் பொழுது நான் உன்னோடு கடுமையாக நடந்து கொண்டேன். ஏசிவிட்டேன். நீ உன் முகத்தை ஒழுங்காக துடைக்காததால்……..
சப்பாத்துக்களை சுத்தப்படுத்தாமல் அணிந்த நேரம் உன்னோடு மோசமாக நடந்து கொண்டேன்…
சில பொருட்கள் உன் கையில் இருந்து தவறிக் கீழே விழுந்த போது கோபத்தில் உன் முகத்தில் கத்தினேன்..
காலை உணவின் போது உனக்கு உணவு பிடிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாய் அந்த நேரம் நீ உட்கொள்ளும் முறையில் உள்ள தவறுகளை ஒவ்வொன்றாய் கண்டித்துக் கொண்டிருந்தேன்…
நீ விளையாடிக் கொண்டிருக்கும் நேரம் இரயிலை அடைவதற்காய் வேகமாக நடந்து கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து நீ வழியனுப்பும் வண்ணம் ”போய்ட்டு வாங்க” என்று சொல்லிக் கையசைத்தாய்.
ஆனால் நான் செய்ததெல்லாம்….முகத்தை கடுகடுத்த வண்ணம் இன்னும் கையை உயா்த்தப் பழகு என்று சொன்னதுதான்…
உன் நண்பர்களோடு “ஜில்” விளையாடிக் கொண்டிருந்தாய். அவர்களுக்கு முன்னால் உனது காலுறையில் உள்ள ஓட்டைய நக்லடித்து அவமானப்படுத்திச் சென்றேன்.
அருமை மகனே ஒரு தந்தையாக இருந்துகொண்டு ஏன் இப்படி நடந்து கொண்டேன்.!!!!!!
ஒரு நாள் எனது அறையில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன் திடீரென நீ உள்ளே வந்தாய். அங்கும் இங்குமாக தடுமாறினாய். எனக்குத் தொந்தரவாய் உணர்ந்தேன். என்ன? எனக் கடுமையாகக் கேட்டேன். ”ஒன்றும் இல்லை” என சொல்லி விட்டு என் பின்னால் வந்து என்னைக் கட்டியணைத்தாய். எனது முறைற்ற நடவடிக்கைளால் உன் அன்பு உதிரவில்லை என்பதை நான் உணரும் வகையில் உன் ககைகளால் இருக அணைத்து முத்தமிட்டுச் சென்றாய்.
நீண்ட நேரம் கழியவில்லை.. நான் வாசித்துக் கொண்டிருந்த தாள்கள் என் கைதவறின.
திடீரென பலமான ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. அச்சமான எண்ணம் தோன்றியது. ஏன் இப்படி நடந்து கொண்டேன்!!
எப்பொழுதும் உன் தவறுகளையே தேடுகிறேனே ஏன் !! நீ சிறுவன் என்பதால் இது தான் நான் உனக்கு தந்த பரிசு!! மகனே நான் உன்னை விரும்பாதால் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் உன் வயதை விட உன்னிடம் அதிகம் எதிர்பார்த்து விட்டேன் பெரியர்களின் அளவுகோளில் உன்னோடு நடந்து விட்டேன்
உனது இந்தை மழலைப் பருவத்தில் ரசிக்கத்தக்க எத்தனையோ அம்சங்கள் எத்தனையோ செயல்கள் உன்னிடத்தில் இருந்தன. ஒவ்வொரு முறையும் தூங்க முன் முத்தமிடுவாய். இன்று நீ அதை செய்தபோது அதை நான் உணர முடிந்தது.
இன்றைய தினம் எனக்கு எதுவும் முக்கியில்லை. இதோ இருளில் உன் பக்கத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். என் செய்லகளுக்காய் வெட்கப்படுகிறேன். மகனே இது சிறியதொரு பரிகாரம் என்னை மன்னித்துவிடு எனக்குத் தெரியும் நீ விழித்த நிலையில் இதை நான் சொன்னாலும் இந்த உணர்வுகளைப் புரிகின்ற வயதில் நீ இல்லை ஆனாலும் இதன் பின் நல்லவொரு தந்தையாக உனக்கிருப்பேன்.
உண்மையாக நான் அவ்வாறே இருப்பேன்.
நீ வேதனைப்படும் போது நானும் வேதனைப்படுவேன்.
நீ சிரிக்கும் போது சிரிப்பேன்.
உன்னை வேதனைப்படுத்தும் வசனங்கள் வரும்போது என்னை அடக்கிக்கொள்வேன்.
“சின்னவயசு அப்பபடித்தான் செய்வான்” என்ற வார்த்தையை ஒரு சடங்கு போன்றே சொல்லப் பழகிக்கொள்கிறேன்
உன்னைப் பெரியவன் போன்று நடத்திவிட்டென் மகனே. இதன் பின் பாலகன் போன்றே உன்னோடு நடப்பேன்.
உன் வயதுக்கு மேல் உன்னிடம் எதிர்பார்த்துவிட்டேன் மகனே!!