1-நபியவர்களுக்கு இரண்டு பேத்திகள் 1-ஸைனப் மூலம் உமாமா 2- பாதிமா மூலம் உம்மு குல்தூம் ( (ரலியல்லாஹு அன்ஹுன்ன)
2-”அபு ஸுப்யான் என்ற புனைப் பெயரில் நபித் தோழர்களில் பிரபல்யமானவர்கள் இருவர். 1-அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்- முஆவியாவின் தந்தை ரலியல்லாஹு அன்ஹும் 2-அபு ஸுப்யான் இப்னுல் ஹாரிஸ்- நபிகளாரின் மூத்த பெரிய தந்தை ஹாரிஸின் மகன் இவர் ரலியல்லாஹு அன்ஹு
இருவரும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை எதிர்த்து மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள்
3-ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலியல்லாஹு அன்ஹு) நபிகளாருக்கு பல வகையில் உறவினர் – 1-இவரது தந்தை அவ்வாம் கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் சகோதரர் 2-இவரது தந்தை அவ்வாம் நபியவர்களின் பெரியம்மா ஸபியா இன் கணவர் 3-ஸுபைர் அவர்கள் ஆயிஷாவின் சகோதாரி அஸ்மாவை முடித்தவர் (ரலியல்லாஹு அன்ஹுன்ன)
குறிப்பு-ஸுபைர் என நபியவர்களுக்கு ஒரு பெரிய தந்தையும் இருந்தார்கள் பின்வரும் ஹதீஸில் வரும் ஸுபைரின் மகள் என்பது இவரையே குறிக்கிறது
-
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தையின் மகள்) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டி, “இறைவா, நீ எந்த இடத்தில் என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று கூறிவிடு!” என்றார்கள்.
ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார். (முஸ்லிம்)
4-நபிகளாரின் மனைவி மைமூனா அவர்களும்
இப்னு அப்பாஸின் தாய் லுபாபதுல் குப்ரா அவர்களும்
காலித் இப்னுல் வலீதின் தாய் லுபாபதுஸ் ஸுக்ரா அவர்களும் நபியவர்களுக்கு உடும்புக் கறி வழங்கிய உம்மு ஹுபைத் அவர்களும் ஹாரிஸ் என்பவரின் பெண் மக்கள் ஒன்று விட்ட சகோதரிகள். காலித் இப்னுல் வலீதிற்கு வலீத் இப்னுல் வலீத் என்ற சகோதரும் இருந்தார்.(விபரம்-புகாரி-804முஸ்லிம்-5152)
5-நபித்தோழியர்கள் அஸ்மா,ஆயிஷா இருவரும் சகோதரிகள் ஆனால் அஸ்மாவின் தாய் உம்மு ஜமீல் ஆயிஷாவின் தாய் உம்மு ரூமான்.
அபுபக்ர் அவர்கள் ஹிஜ்ரி 9 இல் அஸ்மா பின்து உமைஸை திருமணம் முடித்தார்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டு நபியவர்களுடன் இறுதி ஹஜ்ஜுக்காக போகும் வழியில் அவர்களுக்கு முஹம்மத் இப்னு அபுபக்ர் பிறந்தார்கள்.
குறிப்பு-மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் வழியில் அபுபக்ருடைய மகள் அஸ்மாவுக்கு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பிறந்தார்கள். மக்காவுக்கு இறுதி ஹஜ்ஜிற்கு வரும் போது அபுபக்ருடைய மனைவி அஸ்மாவிக்கு(பின்து உமைஸ்) முஹம்மத் பிறந்தார்கள் மகளுக்கு குழந்தை பிறந்து 10 வருடங்களின் தந்தையின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. (ரலியல்லாஹு அன்ஹும் ஜமீஆ)
6-அஸ்மா பின்து உமைஸை ஜஃபர் இப்னு அபீதாலிப் மணம் முடித்திருந்தார்கள் இவர் அலீ அவர்களின் அண்ணன்.முஃதா யுத்தத்தில் இவர் ஷஹீதானார்.
பின்னர் அபுபக்ர் அவர்கள் அஸ்மா பின்து உமைஸை மறுமணம் செய்தார்கள் அவருக்கு முஹம்மத் என்ற குழந்தை கிடைத்தது.
அபுபக்ரின் மரணத்தின் பின் அலீ அவர்கள் முடித்தார்கள். அவரிடத்திலேயே முஹம்மத் இப்னு அபீபக்ர் வளர்ந்தார்கள்.
அஸ்மா பின்து உமைஸின் சகோதரி ஸல்மா பின்து உமைஸ் அவர்கள்தான் ஹம்ஸாவின் மனைவியாவார்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்)
7- நபியவர்களின் பேத்தி உமாமாவை அலீ அவர்கள் திருமணம் செய்தார்கள். (வரலாற்றுக் குறிப்பு)
நபியவர்களின் பேத்தி உம்மு குல்தூமை உமர் அவர்கள் திருமணம் செய்தார்கள்(புகாரி-2881) ரலியல்லாஹு அன்ஹும்
8-ஹாலா பின்து குவைலித் அவர்கள் கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் சகோதரி.(புகாரி-3821)
ஹாலாவின் மகன் அபுல் ஆஸ் அவர்கள்தான் நபியவர்களின் பெரிய மகளான ஸைனபின் கணவர். இவரே நபிகளாரின் முதல் மருமகன்.(புகாரி-3110)
8-நபிகளாரின் பெரிய மற்றும் சிறிய தந்தைகள் 11 போ்கள்
அதில் இருவர் இஸ்லாத்தை ஏற்றனர். (அப்பாஸ்,ஹம்ஸா)
இருவர் இஸ்லாத்தை மறுத்தனர்.(அபுதாலிப், அபுலஹப்)
மற்றைய 7 பேர்களும் நபித்துவத்திற்கு முன்னரே
மரணித்துவிட்டனர்.
நபித்துவத்திற்கு முன் மரணித்த பெரிய தந்தையான ஹாரிஸுடைய மகன் அபுஸுப்யானும் இன்னொரு பெரிய தந்தையான ஸுபைருடைய மகன் அப்துல்லாஹ்வும் மகள் லுபாஆவும் இஸ்லாத்தை ஏற்றனர்.
குறிப்பு- நபிகளாருடைய பெரிய தந்தை மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் வேறு. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் என பிரபல்யமானவர் வேறு.
9-நபியவர்களின் தந்தை வழி சகோதரிகள் (மாமி) 6 பேர்கள்.
1-ஆதிகா பின்து அப்தில் முத்தலிப்
2-உமைமா பின்து அப்தில் முத்தலிப்
3-பர்ரா பின்து அப்தில் முத்தலிப்
4-ஸபீயா பின்து அப்தில் முத்தலிப்
5-உம்மு ஹகீம்(பய்ழா) பின்து அப்தில் முத்தலிப்
6-அர்வா பின்து அப்தில் முத்தலிப்
–இவர்களில் ஸுபைர் இப்னுல் அவாமின் தாயான ஸபீயாவைத் தவிர
வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதே சரியானது.
–பர்ரா அவர்கள் நபிகளார் மனைவி ஸைனப் பின்து ஜஹ்ஷ் அவர்களினதும், முஸ்அபின் மனைவி ஹம்னா பின்து ஜஹ்ஷ் அவர்களினதும் நபித் தோழர் அபு ஸலமாவினதும் தாயார்
–உம்மு ஹகீம் (பய்ழா) அவர்களின் மகள் அர்வா அவர்கள்தான் உஸ்மான் அவர்களின் தாயார்
——————————————————————————————-
நபிகளாரின் தாயார் ஆமினாவிற்கு சொந்த சகோர சகோதரிகள் இருந்ததாக சில வரலாற்று செய்திகள் உள்ளன. அவைகளை அதிகமான வராற்று ஆசிரியர்கள் ஆதாரபுர்வமானதாக ஏற்கவில்லை.
10-நபிகளாரின் –
1வது பாட்டனார்- அப்துல் முத்தலிப்(ஷைபதுல் ஹம்த்)
2வது பாட்டனார்- ஹாஷிம்
3வது பாட்டனார்-அப்து மனாப்
4வது பாட்டனார்- குஸை
5வது பாட்டனார்-கிலாப்
6வது பாட்டனார்-முர்ரா
7வது பாட்டனார்-கஃப்
8வது பாட்டனார்-லுஆ
9வது பாட்டனார்-காலிப்
10வது பாட்டனார்-பிஹ்ர்(குறைஷ்)
11வது பாட்டனார்-மாலிக்
12வது பாட்டனார்-நழ்ர்
13வது பாட்டனார்-கினானா
14வது பாட்டனார்-குஸைமா
15வது பாட்டனார்-முத்ரிகா(ஆமிர்)
16வது பாட்டனார்-இல்யாஸ்
17வது பாட்டனார்-முழர்
18வது பாட்டனார்-நிஸார்
19வது பாட்டனார்-மஃத்
20வது பாட்டனார்-அத்னான்
-அத்னானிற்கு பின்னிருந்து இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் வரை உள்ள பாட்டனார்கள் யார் என்பதற்கு வரலாற்று ரீதியில் ஆதாரபுர்வமான செய்திகள் இல்லை.
-17வது பாட்டனாரின் பரம்பரைதான் முழர் கோத்திரம் என்றழைக்கப்படுபவர்கள்.
-10வது பாட்டனாரின் பரம்பரையிலிருந்துதான் குறைஷி வம்சம் ஆரம்பிக்கிறது
-5வது பாட்டனார் கிலாபிற்கு குஸையைப் போன்று ஸுஹ்ரா என்றொரு மகனும் இருந்தார். ஸுஹ்ரா ஆமினாவின் பாட்டனார் ஆவார். எனவே அப்துல்லாஹ்வின் பாட்டனார் குஸையும் ஆமினாவின் பாட்டனார் ஸுஹ்ராவும் கிலாப் இன் பிள்ளைகள் ஆவார்கள். ஸுஹ்ரி என்று அழைக்கப்படுபவர்கள் ஆமினாவின் பரம்பரையை சேர்ந்தவர்கள். (உதாரணம் இமாம் ஸுஹ்ரி)
-3வது பாட்டனார் அப்து மனாபிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். அவர்கள் பின்வருமாறு…..
1-ஹாஷிம்-அப்துல் முத்தலிபின் தந்தை
2-முத்தலிப் (அப்துல் முத்தலிப் அல்ல) – இமாம் ஷாபிஈ அவர்கள் முத்தலபீ என அழைக்கப்படுவது இவரது பரம்பரையில் வந்ததால்தான்
3-அப்து ஷம்ஸ்- நபிகளாரின் மருமகன் அபுல் ஆஸின் 2வது பாட்டனார் இன்னும் உஸ்மான் மற்றும் முஆவியாவின் 3வது பாட்டனார் இவர்.இவரது மகனின் பெயர் உமையா. இதிலிருந்துதான் உமையாக்களின் ஆட்சி என பெயர் வந்தது.
4-நவ்பல்-நபித் தோழர் ஜுபைர் இப்னு முத்இம் இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்
(பார்க்க புகாாி-2899,3491,1590,3139,3140,4229)
11–(நபிகளாின் 20 வரையிலான பாட்டனார்கள் பற்றி நான் எழுதிய விபரத்தை பார்த்து விட்டு இதைப் பார்வையிடவும்https://www.facebook.com/mujahidrazeen/posts/618939618186619?stream_ref=10)
-நபிகாாின் 7வது பாட்டனார் கஃப் என்பவாின் வழித்தோன்றல்களே முதல் 5 கலீபாக்களும் சுவர்க்கத்துக்கு நன்மாரயங் கூறப்பட்ட 9 நபித்தோழர்களும்.
-சுவர்க்கத்துக்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 வது நபித் தோழர் அபு உபைதா நபிகளாாின் 10வது பாட்டனார் பிஹ்ர் (குறைஷ்) இன் இன்னொரு மகனான ஹாாிஸின் வழித்தோன்றல்
-அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பும் ஸஃத் இப்னு அபீ வக்காஸும்
ஆமினாவின் 2 பாட்டனாா் ஸுஹ்ராவின் வழித்தோன்றல்கள். இதனால்தான் ஸஃத் இப்னு அபீவக்காஸ் தனது மாமா என நபியவர்கள் கூறினார்கள்(திர்மிதி-3752) ரழியல்லாஹு அன்ஹும்
-அரபு மொழி பேசக் கூடிய அனைத்து அரபுகளும் 3 வகைப்படுவர் பிாிப்பார்கள்.1-அரபுல் பாஇதா 1-கஹ்தானிய்யா(ஆாிபா) 2-அத்னானிய்யா (முஸ்தஃரிபா)
1-அரபுல் பாஇதாவின் சந்ததி விபரங்கள் பற்றிய வரலாறு இல்லை இவர்கள் தொன்மையான அரபுகள். காலத்தால் முந்தியவர்கள்
2-யமன் அரபுகள் அல்லது மத்திய காலத்து அரபுகள். கஹ்தானின் வழித்தொன்றல்கள். இவர்களது வழித்தோன்றளில் உருவானவரே ஜுர்ஹும்.
3-ஜுர்ஹும் கோத்திரத்துப் பெண்ணைத்தான் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் மக்காவில் திருமணம் முடித்தார்கள். அவரும் அவரது பரம்பரையினரும் அரபு பேசலானார்கள். இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித் தோன்றலில் உருவானவரே நபிகளாாின் 20 வது பாட்டனார் அத்னான். இதனால் அத்னானியர்கள் என வரலாற்றில் அழைக்ப்பட்டார்கள்.
12-நபிகளாாின் ஆண் பிள்ளைகளான 1-காஸிம் 2-அப்துல்லாஹ் 3-இப்றாஹீம் மற்றும் பெண் பிள்ளைகளான 1-உம்மு குல்தூம் 2- ருகையா இவர்கள் வழியாக நபியவர்களுக்கு எந்த சந்ததிகளும் இல்லை.
மகள் ஸைனப் மூலம் உமாமா என்ற பெண் மகள் பிறந்தார்கள் உமாமா அவர்களை அலீ அவர்களும் அவர்களுக்குப் பின் முகீரா இப்னு நவ்பலும் திருமணம் முடித்தார்கள். இவர்களுக்கு குழந்தைகள் பிறந்ததாக வரலாற்று ரீதியில் அதாரமான செய்திகள் இல்லை. எனவே ஸைனப் வழியாகவும் நபியவர்களுக்கு சந்ததிகள் இல்லை.
பாதிமா ரலியல்லாஹு அன்ஹா வழியாக மாத்திரமே நபியவர்களின் சந்ததிகள் நிலைத்தன.
1-ஹஸன் 2-ஹுஸைன் 3-உம்மு குல்தூம் 4-ஸைனப் (அல் குப்ரா)
1-(ஹஸன்)–ஹஸன் அவர்களுக்கு 12 அல்லது 14 ஆண் பிள்ளைகளும் 5 அல்லது 6 பெண் பிள்ளைகளும் இருந்தனர்.
–இதில் ஆண் பிள்ளைகளில் 6பேர் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள். எஞ்சியவர்களில் ஸைத் மற்றும் ஹஸன் (அல் முஸன்னா) என்ற இரு மக்களைத் தவிர வேறெவருக்கும் சந்ததிகள் இல்லை.
–பெண் பிள்ளைகளில் உம்மு அப்தில்லாஹ் விற்குத் தவிர ஏனையவர்களுக்கு சந்ததிகள் இல்லை.
( 1 )–ஹஸன் அல் ( முஸன்னா) விற்கு 5 பிள்ளைகள் அனைவருக்கும் சந்ததிகள் உள்ளன. அந்த 5 பேரில் ஒருவருக்கு ஹஸன் என பெயர் சூட்டினார் அதனால் அவரை ஹஸன் அல் முஸல்லஸ் என்று அழைப்பார்கள். (ஹஸன் இப்னுல் ஹஸன் இப்னுல் ஹஸன் இப்னு அலீ)
(2)–ஸைதிற்கு ஒரே மகன் அவரது பெயர் ஹஸன் (ஹஸன் இப்னு ஸைத் இப்னு ஹஸன் இப்னு அலீ) இவரது வழியிலேயன்றி இவருக்கு சந்ததிகள் இல்லை.
ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்.
ஸைதுடைய மகனான ஹஸனின் பெண் மகள்தான் நபீஸா என்பவர். எகிப்தில் இவருக்கு கப்று கட்டி மார்க்கத்திற்கு முரணான சாஷ்டாங்கங்கள் செய்வதாக இமாம் தஹபீ பதிவு செய்துள்ளார். இன்றளவிலும் இந்த ஷிர்க் நடந்து கொண்டிருக்கின்றது.
அடுத்த பதிவில் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிள்ளைகளைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
13- 2-ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுவிற்கு 4 அல்லது 6 ஆண் மக்களும் 3 அல்லது 4 பெண் மக்களும் இருந்தார்கள். இவர்களின் அலீ (ஸைனுல் ஆபிதீன்) என்ற மகன் வழியாக மாத்திரம்தான் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுவிற்கு சந்திகள் உண்டு.
–அலீ (ஸைனுல் ஆபிதீனின்) தாயார் ஸல்லாமா என்ற பாரசீகப் பெண்மணி.
–தனது பொிய தந்தை ஹஸன் ரழியல்லாஹு அன்ஹுவின் மகள் உம்மு அப்தில்லாஹ் என்ற மகளை இவர் மணமுடித்தார்
–இவரது பிள்ளைகளில் பிரபல்யமானவர் அபு ஜஃபர் முஹம்மத் அல்பாகிர். ஷீயாக்கள் தமது 12 இமாம்களில் 5 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
–அபு ஜஃபர் முஹம்மத் அல்பாகிர் அவர்களின் பிள்ளைகளில் பிரபல்யமானவர் அபு அப்தில்லாஹ் ஜஃபர் அஸ்ஸாதிக். இவரது தாய் அபுபக்ர் அவர்களின் மகனான அப்துர்ரஹ்மானின் பேத்தி உம்மு பர்வா.ஷீயாக்கள் தமது 12 இமாம்களில் 6 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
–அபு அப்தில்லாஹ் ஜஃபர் அஸ்ஸாதிக்கின் பிள்ளைகளில் பிரபல்யமானவர்கள் இருவர்.
1- மூஸா அல் காலிம் அபுல் ஹஸன்
2-இஸ்மாஈல்
(7வது இமாமைத் தீர்மானிப்பதில் ஷீயாக்களுக்கு மத்தியில் கருத்த முரண்பாடு தோன்றியது. ஒரு பிாிவினர் மூஸாவைத் தேர்வு செய்தனர். இவர்கள்தான் ஈரானிலுள்ள பெரும்பாலான ஷீக்கள்.மூஸவீக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இன்னொரு பிாிவினர் இஸ்மாஈலைத் தொிவு செய்கின்றர். இவர்கள்தான் இஸ்மாஈலியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒரு பிாிவினரே போரா ஷீயாக்கள்)
–மூஸா அல் காலிம் அபுல் ஹஸன் அவர்களின் பிள்ளைகளில் அலீ அர்ரிழா பிரபல்யமானவர். ஷீயாக்கள்(மூஸவீக்கள்) தமது 12 இமாம்களில் 8 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
–அலீ அர்ரிழா அவர்களின் பிள்ளைகளில் முஹம்மத் அல்ஜவாத் பிரபல்யமானவர். ஷீயாக்கள்(மூஸவீக்கள்) தமது 12 இமாம்களில் 9 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
— முஹம்மத் அல்ஜவாத் அவர்களின் பிள்ளைகளில் அலீ அல் ஹாதி பிரபல்யமானவர். ஷீயாக்கள்(மூஸவீக்கள்) தமது 12 இமாம்களில் 10 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
–அலீ அல் ஹாதி யின் பிள்ளைகளில் ஹஸன் அல் அஸ்காி பிரபல்யமானவர். இவர் ஹிஜ்ரி 260ம் ஆண்டு மரணித்தார். ஷீயாக்கள்(மூஸவீக்கள்) தமது 12 இமாம்களில் 11 வது இமாமாக இவரை நம்புகின்றனர்.
ஹஸன் அல் அஸ்காியிற்குப் முஹம்மத் என்றொரு பிள்ளை பிறந்து மறைந்து விட்டதாக நம்பி அவரை ஷீயாக்கள் எதிர்பாா்த்திருக்கிறார்கள். எதிர்பார்க்கப்படுபவரே 12வது இமாமம். ஆனால் ஹஸன் அல் அஸ்காியிற்குப் பிள்ளைகள் இல்லை என்பதே சாியானது.