1-தக்லீத் வாதியின் அடையாளங்களில் ஒன்றுதான்
“…. அந்த அறிஞர் பிழை விட்டாலும் அவரைப் பின்பற்றமாட்டோம் நாம் அவரை தக்லீத் செய்வதில்லை ” என்று வாதித்துக் கொண்டே அவரின் ஒரு மார்க்கத் தீர்ப்பைக் கூட பிழை என்று சொல்லமாட்டான்.
2-அறைகுறைகள் அங்கத்துவம் வகிக்கும் இயக்கங்களின் அழிவு
சில குட்டிக் குட்டி இயக்கங்கள் அவைகளின் அங்கத்தவர்களின் அறியாமை கலந்த வெறியினால் அறவீனர்களுக்கு மத்தியில் வேகமாக வளரும்.
அறிவீனர்களின் அங்கத்துவம் அதிகமாக அதிகமாக அறியாமை அந்த இயக்கங்களை ஆட்சி செய்யும் போது வளர்ந்த வேகத்திலே அவர்களே அந்த இயக்கங்களை சிதைத்துவிடுவார்கள்.
இதனால் அறிவாளிகளுக்குக் கிடைப்பது இரண்டு ஓய்வுகள்
ஒன்று – அறியாமையை அடையாளப்படுத்தும் வேலை இல்லை காரணம் அவர்கள் தனி இயக்கமாக இருக்கிறார்கள்
இரண்டு- அவர்களை அழிக்கும் வேலை இல்லை ஏனென்றால் அவர்களது அறியாமையே அந்த அந்த இயக்கத்தை அழித்துவிடும்.