Saturday, May 4, 2024

சவ்வால்மாதம் பற்றிய சில ஆதாரமற்ற ஹதீஸ்கள்

01-مسند أحمد – 15434 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ وَعَفَّانُ قَالَا حَدَّثَنَا ثَابِتٌ قَالَ عَفَّانُ بْنُ زَيْدٍ أَبُو زَيْدٍ حَدَّثَنَا هِلَالُ بْنُ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ قَالَ حَدَّثَنِي عَرِيفٌ مِنْ عُرَفَاءِ قُرَيْشٍ حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ مِنْ فَلْقِ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ وَشَوَّالًا وَالْأَرْبِعَاءَ وَالْخَمِيسَ وَالْجُمُعَةَ دَخَلَ الْجَنَّةَ

01. யார் ரமழானிலும் ஷவ்வால் மாதத்திலும் மற்றும் புதன், வியாழக் கிழமைகளிலும் நோன்பு நோற்கிறாரோ அவர் சொர்க்கம் நுழைவார்.” அஹ்மத் 15434 இந்தச் செய்தியை இக்ரிமா இப்னு காலித் தனக்கு இந்தச் செய்தியைச் சொன்னவருடைய பெயரையும் அவர் யாரிடம் இருந்து பெற்றார் என்ற செய்தியையும் சொல்லவில்லை. எனவே தகவல் அறியப்படாத இருவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுவதால் இச்செய்தி பலஹீனமானதாகும்.

-المعجم الكبير للطبراني – (ج 11  ص 342)02


782- حَدَّثَنَا مَسْعُودُ بن مُحَمَّدٍ الرَّمْلِيُّ ، حَدَّثَنَا عِمْرَانُ بن هَارُونَ ، نا مَسْلَمَةُ بن عُلَيٍّ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحِمْصِيُّ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ، لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ نَافِعٍ ، إلا أَبُو عَبْدِ اللَّهِ الْحِمْصِيُّ ، تَفَرَّدَ بِهِ مَسْلَمَةُ بن عُلَيٍّ

02. யார் ரமழான் நோன்பைநோற்று அதனைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்களிலும் நோன்பு நோற்கிறாறோஅவர் தனது பாவங்களிலிருந்து நீங்கி அவரை அவரது தாய் பெற்றிருந்த நாளில் இருந்ததைப்போன்று ஆகிவிடுவார்.” முஃஜமுல் கபீர் – 782.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் மஸ்லமா இப்னு உலை நிராகரிக்கப்பட்டவர் என்பதால் இச்செய்தி பலஹீனமானதாகும்.

03-سنن ابن ماجه –  1991 – حدثنا أبو بكر بن أبي شيبة . حدثنا أسود بن عامر . حدثنا زهير . حدثنا زهير عن محمد بن إسحاق عن عبد الله بن أبي بكر عن أبيه عن عبد الملك بن الحارث بن هشام عن أبيه  : – أن النبي صلى الله عليه و سلم تزوج أم سلمة في شوال . وجمعها إليه في شوال
في الزوائد في إسناده محمد بن إسحاق . وقد عنعنه . وليس للحارث بن هشام بن المغيرة سوى هذا الحديث عند المصنف . وليس له شيء في الأصول الخمسة

03.  நபியவர்கள் உம்முஸல்மா அவர்களை ஷவ்வால் மாதத்தில்தான் மணமுடித்தார்கள் அதே மாதத்தில்தான் குடும்பவாழ்விலும் ஈடுபட்டார்கள்” இப்னு மாஜா 1991.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஹம்மது இப்னு இஸ்ஹாக் தனக்கு யார் இந்தச்செய்தியைச் சொன்னார் என்பதைச் சொல்லவில்லை இது இவரது வழமை (தத்லீஸ்) இதனால் இந்தச் செய்தி பலஹீனமானதாகும்.

4-سنن ابن ماجه – 1744 – حدثنا محمد بن الصباح . حدثنا عبد العزيز الدراوردي عن يزيد بن عبد الله بن أسامة عن محمد بن إبراهيم  : – أن أسامة بن زيد كان يصوم أشهر الحرم . فقال له رسول الله صلى الله عليه و سلم ( صم شوالا ) فترك أشهر الحرم . ثم لم يزل يصوم شوالا حتى مات
في الزوائد إسناده صحيح إلا أنه منقطع بين محمد بن إبراهيم بن الحارث التيمي وبين أسامة بن زيد

04. உஸாமா அவர்கள் புனித மாதங்களில் நோன்பு நோற்பவராக இருந்தார். அதனை அவதானித்த நபியவர்கள் “ஷவ்வால் மாதம் நோன்பு வை” என்றார்கள். அன்று முதல் புனித மாதங்களில் நோன்பு நோற்பதை விட்டுவிட்டு மரணிக்கும் வரை ஷவ்வால் மாதத்திலே நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். இப்னு மாஜா 1744.

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஹம்மது இப்னு இப்றாஹீம் உஸாமா அவர்களிடமிருந்து இச்செய்தியை நேரடியாக பெறவில்லை யார் வழியாகப் பெற்றார்கள் என்பதைக் குறிப்பிடவுமில்லை. அது மாத்திரமல்ல பல நம்பகமானவர்களின் செய்திகளை அறிவிக்கின்ற பொழுது குளறுபடிகளோடு அறிவித்தும் இருக்கிறார் என்று இமாம் அஹ்மத் இவரை விமர்சித்தும் இருக்கிறார். எனவே இச்செய்தி பலஹீனமானதாகும்.

5-موطأ مالك – 1239 – و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَعْتَمِرْ إِلَّا ثَلَاثًا إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ وَاثْنَتَيْنِ فِي ذِي الْقَعْدَةِ

05.“நபியவர்கள் மூன்று தடவைகள் உம்ரா செய்தார்கள். ஷவ்வால் மாதத்தில் ஒன்றும் துல்கஃதாவிலே இரண்டும். முவத்தா  1239

இந்தச் செய்தியை அறிவிக்கும் உர்வா ஒரு தாபிஈ இவர் இந்தச் செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதைச் சொல்லவில்லை என்பதால் இது பலஹீனமானதாகும்.

6-مشيخة ابن أبي الصقر –  52 – أخبرنا القاضي أبو القاسم الحسن بن محمد بن أحمد الأنباري بقراءتي عليه أخبرنا أبو عبد الله محمد بن أحمد بن البلخي بمكة حدثنا أبو حفص عمر بن عبدويه البغدادي حدثنا أبو العباس أحمد بن علي بن خلف حدثنا موسى بن إبراهيم الأنصاري حدثنا أبو معاوية الضرير عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله ما معنى رمضان فقال رسول الله ( يا حميراء لا تقولي رمضان فإنه اسم من أسماء الله ولكن قولي شهر رمضان يعني رمضان أرمض فيه ذنوب عباده فغفرها ) قالت عائشة فقلنا شوال يا رسول الله فقال ( شالت لهم ذنوبهم فذهبت ) إسناد مظلم والحديث موضوع

06.“ஆயிஷாவே ரமழான் என்று சொல்ல வேண்டாம். அது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும் ரமழான் மாதம் என்று சொல்லுங்கள் ஏனெனில் அடியார்களுடைய பாவங்களை அது எரித்துவிடும்.” என்று நபியவர்கள் என்னிடம் கூறினார்கள். “ஷவ்வால் பற்றி என்ன என்று கேட்டேன்” அதற்கு நபியவர்கள் ஷவ்வால் அவர்களுக்கான பாவங்களை சுமந்து சென்றுவிடும்.”மஷீ;கது இப்னி அபிஸ்ஸகர்” – 52.

இது புனையப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அதிகமானோர் யாரென்றே அறியப்படாதவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts