Friday, September 13, 2024

தீ முட்டுபவர்கள் யார்?

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமுஅலைக்கும் 

அண்மையில் ஜமாதே இஸ்லாமி  இயக்கத்தின் அமீரான ஹஜ்ஜுல் அக்பரை  காத்தான்குடி தெள‍ஹீத் ஜமாஅதின் பிரச்சாரகர் ஸ‍ஹ்றான் அவர்கள், “ஜமாஅதே இஸ்லாமி வழிகேடானது” என்பது தொடர்பில் அழகிய விவாதம் செய்வதற்கு முன்வருமாரு அழைப்பு விடுத்திருந்தார். கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது அழகிய விவாதம் செய்வதற்கோ முன்வராத ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி அதிலிருந்து நழுவிவிட்டதை  “‍ஹஜ்ஜுல் அக்பர்;ஓடிய தலைவர் உணர்த்துவதென்ன” எனும் தலைப்பில்  நாம் எழுதிய ஆக்கத்தையும் அதனுடன் இணைத்து நாம் வெளியிட்ட ஓடியோவையும் அவதானத்துடன் கேட்டிருந்தால் புரிந்திருப்பீர்கள்.இதன்பிற்பாடு நேரடியாக விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியற்ற ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், ஜமாஅதே இஸ்லாமியின் உத்தியோக பூர்வ சஞ்சிகையான அல்ஹஸனாத்தில் “குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ” எனும் தலைப்பில் தனது அறியாமைகளையும் வஞ்சகங்களையும் அள்ளிக் கொட்டியிருந்தார். மக்களுக்கு இவரது அறியாமைகளை இனங்காட்ட வேண்டுமென்ற நோக்கிற்காகவும் கருத்தை கருத்தால் மோத வேண்டும் என்ற நியாய உணர்வினாலும் இம்மறுப்பறிக்கை வெளியிடப்படுகின்றது.

மோத வேண்டும் என்ற நியாய உணர்வினாலும் இம்மறுப்பறிக்கை வெளியிடப்படுகின்றது.அத்துடன் தஃவா வேளைப்பழுக்கள்காரணமாக இம்மறுப்பறிக்கை வெளியிடப்படுவதற்கு சற்று தாமதமாகி விட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.அமீரின் ஆக்கம் பற்றிய பொதுவான தகவல்கள்:

  • அமீருக்கு கருத்தை கருத்தால் மோதும் திறன் கிடையாது.
  • தனிநபர்களின் நடவடிக்கைகளை சமூக நடவடிக்கைகள் போன்று சித்தரித்துள்ளார்.
  • முன்னுக்குப் பின் முரண்பட்டு சில கருத்துக்களை முன்மொழிந்துள்ளார். அவர் எதை தனது ஆக்கத்தில் தவறு என்று மக்களுக்கு சுட்டிக்காட்ட முற்பட்டாரோ அத்தவறை அவரும் அவரது ஆக்கத்தில் இழைத்துள்ளார்.
  • இஸ்லாத்தைக் காப்பதை விட இஸ்லாமிய சுய நிர்ணயக் கோட்பாடான அகீதாவுக்கு அழிவை ஏற்படுத்தும் கருத்துக்களை மொழிந்தவர்களை காப்பாற்ற அதிக சிரத்தை காட்டியுள்ளார்.
  • ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம் என்பதை வரிக்கு வரி நிரூபித்துள்ளார்.
  • இஸ்லாமிய பக்தியை விட இயக்கத்தின் பக்தியே அதிகம் இவருக்கு ஊட்டப்பட்டுள்ளது என்பதை அவரது வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனி அமீரின் வெற்றுவாதங்களையும் அதற்கான பதில்களையும் நோக்குவோம்



அடி அசந்து போகும் அமீரின் வெற்றுவாதங்களும் அதற்கான தக்க பதில்களும்

அமீரின் வெற்று வாதம்:நேற்று வரை சிரித்தார்,கதைத்தார்,அழைக்கும் போது வந்தார்,நன்மைகளை வளர்ப்பதற்கு பரஸ்பரம் ஒத்துழைத்தார், செலவு செய்தார் உழைத்தார். இன்றோ அவரைப்பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது அவருக்கு நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதா? புரியவில்லை.

தக்க பதில்: அமீர் அவர்களே! நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் யார்? முகவரி இல்லாத பினாமியாஎவனோ அரைக்கிருக்கனின் செயற்பாடுகளை வைத்து மொத்தமாகவே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளீர்கள்!  எல்லா ஜமாஅத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். அமைதியை விரும்புவர்களும் இருப்பார்கள் அராஜகத்தை விரும்புபவர்களும் இருப்பார்கள். ஒன்றிரண்டு பேரின் செயற்பாடுகளை வைத்து ஒட்டு மொத்த தவ்ஹீத் வாதிகளும் இப்படித்தான் என்று கூற வருகிறீர்களா? உங்களது ஜமாஅத்தில் உள்ளவர்கள் அனைவரும்; தவ்ஹீத் வாதிகளைக் கண்டால் முகமன் கூறி புன்னகைக்கிறார்கள் என்று அறுதியிட்டு உங்களால் கூற முடியுமா? “மாதம்பை” எனும் ஊரில் உங்களது பக்தர்கள் நடாத்திய அராஜகத்தை எவ்வார்த்தையில் வர்ணிப்பது? அதற்கு நான் சம்பந்தமில்லை எனக் கூறி நழுவிவிடப்போகிறீர்களா?

அகீதாவில் உள்ள அடிப்படை விடயங்களை அற்பமான பிரச்சனை என முத்திரை குத்தும் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறோம். ஜமாஅத்தை வழிநடத்துவது ஒரு புறமிருக்க இஸ்லாத்தை முதலில் படியுங்கள்! உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதா? அல்லது உங்களுக்கு நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதா? புரியவில்லை.

சகோதரர்களே! இதிலிருந்து எமக்கு ஒரு உண்மை புலப்படுகின்றது இவர் தவ்ஹீத் வாதிகளைப் பற்றி இப்படித்தான் புரிந்து வைத்துள்ளார். சத்தியத்தை உரக்கக் கூறி மக்களின் கரங்களினால் அடிபட்ட தவ்ஹீத் வாதிகளும் இலங்கையிலும் இந்தியாவிலும்  இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக முன்னேற்றம், அரசியல் என்றெல்லாம் வாய்கிழியக் கத்தும் இவர்கள் சமூகத்தில் மார்க்கரீதியாக என்ன காத்திரமான பணிகளை மேற்கொண்டார்கள்? அகீதாவை சீரழித்தவர்களைத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் என பொன்னாடை போர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்களது உன்னத(?) பணியாகும்.இவர்களது பிரச்சார வழிமுறை மிக மிகத் தவறானது என்பதை அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் தெளிவாகப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

சமூகத்தில் இரு வகையான பிரச்சாரங்களை நாம் செய்ய வேண்டும்.

  • கொள்கைரீதியான பிரச்சாரம்
  • சமூக உரிமைரீதியான பிரச்சாரம்

இதை நாங்கள் அல்குர்ஆனிலேயே கற்றுக்கொள்ளலாம். (ஹாரூன் மற்றும் மூஸாவாகிய) நீங்கள் இருவரும் பிர்அவ்னிடத்தில் சென்று நாங்கள் இறைவனின் தூதர்கள் என்றும் பனூ இஸரவேலர்களை எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்(17:22) மேற்குறித்த வசனத்தில் நாங்கள் இறைவனின் தூதர்கள் என்று கூறுமாறு கட்டளையிடப்பட்டுள்ளமையானது பிரச்சாரப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. மேலும் பனூ இஸ்ரவேலர்களை பிர்அவ்னிடமிருந்து விடுவிக்குமாறு குறிப்பிட்டது, சமூகரீதியான பணியினை மேற்கொள்வதை வலியிறுத்துகின்றது.

கொள்கைரீதியான பிரச்சாரம்:இதுதான் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பிரச்சாரமாகும். ஷிர்க்,பித்அத்,நம்பிக்கையோடு சார்ந்த அம்சங்கள்,வணக்க வழிபாட்டின் சரியான முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அம்சங்கள் என்று அடிப்படையான பல அம்சங்கள் இதனுள் உள்ளடங்கி விடும். இதுதான் நாம் மக்களுக்கு முதன்மைப்படுத்தி செய்ய வேண்டிய பிரச்சாரமாகும்.

சமூகரீதியான பிரச்சாரம்:இது சமூகம் சார்ந்த சகல விதமான பணிகளையும் குறிக்கும். இதற்கு இஸ்லாத்தில் ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விரிவஞ்சித் தவிர்க்கிறோம். இந்த இரு பிரச்சாரங்களில் “ஜமாஅதே இஸ்லாமி” கொள்கைரீதியான எந்தவொரு முறையான பிரச்சாரத்தையும் இதுவரை சமூகத்தில் முன்வைத்தது கிடையவே கிடையாது. முன்வைக்காதது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்த்தெரியும் கருத்துக்களை அவ்வப்போது பரப்பிவருகின்றது என்பதே பொய் கலக்காத தகவலாகும்.”ஜமாஅதே இஸ்லாமியின்” நாடறிந்த பேச்சாளர் “அகார்” என்பவர் அண்மையில், ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக வெளியிட்ட அறிவீனமான தீர்ப்பு இதற்கு மிகப் பெரும் சான்றாக திகழ்கின்றது. இதை நாம் சுட்டிக்காட்ட முற்பட்டால் “ஜமாஅதே இஸ்லாமியின்” அமீர் எம்மை “காட்டுமிராண்டிகள்” போன்று சித்தரிக்கிறார். இது நியாயமா? சகோதரர்களே சிந்தியுங்கள்.நாங்கள் அவ்வப்போது சமூகப் பணி செய்கிறோம்” என ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்கள்  வாதிட்டால் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புக்களும் சமூகப்பணிகள்தான் செய்கின்றன. சமூகப் பணி செய்வதனால் ஒரு கொள்கை சரியாகி விடாது. மாறாக அந்த அமைப்பு என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறது என்பதையே நாம் கவனிக்க வேண்டும்.

அமீர் அவர்களே! வெற்றுவாதங்களை எழுதி பக்கங்களை வீணடிக்காமல் உருப்படியான கருத்துக்களை எழுதுங்கள்! உங்களது இயக்கத்தில் மார்க்க ரீதியாக பல்வேறு தவறுகள் இருப்பதாக ஒருவர் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறேன் என்று கூறியும் பின்வாங்கி “கோழை” போன்று இருந்து விட்டு இப்போது மூக்கால் அழுகிறீர்களாஅல்ஹஸனாத் தஃவாக் களத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பதில் அர்த்தமில்லை இது காலம் கடந்த கண்ணீர் ஒன்றுமே செய்ய முடியாது. உங்களது கருத்தில் உறுதியும் நம்பிக்கையும் முதலில் உங்களுக்கு அல்லவா இருக்க வேண்டும்? உங்களது கருத்தில் உறுதியும் நம்பிக்கையும் உங்களுக்கு இருந்தால் அதை மக்களுக்கு நிரூபியுங்கள்! உங்களிடம் இஸ்லாத்தின் பக்தியை விட ஜமாஅத்தின் பக்தியே மேலோங்கிக் காணப்படுகின்றது என்பது இங்கு மேலும் மேலும் தெளிவாகின்றது. இன்று நேற்று உங்களைப் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட  “ஜமாஅத்தே இஸ்லாமி” எனும் இயக்கத்திற்கு முன்னுரிமை வழங்குவதை விட்டு விட்டு இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்குவதில் கரிசனை காட்டுங்கள்!நீங்கள் அடுத்தவர் மீது கவலைப்படுவது ஒரு புறமிருக்கட்டும் உங்களின் கொள்கைத் தெளிவிற்காக நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்! உங்கள் மீது எமக்கோ எமது சகோதரர்களுக்கோ எவ்வித கோபமோ வெறுப்போ கிடையாது. ஆதாரபூர்வமாக உங்களையும் உங்கள் ஜமாஅத்தையும் விமர்சிப்பவர்களை நீங்கள் மிகத் தவறாகவும் மோசமாகவும் அர்த்தப்படுத்துகிறீர்கள்! உங்களது ஜமாஅத் தவறான வழியில் செல்கின்றது என்பதை நீங்கள் உயிர்வாழும் காலப்பகுதியிலே உங்களுக்கும் உங்களது இயக்க சகோதரர்களுக்கும் தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும்.  நாம் முன்வைக்கும் விமர்சனங்களை நீங்கள் புரியாமல் எழுதியிருப்பது உங்களிடத்தில் எமது ஆணித்தரமான விமர்சனங்களுக்கு அடிமட்ட பதில்கள் கூட  இல்லை என்பதைக் காட்டுவதுடன் இஸ்லாம் பற்றிய‌ தெளிவு உங்களுக்கு இன்னும் போதாது என்பதை நிரூபிக்கின்றது.

அமீரின் வெற்றுவாதம்:இன்று அவர் சிரிப்பதில்லை. கதைப்பதில்லை. அழைத்தால் வருவதில்லை. சமூகத்தின் நிலைகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை.முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். நாம் பேச முற்பட்டால் எரிச்சலடைகின்றார். அவர் பேசத்துவங்கினால் விமர்சிக்கிறார். ம்னிதர்களை அவமதித்துப் பேசும் தொனியை இப்போது அவர் நன்கு கற்றிருக்கிறார். இவை யாவும் இப்போது அவருக்கு மிக உயர்ந்த நன்மைகளாகத் தெரிகின்றன. 

தக்க பதில்: நீங்கள் குறிப்பிடும் அட்ரஸ் இல்லாத அந்த நபர் சிரிக்கவில்லை. கதைக்கவில்லை. அழைத்தால் வருவதில்லை என்பதால் உங்கள் ஜமாஅத் சரியாகி விடுமா?சிரிப்பதும் சிரிக்காமல் இருப்பதுதான் இங்கு பிரச்சனையா? சிரித்து விட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்து விடுமா? தவ்ஹீத் வாதிகள் இன்முகத்துடனும் அழகிய பண்பாடுகளுடனும் உங்களோடு நடந்து கொண்டால் அமீர் பதவியை தூக்கி எறிந்து விட்டு தவ்ஹீதுக்கு மீண்டுவிடுவீர்களா? ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்” என்று கூறுவது போலவே பதில் சொல்ல முடியாததால் மெல்ல நழுவுகிறீர்கள்! “ஜமாஅத்தே இஸ்லாமியில்” உள்ள அனைவரும் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளக் கூடியவர்கள் என உங்களால் அறுதியிட்டுக் கூற முடியுமா? நீங்கள் விமர்சிக்கப் பயன்படுத்தும் அதே வழிமுறையை நாமும் கையாள நினைத்தால் அதை இந்த அமீர் ஏற்றுக் கொள்வாரா? அதாவது உங்களது ஜமாஅத்தில் உள்ள சில முரடர்களையும் அறீவீனர்களையும் சுட்டிக்காட்டி “ஜமாஅதே இஸ்லாமி” வழிகேடானது ஏனெனில் அது முரடர்களைக் கொண்ட இயக்கமாக உள்ளது என்று கூறி தீயை மூட்டுபவர்ககளாக உங்களை சித்தரித்தால் அறிவுள்ளவர்கள் இந்தப் போக்கைகை ஏற்றுக் கொள்வார்களா? இஸ்லாம் அவ்வாறான வழியை எமக்குக் கட்டவில்லை என்பதால் தான் ஆட்களின் சொந்த வாழ்வை விமர்சிப்பதை விட ஆட்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டி விமர்சிக்கின்றோம். இது நியாயம்தானே? இது அறிவுபூர்வம்தானே? ஆயினும் நீங்கள் எம்மை விமர்சிக்கக் கடைபிடிக்கும் இரண்டாந்தர வழியை நாம் தேர்வு செய்யவில்லை. அது எமக்குத் தேவையுமில்லை. அது ஆரோக்கியமும் இல்லை. இஸ்லாத்தை எம்மிடம் ஒருவர் விமர்சிக்க வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு வருபவர் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கும் வாதங்களுக்கு நாங்கள் பதில் கூற வேண்டுமே தவிர அவரது தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அவரது வாதங்களை முடக்கலாம் என நினைப்பது சுத்த வடி கட்டிய முட்டாள்தனமாகும். அமீராகிய நீங்கள் கையாண்ட விதமும் இது போலவே உள்ளது.

அமீர் அவர்களே! உங்கள் ஜமாஅத் உறுப்பினர்களை விட்டு விடுவோம் உங்களையே எடுத்துக் கொள்வோம். “தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுகிறோம் வாருங்கள்” என அழைத்தவர்களை “நோயாளிகள்” என முத்திரை குத்தி அழைக்கிறீர்கள்! இதை எந்தப்பண்பாட்டு வீழ்ச்சியில் சேர்ப்பது? எந்தக்குரோதத்தில் சேர்ப்பது? உங்களிடம் தகுந்த பதில் இல்லாததால் இந்த நிலைக்கு நீங்கள்ஆளாகி இருக்கிறீர்கள்! என்பது மட்டும் வெள்ளிடை மலை.நேர்வழியை நோக்கி உங்களை அழைத்தால் முறையாக பதிலளிக்காமல் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி  ஒளிந்து கொண்டு அல்ஹஸனாத்தில் தவ்ஹீத்வாதிகளை மறைமுகமாக “நோயாளிகள்” என்று எழுதுவது உங்கள் வாதப்படி எப்படி நியாயமாகும்? எனவே அடுத்தவர்களோடு நல்ல பண்பாடுகளுடன் நடக்க வேண்டும் என்பதை முன்மொழிய வந்த நீங்கள் தவ்ஹீத்வாதிகளை “நோயாளிகள்” என்று கூறியதின் மூலம் நான் அடுத்தவர்களுக்கு உபதேசம் புரிவதை நான் செய்ய மாட்டேன் என்பதை சொல்லாமல் செய்கிறீர்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா

ஒரு தவறை செய்து கொண்டு அதை செய்ய வேண்டாம் என மக்களுக்கு போதிப்பது இஸ்லாத்தின் வழிமுறை கிடையாதல்லவா? இதை தங்களின் அறியாமை என எடுத்துக் கொள்வதா? அல்லது முன்பின் முரண்பாடு என எடுத்துக் கொள்வதா? ஆக மொத்தத்தில் இஸ்லாம் எனும் கண்ணாடிக் கூண்டினுள் இருந்து கொண்டு நீங்கள் கல்லெறிகிறீர்கள் என்பது மட்டும் இங்கு தெளிவாகிறது. 

அமீர் அவர்களே! தனிநபர்களின் கொள்கையை வைத்து இஸ்லாத்தை எடைபோடாதீர்கள்! இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கும் அதிகமானோர் அல்குர்ஆனிலோ அல்லது ஹதீத்களிலோ பிழை கண்டு பிடிக்க எடுக்கும் முயற்சியை விட முஸ்லிம்களிலே குறை தேடுவதுதான் அதிகம் அதிகம். முஸ்லிம்களின் சகல செயற்பாடுகளையும் வைத்து கொள்கையை சரியாகத் தீர்மானிக்க முடியுமா? அவர்களின் வேளையைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்! உங்களது இயக்கம் மிகத் தவறான வழியில் செல்கின்றது என்பது நாம் கூறக் கூடிய விமர்சனங்களில் மிக‌ முக்கிய விமர்சனமாகும். அதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் எம்மிடத்தில் உள்ளன. ஆனால் அதற்காக உங்களது இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது குரோதத்தையும் வெறுப்பையும் அள்ளிக் கொட்டுவதை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. ஒரு சிலர்களால் நீங்களும் உங்களது பக்தர்களும் பாதிக்கப்பட்டதால் ஒட்டு மொத்த தவ்ஹீத் வாதிகளும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கற்பனையில் உளறிக்கொட்டியுள்ளீர்கள்! இதற்காகத்தான் அல்ஹஸனாத்தில் பல பக்கங்கள் எழுதிக் குவித்தீர்களா? உலகில் உள்ள அனைத்துக் கொள்கைகளிலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். நல்லவர்கள் இருப்பதனால் கொள்கை நல்லது என்றும் கெட்டவர்கள் இருப்பதனால் கொள்கை கெட்டது என்று யாராவது முடிவெடுப்பார்களா? முடிவெடுத்தால் அவரை முட்டாள் என நாம் கூற மாட்டோமா? ஒவ்வொரு காலத்திலும் சரியான கொள்கையில் வெறிபிடித்தவர்களும் பிழையான கொள்கையில் வெறிபிடிக்காத நல்ல‌வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பக்தர்களை வைத்து எந்தக் கொள்கையையும் தீர்மானிக்காதீர்கள்! நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களை வைத்து நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை நாம் தீர்மானித்தால் அது எந்தளவு மடமையோ அது போன்றுதான் உங்கள் உளறளும் உள்ளது. “தவ்ஹீத் ஜமாஅத்” என்ற பெயரிலும் சில சில்லறைகள் புல்லுருவிகளாக இருந்து கொண்டு தவ்ஹீதை இன்று சீரழித்துக் கொண்டிருப்பதை நாமும் வன்மையாகவே கண்டிக்கிறோம். அதில் இரு கருத்துக்கு இடமில்லை. இன்னும் தவ்ஹீதை உரத்துக் கூறுவதற்கு அதுதான் பெரும் தடையாக வேறு இருக்கின்றது. ப‌ண்பாடுகளால் மட்டும் இஸ்லாத்தை வளர்க்க முற்படுவது அறிவீனமாகும். கொள்கை தெளிவு, நன்னடத்தை, ஓயாத பிரச்சாரம் இவைகள்தான் இஸ்லாமியக் கொள்கையை மிகப் பலமாக சமூகத்தில் எடுத்துக் கூறுவதற்கான அஸ்திவாரம். நீங்கள் வழிகெட்ட அஷ்அரிய்யா சிந்தனை கொண்டவர்களை “அறிஞர்கள், சமகால ஆய்வாளர்கள்” என்று தூக்கிப்பிடிக்கிறீர்கள்.. பித்அத்வாதிகளுடன் ஒன்றினைந்து உங்களின் சகல செயற்பாடுகளையும் அமைத்துக்கொள்கிறீர்கள். பித்அத்வாதிக்கு அடைக்கலம் கொடுத்தாலே அல்லாஹ்,வானவர்கள்,ஒட்டுமொத்த மனிதர்களின் சாபம் உண்டாகின்றது என்பது புஹாரியில் இடம் பெறும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும். அல்லாஹ்வின் தூதர் அதிகம் கண்டித்ததை சர்வசாதாரணமாகவும் சுன்னாக்களை “சில்லறைப்பிரச்சனை” என்றும் அர்த்தப்படுத்துகிறீர்கள். இஸ்லாத்தின் தனித்துவக் கொள்கையில் தெளிவில்லாத நீங்கள் ஒற்றுமைக் கோஷம் இட்டுக் கொண்டு நீங்களே தாருல் அர்க்கம்,அர்ரிபாத்,எம்.எப்.சீடி என்று பல இயக்கமாக பிரிந்து நிற்கிறீர்கள்!. அகீதாவில் வழிதவறிய வழிகேடர்களை உலகம் போற்றும் அறிஞர்கள் என புராணப்பா பாடும் நீங்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைப் படியுங்கள். எனவே உங்களோடு நடந்து கொண்டவர் யாராக இருந்தாலும் அவரின் பெயரை மாத்திரம் நீங்கள் குறிப்பிட்டால் விவகாரத்தை எடுத்துக் கூறி உங்களிருவருக்கிடையில் உள்ள பிரச்சனையைத் தீர்க்கும் வேளையை நாம் மேற்கொள்ளலாம். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும் உங்களை நினைத்தால் மிகக் கவலையாகவே உள்ளது.

அமீரின் வெற்றுவாதம்:இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

தக்க பதில்:அல்லா‍ஹ்வின் சாபத்தை ஏற்படுத்தும் காரியங்களில் ஒன்றான பித்அத்தை தற்துணிச்சலோடு செய்யும் உங்களை கொள்கைவாதிகள் புறக்கணிப்பதானது ஆரோக்கியமான விடயம் தானே..! கெட்ட கொள்கையில் நீங்கள் இருந்து கொண்டு அதிலேயே நடித்துக் கொண்டும் இருப்பதால் யாராவது உங்களைக் கவனத்தில் கொள்ளாமல் சென்றிருக்கலாம்.அது உங்கள் மீது கொண்ட வெருப்பல்ல.நீங்கள் கொண்டிருக்கும் அசத்தியக் கொள்கை மீது கொண்ட வெருப்பு அவ்வளவு தான்.இக்கேள்வியை கண்ணாடிக்கு முன்னால் நின்று நீங்கள் கேட்டால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் உங்கள் ஜமாஅத்தை வழிநடாத்துங்கள்! பிறகு நீங்கள் எழுப்பிய கேள்வி வீணானது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்! ‍ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! சுவர் எழுப்பாமல் சித்திரம் வரைந்தவனின் கதை போன்று உங்கள் கதை அமைந்துள்ளது. தான் ஆற்ற வேண்டிய ஆக்கபூர்வமான பணிகளை விட்டு விட்டு, உங்கள் ஜமாஅத்தை ஆதாரங்களுடன் விமர்சிப்பவர்களை “குரேதாத் தீ மூட்டுபவர்கள்” போன்று இரண்டந்தரமாக சித்தரித்தால் பொதுமக்கள் இரண்டாந்தர வேளையை மேற்கொள்ளவே முனைவர். அதைப் பார்த்து இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? என்று கேட்டால் நாம் என்ன சொல்வது? வினை விதைத்தவன் வினை அறுப்பான்,தினை விதைத்தவன் தினை அறுப்பான்.பொதுவாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பர். நீங்கள் மார்க்கத்தில் தவறு செய்ததை ஒருவர் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறேன் என்று கூறியும் அதை ஒத்துக் கொள்ளாமல் மனமுரண்டாக, ஒளிந்துகொண்டு அல்ஹஸனாத்தில் குர்ஆன் ஸுன்னாவில் மூட்டப்படும் குரோதத் தீ என்றெல்லாம் எழுதினால் சத்தியத்தை மாத்திரம் தேடும் பொதுமக்கள் எவ்வாறு சகித்துக் கொள்வார்கள்? ஏதோ ஒரு விதத்தில் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தவே முயற்சிப்பர். இதை ஒன்றும் செய்ய முடியாது.ஏனெனில் பொதுமக்கள் சுயநலமற்றவர்கள் உண்மையை அறிந்து அதன்படி செயலாற்ற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பொதுமக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதென்பது அசாத்தியமானதொன்றாகும் அதற்காக அதை சரி காணுகிறேன் என நினைத்து விடாதீர்கள்! தீமைக்குரிய வழியை அடைக்காமல் தீமையைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? உங்களைப் போன்ற ஒரு சிலர்கள் இவ்வாறு நடப்பதனால்தான் இப்படி நடக்கிறார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

அமீரின் வெற்று வாதம்:காரணம் இப்போது அவர் இஸ்லாம்(?) படித்திருக்கிறார். யாரோ அவரை அழைத்துக் கொண்டு போய் இஸ்லாம்(?) சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த மாற்றம்.

தக்க பதில்: எமது விமர்சனங்களை நீங்கள் கேலிக் கூத்தாக கருதினாலும் உங்கள் ஜமாஅத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் மன்றில் தக்க ஆதாரங்களுடன் தோலுறித்துக் காட்டுவதில் நாம் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை இன்ஷா அல்லாஹ்! இஸ்லாமிய அகீதவையே குழிதோண்டிப் புதைத்து,இறை நிராகரிப்பாளர்களான ஷீஆக்களை நாகூசாமல் “முஸ்லிம்கள்” எனக் கூறும் சில்லறைகளை “அறிஞன்,பெருமகன்” என்றெல்லாம் கூறி பொதுமக்களை மடையர்களாக ஆக்கும் நீங்கள், இஸ்லாமிய ஆய்வுப் பகுதி பற்றியும் இஸ்லாமிய தஃவாக் களம் பற்றியும் கதைக்க கடுகளவும் தகுதியும் தகைமையும் இல்லாதவர் என்பதே எமது நிலைப்பாடாகும். யாரோ அவரை அழைத்துக் கொண்டு போய் இஸ்லாம் (?) சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்: என்று நீங்கள் கூறிய கூற்றிலிருந்தே உங்களின் வெகுளித்தனமும் எமது பிரச்சாரத்தை அற்பமாக ஆக்க நீங்கள் படாத பாடு படுகிறீர்கள் என்பதும் இங்கு தெளிவாகப் புலப்படுகின்றது.மக்களே சிந்தியுங்கள்! கண்டிப்பாக உண்மையை அறிந்து கொள்வீர்கள்!

அமீரின் வெற்று வாதம்: நேற்று இவரிடம் இருந்த இஸ்லாம் நல்ல பல குணங்களை வளர்த்து விட்டிருந்தது. அவர் பிற மனிதர்கள், அறிஞர்கள், இமாம்கள் இயக்கங்கள் மீது வெறுப்படைந்திருக்கவில்லை. மனிதர்களோடு நல்லவராக இருந்தார். இன்று அவருக்கு இஸ்லாம்(?) கிடைத்திருக்கின்றது: நேர்வழி பெற்றிருக்கிறார். ஆதனால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களையும் உலமாக்கள், அறிஞர் பெருமக்களையும் இவர் வெறுக்கிறார், விமர்சிக்கிறார்

தக்க பதில்: ஆமாம் அமீர் அவர்களே! இஸ்லாம் நல்ல பல குணங்களை வளர்க்கும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதை இஸ்லாத்தின் எதிரிகள் கூட மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நல்ல குணங்களினால்தான் அசைக்க முடியாத ஆலமரமாக இஸ்லாம் வேரூன்றி நிற்கிறது. ஆனால் இங்கு இமாமாக அறிஞனாக யாரை ஏற்றுக் கொள்வது? யாரை நிராகரிப்பது? இதுதான் இங்குள்ள‌ பிரச்சனை. நீங்கள் கண்டவனையெல்லாம் இமாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினால் அதை அங்கீகரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எமக்கில்லை. அதை அல்லாஹ்வும் கூறவில்லை அவனது தூதரும் கூறவில்லை. உங்கள் பக்தர்களுக்கு வேண்டுமென்றால் இது பொருந்தலாம். அகீதாவை நாசமாக்கும் கருத்துக்களை பரப்புபவர்களை அறிஞர்கள் இமாம்கள் என்றெல்லாம் எழுதும் உங்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடமே நாம் பிரார்த்திக்கிறோம்  

நீங்கள் இமாம்கள் இஸ்லாமிய அறிஞர்கள்  சீர்திருத்த இயக்கங்கள், வழிகாட்டும் உலமாக்கள் என்று கூறுபவர்களையும்  எதற்காக வெறுக்கிறோம்? எதற்காக விமர்சிக்கிறோம்? என்றாவது மனக்கண் திறந்து பார்க்க மாட்டீர்களா? இஸ்லாத்தின் அகீதாவைக் குழி தோண்டிப் புதைக்க முற்படும் யூசுப் அல்கர்ளாவியை சுய புத்தியும் சீரான மார்க்க அறிவும் கொண்ட‌ எவராவது அறிஞர் என்று கூறுவாரா? அறபுலகத்தில் அவரது கருத்துக்கெதிராக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட நூற்களை நீங்கள் வாசித்துள்ளீர்களா? அவரது மெளட்டீகத் தீர்ப்புக்களுக்கு  இணையத்தில் வலுவான சான்றுகளுடன் இஸ்லாமிய ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட மறுப்புக்களுக்கு பதில் சொன்னீர்களா? அதற்கு ஏதாவது முறையான மறுப்பறிக்கை வெளியிட்டீர்களாஇல்லை;அது எங்களுக்குத் தேவையில்லை என்று வரட்டுவாதம் பேசப்போகிறீர்களா

தேவையில்லையெனில் ஏன் அவர் போன்ற புல்லுருவிகளை அல்‍ஹஸனாத் அட்டைப்படத்தில் போட்டு அவரைத் தூக்கிப்பிடிக்கிறீர்கள்? மனிதக் கருத்துக்களில் தொங்கிக் கொண்டிருக்காமல் நேராக குர்ஆன் ஸுன்னா நோக்கி வாருங்கள்! “சமூக ஒற்றுமை சமூக ஒற்றுமை” என மூச்சிற்கு முன்னூறுக்கும் மேற்பட்ட தடவை மூச்சிறைக்கும் நீங்கள்,சமூக ஒற்றுமை பற்றி சத்திய மார்க்கம் சொல்லும் செய்திகளை என்றைக்காவது படித்துப் பார்த்துள்ளீர்களா? “ஒற்றுமை எனும் கயிறைப் பற்றிப் பிடிக்குமாறு குர்ஆனில் இல்லாத வசனத்தைக் கூறி வரும் நீங்கள் இஸ்லாத்தை எங்கே படித்திருப்பீர்கள்!!  நாம் ஒருவரை வெறுப்பதும் ஒருவரை நேசிப்பதும் இஸ்லாத்திற்காகவே இருக்க வேண்டும். அல்லாஹ் அவனது அருள்மறையிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ் வையும் இறுதி நாளையும்1 நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.(58:22) 

எனவே யூசுப் கர்ளாவிக்கும் எமக்கும் தனிப்பட்ட எந்தக் குரோதமோ பிரச்சனையோ கிடையாது. ஆயினும் அவர் தனது சொற்பொழிவுகளாலும் எழுத்துக்களாலும் ஆங்காங்கே இஸ்லாத்தை களங்கப்படுத்துகிறார்.அவரையும் அவரது சகாக்களையும் நீங்கள் துதிபாடுகிறீர்கள்! அதை நாங்கள் மக்களுக்கு தோலுறித்துக் காட்டுகிறோம்.இஸ்லாத்தின் தூய வடிவத்தைக் காப்பாற்றப் பாடுபடும் மனிதர்களை மனமாறப் புகழும் நாம், மார்க்கத்தை சீரழிக்கும் சில்லரைகளை விமர்சிக்கின்றோம்.இதில் என்ன தவறு இருக்கின்றது? அகீதாவில் சர்ச்சைக்குரிய ஒருவரை நீங்கள் “அறிஞன்” என ஆர்ப்பரித்தால் நாம் எவ்வாறு வாய்மூடி மௌனம் காப்பது? அதை மக்களுக்கு தெளிவு படுத்துவது எமது கடமையல்லவா? தெளிவுபடுத்த நாம் முனையும் போது அதை “குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ” என நீங்கள் குறிப்பிடுவது எவ்வளவு அறியாமை? அமீர் அவர்களே! நீங்கள் இஸ்லாத்திற்கெதிரான தீயை உங்களது அறியாமையினால் மூட்டி விட முற்படும் போது அதை அணைப்பது எமது கடமையல்லவா? உங்களுக்கு இஸ்லாத்தை விட இயக்கத்தின் பக்தியே நிறைந்து காணப்படுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

அமீரின் வெற்று வாதம்: சகோதரர்களே!சகோதரிகளே! புரிகிறதா? இன்று போதிக்கப்படும் இஸ்லாம்(?) எத்தகையதென்று 

தக்க பதில்: சகோதரர்களே! சகோதரிகளே! புரிகிறதா? இன்று மக்களை வழி நடாததுவதாகக் கூறிக் கொள்ளும் “ஜமாஅதே இஸ்லாமியின்” சாயம் எப்படி வெளுக்கின்றதென்று

அமீரின் வெற்று வாதம்:எந்தக் காரணமும் இல்லாமல் நேற்றைய நற்குணங்களை இன்றய இழி குணங்களாக மாற்றிவிடுகிறது இன்று பலரால் போதிக்கப்படுகின்ற இஸ்லாம். இது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் செய்யும் நன்மை என்று அந்த அழைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

தக்க பதில்:ஆமாம்! இன்று பலரால் போதிக்கப்படும் இஸ்லாம், நற்குணங்களை இழி குணங்களாக மாற்றியுள்ளது என்பது உண்மைதான். ஆக்குணங்களைக் கொண்டவர்கள் யார்? என அறிந்து மக்களுக்கிடையில் அவர்களை அடையாளப்படுத்தும் தூய பணியை அவசியம் நாமனைவரும் செய்தாக வேண்டும்.  இதில் இரு கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதை வைத்து ஒட்டு மொத்த தவ்ஹீத்வாதிகளும் இழிகுணங்களைக் கொண்டவர்கள் என்று முத்திரை குத்த முற்படுவதானது, அறியாமையிலும் மிகப் பெரிய அறியாமையாகும்.அழைப்பாளர்களை வைத்து கொள்கையை எடை போடாதீர்கள்! இதுவே நாம் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்ளும் கருத்தாகும். நாம் எந்த இழி குணத்தையும் கையாளாமல் உங்களை அழகிய விவாதத்திற்கு அழைத்த போது நீங்கள் வராமல் பின்வாங்கியதை எந்தக் குணத்தில் சேர்ப்பது

உங்களது இஸ்லாமிய கிலாபத் நடைபெறும் குட்டி மதீனா என அழைக்கப்படும் “மாதம்பை” எனும் ஊரில் அல்குர்ஆன் கற்கை வகுப்பை நடாத்திய தெள‍ஹீத்வாதிகள் மீது சுமர் மீதேறிக் குதித்து வன்முறையைக் கட்டவிழ்து விட்ட உங்களது ஜமாஅத் ஊழியர்களை எந்தப் பண்பாட்டாளர்களாக வர்ணிப்பது? நற்குணம்,இழிகுணம் பற்றி பொது மக்களுக்கு உபதேசிக்கும் நீங்கள் அதை முதலில் கடைப்பிடித்து ஜமாஅத் ஊழியர்களுக்கு போதிப்பது சாலச் சிறந்ததென்றே நாம் கருதுகின்றோம்.

அமீரின் வெற்று வாதம்:கீழ்த்தரமான அணுகுமுறையிணூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு, குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள்.

தக்க பதில்: எது கீழ்த்தரமான அணுகு முறை? ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் நிரூபிக்கிறேன் வாருங்கள்! என சகோதரர் ஸ‍ஹ்றான் அழைத்ததா? அல்லது பூட்டிய அறைக்குள்ளாவது பேச வாருங்கள் என அழைத்தும் வராமல் ஓடி ஒளிந்ததா? அழகான முறையில் கருத்துப்பரிமாற்றம் செய்ய முன்வாருங்கள் என அழைத்த வேளையில் அது தர்க்கமாகி விடும் என் நொண்டிச் சாட்டுக்களை தாங்கள் கூறியதா? ஜமாஅத்தின் மீது அன்பு வைப்பவர்களுடன்தான் பேசமுடியும் என வரட்டுத்தத்துவம் பேசியதா? நீங்கள் ஓடி ஒளிவதால்தான் இன்று மக்கள் உங்களை அடையாளம் கண்டு சரியான வழிக்கு மீண்டு வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர் ஸ‍ஹ்றானுடன் விவாதிக்கப் போனால் சாயம் வெளுத்து விடும் எனப் பயந்து நீங்கள் அஞ்சி நடுங்கியதையும் ஐந்து சதத்திற்கும் பெருமதியில்லாத காரணங்களைக் கூறி கவனமாக நழுவியதையும் இந்நாட்டில் பலர் அறிந்து கொண்டனர்.சகோதரர் ஸ‍ஹ்றானுக்கும் உங்களுக்குமிடையில் நடைபெற்ற அந்த உரையாடலின் ஒலிப்பதிவை கவனித்துக் கேட்ட வேளையில், இஸ்லாமிய இயக்கங்களுக்கல்ல;சாதாரண பொதுத் தொண்டுக் களகங்களுக்குக் கூட நீங்கள் தலைவராக இருக்க தகைமை இல்லையோ என எனக்கு எண்ணத் தோன்றியது.உங்கள் விடயத்தில் நாம் எவ்விதத்திலும் கீழ்த்தரமான அணுகுமுறைகளைக் கையாளவில்லை. உங்கள் கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு உணர்த்தி அதிலிருந்து மக்களை விடுவிப்பதே எமது நோக்கமாகும். அதற்குண்டான பணிகளைத்தான் இன்று வரை செய்து வருகிறோம். உங்களையும் உங்களது ஜமாஅத்தையும் அடையாளப்படுத்தவே சில காரியங்களைச் செய்கிறோம். இது தவறான அணுகுமுறையா? உங்கள் மீது தனிப்பட்ட குரோதம் கொள்வது எமக்கு எவ்விதத்திலும் அவசியமுமில்லை.அதற்கு நேரமும் இல்லை.உங்களுக்கு இஸ்லாத்தை விட ஜமாஅத் தான் முக்கியமாகத் தென்படுகிறது. அதனால்தான் இந்தளவு கரிசனை எடுக்கிறீர்கள் என்றே நாம் கருதவேண்டியுள்ளது.

நீங்கள் குரோதம் கொண்டாலும் சரி கொள்ளாவிட்டாலும் சரி “காட்டு மிராண்டிகள்” போன்று எங்களை மக்களிடையே சித்தரித்தாலும் சரி சித்தரிக்காவிட்டாலும் சரி தவறான கொள்கைகளை மக்களுக்கு நாம் அடையாளப்படுத்திக் கொண்டே இருப்போம். சரியான கொள்கையில் நிலைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்! நியாயமாக சிந்தித்தால் கண்டிப்பாக உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

அமீரின் வெற்று வாதம்:நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு, குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாத பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில் கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

தக்க பதில்: அமீர் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! இவ்வாறான போலிவிமர்சனங்களை முன்வைப்பதின் மூலம் என்ன இலாபம் கண்டீர்கள்? நீங்கள் விஷம் என்று எழுதுவதால் மக்களும் நம்பிக் கொள்வார்கள் என்று மனப்பால் குடிக்கிறீர்களா? தவ்ஹீத் என்ற தனித்துவ மரத்தினை சில சில்லறைகளால் பாழ்படுத்தியவர்கள்தான் நீங்கள். தூய்மையான இஸ்லாம் என்ற உணவுப் பெட்டகத்தினுள் தனிநபர்களை மேம்படுத்தி அவர்களின் கருத்துக்களை விஷமாக வாந்தியெடுத்து உணவுப் பொட்டகத்தையே நாசமாக்கியவர்கள் நீங்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.அல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் வாதிகள் எந்த விஷத்தையும் எங்கும் பரப்பவில்லை. விஷத்தைப் பரப்பத் துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமியை அடையாளப்படுத்த துடிக்கிறார்கள். விஷமக்கருத்தை பரப்பும் “ஜமாஅதே இஸ்லாமியின்” அமீர் விஷத்தைப் பற்றிக் கதைப்பதானது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அமீர் அதில் ஒரு படி மேலுயர்ந்து விஷம் பாய்ச்சுவதில் கைதேர்ந்தவர்கள் என்று கூட எழுதியுள்ளார்.

உட்கொள்ள வேண்டிய உணவையும் ஒதுக்க வேண்டிய நஞ்சயையும் நன்றாகவே நாம் தெரிந்து தான் வைத்திருக்கின்றோம். ”ஜம்இய்யா ஜம்இய்யா” என பிஞ்சு உள்ளங்களில் காலத்தால் தோற்றுப் போன மனிதக் கருத்துக்களை நஞ்சாகப் பாச்சும் இயக்கதின் அமீராக தாங்கள் இருந்து கொண்டு இவ்வாறு எழுதுவதை சுத்த நயவஞ்சகத் தனமாக நாம் எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் செய்யாததை எதற்காக சொல்கிறீர்கள்?(61:2) எனும் வேத வசனத்தை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.‌

அமீரின் வெற்று வாதம்:உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா? சீரான நடத்தையும் நேரிய ஒழுக்கமும் உள்ளவர்கள் பிறரைப் பற்றித் தப்பாக நினைப்பதில்லை. ஏதாவது ஒரு நன்மையான காரியத்திற்கு அழைத்தால் உடனே சென்று விடுகிறார்கள். அழைப்பவர்கள் வெறுப்பு, குரோதம், போன்ற விஷயங்களை தங்களது உள்ளங்களில் நிறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது இந்தத் தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்குத் தெரியாது. ந‌ல்லவற்றைக் கேட்போமே என்ற தூய்மையான எண்ணத்தில் இவர்கள் அந்த அழைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.

தக்க பதில்: உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது கைவைத்தோமா?அல்லது உங்களது தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்தோமா?சீரான நடத்தையும் நேரிய ஒழுக்கமும் உள்ளவர்கள் பிறரைப் பற்றி தப்பாக நினைக்க மாட்டார்கள் என்று இங்கு நீங்கள் சுட்டிக்காட்டுவதின் மூலம் எதை நாடுகிறீர்கள்? தவ்ஹீத் வாதிகள் அவ்வாறான இனிய குணம் கொண்டவர்கள் இல்லை என்பதைத்தானே சொல்ல வருகிறீர்கள்!!ஆனால் உங்களது ஜமாத்தோடு சேர்ந்தால் நன்றாக இருந்தவர்களும் குரோதத்தினால் பிறரை “நோயாளி” என்று கூறும் அளவிற்கு பண்பாடு கெட்டுப் போயுள்ளார்கள். நல்லவற்றை அள்ளிக் கொட்டுவீர்கள் என்ற பேராவலினாலும் “சமூக ஒற்றுமை” என்று நீங்கள் பசப்பு வார்த்தைகள் பேசுவதினாலும்,”அறிவியல் உலகை மூடியிருக்கும் அறியாமை இருள்” என இஜ்திமா நடாத்துவதினாலும் பொதுமக்கள் உங்களை நோக்கி ஓடி வருகின்றனர். ஆனால் அங்கு சரியான கொள்கை விளக்கம் இல்லை என்பதை உணரும் போதும்,சமூக நடைமுறையை வைத்து நீங்கள் பத்வா கூற முற்படும் போதும், அதை விட்டும் நீங்கிக் கொள்கிறார்கள். இதுதான் உங்களது வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.இன்று வரை கரைத்துக் கொண்டிருக்கிறது. 

ஆத்திரமும் ஆவேசமும் கொண்டதாலும் நேரடியாக எதிர்கொள்ளாத கோழைத்தன்மையாலும் அல்ஹஸனாத்தின் தஃவாக் களத்தின் பக்கங்களை வீணாக‌ நிறைத்துள்ளீர்கள்! அவ்வளவுதான்.

அமீரின் வெற்றுவாதம்:அங்கு சென்றவுடன் இவர்களது இஸ்லாமிய ஆர்வத்தை பிழையான வழியில் மெதுவாக திசை திருப்ப ஆரம்பிக்கிறார்கள் அந்த அழைப்பாளர்கள். 

தக்க பதில்: மக்களின் இஸ்லாமிய ஆர்வத்தை பிழையான வழியில் மெல்ல திசை திருப்புகிறோம் என்று இவர் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அல்லாஹ் இவருக்கு சரியான வழியைக் காண்பிக்கவில்லையெனில் அதைத் தான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பார். பொதுமக்களின் பலவீனத்தை இனம் கண்டு அதனைப் பலப்படுத்தவும் சரியான வழிமுறைக்கு அவர்களைப் பயன்படுத்தவுமே பாரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்பதே உண்மையாகும். அப்படிப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியமா? இல்லவே இல்லை. ஏனெனில் பொதுமக்கள் சரியான கொள்கையின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டியே இவ்வாறான வேளையைச் செய்கிறோம். தந்திரோபாயங்களின் மூலம் பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது சாதாரணமானவர்களுக்கும் புரியும் இவ்வுண்மை கிலாபத் வீரருக்கு(?) தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. கிலாபத் ஆட்சி கிடைத்து விட்டால் அதை எப்படி வழிநடாத்துவாரோ தெரியவில்லை. சரி அப்படி மக்களின் இஸ்லாமிய ஆர்வத்தை தவறாக திசை திருப்புகிறோம் என்று எம்மை இவர் விமர்சிப்பது எதனால் என்றுதான் பார்ப்போமே!

அமீரின் வெற்று வாதம்:அவர்கள் கூறுகிறார்கள்;இஸ்லாத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. (யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலுமல்ல) எம்மத்தியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களாலும் அவர்கள் சார்ந்த அறிஞர்களாலும்தான்” என்று கூறி மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) முதல் கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி வரை இஸ்லாமிய உலகில் செல்வாக்குப் பெற்று விளங்கும் மாண்புமிகு அறிஞர்களையும் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்களையும் இஸ்லாமிய மரபுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று விமர்சிக்கவும் தூற்றவும் துவங்குகின்றனர்

தக்க பதில்: இப்பதான் உங்கள் குட்டு வெளிப்பட்டுள்ளது. உங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது. இதை சொல்வதற்குத்தான் இத்தனை பில்டப்புக்களை அள்ளிக் கொட்டினீர்கள்! இதனை மக்களின் உள்ளங்களில் விதைப்பதற்காகவே இத்தனை படாத பாடுபட்டீர்கள்.அல்லா‍ஹ் போலிகளை காலத்திற்குக் காலம் தோலுரித்துக் கொண்டே இருக்கின்றான்.நீங்கள் யார்? என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்துவதற்கு வழிகளை இப்போது நீங்களே திறந்து தந்துள்ளீர்கள்.(ஜஸாகல்லா‍ஹு கைரா) இஸ்லாமிய  அகீதாவிற்கு பங்கம் விளைவித்தவர்களை அறிஞர்கள், உலகில் செல்வாக்குப் பெற்றவர்கள் என்றெல்லாம் கூறி துதி பாடும் உங்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறேன். (அத்துடன் இவர் துதிபாடும் அறிஞர்கள்(?) யார் என்பதை  தனியாக விபரிக்கவுள்ளோம்.இன்ஷாஅல்லா‍ஹ்)

அமீரின் வாதம்: இஸ்லாத்தின் பரம வைரிகளாக செயற்படும் யூத,ஸியோனிஸ ஆதரவு சக்திகள் மீதும் குறிப்பாக பலஸ்தீன்,கஷ்மீர்,ஆப்கானிஸ்தான்,ஈராக் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் அரக்கர்கள் மீதும் அரபு,முஸ்லிம் சமூகத்தை மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளது நலன்களுக்காக அடகு வைத்திருக்கும் அமெரிக்காவின் அடிதாங்கிகளான பொம்மைத் தலைவர்கள் மீதும் காட்டாத வெறுப்பையும் குரோதத்தையும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட இந்த உத்தமர்கள் மீது கொட்டித் தீர்ப்பதுதான் இந்த அழைப்பாளர்கள் போதிக்கும் இஸ்லாமாகும்

தக்க பதில்: வெளிரங்கத்தில் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களை நாமும் எதிர்க்கத்தான் செய்கிறோம். ஆனாலும் எமது சக்திக்குட்பட்ட வரை எதிர்க்கிறோம். இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் சியோனிஸ சக்திகளை மாத்திரம் எதிர்த்து விட்டு இஸ்லாத்திற்கு உள்ளிருந்து பங்கம் விளைவிக்கும் கருத்துக்களையும் மனிதர்களையும் எதிர்க்கக் கூடாது என்பதை எங்கிருந்து எடுத்தீர்கள்? நபி(ஸல்) அவர்கள் காபிர்களை மாத்திரம் தன்வாழ்நாள் பூராக எதிர்த்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக யார் தவறு செய்தாலும் அதைக்கண்டிப்பவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு.வெளியில் இருப்பவர்களை விட உள்ளிருந்து அரிப்பவர்களுக்குத்தான் அதிக கவனம் நாம் எடுக்க வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் வெளியில் இருப்பவர்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்தைத் தீர்த்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாறாக தாங்கள் இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் என்று வெளிப்படையாக கூறிக் கொண்டுதான் அதை எதிர்க்கின்றனர். ஆனால் நீங்கள் மாபெரும் அறிஞர் எனப் போற்றும் மகான்கள் இஸ்லாம் என்ற பெயரை சுமந்து கொண்டுதான் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். இதில் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டியது இரண்டாவது சாரார்களைத்தான். இதில் என்ன தவறு உள்ளது? இஸ்லாத்தின் அரிச் சுவடி கூடத் தெரியாதவனுக்கே புரியும் இந்த விடயம் “உஸ்தாத்” என்றும் “அமீர்” என்றும் லேபெல் போடுபவர்களுக்கு புரியாமல் போனது தான் புரியாத புதிராக எமக்குள்ளது.

அமீரின் வெற்று வாதம்:இவர்கள் இஸ்லாமிய அமைப்புக்களையும் அறிஞர்களையும் விமர்சிப்பதற்கும் தூற்றுவதற்கும் கையாளும் உத்திகள் பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன

தக்க பதில்: இதுவும் மிகப் பிழையான கருத்தாகும். நாம் விமர்சிக்கும் போது பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கெல்லாம் செல்லவில்லை. யூசுப் அல்கர்ளாவி, ஸையிதுல் குதுப், மௌலானா மௌதூதி இவர்களெல்லாம் இந்த சமூகத்தில் சரியான கொள்கையை போதித்தவர்களும் கிடையாது. இஸ்லாமிய அறிஞர்களும் கிடையாது. அவர்கள் வழிகேடர்கள் என்றுதான் இன்று வரை கூறி வருகிறோமே தவிர மோசமான தீயவார்த்தைகளைக் கொண்டு அவர்களைத் திட்டவில்லை.ஒருவரை மோசமான தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டினால்தான் பண்பாட்டு விழ்ச்சியின் இறுதி எல்லை என அதை வர்ணிக்கலாம். ஆனால் நாம் யாருமே நீங்கள் போற்றும் அறிஞர்களை அவ்வாறு திட்டவில்லையே! எனவே அமீர் இங்கு அர்த்தப்படுத்துவது மிக மிகத் தவறு என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அத்வைதக் கொள்கையை கிழக்கிலங்கையில் பிரச்சாரம் செய்து வரும் மெளலவி அப்துர் ரஊபை தங்களது இருட்டுப் பத்திரிகையான அல்‍ஹசனாத்தில் விமர்சித்து நீங்களே ஆக்கம் எழுதிய போது உங்களையும் உங்களது ஜமாஅத்தையும், “பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள்” என ஒருவர் விமர்சித்தால் அவரை அடிமாட்ட முட்டாள் என நீங்கள் அடையாளப்படுத்த மாட்டீர்களா? தீய கொள்கையை விமர்சித்தால் அதற்கு பண்பாட்டு வீழ்ச்சி என முத்திரை குத்திய முதல் மனிதர் நீங்களாகத்தான் இருக்கும் என நான் கருதுகின்றேன்.அமீர் அவர்களே! தப்பு செய்பவர்களையும் தவறான கொள்கையுள்ள மக்களையும் கடுஞ் சொல் கொண்டு அல் குர்ஆன் சாடியிருப்பது தங்களுக்குத் தெரியாதா?   

அமீரின் வெற்று வாதம்:இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை எழுத்துருவிலோ வீடியோ ஓடியோ கிளிப்ஸ்களியோ தொகுத்து வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இவ்வறிஞர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளின் நிழற்படங்களைத் தேடி வைத்துக் கொள்கிறார்கள்.இஸ்லாத்துக்காகவே தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணித்த அந்த அறிஞர்களின் வார்த்தையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சிறு சிறு துண்டுகளை முன் பின் தொடர்புகளற்ற விதமாகவும் பின்னணிகள் மறைக்கப்பட்ட நிலையில் வெட்டி வைத்துக் கொண்டு அவ்வறிஞர்களை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இந்தக் கீழ்த்தரமான குணத்தை பண்பாட்டு வீழ்ச்சியின் எல்லை என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க முடியும்?

தக்க பதில்: இதில் பிரதானமாக இரு கருத்துக்களை கூற வருகிறீர்கள்.ஓன்று: நீங்கள் போற்றும் அறிஞர்களின் பேச்சுக்களிலிருந்து சிறு துண்டை மாத்திரம் வெட்டி எடுத்து விமர்சிக்கிறோம் என்று எம்மை வசைபாடுகிறீர்கள். முதலில் சுவர் எழுப்பி விட்டு சித்திரம் வரையுங்கள் என்று ஏலவே கூறிவிட்டோம். நாம் யாருடைய பேச்சிலிருந்து எப்பகுதியை மாத்திரம் வெட்டி எடுத்தோம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபியுங்கள்! இல்லாவிட்டால் நீங்கள் பொய்யன் என்பது மக்களுக்கு தெளிவாகும். ஏற்கனவே உத்மான்(ரலி), உமர்(ரலி) சம்பந்தப்பட்ட செய்தியைக் கூறி விட்டு ஆதாரம் கேட்டதும் பதில் அளிக்காமல் இந்நிமிடம் வரைக்கும் கவனமாக நழுவிக்கொண்டிருக்கிறீர்கள்!

உங்கள் அறிஞர்கள், ஷீஆக்களை துதி பாடுவதும் தீமைகள் நடைபெறும் மாநாடுகள்,கூட்டங்களில் கலந்து கொள்வதும் வாடிக்கையான விடயம் தானே..! என்ன மறந்து போய்விட்டதா? இஸ்லாம் ‍ஹராமாக்கிய ஆண்,பெண் கலப்பிலும் இசைக் கச்சேரியிலும் யூஸுப் அல் கர்ளாவி பங்கேற்றாரே.. இது சாதாரண,அற்ப விடயமா? இந்த வீடியோவில் நாம் என்ன மாற்றம் செய்தோம் என்பதை நாம் பிரசன்னமாயிருக்கும் ஒரு சபையில் நிரூபிப்பீர்களா? அல்லது விவாதம் என்றால் தாங்கள் கரைந்து காணமல் போவது போன்று இதற்கும் கரைந்து விடுவீர்களா? நபி(ஸல்) அவர்கள் ஒரு தீமையைக் கண்டால் அதை விட்டும் தூர விலகி வந்து விடுவார்கள் என்ற அடிப்படை கூட தெரியாமல் நடந்து கொள்ளும் இவர்கள் எல்லாம் அறிஞர்கள் எனக் கூறும் உங்களுக்கு இஸ்லாமிய அறிவு வளர்ச்சிக்காக அல்லா‍ஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். இதில் தேவையானதைத் துண்டித்து விட்டு மக்களுக்கு நாங்கள் காண்பிக்கிறோம் என்று கூற வரும் நீங்கள் அதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட முன்வைக்கவில்லையே..! இது அவதூறு என்ற வரையரைக்குள் வரமாட்டாதா? இந்த‌ ஹதீதைப் படித்துப் பாருங்கள்.வீட்டினுள் தீமையைக் கண்டாலும் வெருத்த மாமனிதரின் போக்கையும் கொள்கைப் பற்றையும் கண்டு கொள்வீர்கள்.

நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இது என்ன மெத்தை?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களின் நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்என (இறைவன் தரப்பிலிருந்து) கூறப்படும்என்று சொல்லிவிட்டு, ‘உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லைஎன்று கூறினார்கள்

(பு‍ஹாரி 2015 அரபி இலக்கத்தின் படி)

மேற் குறித்த ஹதீஸ் கற்றுத்தரும் பாடத்தை இங்கு கவனித்தீர்களா? தீமையைத் தடுக்க எங்களுக்கு முடியாவிட்டால் அதை விட்டும் ஒதுங்கியாவது இருந்து எமது வெருப்பைக் காட்ட வேண்டும்.அதுவே ஈமானின் கடைசி நிலை என்றல்லவா இந்த மார்க்கம் எமக்கு கற்றுத்தருகிறது! அறிஞர், பெருமக்கள் என்று நீங்கள் போற்றுபவர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்பவர்கள் என எம்மை விமர்சிக்கும் நீங்கள் தெளிவான மோசடிக்காரர் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஏனெனில் நாம் எதை எப்படி வெட்டினோம் என்பதையெல்லாம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டாத இந்த பரிசுத்தவான்(?) அல்ஹஸனாத்தில் மாத்திரம் வம்பளப்பதைப் பற்றி மக்களே என்ன நினைக்கிறீர்கள்? இவர்களுக்கு ஒரு கொள்கை கிடையாது. கண்டவர்களையெல்லாம் அறிஞர்கள் என்று கூறி விட்டு அதை தக்க ஆதாரங்களுடன் விமர்சித்தால் இப்படி பெட்டைத்தனமாக கண்ணாடிக் கூண்டினுள் இருந்து கொண்டு கல்லெறிவார்கள்.இவர்களுக்கு இந்நாட்டில் ஒரு ஆட்சியும் வேண்டும்! நல்ல வெகுளி.எனவே சிறு சிறு துண்டுகளை மாத்திரம் வெட்டி சாதகமானதை எடுத்துவிட்டு பாதகமானதை விட்டு விட்டோம் என்ற கருத்தை திணிக்க நினைக்கும் இவருக்கு நாம் பகிரங்க சவால் விடுகிறோம். நாம் எதில் அப்படிச் செய்தோம் என்பதை முடிந்தால் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும்.நிரூபித்தால் இன்ஷாஅல்லா‍ஹ் ஜமாஅதே இஸ்லாமியில் இருக்கும் ரகசிய பைஅத்தை செய்து ஜமாஅத்தில் இணைந்து கொள்வோம்.

இரண்டாவது விடயம்: இஸ்லாத்துக்காகவே தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணித்த…என்று சில சில்லறைகளை துதிபாடுகிறார்.நீங்கள் போற்றும் அறிஞர்கள் இஸ்லாத்திற்காக சேவை செய்தார்களா?அல்லது இஸ்லாமிய அகீதாவையும் தூய சட்டங்களையும் குழிதோண்டிப் புதைத்தார்களா? என்பது ஒரு புறமிருக்க ஏன் அவர்களுக்கு மாத்திரம் இத்தனை சிரத்தை எடுக்கிறீர்கள்? என்ற நியாயமாக கேள்வியை நாம் முன்வைக்கின்றோம். இஸ்லாத்திற்காகவும் அதன் நேர்த்தியான கொள்கைகளுக்காகவும் தங்கள் வாழ்க்கையை அற்பமாகக் கருதி தியாகம் செய்த பல்லாயிரம் தியாகச் செம்மல்கள் வரலாற்றில் வாழ்ந்து மறைந்துள்ளனர். இதை யாரும் மறுக்க முடியாது. ஹதீத் கலை வல்லுனர்கள், சட்டக்கலை வல்லுனர்கள் என தியாகம் செய்தவர்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஏன் ச‌ம காலத்தில்‌ வாழ்ந்து மறைந்த ஹதீத்கலை மேதை நாஸிருத்தீன் அல்பானீ, போன்றவர்களும் ஹதீத் கலைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆனாலும் அல்பானி உட்பட மேற்குறித்த அறிஞர்கள் யாராவது இஸ்லாத்திற்கு முரணான கருத்தைக் கூறினால் அதைத் தூக்கிப்பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை. பிழையென்றால் அதை பிழை எனவும் சரி எனில் அதை சரி எனவும் கூறுவதில் என்ன தவறு உள்ளது? யூசுப் கர்ளாவி சரியான கருத்தைக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வோம். நாஸிருத்தீன் அல்பானி பிழையாக சொன்னாலும் அதையும் நிராகரிப்போம். இதுதான் அறிவுபூர்வமான வழிமுறை. இதைத்தான் நாம் கையாளுகிறோம். முதலில் இஸ்லாத்திற்கு சேவை செய்தவர்கள் யார்? இஸ்லாமிய அகீதாவுக்கு பங்கம் விளைவித்தவர்கள் யார்? என தெளிவாக அடையாளம் கண்டு விட்டு எழுதுங்கள்.

அமீரின் வெற்று வாதம்:இந்தக் கீழ்த்தரமான அணுகுமுறையினூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு,குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு,குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாதளவு பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில்கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்

தக்க பதில்: நச்சுக்கருத்துக்களை உலகில் பரப்பியவர்களின் சிந்தனைகளை நீங்கள் இங்கு பாய்ச்ச முற்படும் போது அதைத் தடுப்பதற்கான பகீரத முயற்சியிலே நாம் இறங்கியுள்ளோம்.அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். ஏதோ நாங்கள் நச்சுக்கருத்துக்களை சமூகத்தில் பரப்புவது போன்றும் காட்டு மிராண்டிகள் போன்றும் எங்களை சித்தரித்துள்ளீர்கள். இதுவெல்லாம் உருப்படியான வாதமா? ஒரு ஜமாஅத்திற்கு அமீராக இருப்பவர் இது போன்ற உளறல்களை அள்ளிக் கொட்டலாமா? தான் எழுதியவைகள் பல பக்கங்களை பிடிக்க வேண்டும் என மனப்பால் குடிக்கிறீர்களா? அடுத்தவர் சிரிக்காததும் இன்முகத்துடன் பேசாததும்தான் உங்கள் ஜமாஅத் நேர்வழியில் செல்கிறது என்பதற்கான ஆதாரமா? எங்களை “மனநோயாளிகள்” என எழுதியதால் அல்லாஹ்தான் உங்களை அந்நிலைக்கு ஆளாக்கி விட்டானோ? என்ற சிந்தனை கூட இவ்விடத்தில் எழுகிறது.அமீர் அவர்களே! சத்தியத்தின் பால் வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.சிறு வயது உள்ளங்களை அல்ல;மாறாக பெரியவர்களின் உள்ளங்களையும் நாசமாக்கும் கைங்கரியத்தையே தாங்கள் நாளாந்தம் மேற்கொண்டு வருகிறீர்கள் என்பதே பொய் கலக்காத செய்தியாகும்.

அமீரின் வெற்று வாதம்: விஷம் பாய்ச்சும் இந்த அழைப்பாளர்கள் உண்மையில் அப்பாவிகளா? அல்லது இஸ்லாத்தின் எதிரிகளது ஏஜன்டுகளா? இவர்கள் யூத,ஸியோனிஸ சக்திகளுக்கு எதிராக தங்களது வெறுப்பைக் காட்டாமல் யூத,ஸியோனிஸ சக்திகள் உலகில் யாரை அதிகம் வெறுக்கின்றனவோ அவர்கள் மீதுதான் தமது வெறுப்பை அதிகம் காட்டுகிறார்கள். உண்மையில் யார் இவர்கள்?

தக்க பதில்: நாங்கள் யார் மீதும் வீணான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. அது எங்களுக்கு தேவையுமில்லை. இஸ்லாத்தின் பெயரால் தவறான கருத்துக்களை பரப்ப முற்படுவோரின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டுவதே எங்களது நோக்கமாகும். இஸ்லாத்தின் எதிரிகள் கூட வெளியிடத் தயங்கும் தீர்ப்புக்களையும் தற்துணிச்சலாக வெளியிடும் கர்ளாவி,மு‍ஹம்மத் அல் ‍கஸ்ஸாலி போன்ற மத்‍ஹபுவாதிகளுக்கு உந்து சக்தியாகச் செயற்படும் உங்களின் அப்பாவித் தனத்தை எண்ணி வெட்கமடைகின்றோம்.இஸ்லாத்தின் எதிரிகளது ஏஜன்டுகள் போன்று இஸ்லாமியப் போர்வையினுள் ஒழிந்திருக்கும் நீங்கள் “உண்மையில் யார் இவர்கள்?” என எம்மை நோக்கிக் கேட்பது வடிகட்டிய முட்டாள்தனம்.இதுவே இதற்குரிய பதிலாகும்.

அமீரின் வெற்று வாதம்:இவர்கள் ஏஜன்டுகளுமல்ல,அப்பாவிகளுமல்ல. இவர்கள் நோயாளிகள். இவர்களது நோய் என்னவென்றால், யார் மீதாவது வெஞ்சத்தை வரவழைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதுதான். வெறுப்புக் காட்டாமல், பகை பாராட்டாமல் இவர்களால் வாழ முடியாது. போதைவஸ்துக்கு ஒரு மனிதன் அடிமையாவது போல பகைக்கும் வெறுப்புணர்வுகளுக்கும் இவர்கள் அடிமையாகி விட்டார்கள். தூரத்தில் இருப்பவர்கள் மீது எப்போதும் வெறுப்புக் காட்டி பகை பாராட்ட முடியாது என்பதால் இவர்கள் பகை பாராட்டுவதற்கு யாரையாவது எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறிய முரண்பாடுகள் எழுந்தாலே போதும் உடனே இவர்களது உள்ளத்திலிருக்கும் பகையும் குரோதமும் வெகுண்டெழுந்து விடும். நேற்று மிக நெருக்கமாக இருந்தவர்களை இன்று பரம வைரிகளாக இவர்கள் ஆக்கிக் கொள்வார்கள்

தக்க பதில்: அமீர் அவர்களே! நீங்கள் கூறுவது போல நாங்கள் பண்பாட்டு வீழ்ச்சியின் உச்ச நிலை அடைந்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறு நாங்கள் இருப்பதால் உங்களது ஜமாஅத் செல்லும் வழி நேர்த்தியானது என்றாகி விடுமா? சம காலத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் போக்கை கண்டித்த இஸ்லாமிய அறிஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு என்ன பதிலைக் கூறப்போகிறீர்கள்?

“ஜமஅதே இஸ்லாமி” துதிபாடும் யூசுப் அல்கர்ளாவியைப் பற்றி ஹதீத்கலை மேதை நாஸிருத்தீன் அல்பானி விமர்சிக்கும் முறையைப் பாருங்கள்

  • இவர் ஒரு குழப்பக்காரர்
  • அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் இவரது தீர்ப்புக்கள் அமைவதில்லை. மாறாக மார்க்கத்திற்கு விரோதமான தீர்ப்புக்களைத்தான் இவர் வழங்குகிறார்
  • இவர்(முற்காலத்தில் வாழ்ந்த தத்துவஞானிகளின்) தத்துவ சிந்தனைக்கு ஆளானவர்
  • இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட இசையை ஹலால் எனக் கூறுகிறார்.
  • இவர் குர்ஆன்,ஸுன்னா,இஜ்மா, கியாஸ் ஆகியவை இஸ்லாத்தின் சட்ட மூலாதாரங்கள் என்கிறார்.

(அவுஸ்திரேலியக் கேள்விகளுக்கு பதில்கள் எனும் ஒலிப்பதிவில் அல்பானி அவர்கள் யூசுப் அல்கர்ளாவியைப் பற்றி தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அவரது வாக்கு மூலத்தை அரபியில் கேட்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்)

நாஸிருத்தீன் அல்பானி விமர்சித்ததோ அல்லது விமர்சிக்காமல் விடுவதே எமக்கு இங்கு ஆதாரம் இல்லை. ஆயினும் நாங்கள் மாத்திரம்தான் உலகம் போற்றும் அறிஞர்களை விமர்சிக்கிறோம்  என்று அமீர் கூற வருவதானது தவறு என்பதை சுட்டிக்காட்டவே இதை இங்கு மேற்கோள் காட்டினோம்.

அமீர் அவர்களே! ஒன்றை உபதேசமாகக் கூறுகிறோம். ஜமாஅத்தை வழி நடாத்துவது ஒரு புறமிருக்க முதலில் இஸ்லாத்தை நன்கு படியுங்கள்! சமூகத்துக்கு எமது கருத்தை எடுத்துக் கூறும் வழிமுறையையும் ஆழமாகப் படியுங்கள். அதை விட்டு விட்டு தனி நபர்களின் குறைகளை அலசுவதால் எந்த நன்மையும் கிடையாது.இஸ்லாத்தை தாங்கள் நேசித்துப் பழக்கப்படாததால் இஸ்லாத்தின் தூய வடிவத்தை,எவர் விமர்சித்தாலும் அது உங்களைப் பாதிப்பதில்லை.கர்ளாவி,கஸ்ஸாலி போன்ற தனிமனிதர்களை மானசீகமாக நீங்கள் வணங்குவதால் மேற்குறித்த மனிதர்களை ஆதாரபூர்வமாக நாம் விமர்சிக்கும் போது கொதித்து எழும்புகின்றீர்கள்.குர்ஆன்,ஸுன்னாவுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய நீங்கள் குராபிகளுக்கும்(மூடநம்பிக்கையாளர்கள்) மத்‍ஹபுவாதிகளுக்கும் அடிமையாகி இருப்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா

அமீர் அவர்களே! கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாருங்கள்.ஒரு காலத்தில் நாமும் கர்ளாவி,கஸ்ஸாலி,செய்யிதுல் குதுப் என அழைந்தவர்கள்  தான்.அல்லா‍ஹ் இப்போது எம்மை நரகத் தீயிலிருந்து காப்பாற்றி விட்டான்.மார்க்க முரண்பாடுகள், எம்மோடு உள்ளவர்களிடம் வந்தாலும் விட்டுக் கொடுத்துப் போக மாட்டோம்.ஆனால் உலக விடயமென்றால் எம்மைப் பாதித்தாலும் சகோதரத்துவ வாஞ்சையை கருத்தில் கொண்டு தாராளத்தன்மையை அதில் நூறு வீதம் கடைப்பிடிப்போம்.எதில் விட்டுக் கொடுக்க வேண்டும்? எதில் கடுமை காட்ட வேண்டுமென்ற வேறுபாட்டை அல்லா‍ஹ்வின் அருளால் தெரிந்து தான் வைத்துள்ளோம்.இஸ்லாமிப் போர்வையினுள் ஒழிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தின் வேரை அரிக்கும் கரையான்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வெகுண்டெழுவதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றோம்.இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது பற்றி எமக்கு எள்முனையின் கோடி அளவும் கவலையோ சஞ்சலமோ இல்லை.

அமீரின் வெற்று வாதம்:இத்தகையோர் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு விலகிச் செல்வதும் அவ்வாறு விலகிச் சென்ற ஒருவர் அடுத்தவரை பரம எதிரியாகப் பார்ப்பதும் வெளிப்படையான உண்மைகள்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அணிகளையே உடைத்து தமக்குள் பிரிந்து எங்கனம் பரம வைரிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதை பெயர், ஊர்களோடு இங்கு சுட்டிக்காட்ட முடியும். எனினும், அதைத் தவிர்த்துக் கொள்கிறேன். காரணம் தஃவாக் களத்தில் உள்ள ஒரு நோயை சுட்டிக்காட்டவே நான் முயற்சித்துள்ளேன். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தாம் என பெயர் குறிப்பிட்டுப் பேசி ஒரு சாரார் மீது வெறுப்பு,குரோதம் எனும் விஷம் ஏற்ற நான் முயற்சிக்கவில்லை

தக்க பதில்: முரண்பாடு, பிரிவினை என்றெல்லாம் கதைப்பதற்கு உங்களுக்கு கிஞ்சிற்றும் அருகதை கிடையாது. ஒற்றுமைக் கோஷமிடும் நீங்கள் எத்தனை வகையாகப் பிரிந்து கிடக்கிறீர்கள் என்பதை ஏலவே பட்டியலிட்டுள்ளேன்

அமீரின் வெற்று வாதம்: தஃவாக் களத்தில் நாளாந்தம் பல நல்ல மனிதர்கள் வெறுப்பு,குரோதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அத்தகையோர் நேற்று வரை மிக அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருந்தார்கள். இன்று அவர்கள் நல்லெண்ணத்துடனும் மலர்ந்த முகத்தோடும் மக்களை சந்திக்கத் திராணியற்றவர்களாக திசை மாறியிருக்கிறார்கள்.இன்னும் சொல்லப் போனால், சிலர் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் தமது அமைப்பு தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கும் ஈமானின் அடித்தளமான அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக ஜாஹிலிய்யத்தின் அடித்தளமான பகையையும் குரோதத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் இந்தப் பகையையும் குரோதத்தையும் தமது வாரிசுச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கும் புதியவர்களுக்கும் கொடுத்துவிட்டே செல்கிறார்கள்.

மக்களிடம் இருக்கும் இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான வழியில் திசை திருப்புவதன் மூலமே இந்த அக்கிரமத்தை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அப்பாவி நன்மக்கள் இத்தகையோரிடம் கற்பதனைத்தும் இஸ்லாம் என நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது உள்ளங்களில் இதுவரை காலமில்லாத வெறுப்பும் குரோதத்தீயும் கொழுந்துவிட்டெரிவதைப் பிழையென உணருவதில்லை. மாறாக, அடுத்தவர்கள் மீது குறிப்பாக இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகள் மீதும் ஏற்பட்டுள்ள பகையும் வெறுப்பும் ஈமானிய வளர்ச்சி என்றே அவர்களுக்கு பாடம் புகட்டப்படுகிறது.ஆக, ஈமானின் உச்ச கட்டத்துக்குத் தாம் சென்றுவிட்டதாக அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். விஷம் பரப்பும் இந்த அழைப்பாளர்களிடம் இஸ்லாம் கற்கச் சென்றவர்கள் ஓரிரு மாதங்கள் செல்லும்போதே அடுத்தவர்களை கடுமையாக வெறுக்கத் துவங்குகிறார்கள். நாலு விடயங்களைக் கேட்டுப் படித்த தம்மைப் போன்றவர்கள் நேர்வழிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூற்களை எழுதிய பேரறிஞர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாதிகள் என்றும் இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.இஸ்லாம் கற்கப் போன இடத்தில் வெறுப்பையும் பகையையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்ட இது போன்ற அனுபவம் உங்களுக்குண்டா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறாயின் நீங்கள் கற்றது இஸ்லாம் அல்ல. மனிதர்களது உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி சந்தேகத்தைப் படர விட்டு வெறுப்பு, குரோதத்தை வளர்க்கும் ஷைத்தானின் வழிமுறையையே நீங்கள் கற்றிருக்கிறீர்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கும் இத்தகைய ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு அல்லாஹ் எங்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறான்.

தக்க பதில்: ஒருவரை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எப்படியும் விமர்சிக்கலாம். இதுதான் உலக வழமையாகும். நாம் கேட்கும் தகுந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாததால் இப்படி கீழ்த்தரமாக எம்மை நோயாளிகள் என பிதற்றுகிறார் இந்த வீர(?)அமீர். யார் மீதாவது வெஞ்சத்தை வரவழைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதுதான். வெறுப்புக் காட்டாமல்,பகை பாராட்டாமல் இவர்களால் வாழ முடியாது என்று கூறி எம்மை தூசித்துள்ளீர்கள்.யார் மீது வெஞ்சத்தை வரவழைத்துக் கொட்டித் தீர்த்தோம்? யார் மீது பகை பாராட்டினோம்? அல்லாஹ்வுடைய தூதருடைய பொன்மொழிகளுக்கு மாற்றமாக சட்டம் இயற்ற முற்படுவேரை பகிரங்கமாகவே விமர்சிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது

எனவே நீங்கள் கண்டு பிடித்த நோய் புஷ்வானமாகி விட்டது.நோய்கள் அற்ற ஆரோக்கிவான்களாகிய எம்மை ஆய்வில்லாமல் “நோயாளி” என அடையாளப்படுத்தும் நீங்கள் மார்க்க விடயத்தில் மனநிலையின் சமநிலை பாதிக்கப்பட்டவர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா?அதனை குரோதம்,பகை இல்லாமல் உங்களிடம் விரவிக் கிடக்கும் அன்பால்(?) ஏற்றுக் கொள்வீர்களா? நாம் யாரையும் காபிர்கள் எனக் கூறியதில்லை. இஸ்லாமிய நூற்கள் யாப்பதாக நினைத்துக் கொண்டு நூற்றுக் கணக்கான நூற்களை ஒருவர் எழுதுவதால் தான் நினைத்த கருத்துக்களை இஸ்லாத்தில் பரப்ப லைஸன்ஸ் அவருக்கு உண்டு என்று தாங்கள் வாதிடுகின்றீர்களா? மார்க்க சட்டங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் ஷைத்தான்களை விட்டும் அல்லா‍ஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

அமீரின் வெற்று வாதம்:இஸ்லாம் கற்கப் போன இந்தக் கசப்பான அனுபவத்தைத் துறந்து ஓர் இனிப்பான அனுபவத்தை நோக்கி நீங்கள் வர விரும்பினால் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் இஸ்லாமியக் கற்கை நெறிகளில் ஒரு முறை வந்து அமர்ந்து பாருங்கள் இஸ்லாத்தின் மகோன்னதங்களை உணரவும் அவற்றிலிருந்து தூரமாகியிருக்கும் சமூகத்தை அன்போடும் அனுதாபத்தோடும் நோக்கவும் அந்த சமூகத்தின்பால் உங்களுக்குள்ள பொறுப்புக்களை விளங்கவும் அந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கும் வழிகாட்டும். உங்களது இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான திசைகளில் திருப்பி உங்களது வளமான உள்ளத்தை வெறுப்பு, குரோதங்களால் நிரப்பும் இழிவான உத்திகளையோ அணுமுறைகளையோ நீங்கள் அங்கு சிறிதளவேனும் காண மாட்டீர்கள், அல்ஹம்துலில்லாஹ் 

அல்லது ஒரு சிலர் செய்வது போல வெளிப்படையாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பேசிவிட்டு திரைக்குப் பின்னால் பகையையும் குரோதத்தையும் வளர்க்கும் குரூர மனப்பான்மையையும் நீங்கள் அங்கு காண மாட்டீர்கள்.களத்தில் பகை வளர்க்கிறார்களே விஷம் பரப்பும் அழைப்பாளர்கள், அவர்கள் குர்ஆனையும் ஸுன்னாவையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சிக்காக தாம் மட்டுமே அயராது உழைப்பதாகக் கூறி இஸ்லாத்தின் பெயராலேயே குரோதத் தீயை மூட்டுகிறார்கள். அந்தத் தீயால் நிச்சயம் எரியப்போவது அவர்களே!

தக்க பதில்: உங்கள் கற்கை நெறிகளில் கலந்து கொண்ட அதிகமான சகோதரர்களுக்கு கொள்கையில் தெளிவு கிடையாது. கொள்கைத் தெளிவைத் தவிர அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறீர்கள்! பலஸ்தீன் பற்றி எரிவதைக் கூறி பல மணித்தியாலங்கள் அழுது புலம்பும் நீங்கள் நரக நெருப்பைப் பயந்து எப்போது பித் அத்தின் விபரீதங்கள் பற்றி உரையாற்றியுள்ளீர்கள்?பண்பாடுகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் கொள்கைக்கே முதலிடம் வழங்க வேண்டும். அது உங்களது கற்கையில் கிடையாது. நீங்கள் நடாத்தும் கற்கை நெறிகளில் மனிதக் கருத்துக்களும் மடையர்களின் விளக்கங்களுமே விரவிக் கிடக்கின்றது.தங்களது மனப்பான்மை குரூர மனப்பான்மையாக உள்ளதால் நாம் முன்வைக்கும் வேதவரிகளும் தூதரின் அழகிய ஆதாரபூர்வமான போதனைகளும் உங்களின் இஸ்லாமிய எழிச்சிக்காக உதவவில்லை என்பதை மிக வேதனையோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.அமீர் அவர்களே! இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த உத்தமர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கும் போது ஸுன்னாவுக்கு தீயை வைக்கும் தீர்ப்பாளர்களை ஏன் தூக்கிப் பிடிக்கின்றீர்கள்?எனவே கசப்பான அனுபவத்தைத் துறந்து ஓர் இனிப்பான அனுபவத்தை நோக்கி நீங்கள் வர விரும்பினால் தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள்! அங்கு குர்ஆன் ஸுன்னா மாத்திரமே போதிக்கப்படும். எவரது சொந்தக்கருத்துக்களும் அங்கு திணிக்கப்படமாட்டாது. கேட்பவர்களுக்கு ஆதாரங்கள் வழங்கப்படும் நாளை தருகின்றோம்.நாளை மறு நாள் தருகின்றோம். ஜமாஅத் தலைமை அப்படித்தான் எமக்குச் சொல்லியுள்ளது.அகார் ஸேர் அவர்கள் கூட இந்தக் கருத்தில் தான் உள்ளார்கள் எனக் கூறி மக்களை மடையர்களாக ஆக்க மாட்டோம். விமர்சனங்கள் முன் வைக்கப்படும் போது நியாய உயர்வைக் கவனத்தில் கொண்டே முன் மொழியப்படும். வன்முறைகளைத் தூண்டி சமூகத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தாதா அதேநேரம் சத்தியத்தை போட்டு உடைப்பதில் தயவு தாட்சண்யமும் காட்ட மாட்டோம்.இதுதான் தௌஹீத் ஜமாஅத்தின் பணியாகும். வெளிரங்கத்தில் அன்பையும் சகோதரத்துவத்தையும் புகட்டி விட்டு உள்ரங்கத்தில் அதற்கெதிராக செயற்படுபவர்கள் என எம்மை இவர் விமர்சிப்பதை அல்லாஹ்விடமே விட்டு விடுவோம். இஸ்லாத்தின் பெயரால் அறியாமை என்ற தீயை மூட்டி விட்டது மட்டுமல்லாமல் அதற்குள் விழுந்து கிடப்பவர்களும் நீங்கள்தான் என்பதை அண்மைக்கால தஃவாக்களம் ந‌ன்றாக‌ உணர்த்தி வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அமீரின் வெற்று வாதம்:இப்போதும் அவர்கள் அந்தத் தீயில் வெந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் தீ மூட்ட வந்தவர்கள் தமக்குள்ளேயே அந்தக் குரோதத் தீ படர்ந்திருப்பதையும் அதனால் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் தீராத பகை கொண்டவர்களாக மாறியிருப்பதனையும் உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நாமும் அவர்களுக்கெதிராக குரோதத் தீயை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்த நோய் எம்மைத் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதே எம்மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும். அதனைச் சரியாக நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வெறுப்பு, பகை, குரோதம் போன்றன வளராதிருப்பதற்கு ஒத்துழைப்போமாக!

 தக்க பதில்:நாம் தீ மூட்டுகிறோம் என சிறுபிள்ளைத்தனமாக எழுதியிருப்பதை இட்டு மிகுந்த வருத்தம் அடைகின்றோம். நாம் செய்ய முற்படாத காரியத்தை செய்தது போன்று சித்தரித்து மக்களை தன் வசம் ஈர்ப்பதற்கு படாத பாடு படுகிறார். மனங்களை அல்லாஹ்தான் அதிகம் அறிந்தவனாவான்

உங்களுக்கெதிராக எந்தத்தீயையும் நாம் மூட்டவில்லை. உங்களது விஷமத்தனமான கருத்துக்களுக்கு அவ்வப்போது தீ மூட்டி வருகிறோம்.அப்புனிதமான பணியை ஒரு போதும் விடாமல் இருக்க அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என அல்லாஹ்விடம் வேண்டி விடை பெறுகிறோம்.ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு கண்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை.அவர்களுக்கு காதுகள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.அவர்கள் கால்நடைகளைப் போன்றோர்.இல்லை! அதை விடவும் வழிகெட்டவர்கள்.அவர்களே அலட்சியம் செய்தவர்கள் (7:179)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts