இஸ்லாம் வழங்கிய சலுகைகளில் ஒன்றுதான் ஜம்உ(சேர்த்துத் தொழல்) கஸ்று(சுருக்கித் தொழல்). கஸ்று பிரயாணிக்கு மட்டுமே உரிய ஒன்று. அச்சமான போர்ச்சூழலிற் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் சொந்த ஊரில் கஸ்ரு செய்தல் கூடாது. ஜம்உவை பொருத்தவரைக்கும் பிரயாணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தொழுகை தப்பிப் போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிருக்குமானால் சொந்த ஊரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் தப்பிப்போகின்ற தவிர்க்க முடியாத காரணம் ஒன்றிற்காக ஜம்உ செய்வதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனவே ஒவ்வொரு சிறிய தலைப்பாய் அவற்றை நாம் பகுத்து நோக்குவோம்.
1 – ஜம்உ என்றால் என்ன?
ழுஹரையும் அஸரையும் அல்லது மஃரிபையும் இஷாவையும் சேர்த்து உரிய நேரத்தை விட்டும் முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுவதே ஜம்உ என்று அழைக்கப்படுகிறது.
2 – எந்தத் தொழுகைகளிற்கு மத்தியில் ஜம்உ செய்வது கூடாது?
சுப்ஹையும் அஸரைம் எந்தக்காரணங் கொண்டும் பிற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது நிபாக்கின் அடையாளமாகும். எனவே சுப்ஹை ழுஹருடன் தொழுவதோ அஸரை மஃரிபுடன் தொழுவதோ கூடாது.
(மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களிற்குரிய ஆதாரங்களை புகாரியில் 1055,1061 இலக்கங்களிலும் முஸ்லிமில் 703,706 இலக்கங்களிலும் கண்டுகொள்ளலாம்)
3 – இன்னொரு ஜம்உ முறையும் இருக்கிறதா?
நாம் இல.1 இல் சொன்ன முறையிலேயே ஜம்உ செய்யப்படவேண்டும். அல்-குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் பெறப்பட்ட அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையே இது. இப்னு ஹஸ்ம்- ஷவ்கானி போன்ற அறிஞர்கள் ஊரில் செய்யப்படுகின்ற ஜம்உவை அல்ஜம்உஸ் ஸுவரி என்கிறார்கள். அதாவது ழுஹரை அதனது கடைசி நேரத்திலும் அஸரை அதனது ஆரம்ப நேரத்திலும் மஃரிபை அதனது கடைசி நேரத்திலும் இஷாவை அதனது ஆரம்ப நேரத்திலும் தொழுவதுதான் அம்முறை.
(பார்க்க:- நய்னுல் அவ்தார்3:- 264-268 அத்-தராரில் முலியா1:- 85 முஹல்லா3:- 172-175 இன்னும் சில அறிஞர்களும் இக்கருத்தில் இருக்கிறார்கள் பார்க்க:- பத்ஹுல் பாரீ2:- 580-581) இது அல்குர்ஆன் ஸுன்னாவிற்கு மாற்றமான ஒன்றாகும்.
4 – சொந்த ஊரில் ஜம்உ செய்வதற்கு ஆதாரம் உண்டா?
நபியவர்கள் மதீனாவிலே பயம்-மழை போன்ற எக்காரணமும் இன்றி ழுஹரிற்கும் அஸருக்குமிடையிலும் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்தார்கள். இமாம் வகீஃ சொல்கிறார்;:- ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அறிவிப்பாளர் இப்னு அப்பாஸிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்:- தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக என்று பதில் அளித்தார்கள்.(முஸ்லிம் :- 705)
இந்த நபிமொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்குமிடையிலும் ஜம்உ செய்யலாம்.
இந்த நபிமொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்குமிடையிலும் ஜம்உ செய்யலாம்.
5 – மழை காரணமாக ஜம்உ செய்யலாமா?
இது பல உப தலைப்புக்களின் கீழ் ஆயப்படவேண்டிய அம்சம்.
1 – மழை காரணமாக நபியவர்கள் ஜம்உ செய்ததாக எந்த ஹதீஸும் கிடையாது.
நபியவர்கள் மழைக்கு ஜம்உ செய்ததாகவோ செய்யச்சொன்னதாகவோ எந்த ஹதீஸும் கிடையாது. ஏராளமான கடந்த கால ஹதீஸ்களை அறிஞர்கள் அவ்வாறு எந்த ஹதீஸும் கிடையாது என மறுத்துள்ளார்கள் மறுமைநாள் வரையில் அப்படியொரு ஹதீஸைக் காட்டவும் முடியாது. இவர்கள் மறுத்த அறிஞர்களில் சிலர்:-
- இமாம் லைஸ் இப்னு ஸஃத் (தாரிகு யஹ்யா பின் ம
- இமாம் இப்ராஹீம் இப்னுல் முன்திர் அந்நைஸாபூரி (அல் அவ்ஸத்-430-434)
- இமாம் அல்பானி (தமாமுல் மின்னா-320)
2 – எந்த நபித்தோழராவது ஜம்உ செய்துள்ளாரா?
எங்களுடைய தலைவர்கள் மழையிரவுகளில் மஃரிபை தாமதித்தும் சிவப்பு மறைவதற்கு முன்னர் இஷாவை முற்படுத்தியும் தொழும்போது இப்னு உமரும் தொழுவார். அவர் அதனைத் தவறாகக் கருதவில்லை. அறிவிப்பவர்:- நாபிஃ (ஆதாரம்:- இப்னு அபீ ஷைபா 2:- 234)
இங்கே இப்னு உமர் ஜம்உ செய்திருப்பது நமக்குத் தெரியவருகிறது. ஆனால் முறைவேறுபடுகிறது. நபித்தோழர்களுடைய கூற்றுக்களை ஆதாரமாக எடுப்பவர்கள் இவ்வடிப்படையில் ஜம்உ செய்வதாயின் மேற்கூறிய முறைப்படியே ஜம்உ செய்ய வேண்டும். எங்களைப் பொருத்த வரைக்கும் நபித்தோழர்களது கூற்றோ செயற்பாடோ மார்க்க ஆதாரம் அல்ல. விரைவில் இன்ஷா அல்லாஹ் அது சம்பந்தமான ஒரு துண்டுப்பிரசுரம் வெளியாவதை எதிர்பாருங்கள்.
3-ஜம்உ செய்யாத நபித்தோழர்கள்.
இமாம் மாலிக் அவர்களுக்கு எழுதிய பதில் கடிதத்திலே அவரது நண்பர் இமாம் லைஸ் இப்னு ஸஃத் இவ்வாறு அவருக்கு எழுதிகிறார்.
“மழை இரவுகளில் சொந்த ஊரில் ஜம்உ செய்யக்கூடாது என்று நான் சொன்னதை நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். ஷாமுடைய மழை உங்களது மதீனா மழையை விட எவ்வளவோ அதிகமானது. அதன் அளவை அல்லாஹ் மாத்திரமே அறிவான். எந்த இமாமும் எப்பொழுதும் அங்கு ஜம்உ செய்தது கிடையாது. அவர்களிலே காலித் இப்னு வலீத்-அபூ உபைதா-யஸீத் இப்னு அபூ ஸுப்யான்-அம்று இப்னு ஆஸ்-முஆத் இப்னு ஜபல்-பிலால் இப்னு ரபாஹ்- போன்ற எத்தனையோ நபித்தோழர்கள் இருந்தார்கள் அவர்களில் எவறும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் எப்பொழுதும் ஜம்உ செய்ததே இல்லை.” (தாரீகு யஹ்யா )
4 – நபியவர்கள் ஜம்உ செய்யாமல் இருந்ததற்கு ஆதாரம் உள்ளதா?
“……..நபியவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்கு முன்னால் நபியவர்களின் தாடிவழியாக மழை நீர் துளித்துளியாய் வடிவதைக்கண்டேன். அன்றைய தினம் தொடங்கிய மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது……….”
நபியவர்கள் எதைச் செய்தாலும் அதை அணு அணுவாக ஆராய்ந்து அறிவிக்கக் கூடிய ஸஹாபாக்கள் நபியவர்கள் இந்த மழை வாரத்தில் ஒருமுறையாவது மழைக்காக ஜம்உ செய்திருந்தால் அதை அறிவித்திருப்பார்கள். அவ்வாறு அறிவிக்காமை அடைமழையின் போதும் நபியவர்கள் ஜம்உ செய்யவில்லை என்பதற்கு போதிய சான்றாகும்
5 – அப்படியானால் ஊரில் மழைகாரணமாக ஜம்உ செய்யவே கூடாது?
நபியவர்கள் மதீனாவிலே பயம்-மழை போன்ற எக்காரணமும் இன்றி ழுஹரிற்கும் அஸரிற்கும் இடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்தார்கள். இமாம் வகீஃ சொல்கிறார்:-‘ ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அறிவிப்பாளர் இப்னு அப்பாஸிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்:- ”தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக’ என்று பதில் அளித்தார்கள். (ஆதாரம்:- முஸ்லிம் 705)
இந்த நபி மொழி ஊரில் நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்பதையும் ஏன் செய்தார்கள் என்பதையும் தெளிவுபடுத்திகிறது. இவ்வடிப்படையில் ஒருவரிற்கு ஒரு ஞாயமான காரணத்தினால் ஒரு தொழுகை விடுபடுமென்ற அச்சம் ஏற்பட்டால் முற்படுத்தியும் விடுபட்டால் பிற்படுத்தியும் ழுஹரிற்கும் அஸரிற்குமிடையிலும் மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலும் ஜம்உ செய்யலாம். எனவே தனி நபராக அல்லது கூட்டாக பள்ளியில் உரிய நேரத்தில் தொழுதவர்களிற்கு கடும் மழை காரணமாக இஷாவை ஜமாஅத்தாக தொழ முடியாமல் போகும் என்ற அச்சம் ஏற்படுமானால் அவர்களும் ஜம்உ செய்யலாம்; என்பது இந்நபிவழியில் இருந்து தெளிவாகிறது. “தன் உம்மத்திற்கு கடமையை விட்ட குற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக” என்ற வசனத்தில் இக்காரணமும் அடங்கும்.ஆனால் சேறு சகதிக்காய் ,மழை வரப்போகிறது ,வானம் இருட்டி விட்டது ,தூரல்கள் இது போன்றவற்றிற்கெல்லாம் மழைக்கு ஜம்உ செய்தல் ஸுன்னா என்ற பெயரில் ஜம்உ செய்கின்ற வழமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மாத்திரமல்ல அது பித்அத்தும்தான் என்பதில் சந்தேகம் கிடையாது.
அல்லாஹ் குர்ஆன் ஸுன்னாவைப் பின்பற்றும் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி உளத்தூய்மையான அமல்களை ஏற்றுக்கொள்ள போதுமானவன்.