Friday, September 13, 2024

தங்க வியாபாரம் பற்றி இஸ்லாம்

மனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள், கொள்கைள் யாவும் பொருளாதரம் பற்றிய சட்ட விதிகளை மட்டுமே வகுத்துள்ளன. ஆனால் இஸ்லாம் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் வகையில் பொருளாதரம் பற்றிய சட்டங்களைச் சொல்வதோடு பொருளாதரம் பற்றிய பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது. இஸ்லாம்  எத்துறையைப் பற்றிப் பேசும் போதும் முதலில் அது பற்றிய சுருக்கமான தெளிவான பார்வையை நமக்குத் தந்துவிடும்.

ஒரு திட்டத்தை வகுத்து அதை நடை முறைப்படுத்த விளையும் போது அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களை நம்மால் ஓரளவு கண்டு கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை வைத்து அத்திட்டத்தை உடனே மாற்றி விடுவோம். ஆனால் இப்போது போடப்படும் ஒரு திட்டத்தால் 50 வருடங்களுக்குப் பின் ஏற்படப் போகும் பாதிப்புக்களை நம்மால் அறிய முடியாது அல்லது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் ஒருவனாலேயே அவற்றைத் துல்லியமாய்ச் சொல்ல முடியும். இஸ்லாம்  இந்த அடிப்டையில் பல விடயங்களை தடை செய்துள்ளது. உதாரணமாக கொம்யூனிஸத்தைகுறிப்பிடலாம். இக்கொள்கை அறிமுகமானதுமே இதை ஏதிர்த்த இஸ்லாமிய அறிஞர்கள் எங்கெல்லாம் இக்கொள்கை அறிமுகமானதோ அங்கெல்லாம் இன்னும் ஐந்து தசாப்பதங்களின் பின்பு ஆட்டங்கண்டு விடும்என்று சொன்னார்கள். பொருளாதரம் பற்றிய இஸ்வாத்தின் சட்ட திட்டங்களக்கு கொம்யூனிஸத் தத்துவம் முரண்படும் கோணங்கள் பற்றிய அறிவு இருந்ததே அவ்வறிஞர்கள் இவ்வாறு சொல்லக் காரணமாய் அமைந்தது. இஸ்லாம் வகுத்துள்ள பொருளாதாரத்திட்டங்கள் துரநோக்குடையது, அநியாயமற்றது, நீதமானது எனச் சுருங்கக் கூறலாம்.

உதாரணமாகச் சொல்வதாயின், என்னிடம் ஐம்பது கோடி ரூபாய் பணமுள்ளது. இதை வைத்து எனது சிந்தனைiயின் அடிப்படையில் நான் ஒரு வியாபாரத் திட்டத்தை வகுக்கப் போகின்றேன் என்றால், அதில் கிடைக்கும் முழு வருமானமும், இலாபமும் எனக்காக இருக்க வேண்டும் என்ற அடிப்டையில்தான் அத்திட்டத்தை நான் முன்னெடுப்பேன். அதாவது இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதில் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியனைத்தையும் சுருட்டப் பார்ப்பேன். பொதுவாக வியாபரத்தில் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. ஷீஆக்களிடமும் இம்முறை ஒரு கொள்கைiயாகப் பின்பற்றப்படுகின்றது. வர்த்தகர்கள் தமது இலாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் ஈரானில் நடைமுறையிலுள்ளது. ஈரானிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இதற்கும் பெரிய பங்கு உண்டு. இதை ஹுமுஸ்என்பர். ஆனால் இஸ்லாம் இதைக் குறைத்து இரண்டரை வீதமாக ஆக்கியுள்ளது. மனிதனாக வரி விடயத்தில் ஒரு சட்டத்தை வகுப்பானென்றால் இவ்விகிதாசாரத்தைக் குறைவானதாகவே காண்பான். ஆனால் 100 ரூபாய் வைத்திருப்பவருக்கு இது பாரமாக இராது. கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவனுக்கே இதன் பாரம் சரியாக விளங்கும். எனவே இந்த விகிதாசாரம் பணமுள்ளவனுக்கே பொருந்துகின்றது. பணமில்லாதவனை ஒரு போதும் இது சுரண்டாது என்பது எளிதாய் தெரிகின்றது. ஆகவே இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் கவனத்திற் கொண்டு முறையாக, எளிதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

இந்த  அடிப்படையில்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. எல்ல சமூகத்திலும் வட்டிமுறை காணப்பட்டது போல் அரபிகளிடமும் வட்டி முறை காணப்பட்டது. வட்டி எனும் போது அதில் பல வகை காணப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு தொகையினைக் கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் அல்லது பொருளைக் கடனாக வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் ஆகிய முறைகளே பெரும்பாலும் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்றது. இதற்கே கடன் வட்டி என்கிறார்கள்.அரபியில் இதற்குربا النسية என்றழைப்பார்கள். அதாவது கொடுத்ததைத் திருப்பிப் பெறும் போது இருந்ததை விட அதிகமாகப் பெறுவதற்கே அந்நஸீஆ என்று கூறப்படுகின்றுது. அல்லாஹ் நிருணயித்த மாதங்களில் அதிகரிப்பை உண்டு பண்ணுதலை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ      التوبة : 37
(போர் புரியத் தடுக்கப்பட்ட மாதங்களின் புனிதத்தை) முன் பின்னாக்குவதெல்லாம் இறை மறுப்பை அதிகப்படுத்துவதாகும்……..(தௌபா:37)

இந்த வசனத்தில் அந்நஸீஉ எனும் சொல் அதிகப்படுத்துவது எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடிப்படையில்தான் ரிபான்னஸீஆ என்பதும் அமைந்துள்ளது. இவ்வட்டி முறை காணப்பட்ட அன்றைய அரபு சமூகத்தில் ربا الفضل என்ற மற்றொரு  வட்டி முறையையும் நபியவர்கள் சுட்டிக்காட்டி அதையும் தடை செய்தார்கள். நபியவர்கள் சுட்டிக் காட்டிய இவ்வட்டி முறை பற்றி சில நபித் தோழர்களுக்குக் கூடத் தெரிந்திருக்க வில்லை. எழுந்தமானமாக சிந்திப்பதன் மூலம் இம்முறை எவ்வாறு பிழையாகின்றது என்பதை அறிய முடியாது. ஆனால் இஸ்லாம் இதை வட்டி என்று சொல்லியுள்ளது. இவ்வடிப்படையிலே நபியவர்கள்  இன்னும் பல விடயங்களை வட்டி என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

இன்று சமூகத்தில்  ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் ஒன்றுதான் எல்லாம் வரைவிலக்கணத்துக்குற்பட்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணுவதாகும். மெய்யியல் என்ற துறை வந்ததன் விளைவால் வியாபாரம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அதை வார்த்தகைளால் விளக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. எல்லாவற்றிலுமே இது மூக்கை நுழைத்து விட்டது. எனவே நாமும் ஏதோ ஒரு வகையில் இத்தாக்கத்துக்குள்ளாகி அனைத்தையும் தத்துவவியல் அடிப்படையிலேயே சிந்திக்க முயல்கின்றோம். இதனால் வியாபரமும் வட்டியும் ஒன்றுதான்என்ற சிந்தனை வளர்ந்து விடாமலிருப்பதற்காய் வியாபாரத்தையும் வட்டியையும் வேறு வேறாய் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ் இதற்குப் பின்வருமாறு பதில் கூறியுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts