Tuesday, June 18, 2024

இக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே

இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான்

 “அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. அமெரிக்காவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. அங்கு பன்றி இறைச்சி, விபச்சாரம், மதுபானங்கள் போன்ற அனைத்தும் மலிந்து விட்டன. அமெரிக்காவை எதிர்க்கத் திராணியற்று அரபு நாடுகள் கிடக்கின்றன. ஆனால் ஈரானைப்பாருங்கள்! அமெரிக்காவை எதிர்க்க கொமைனீ இருந்தார்… தற்போது நஜாதி வந்திருக்கின்றார்.  ஈரான் தற்போது அணுவாயுத பலத்தையும் பெற்று விட்டது……..இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி அடிக்கடி பேசுகின்றது…..”

 இஸ்லாமிய ஆட்சி பேசுவோர் மீது இவர்களுக்கிருந்த அபரிமிதமான அபிமானமானது, ‘யாராயினும் சரி, அவர் எக்கொள்கையாயினும் சரி, இஸ்லாமிய ஆட்சியைப் பேசினால் அவரை நாம் ஆதரிப்போம்’ என்ற நிலைக்கு இவர்களைத் தள்ளிவிட்டது எனலாம். அஹ்மத் நஜாதி ஈரானின் ஜனாதிபதியானதும் ஜமாஇதே இஸ்லாமியின் அல்ஹஸனாத் சஞ்சிகையானது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து  இரும்பு மனிதர்’, ‘ஈரானில் அணுப்புரட்சி’, ‘இஸ்ரேலை உலகப்படத்திலிருந்து அகற்ற வேண்டும் என சூளுரைத்தவர்’  என்றெல்லாம் எழுதியது.

அஹ்மத் நஜாதி யார்? அவரின் கொள்கை என்ன? பிடல் காஸ்ட்ரோவும் இப்படித்தானே சீறுகிறார்? இவ்வாறு ஒருவர் பேசினால் அது இஸ்லாமாகி விடுமா? என்பதையெல்லாம் இவர்கள் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்கவில்லை. ‘இமாம் கொமைனீ‘” என்று நாக்கூசாமல் பலரும் சர்வ சாதரனமாகப் பேசுவதை சமூகத்தில் காணலாம். இதுவும் அபரிமிதமான, தவறான இஸ்லாமிய ஆட்சி மோகத்தால் விளைந்த மிகப் பெரும் கேடுகளில் ஒன்றே.

பொது மக்கள் கொமைனீயின் உரைகளையோ, புத்தகங்களையோ கேட்டிராது, படித்திராத போது எவ்வாறு இந்த கொமைனீ சமூகத்தில் இமாம் கொமைனீயாக அறிமுகமானார்? அவரை நமக்கு அறிமுகஞ் செய்தது யார்? எந்த முஸ்லிம் நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் பரீட்சியமில்லாத பொது மக்களுக்கு இந்தப் பெயர் மாத்திரம் அறிமுகமானது எவ்வாறு?. ஈரானின் ஜனாதிபதி யார்? என்றால் ‘அஹ்மத் நஜாதி’ என்கிறோம். எனவே ஈரானில் ஆட்சி செய்த, செய்கின்ற இவர்களை இமாமாகவும், வீரமிகு ஜனாதிபதியாகவும் நமக்கு அறிமுகஞ் செய்தவர்கள் இஸ்லாமிய ஆட்சியை மொட்டைத்தனமாக விளங்கிய இவர்கள்தாம். அமெரிக்காவை எதிர்த்தார்கள் என்ற ஒரே காராணத்துக்காகத்தான் இவர்களை கதாபுருஷர்களாக நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். கழுகுப்புத்தியோடிருக்கும் ஷீஆக்கள், தம்மை ஆதரிக்கும் இது போன்ற குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். இஸ்லாமியப் போர்வையிலிருக்கும் ஸியோனிஸ்டுகள் அல்லது யூதர்களே ஈரானிலிருக்கும் இந்த ஷீஆக்கள் என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம்.இப்படிச் சொல்லும் போது ஈரானில் உள்ள அனைத்து சீயாப் பொது மக்களையும் நாம் இவ்வாறு சொல்வதாக கருதிவிடக் கூடாது. வழிகாட்டிகளையும் மேலிடத்தவர்களையுமே நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம்)  ஷீயாக்கள் யூதர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படைகளே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதற்கு அவர்களே சாட்சியாகவுமுள்ளனர்.

1980களில் ஈரானிலே ஷாஹ் மன்னரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. விபச்சாரம், கொள்ளை என்ற பஞ்சமாபாதகங்கள் அனைத்தும் அப்போது தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. அப்போதுதான் இவற்றுக்கெதிராக கொமைனீயின் தலைமையில் ஆன்மீக புரட்சியொன்று அங்கு அரங்கேறுகிறது. இதன்போது ‘ஷாஹ்வின் அராஜக ஆட்சியை ஒழிப்போம், இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம்’ என்ற கோஷங்கள் முழங்கின. இதைப்பார்த்த இவர்கள் ‘ ஆகா இஸ்லாமிய ஆட்சியொன்று ஏற்படப் போகுது’  என்று எகிப்திலே அப்துந்நாஸர், அஹ்மத் நஜீப் போன்றோரை நம்பி இஹ்வானுல் முஸ்லிமூன் ஏமாந்ததைப் போன்று குமைனியிடம் மறுபடியும் இவர்கள் ஏமாந்தார்கள்.(இப்பொழுது ஸீஸியிடம் ஏமாந்துள்ளார்கள்)

இஸ்லாமிய ஆட்சி பேசியோர் மீது இவர்களுக்கிருந்த அதீத பற்றுதல் காரணமாக இதே இஸ்லாமிய ஆட்சிப் படலத்தைப் பாடிய ஷீஆக்களுக்கு சார்பாக இவர்கள் என்னென்ன அறிக்களையெல்லாம் விட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் இங்கு தருகிறோம்.

1- இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் கருத்தைத் தாங்கி குவைத்திலிருந்து வெளியாகும் அல்முஜ்தமஃ’ (المجتمع) என்ற சஞ்சிகையில் 434வது இதழில் ஈரானியப் புரட்சி பற்றி 1979 களில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது:

இஹ்வானுல் முஸ்லிமூன் பொதுவான றிக்கையொன்றை வெளியிடுகின்றது…. கொமைனீயைச் சந்திக்க நாம் உத்தேசித்துள்ளோம். இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தோனேஸிய மாஸூமி, மலேசிய ஷபாபுல் இஸ்லாம் போன்ற இயக்கங்களை அழைக்கின்றோம்…..’

   ஈரானுக்கு சென்ற இவர்களுக்கு மத்தியில் கொமைனீ பேசும் போது ‘இது ஈரானின் புரட்சியல்ல, இது லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் புரட்சியாகும். இஸ்லாத்துக்கெதிராக அடக்கியாள்பவர்களுக்கெதிராக ஏற்பட்ட புரட்சியாகும். ஷாஹ்வுக்கு எதிராக வெற்றியைத்தந்த அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த வெற்றயைத்தருவான்’ என்று சொல்கின்றார். உடனே இவர்கள் ‘நாம் எங்கள் உடல் ரீதியிலும், ஏனைய வழிகளிலும் உங்களுக்குதவ தயாராகவுள்ளோம்’ என்று சொல்கிறார்கள். பின்னர் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்காக ஸலாத்துல் காயிப் தொழுகை தொழுததாக அந்த குறிப்புச் சொல்கின்றது.

   பின்னர் இவர்களுக்கு கொமைனீயின் நிறம் விளங்கி விட்டது . ‘ஈரான் இத்னா ஷரிய்யா கோட்பாட்டில்தான் ஆளப்படும். இதை யாராலும் மாற்ற முடியாது என கொமைனீ எழுதிய யாப்பு பற்றி பின்னரே இவர்களுக்குத் தெரிந்தது . அதன் பின்புதான் கொஞ்சம் இவர்கள் அடக்கி வாசிக்கலானார்கள்.

2- 1985களில் மஜல்லதுத்தஃவா எனும் சஞ்சிகையில் 105 வது இதழில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான உமர் அத்தில்மிஸானீ என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

“இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பொறுப்புக்களில் ஒன்றுதான் ஷீஆக்களையும், ஸுன்னிகளையும் சேர்த்து வைப்பதாகும்…. இந்தப் புரட்சிக்குப் பின்னால் இஹ்வானுல் முஸ்லிமூனுக்கும், ஷீஆக்களுக்குமிடையே தொடர்புகள் குறையவில்லை. ஆயத்துல்லா காஸானியோடு நாம் தொடர்பிலுள்ளோம். நவாப் ஸபவீயை எகிப்துக்கு விருந்தாளியாக நாம் அழைத்துள்ளோம். அவருடைய மத்ஹபைவிட்டு இங்கே வரவேண்டும் என்பதற்காக நாம் அவரை விருந்துக்கழைக்கவில்லை. பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொள்வதற்காகவே நாம் அவரையழைத்தோம். இஸ்லாமிய மத்ஹபுகள்(அகீதாவிலுள்ள மத்ஹபுகள்) அனைத்தும் ஒன்றித்து செல்லவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம்……ஷீஆ அறிஞர்களாயினும், ஸுன்னி அறிஞர்களாயினும் இந்த வேளையை அவர்கள் செய்யவில்லையென்றால் மார்க்கத்தை அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்…….” என்றவாறு அவருடை கருத்துக்கள் காணப்பட்டன.

அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொல்லுவதற்காக உருவாக்கப்பட்ட பிதாஇய்யா அல் இஸ்லாம் எனும் அமைப்பின் ஈராக்கைச் சேர்ந்த தலைவரே இந்த நவாப் ஸபவீ என்பவன். அஹ்மத் கஸ்ரவீ எனும் ஷீஆ அறிஞர் ஷீஆ மத்ஹபை பிழையென்று விளங்கி அஹ்லுஸ்ஸுன்னாவின் பக்கம் வந்த போது அவரைக் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்தவனையா விருந்துக்கு அழைப்பது?

3- ஈரானியப் புரட்சி வெடித்த அதே காலப்பகுதியில் குவைத்திலிருந்து வெளியான மஜல்லதுல் இத்திஹாத் என்ற சஞ்கிகையில் ஓர் அறிக்கை வெளியாகியது. ஈரானின் புரட்சிக்கு உதவுமாறு குவைத் அரசிடம் நாம் வேண்டுகிறோம். ஈரானுக்கு எதிராக என்ன தடைகள் வந்தாலும் அந்நாட்டுக்கு குவைத் அரசு உதவ வேண்டும். ஏனென்றால் ஈரானின் வெற்றியானது குவைத்தின் வெற்றியாகும். அதன் தோல்வியானது குவைத்தின் தோல்வியாகும்……” என்றவாறு அவ்வறிக்கை அமைந்திருந்தது.

4- மௌஸுஅத்துல் ஹரகிய்யா எனும் நூலில் 289ம் பக்கத்தில்  நவாப் ஸபவீ யைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார். ஈமானும், நல்லுணர்வும் கொண்ட 29வயதுடைய ஒரு வாலிபர். இவரைப் போன்றே எல்லோரும் இவ்வுலகிலிருக்க வேண்டும்…..” அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறிபிடித்த ஷீஆவைப் பற்றி இவர் சொல்லும் பாராட்டு மழைதான் இது.

5- ஹஸனுல்பன்னாவுக்கு அடுத்த படியாக வந்தவரென்று இஹ்வான்கள் மதிக்கின்ற முஹம்மத் அல் கஸ்ஸாலி என்பவர் தனது கைப நப்ஹமுல் இஸ்லாம் என்ற நூலில் 142ம் பக்கத்தில் அகீதா ரீதியாக இஸ்லாத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு “அல்லாஹ்வையும், நபியவர்களின் தூதுத்துவத்தையும் ஏற்றுள்ள நாம் ஏன் ஷீஆ, ஸுன்னி என்று சண்டை பிடித்துக் கொள்கிறோம். ஸுன்னிகளாகிய நமக்கும் ஷீஅக்களுக்கும் அகீதாவில் கருத்து வேறுபாடு ஏதுமில்லையே. அப்போது ஏன் நமக்குள் இந்த சச்சரவுகள்……..?”  என்று உலக விடயங்களெல்லாம் தெரிந்த(!) கஸ்ஸாலி எழுதுகின்றார். ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் அகீதாவில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி இவருக்குத் தெரியாது போலும். அதே நூலில் 145ம் பக்கத்தில் தொடர்ந்தும் அவர் கூறும் போது “ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் எதைப்போன்றதென்றால் ஹனபீ, ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுகளுக்கிடையே பிக்ஹு ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைப் போன்றதே…” என்று சொல்கிறார். அப்படியாயின் ஷீஅக்களை ஐந்தாம் மத்ஹபாகச் சொல்கின்றார்.

6- இதே முஹம்மத் அல் கஸ்ஸாலி ழலாமுன் மினல் கர்ப் எனும் நூலில் 252ம் பக்கத்தில் இத்னா அஷரிய்யா மத்ஹப் தொடர்பாக ஒரு பாடத்தை நமது மாணவர்களுக்கு ஏன் நாம் கற்பிக்கக் கூடாது? ” என்று கூறியுள்ளார்.

7- அபுல் அஃலா மொளானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1979 ஓகஸ்டில் வெளியான தஃவா எனும் சஞ்சிகையின் 19வது இதழில் “கொமைனீயின் புரட்சி ஓர் இஸ்லாமிய புரட்சியாகும். இஸலாமிய ஜமாஅத்துக்களே அதைச் செய்கின்றன. ஆகவே பொதுவாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதற்காகப் போராட வேண்டும்….” என்று அறிக்கை விடுகின்றார்.

8- சூடானிலிருந்து இஹ்வான்களால் வெளியிடப்படும் ஸபாஹுன் ஜதீத் என்ற சஞ்சிகையில் “ கொமைனீக்கெதிராக சவுதியிலிருந்து மார்க்கத்தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது…. அரபுத்தீபகற்பத்திலிருக்கும் இவர்கள் ஏன் மார்க்கத்தின் பேரால் இத்தகைய தீர்ப்புக்களைச் சொல்கிறார்கள். இஸ்லாத்துக்கெதிராக இஸ்லாமா? இல்லை. இது ஜிஹாதிய இஸ்லாத்திற்கு எதிரான ஐந்து தூன்களையுடைய இஸ்லாம். கன்னியமிகு மார்க்கத்துக்கெதிராக வந்துள்ள ரியாழுடைய இஸ்லாம் அல்லாஹ்வின் படைக்கெதிரன அநியாயக்காரர்களின் இஸ்லாம். பிரான்ஸிருந்து வருகின்ற கோழி இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்ற இஸ்லாம்தான் இவர்களுக்குத் தெரியும் உண்மையான இஸ்லாம் தெரியது……” என்று அவ்வாக்கம் சொல்கின்றது. இஸ்லாமிய ஆட்சி என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அஹ்லுஸ்ஸுன்னாவை நக்கலடித்து எழுதும் இவர்களின் வாசகங்களைப் பாருங்கள்

கொமைனீயின் வருகையின் பின்னர் ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கெதிராக பல்வேறு அராஜகங்கள் இடம் பெற்றுள்ளன. தஹ்ரான், புலூஷிஸ்தான் போன்ற அஹ்லுஸ்ஸுன்னாவினர் செரிந்து வாழும் பகுதிகளில் கொமைனீயின் வருகையின் பின்னர் ஒரு பள்ளிவாயில் கூட கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்தவைகள் உடைக்கப்பட்டன. இதைப்போன்று அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பல அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்கள் பற்றிய விபரங்கள்  ஆதாரங்களுடன் உள்ளன. முஃதமீன் என்ற சிறையில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கெதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெறுகின்றன. ராபிதது அஹ்லிஸ்ஸுன்னா பில் ஈரான் என்ற அமைப்புத்தான் ஈரானில் நடைபெறும் இந்தக் கொடுமைகளை வெளியுலகுக்கு வெளியிடுகின்றது.

 இவ்வளவும் தெரிந்த பின்பும்தான் இஹ்வானுல் முஸ்லிமூனைச் சேர்ந்த யூஸுப் நதா என்பவர் அல்ஜெஸீராவுக்கு “ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கும் ஷீஅக்களுக்குமிடையில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று பேட்டியளிக்கின்றார். ஈரானிய ஸுன்னாவைச் சேர்ந்த அறிஞர் அபூ முன்தஸர் அல் பலூஷி என்பவர் “ஈரானில் நடைபெறுவது தெரியாமலா? இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்?’ என்று எழுதுகின்றார்.

அஹ்மத் நஜாதிக்கு குண்டு வைத்தார்கள் என்ற பேரில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பலர் இன்றும் சிறையிலுள்ளார்கள். ஈரானில் ஜுன்துல்லாஹ், ஹரகதுல் புர்கான், முனல்லமதுன் புலூஸிஸ்தானிய்யா போன்ற அஹ்லுஸ்ஸுன்னா அமைப்புக்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகள் கூட ஈரானில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்குக் கிடைப்பதில்லை. இந்த நாட்டைப்பார்த்து இவர்கள் இஸ்லாமி ஆட்சி நடைபெறுவதாய் சொல்கிறார்கள். அமெரிக்காவை எதிர்க்கின்றார் என்றும், அணுப்புரட்சி பண்ணப் போகின்றார் என்றும் இந்த நஜாதியை இவர்கள் மெச்சுகின்றனர். இவர் மட்டுமல்ல உலகிலிருக்கும் அரசியற் தலைவர்கள் பலர் தமது சுய அரசியல் இலாபத்துக்காகக் கையிலெடுத்ததுவே அமெரிக்காவை எதிர்ப்பதாகும்.எனவே இந்த ஆக்கத்தில் இன்றைய ஈரானின் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விபரபாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts