Saturday, June 22, 2024

கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா?

கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா?

கருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து தங்களை மஹ்தியென்றும் அல்லது மஹ்தஸத்தை ஆதரித்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தோன்றியதை வரலாறு எமக்கு பாதுகாத்து வைத்துள்ளது.அவர்களில் பலர் இஸ்லாமிய ஆட்சிகளில் மரண தண்டனை வழங்கப்பட்டார்கள்.இவர்களை வரலாற்றில் “மஹ்தவிய்யா’ என அழைப்பார்கள்.இச்சிந்தனை மறுபடியும் உதயமாகும் அடையாளங்கள் தென் படுவதால் அந்தப் போலி அடையாளங்களை முன்வைக்கும் ஹதீஸ்களை இக்கட்டுரை மூலம் தரப்படுத்த விளைகிறோம்.

முதலாவது ஹதீஸ்-

سنن ابن ماجه – (ج 2  ص 1367)
4084 – حدثنا محمد بن يحيى وأحمد بن يوسف قالا حدثنا عبد الرزاق عن سفيان الثوري عن خالد الحذاء عن أبي قلابة عن أبي أسماء الرحبي عن ثوبان قال قال رسول الله صلى الله عليه و سلم
: ( يقتيل عند كنزكم ثلاثة كلهم ابن خليفة . ثم لا يصير إلى واحد منهم . ثم نطلع الرايات السود من قبل المشرق . فيقتلونكم قتلا لم يقتله قوم )
ثم ذكر شيئا لا أحفظه . فقال ( فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج . فإنه خليفة الله المهدي )

“உங்களது கருவூலத்திற்காக மூவர் சண்டையிடுவர்,மூவரும் ஒரு கலீபாவின் மக்கள்.பின்னர் அது அம்மூவரில் எவருக்கும் கிடைக்காது.அதன்போது கிழக்குப் பக்கத்திலிருந்;து(இன்னொரு அறிவிப்பில் குராஸான் பகுதியிலிருந்து) கருப்புக் கொடிகள் தோன்றும்.எந்தச் சமூகமும் உங்களோடு சண்டையிடாத அளவு அவர்கள் சண்டையிடுவார்கள்.-பின்னர் சில விடயங்களைக் குறிப்பிட்டு விட்டுச் சொன்னார்கள்-அவரைக் கண்டால் பனியில் தவழ்ந்தேனும் அவருக்கு பைஅத் செய்யுங்கள் ஏனெனில் அவர்தான் அல்லாஹ்வுடைய கலீபா மஹ்தி” என்று நபியவர்கள் சொன்னார்கள்.

ஆதாரம்:-இப்னு மாஜாஹ் -4084, அஹ்மத்-22441, ஹாகிம்-8564. அறிவிப்பிவர்:-ஸவ்பான் ரலியல்லாஹ{ அன்ஹ{

இதன்; அறிவிப்பாளர் வரிசையில் பல பலவீனங்கள் உள்ளன.

1-இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூகலாபாவின் ஆசிரியர் அபூ அஸ்மா தரம் அறியப்படாதவர்.தகவல் அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்களாகக் கருதும் இப்னு ஹிப்பான் ,இஜ்லி தவிர வேறு எவரும் இவரது நம்பகத் தன்மை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

2-இவ்வறிவிப்பாளர் வரிசை மேற்குறிப்பிடப்பட்ட அபூ அஸ்மா என்ற அறிவிப்பாளர் இல்லாமல்; அஹ்;மதிலே-22441 பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிலே அலீ இப்னு ஸைத் இடம்பெறுகிறார்.இவர் மிகவும் பலஹீனமானவர் இவரது கவனயீனமே அபூ அஸ்மா இந்த அறிவிப்பாளர் வரிசையில் விடுபடக் காரணம்.

3–இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் காலித் அல் ஹிதா நம்பகத் தன்மையில் பூரணமானவராக இருந்தாலும் மனனத்தில் மிக பலமானவர் அல்ல.இவரது இறுதிக் கால அறிவுப்புகளில் குழப்பங்கள் உள்ளன.

ضعفاء العقيلي – (ج 2  ص 4(
حدثنا محمد بن إسماعيل قال حدثنا الحسن بن على قال حدثنا يحيى بن آدم قال قلت لحماد بن زيد ما لخالد الحذاء في حديثه قال قدم علينا قدمة من الشام فكأنا أنكرنا حفظه

காலிதின் மிக நெருங்கிய மாணவர்களில் ஒருவரான ஹம்மாத் இப்னு ஸைத் சொல்கிறார். “சிரியாவிற்கு காலித் ஒருமுறை வந்தபோது அவரது மனனத்தில் பெருங்குறைபாட்டை அவதானித்தோம்”   (அல்லுஅபா லில் உகைலி:-2-4)

காலிதின் மிக சிறப்பான மாணவர்களில் ஒருவரான இப்னு உலய்யா அவரை இந்த ஹதீஸைக் குறிப்பிட்டே பலஹீனப்படுத்துகிறார்.

ضعفاء العقيلي – (ج 2  ص 4(
حدثنا عبد الله بن أحمد قال حدثنا أبى قال قيل لابن علية في هذا الحديث فقال كان خالد يرويه فلم نكن نلتفت إليه ضعف بن علية أمره يعنى خالد الحذاء

4-“இந்த ஹதீஸ் பற்றி இப்னு உலய்யாவிடம் கேட்கப்பட்டபோது “காலித் இதனை அறிவிக்கிறார் நாம் அந்தச் செய்தியை ஏற்பதில்லை” என்று சொன்னார். அஹ்மத் இப்னு ஹன்பல் இச்செய்தியை கூறிவிட்டு “காலிதுடைய விடயத்தை இப்னு உலய்யா பலஹீனப்படுத்துகிறார்” என்றும் கூறினார்.”

(அல்லுஅபா லில் உகைலி:-2-4)

இந்த செய்தியில் இடம்பெறும் சில வாசகங்கள் இந்தச் செய்தியை இன்னும் பலஹீனப்படுத்துகிறது.

1-அல்லாஹ்வின் கலீபா:-இது தௌஹீதுக்கு முரணான ஒரு வார்த்தை .அல்லாஹ்வுக்கு யாரும் இந்த உலகில் பிரதிநிதியாக முடியாது.தனது காரியங்களை உலகில் நிர்வகிக்க அல்லாஹ் யாரையும் படைக்கவில்லை.மாற்றமாக அல்லாஹ்தான் எங்களது காரியங்களை நிர்வகிக்கிறான் அல்லாஹ் எங்களுக்கு கலீபாவாக இருப்பானே தவிர யாரும் அல்லாஹ்விற்கு கலீபாவாக முடியாது.
صحيح مسلم -…………3339 – اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ
நாம் கூறும் பிரயான துஆவில் “யா அல்லாஹ் பயணத்தில் நீதான் தோழன்.குடும்பத்திற்கு நீதான் கலீபா”என்று வருவது அல்லாஹ் எங்களுக்கு கலீபாவாக இருப்பானே தவிர யாரும் அல்லாஹ்விற்கு கலீபாவாக முடியாது என்பதைக் கூறுகிறது.

2-கிழக்கிலிருந்து:- அத்திசையிலிருந்து குழப்பங்கள் உருவெடுக்குமென்பதே புகாரி , முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் காண முடிகிறது.

صحيح البخاري – 3279 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ إِلَى الْمَشْرِقِ فَقَالَ هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ

“நபியவர்கள் கிழக்கின் பக்கம் சுட்டக்காட்டி சைத்தானின் கொம்பு தோன்றக் கூடிய இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும் இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்  இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று கூறினார்கள்.
அப்படியிருக்க சீர்திருத்தம் அங்கிருந்து தோன்றும் என்பது முரணாகத் தென்படுகிறது.மிக உறுதியான ஹதீஸ் கிடைக்காத வரை இது போன்ற வார்த்தை முரணான செய்திகளை ஏற்க முடியாது.

இரண்டாவது ஹதீஸ்:-

سنن ابن ماجه –  4082 – حدثنا عثمان بن أبي شيبة . حدثنا معاوية بن هشام . حدثنا علي بن صالح عن يزيد ابن أبي زياد عن إبراهيم عن علقمة عن عبد الله قال بينما نحن عند رسول الله صلى الله عليه و سلم إذ أقبل فتية من بني هاشم . فلما رآهم النبي صلى الله عليه و سلم اغرورقت عيناه وتغير لونه . قال فقلت ما نزال نرى في وجهك شيئا نكرهه . فقال : ) إنا أهل بيت اختار الله لنا الآخرة على الدنيا . وإن أهل بيتي سيلقون بعدي بلاء وتشريدا وتطريدا . حتى يأتى قوم من قبل المشرق معهم رايأت سود . فيسألون الخير فلا يعطونه . فيقاتلون فينصرون . فيعطون ما سألوا . فلا يقبلونه . حتى يدفعوها إلى رجل من أهل بيتي فيملؤها قسطا . كما ملؤوها جورا . فمن أدرك ذلك منكم فليأتهم ولو حبوا على الثلج (

“நபியவர்களோடு நாம் இருந்தநேரம் ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வருவதைக் கண்ட நபியவர்கள்; கண்ணீர் வடித்தார்கள்.அவர்களது நிறம் மாறியது. “உங்களது முகத்தில் கவலை தென்படுகிறதே” என வினவினோம். அதற்கு நபியவர்கள் “அஹ்லுல் பைத்தினரான எமக்காக அல்லாஹ் இம்மை வாழ்க்கைக்கு மேலாக மறுமையை தேர்ந்துள்ளான்.எனக்குப் பின்னர் எனது குடுப்பத்தினர் சோதனைகளை சந்திப்பார்கள், விரட்டப்படுவார்கள்,நாடு கடத்தப்படுவார்கள்.கிழக்கிலிருந்து கருப்புக் கொடிகளையுடைய கூட்டம் வரும்; வரை இது தொடரும்.அவர்கள் வந்து ஆட்சியுரிமையை கேட்பார்கள் ஆனால் கொடுக்கப்படமாட்டார்கள்.யுத்தம் செய்து வெற்றி பெற்றவுடன் ஆட்சியைக் (கொடுமை செய்தவர்கள்) கொடுப்பார்கள்.எனது குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அதனை ஒப்படைப்பார்கள்.அவர் இந்த பூமியை அநியாயத்தால் நிரப்பப்பட்டது போல் நீதியால்  நிறப்புவார்.உங்களில் யார் அக்காலத்தை அடைந்தால் அவர்களிடத்தில தவழ்ந்தேனும்; சென்று விடுங்கள்.” என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்:-இப்னு மாஜா-4082 ,அல்பஸ்ஸார்-1556,அறிவிப்பாளர்-இப்னு மஸ்ஊத்

இந்த ஹதீஸ் பலஹீனமானது.இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யஸீத் இப்னு அபீ யஸீத் என்பவர் மனனத்தில் மிக பலஹீனமானவர்   என்று பல அறிஞர்கள் இவரை குறை கண்டுள்ளனர்.

تهذيب التهذيب – (ج 11 ஃ ص 287(
531 – خت م 4 البخاري في التعاليق ومسلم والأربعة يزيد بن أبي زياد القرشي الهاشمي أبو عبد الله مولاهم الكوفي وقال علي بن المنذر عن بن فضيل كان من أئمة الشيعة الكبار وقال عبد الله بن أحمد عن أبيه ليس حديثه بذاك وقال مرة ليس بالحافظ وقال عثمان الدارمي عن بن معين ليس بالقوي وقال أبو يعلى الموصلي عن بن معين ضعيف قيل له أيما أحب إليك هو أو عطاء بن السائب فقال ما أقربهما ……….)
இந்தச் செய்தி இப்னு மஸ்ஊத் வழியாக மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பாளர் இடம் பெறாமல் ஹாகிமில்-8434 பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதிலே ஹன்னான் இப்னு ஸதீர் இடம்பெறுகிறார்.இவர் பொய்யர் என விமர்சிக்கப்பட்டவர்.

மூன்றாவது ஹதீஸ்:-

سنن الترمذي –  2269 – حدثنا قتيبة حدثنا رشدين بن سعد عن يونس عن ابن شهاب عن الزهري عن قبيصة بين ذؤيب عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم تخرج من خراسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيلياء
“குராஸானிலிருந்து வெளியாகும் கருப்புக் கொடிகள் ஈலியாவில் நாட்டப்படும் வரை எதுவும் அதனை திசை திருப்பாது.” என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:-திர்மிதீ-2269,அஹ்மத்-8760 அறிவிப்பவர்:-அபூ ஹ{ரைரா ரழியல்லாஹ{ அன்ஹ{

இந்த ஹதீஸ் மிக பலஹீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ரிஷ்தீன் இப்னு ஸஃத் மிகவும் பலஹீனமானவர்.

تهذيب التهذيب – (ج 3 ஃ ص 240(
526 – ت ق الترمذي وابن ماجة رشدين بن سعد بن مفلح بن هلال المهري أبو الحجاج المصري وهو رشدين بن أبي رشدين سئل أحمد عنه فقال أرجو أنه صالح الحديث وقال بن أبي خيثمة عن بن معين لا يكتب حديثه …… وقال أحمد بن محمد بن حرب عن بن معين رشدينين ليسا برشيدين رشدين بن كريب ورشدين بن سعد وقال عثمان الدارمي وغيره عن بن معين ليس بشيء وقال عمرو بن علي وأبو زرعة ضعيف الحديث وقال أبو حاتم منكر الحديث وفيه غفلة ويحدث بالمناكير عن الثقات ضعيف الحديث ما أقربه من داود بن المحبر وابن لهيعة أستر ورشدين أضعف وقال الجوزقاني عنده معاضيل ومناكير كثيرة ….وقال النسائي متروك الحديث وقال في موضع آخر ضعيف الحديث لا يكتب حديثه …..”
கருப்புக் கொடியினர் சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸகளில் இந்த மூன்று ஹதீஸ்கள்தான் மிக ஆதாரப் பூர்வமானதாகக் கருதப்படுபவைகள்.அந்த மூன்று செய்திகளுடைய தரமும் இதுவென்றால் மற்றவைகளுடைய நிலை குறிப்பிடத் தேவையில்லை.ஏனைய சில அறிவுப்புகள் ஒன்றில் இட்டுக்கட்டப்ட்டவைகள் அல்லது மிகவும் பலஹீனமானவைகள்.எனவே கருப்புக் கொடியினர் சம்பந்தமான அனைத்து செய்திகளும் மிக பலஹீனமானதாகும்.பெரும்பாலும் ஷீஆக்களுடைய தாக்கங்கள் நிறைந்ததாகவே இவைகள் காணப்படுகின்றன.முஸ்லிம் உம்மத்தின் ஆட்சி நபிகளாரின் குடும்பத்திற்கு சொந்தமானது என்று எங்கும் நபியவர்கள் சொல்லவில்லை.ஆனால் ஷீயாக்களின் நம்பிக்கை அதுதான் அந்த வாடைகள் இந்த ஹதீஸ்களில் அதிகமாக வீசுவதைக் காணலாம்.சில அறிவுப்புகளில் கருப்புக் கொடியினருக்கு எதிராக இருப்பவர்கள் ஸ{ப்யானிகள் என்றிருப்பது முஆவியா ரழியல்லாஹ{ அன்ஹ{வை சாடும் நோக்கில் புனையப்பட்டவைகள் எண்ணப்பாட்டை ஏற்படுத்துகிறது.
மஹ்தி என்பவர் வருவார் என்பது உண்மையாயினும் அவர்கள் நபியவர்களைவிட சிறந்தவரல்ல.மஹ்தியுடைய வருகையின் பின்னர்தான் முஸ்லிம்களுக்கு விடிவு என்று நபியவர்கள் எங்கும் கூறவில்லை.மஹ்தியுடைய வருகைக்காக பிரார்த்தியுங்கள் என நபியவர்கள் எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை.மஹ்தி என்ற பெயர் அவருக்குப் பின்னால் அணிதிரளப் போதுமான சான்றன்று மஹ்தியுடைய இஸ்லாம்தான் எங்களுக்கு மஹ்தியை சொல்லித்தரும்.மஹ்தி வரப்போகிறார் உலகம் அழியப் போகிறது.இனி வாழ்வதில் பயனில்லை என இஸ்லாம் விரக்தியுரச் சொல்லவில்லை அல்லது ஹிஜ்ரத் செய்து மஹ்தியிடத்தில் போய்விடுங்கள் என்றும் சொல்லவில்லை.பின்வரும் ஹதீஸைக் கேளுங்கள்.

مسند أحمد بن حنبل –  13004 – حدثنا عبد الله حدثني أبي ثنا بهز ثنا حماد ثنا هشام بن زيد قال سمعت أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : ان قامت الساعة وبيد أحدكم فسيلة فان استطاع ان لا يقوم حتى يغرسها فليفعل

“மறுமை நாள் நிகழும் வேளை உங்களின் கையில் ஒரு தாவரச் செடி இருக்குமென்றால் அதை முடியமானவரை நட்டிவிடுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்:-அஹ்மத்-13004.அறிவிப்பவர்-அனஸ் ரலியல்லாஹ{ அன்ஹ{

மறுமை வரும்போது எமது மன நிலை இந்தத் திடத்தோடு இருக்க வேண்டுமென்றால் மஹ்தியின் வருகை எமது வாழ்வாதார முன்னேற்றத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது.

حلية الأولياء – (ج 3  ص 161(
حدثنا إبراهيم، حدثنا محمد، حدثنا محمد بن سهل بن عسكر، حدثنا محمد بن يوسف الفريأبي، قال: سمعت أبا يحيى يقول: حدثنا زكريا بن عدي، عن حفص بن غياث، قال: قلت لسفيان الثوري: يا أبا عبد الله إن الناس قد أكثروا في المهدي فما تقول فيه. قال: إن مر على بابك فلا تكن منه في شيء حتى يجتمع الناس عليه
.

“மஹ்தியைப் பற்றி மக்கள் அதிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என இமாம் ஸுப்யான் அஸ்ஸவ்ரியிடம் வினவப்பட்ட போது “மஹ்தி உன் வீட்டு வாசல் வழியாகச் சென்றாலும் மக்கள் ஒரு முகமாக அவரை கலீபாவாகத் தேரும் வரைக்கும் பைஅத் செய்து விடாதே” என பதிலளித்தார்கள்.

மஹ்தியாயினும் ஆட்சிக்கு வருவதாயின் இஸ்லாம் சொல்லும் முறைப்படிதான் வரவேண்டும் என்ற பின்னணியில் வெளிப்பட்ட ஆணித்தரமான ஓர் விளக்கம் இது. மஹ்தி என்ற ஒரு சிறந்த மனிதர் பிறப்பார்.அவர் நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.நீதியானவர் என்பதையெல்லாம் நாம் மறுக்கவில்லை.மஹ்தியை மறுப்பவர்கள் ஹதீஸை மறுப்பவர்கள் ஆனாலும் போலி அடையாளங்களையும் போலி வாதங்களையுமே நாம் இங்கே தெளிவுபடுத்தினோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts