Tuesday, April 16, 2024

கருவறையில் உள்ளதை மருத்துவர்கள் அறிவார்களா?

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) لقمان : 34

‘மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று அறியாது. எந்த ஆத்மாவும் தான் எங்கே மரணிப்பேன் என்று அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன் நுட்பமானவன். லுக்மான்:34

இவ்வசனத்தில் இறைவன் 5விடயங்களைப்பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்கிறான். அதில் கருவரைகளில் உள்ளவை பற்றிய அறிவும் ஒன்று. இந்த வசனம் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு முரண்படுவதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மருத்துவ அறிவியல் இதனை நிரூபிக்கிறது என்பதே உண்மையாகும். அதனை தெரிந்துகொள்ள முன்னர் இந்த வசனம் என்ன சொல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்பது சிசு ஆணா பெண்ணா என்பதை மாத்திரங் குறிக்கவில்லை. விந்திலிருந்து குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? ஒற்றையா? இரட்டையா? என்பவைகளையும் இவ்வசனமும் குறிக்கிறது. அல்குர்ஆனில் சில வசனங்கள் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றன.

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6) آل عمران

‘அவனேகருவரையில் உங்களை அவன்விரும்பியவாறு வடிவமைக்கிறான்” ஆலு இம்ரான்:6

اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَى وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ (8) الرعد : 8

‘ஒவ்வொரு பெண்ணும் தன் கருவில் சுமப்பதையும் கருவரைகள் சுருங்குவதையும் விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்.ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.” ரஃத்:8

இந்த வசனங்களில் இறைவன் கருவரையில் வடிவமைக்கப்படல் எவ்வளவு காலம் கருவரையில் சிசு தங்கும் போன்ற செயற்பாடுகளை தானே நிர்ணயிப்பதாகவும் சொல்வது இவையனைத்தும் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்தை தெளிவுபடுத்துகிறது.

நவீன மருத்துவ அறிவியலோடு இந்த வசனம் முரண்படுவதாய்ச் சொல்வது மருத்துவம் பற்றிய அறியாமை. இரண்டு அறிவியல் வளர்ச்சிகளை எடுத்துக்காட்டியே இதை முன்வைக்கிறார்கள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்

2.நவீன மருத்துவ அறிவியல் பால்த் தேர்வு(sex selection) முறைகள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்.

இது ஒளிக்கோட்பாட்டுக் கண்டுபிடிப்பின் விளைவாக ஏற்பட்ட ஒரு நன்மையெனலாம். ஒளியலைகளை கருவரைக்குள் செலுத்தி கருவின் நிலை பற்றி அறிய இதைப் பயன்படுத்துவார்கள். 1940 களில்தான் அறிமுகமாகின. ஆரம்பத்தில் இரு பரிமாணமாகவே இருந்த இந்தக் கண்டுபிடிப்பு இப்பொழு நாற்பரிமாணம் வரை முன்னேறியுள்ளது. இதனால் கருவின் களங்களுக்கு எந்தப் பாதிப்புங்கிடையாது. சிசுவின் நிலைகள் நோய்கள் வடிவமைப்பு பால் போன்றவற்றை இதன் மூலம் கண்டறியப்படுகின்றன.

2.நவீன மருத்துவ அறிவியல் பால்த் தேர்வு(sex selection) முறைகள்.

ஆண் குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு ஆண்குழந்தையையும் பெண்குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு பெண்குழந்தையையும் ஏற்படுத்துவதற்காக நவீன விஞ்ஞான முறைகள். இது இன்று பல அமைப்பில் ஒழுங்கில் செய்யப்படுகின்றன.
IUI.
Flow Cytometry / Sperm Separation.
PGD

இந்த அனைத்து முறைகளும் பெண்ணது சினை முட்டை ஆணின் இந்திரியத் துளியிலும் மேற் கொள்ளப்படும் சில விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகள். அவ்வாறு க்ரோமோஸோன்கள் சுமந்துவரும் டீஎன்ஏ வை பகுத்தும் இன்னும் சினைமுட்டைகளை அதிகரிக்கச் செய்வதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவைகள் கருவரைக்குள் செலுத்தப்படும்.

இந்த இரண்டு வளர்ச்சிகளையும்தான் ஆணா பெண்ணா என்று அறிவதென்ன உருவாக்கவும் செய்கிறார்களே என இறைமறைக்குச் சவாலாக வாதாடுகிறார்கள்.

இவைகள் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்திற்கு முரண்படுகிறதா?

கருவரையில் கருவிற்கு இரு நிலை உண்டு. 12 வாரங்களுக்கு முன்னுள்ள நிலை 12 வாரங்களுக்கு பின்னுள்ள நிலை. அதாவது கிட்டத்தட்ட 4 மாதங்ளை எட்டியுள்ள நிலை. 4 மாதங்களைத் எட்டும்போது இந்தக் காலத்து விஞ்ஞானிகளுக்கு மாத்திரமல்ல அறிவியலின் வாசமே அடிக்காத அந்தக் காலத்து மக்களும் கருவிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று அறியலாம் முறைகள்தான் வேறுபடுமே தவிர இதில் நவீன விஞ்ஞானத்திற்கு எந்த சிறப்பம்சமும் இல்லை. அந்தக் காலத்து அறியாமைக்கால மக்களாலும் அறிய முடிந்த ஒன்றை இறைவன் தான் மட்டும்தான் அறிவேன் என்று சொல்லியிருக்கமாட்டான்.
முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இறை நிராகரிப்பாளன் கூட இந்த வசனத்தை அப்படிப் புரியவில்லை. அவ்வாறு புரிந்திருந்தால் தங்களது ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் காட்ட கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவரையிலுள்ள சிசுவை வெளியே எடுத்துப் பார்த்து ஆணா பெண்ணா என்று பதில் கூறியிருப்பார்கள். அவ்வாறு செய்திருந்தால் அந்த மக்களே அவனை நகைத்திருப்பார்கள். காரணம் இந்த வசனத்தை அவ்வாறு யாரும் விளங்கவில்லை. கர்ப்பத்தில் குழந்தை ஆணாகவே பெண்ணாகவே தோற்றம் பெற்றபின்னால் கருவரையை கிழித்துப் பார்த்துச் சொல்வதும் ஸ்கேன் மூலம் சொல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. 1ம் 1ம் 3ம் 4ம் 5ம்……வாரங்களில் அன்றைய காலத்து மக்களாலோ இன்றைய விஞ்ஞானத்தாலோ என்ன வழிமுறையைக் கையாண்டாலும் சொல்ல முடியாது. இந்த பதில் ஸ்கேனிங்கிற்குப் பொருந்துகிறது 2வது முறையான ‘பால் தேர்வு” முறைக்குப் பொருந்தவில்லையே என்ற கேள்வி இப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். இந்த நவீன வழிமுறைக்குக் கூட சில பழைய முன்மாதிரிகள் உள்ளன. சில சமூகங்கள் வலது விதை மூலம் ஆணும் இடது விதை மூலம் பெண்ணும் கிடைப்பதாக நம்பினர். இதனால் பெண் குழந்தை கிடைக்காமல் செய்வதற்காக சிலர் இடது விதையை நீக்கம் செய்தனர். இன்னுஞ் சிலர் அதைக் கட்டினர். இது போன்ற முயற்சிகளின் அறிவியல் வடிமே இந்தப் ‘பால் தேர்வு முறை” இந்த முறைகளின் ஆண் குழந்தைகளுக்கான சாத்தியப்பாடுகள் பின்வருமாறு:

IUI. : 55%
Flow Cytometry / Sperm Separation. : 80%
PGD: 99%

ஒரு கருவரையில் ஆண் குழந்தையை இந்த முறைகள் மூலம் உருவாக்க விரும்பினால் உருவாகுவாவதற்கான சாத்தியப்பாடுகளே இவைகள். இங்கேயும் விஞ்ஞானத்தால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட கருவாயினும் 12ம் 13ம் வாரங்களிலேதான் ஆணா பெண்ணா என மருத்துவர்கள் உறுதி செய்வார்கள். அப்படியாயின் இங்கேயும் ஸ்கேனிங்கிற்கு நாம் கேட்ட கேள்வியே கேள்வியாகும். எனவே ஒரு காலமும் இந்திரியத்துளியாக இருக்கும்போது களப்புத்துளியாக மாறும்போது தொங்கும் ஒரு அட்டைப் பூச்சி வடிவம் எடுக்கும் போது சதைத் துண்டாக இருக்கும் போது இது ஆணா பெண்ணா என அறியமுடியாது என்பது மட்டமல்ல குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? போன்ற எல்லாவற்iயும் அகிலத்தைப் படைத்து நிருவகிக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே அறிவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts