Thursday, September 12, 2024

காலக்கணிப்பு முறைமையின் பரிணாமமும் “ஹிஜ்ரி” ஆண்டுமானமும் (Evolution of system of chronology and “ Hijri” Era)

 (அறிமுகம்)

காலத்தை நிகழ்வுகளுக்குகேற்ப வகுத்துச்சொல்லும் முறைமையே காலக்கணிப்பு எனப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (“Chronology”) எனச் சொல்வார்கள். இதற்கு இரு பகுதிகள் உண்டு.

1 கடந்தகால நிழ்வுகளை அதற்குறிய காலங்களைக் குறித்துச் சொல்லல்.
2
அதன் தோற்றம் வளர்ச்சி கலாச்சாரத்தாக்கம் சம்பந்தமான ஆய்வு.       (Historical Chronology)

இங்கே ஆயமுற்படுவது இரண்டாவது பகுதியே. எம் உபயோகத்தில் உள்ள “கலண்டர்கள்” (Calendars)  அதன் ஒரு வடிவமே. இன்றைய உலகில் 40 கலண்டர்கள் உபயோகத்தில் உள்ளன. ஆனாலும் நாம் அறிந்து பழகிய ஒன்று “கிறிஸ்த்துவக் கலண்டரே” இதை நாம் கிறிஸ்துவ மயமாக்களின் ஒரு வகை வெற்றி எனவும் கொள்ளலாம். பலநாடுகள் உள்நாட்டில் மத கலாச்சார ரீதியான ஒரு சில விடயங்களுக்கு மதரீதியான கலண்டர்களை நடைமுறைப் படுத்தினாலும் கூட பொது விடயங்களில் சர்வதேசமட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ள கிறிஸ்துவக் கலண்டரையே உபயோகப்படுத்து கின்றன. உண்மை நிலை அவ்வாறல்ல. பிரித்தானியக் காலணித்துவத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளில்தான் அதன் செல்வாக்கு வலுப் பெற்றுக் காணப்படுகிறது. கிறிஸ்துவக் கலண்டரின் உபயோகம் காரணமாக குழப்பங்கள் கோஷ்டி மோதல்கள் வன்செயல்கள் கூட நிகழ்ந்துள்ளன. இக்கலண்டர் முறை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியோ மதத்தூண்டுதல்களோ இல்லாமல் அறிமுகமான “எதேச்சயான நிகழ்வு” என்று சொல்வது அறிவுக்குப் பொருந்தவில்லை.

அதேபோன்று “குழப்பங்களற்ற நேர்த்தியான ஒரு கலண்டர்முறைபோன்று ஒரு நம்பிக்கை பொதுமக்கள் மத்தியிலும் ஒரு சில பிறமதக்கலச்சார தாக்கத்திற்குட்பட்டவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. உண்மையில் அதனது வரலாற்றுப் பின்னணியை நோக்கையில் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் திருத்தங்கள் மதரீதியான உற்புகுத்தல்கள் அதன் சில பகுதிகள் அறிவியலுக்கும் பொருந்தாமல் போவதை கலண்டர் சம்பந்தமான ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்றைய உலகில் மூன்று வகையான கலண்டர்கள் காணப்படுகின்றன.

1 சூரியக் கலண்டர் (Solar Calendar)
2
சந்திரக் கலண்டர் (Lunar Calendar)
3
சூரியசந்திரக் கலண்டர் (Luni solar Calendar)

சூரியக்கலண்டரின் முழுமையான அமைவும் பருவமாற்றங்கள் உஷ்ன வருடம் (Tropical Year)  என்பவற்றை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டே சந்திரசூரியக் கலண்டர்களும் செயற்படுகின்றன. ஆனாலும் இது முழுமையாக சாத்தியமான ஒன்றல்ல நாள்வாரியாக புவிச் சுழற்சியை ஒப்பிடும்போது சாத்தியமாய்த் தோன்றினாலும் மணித்தியாலக் கணிப்பீட்டில் அது தவறுவதைக் காணலாம். நான்கு வருடங்களிற்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்திலே ஒரு தினம் கூட்டப்பட்டு 29 நாட்களாக (Leap Year)  கணிக்கப்பட்டபோதும் நிமிடவாரியான மீதிகள் மணித்தியாலமாக நாட்களாக மாறியதை மாறுவதை அவதானிக்க முடிகிறது. (Explanatory Supplement to the Astronomical Alamance)  என்ற ஆய்வும் இதனை ஏற்றுக்கொள்கிறது. இதற்கான மொத்த காரணியும் வருடத்தை தீர்மானிப்பதில் அவர்களிடம் இருக்கும் அடிப்படையே. ரமழானில் வரும் “பிறை சர்ச்சையை” வைத்து இஸ்லாமியக் கலண்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் (Internet)  எங்கிலும் பரந்து காணப்படுகின்றன. 1400 வருடங்களாக தின மாத ரீதியான மாற்றங்களிற்குற்படாத ஒரு கலண்டர் உண்மையில் இஸ்லாமியக் கலண்டரே. எங்களுக்கு மத்தியில் இன்று காணப்படும் கிறிஸ்துவக் கலண்டர் (Gregorian Calendar) கூட 1582ம் ஆண்டு திருத்தங்களிற்குட்பட்டதே.

எனவே இஸ்லாமியக் கலண்டரின் வரலாற்றுப்பின்னணியையும் அதன் பெருமானத்தை யும் அறிய வேண்டுமாயின் காலக்கணிப்பு முறைமையின் வரலாற்றை சற்று அலசுதல் அவசியமாகும்.

 (காலக்கணிப்பின்  தேவை)

ஒரு சமூகத்தில், விவசாயிகள், இடையர்கள், வேட்டைக்காரர்கள், கடற்தொழிலாளிகள் என பலவகையினர் இருப்பார்கள். அவர்களது அலுவல்கலிற்கேற்ப காலத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கிருந்தது. இடையர்கள் புல்வெளிகளின் வரட்சிக்காலம், பசுமைக்காலம் பற்றியும், அதிகப் பால் கிடைக்கும் காலம் பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கேற்ப அவ்வகையினர் காலத்தை பிரித்து நோக்கினார்கள். விவசாயிகள் விளைச்சல், அருவடைக்கேற்ப காலத்தை வகுத்து நோக்கினர். மீனவர்கள், அதிகமான மீன்கள் வருகை இடம்பெயர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு காலங்களை வகுத்து நோக்கினர். கடலில் பிரயாணிப்பவர்கள் புயல், நட்சத்திரங்களின் தோற்றம், காற்று வீசும் திசை போன்றவற்றின் அடிப்படையில் காலத்தை வகுத்து நோக்கினர். இதனால் ஒருமுகப்படுத்தப்படாத ஒரு கணிப்புமுறை அங்கு காணப்பட்டது. ஆனாலும் அனைவரும் சூரிய, சந்திர, நட்சத்திர அசைவுகளை கவனிப்பதில் ஆர்வஞ்செலுத்தினர். வானரீதிய மாற்றங்களைக்கொண்டே, புவியில் ஏற்படப்போகும் மாற்றங்களை அறிந்து கொண்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கொண்ட நம்பிக்கை சூரிய சந்திர தெய்வீகத்தன்மை நம்பிக்கைக்கு வழிகோலியது. ஆனாலும் அனைத்துச் சமுதாயமும் ஆரம்பத்தில் சந்திரனைக் கொண்டே காலக்கணிப்பை மேற்கொண்டனர். குறிப்பாக யூதர்கள் சந்திரனை மாதங்களுக்கும், சூரியனை பருவங்களிற்கும் பயன்படுத்தினர். இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் மேற்கு நோக்கிய சாய்வைக் கொண்டு நேரங்களை கணித்தனர். தங்கள் வாழ்க்கை வட்டத்தே அவர்கள் காலங்களை வகுத்துக் கொண்டதால் அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் ஏற்கும் அமைவில் ஒன்றை அறிமுகப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் நீண்டநாட்களை எடுத்தது. ஏனெனில் சமூகத்தேவைகளே காலக்கணிப்பின் அடிப்படை.

இஸ்லாம் இன்று வழங்கியதுபோன்று வருட, மாத, அடிப்படைகள் அன்று காணப்படவில்லை. ஆனாலும் இந்த ஒருமுகமற்ற நிலை இன்று காணப்பட்டால் ஏற்படுத்தும் பாதிப்பு அன்றைய சூழலில் காணப்படவில்லை. காலஞ்செல்லச்செல்ல அதற்கான அவசியம் வலுப்பெறத்தொடங்கியது. ஒவ்வொரு சமூகமும் தங்களது கலாச்சார, இட அமைவிற்கேற்ப ஒவ்வொரு காலக்கணிப்பு முறைமையை உருவாக்கிக் கொண்டனர். சிலவைகள் நிலைபெறவில்லை சிலவைகள் சீர்திருத்தங்களிற்குட்பட்டு வேறு வடிவில் உருவெடுத்தன. ஆனாலும் ஒரு பிரச்சினை காணப்படவே செய்தது. நாம்வாழும் பிரதேசத்தில் தங்களிற்கேற்ப கால நேரங்களைக் குறித்துக் கொண்டவர்கள் இன்னொரு பிரதேசத்துடன் தொடர்புறும்போது தினங்குறிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறான ஒரு நிகழ்வு 17511ம் ஆண்டு US இற்கும் UK இற்கும் மத்தியில் நிகழ்ந்தது.

எது எவ்வாறாயினும்! இவ்விடத்தில் அவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில காலண்டர்களை ஆராய்வது இன்று அவர்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளை வைத்து உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய கலண்டர்களின் சுயரூபத்தைத் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

  1. (பாபிலோனியக் காலண்டர்)

கி.மு 1800 அளவில் சந்திரனையே முழுமையாக அடிப்படையாகக் கொண்ட கலண்டரே அறிமுகத்தில் இருந்தது. ஆனாலும் கி.மு 1100 – 800 காலப்பகுதியில் மாதச்சேர்க்கையின் (Intercalation)  அடிப்டையில் சந்திரசூரியக் கலண்டர் வழக்குக்கு வந்தது. சில தகவல்கள் மன்னர் நெப்புச்சாட் நெஸார் II (Nebuchadnezzar  கி.மு 630 – 562) இன் காலப்பகுதியில் பிறைபார்த்து மாதத்தை தீர்மானிக்கும் முறை கைவிடப்பட்டு 365 நாட்களையும் 12 மாதங்களையும் ஒவ்வொரு மாதங்களும் 30 நாட்களையும் வருடஇறுதியில் 5 நாட்கள் சேர்ப்பு முறையுங்கொண்ட கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டதாய் தெரிவிக்கின்றன.

2 (இந்துக் காலண்டர்)

Calendar Reform Committee – 1950 இன் ஆய்வின்படி இந்தியாவில் 30 கலண்டர்கள் காணப்பட்டன. இந்தியக் கலண்டர்களின் வரலாற்றுப் பின்னணியை ஆய்வது உண்மையில் சிக்கலான விடயம். ஏன் என்றால் பல்வேறு கலாச்சாரங்கள் அங்கு காணப்பட்டன. தொடர்ச்சியான நாகரீகங்கள் அங்கு தாக்கஞ் செலுத்தின. குறிப்பிடப்பட்ட 30 காலண்டர்களில் சிலவை சிவில் (Civil)  ஆகவும் பாவிக்கப்பட்டன. இவ்விடத்திலே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் இந்தியக் காலக்கணிப்பு முறை சம்பந்தமான தகவலைக் குறிப்பிடுவது சிறந்தது என எண்ணுகிறேன்.

“கதிரவனைப் போலன்றி நிலவு திங்கள் தோறும் வளர்வதுபோலவும் தேய்வதுபோலவும் காட்சி அளிக்கின்றது. அதனைத் திதிகள் எனச் சொல்கின்றனர். வளர்பிறை தேய்பிறை ஒவ்வொன்றிலும் பரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சட்டி, சப்தமி, அட்டம், நவமி, தசமி, ஏகதாசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி என்னும் பதினான்கு திதிகள் அடங்கியுள்ளன. அமாவாசை முதற்கொண்டு பௌர்ணமி வரையிலும் வளர்பிறையானது சுக்கலபட்சம் என்றும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேய்பிறையானது கிருட்டிணபட்சம் என்றும் குறிக்கப்படுகிறது.

கிழக்கு மேற்காக வானில் கதிரவனும் திங்களும் பயணமாகும் பாதை கிரகணப்பாதை (Ecliptic)  என்று குறிக்கப்படுகின்றது. இப்பாதையில் உலகைச்சுற்றிலும் காணப்படும் விண்மீன் குழுக்களின் (Constellation) எண்ணிக்கை 27 அவையாவன: அகவினி, பதணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புணர்பூசம், பூசம், ஆய்வியம், மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி இக்கிரகணப்பாதை 12 இராசிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் ஒவ்வொரு இராசியிலும் ஒரு மாதம் சந்திக்கிறான். ஆக ஓர் ஆண்டில் உள்ள மாதங்களின் எண்ணிக்கை 12 சனவரி………… என்னும் மாதங்கள் இன்று உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன. தமிழ் மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்பன. கேரளத்தில் மாதங்களை 12 இராசிகளின் பெயராலேயே வழங்குகின்றனர். இராசிகளின் பெயர்களாவன: மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனசு, மகரம், கும்பம், மீனம். ஒரு நாளின் நட்சத்திரமாகக் கருதப்படுவது கிரகணப்பாதையில் ஒவ்வொரு நாளும் நிலா 27 நட்சத்திரக் குழுக்களில் எந்நட்சத்திரத்திற்கு அருகில் நகர்ந்து கொண்டுள்ளதோ அதுவே ஆகும். ஒரு நாளின் நட்சத்திரம் இந்தியக் காலக்கணிப்பு முறையில் ஒரு சிறப்பு அங்கத்தை வகிக்கின்றது.

இந்தியக் காலக்கணிப்பு முறையில் ஆண்டின் நாள்கள் நிலையாய் இராமல் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மாதம் ஒன்றின் ஏதோ ஒரு தேதிமுதல் அடுத்த ஆண்டின் அதே மாதத்தின் அதே தேதி வரை ஓர் ஆண்டு என்பதற்குப் பதிலாக மாதம் ஒன்றின் தேதியில் எந்த நட்சத்திரமோ அன்று முதல் அடுத்த ஆண்டு அதே மாதத்தின் எந்த நாளில் அதே நட்சத்திரம் மீண்டும் வருகிறதோ அந்தநாள் வரை ஒரேநாள் எனக்கொள்ளப்படுகிறது. எனவே ஆண்டுக்கு ஆண்டு நாள்களின் எண்ணிக்கை வேறுபட்டிருக்கும். எனினும் பல ஆண்டுகளின் சராசரி நாள்களின் எண்ணிக்கை 3651:4 என்பதே உண்மையாகும்.                         (வாழ்வியற் களஞ்சியம் 7:236).

இந்தியாவில் சூரியக்கலண்டர் முறையும், சந்திரக்கலண்டர் முறையும் அதி செல்வாக்குச் செலுத்துகின்றன. சூரியனை அடிப்படையாக வைத்து உபயோகிக்கப்படும் மதரீதியான கலண்டர் மாதங்களுக்கு தனிப்பெயர்களும் உண்டு. சந்திரசூரிய கலண்டர்கள் சம்பந்தமான சில மேற்கோள்கள் ரிக் வேதத்திலும் காணப்படுகின்றன.

 

VII (கிறிஸ்த்துக்கலண்டர்)

ஜுலியன் கலண்டர்தான் கிறிஸ்துக் கலண்டர் என பெயர்மாற்றம் பெற்றது. ஆண்டுமானம் மாற்றம் பெற்றதே அதற்குரிய காரணம். அவர்களுக்கு மத்தியிலே கிறிஸ்து ஆண்டுமானத்தை குறித்தவர் யார் என கருத்து முரண்பாடு இருந்தபோதும் பெரும்பாலானோர் டயோனீஸிஸ் (Dionysius Exiguus)  என்பவரே அதன்காரணகர்;த்தா என ஏற்றுள்ளார்கள். உரோம் நிர்மாணிக்கப் பட்டதிலிருந்து 753 ஆம் ஆண்டில் கிறிஸ்த்து பிறந்தார் என்பதே அவரது கருத்து. என்றாலும் சரியான ஆண்டு எது என்ற கருத்து முரண்பாடு காணப்படவே செய்கிறது. இந்த ஆண்டுமானத்தைத்தான் நாம் தமிழில் கி.மு, கி.பி என்றும் ஆங்கிலத்தில் A.D (Anno Domini), A.C (Ante Christum) அல்லது B.C (Before Christ) என்றும் குறிப்பிடுகின்றோம். முதல் முதலில் இந்த ஆண்டுமானம் மூலம் கணக்கிடப்பட்ட கலண்டர் அமோகவரவேற்புப்பெற்று அங்கீகரிக்கப்பட்டது இத்தாலியிலேதான். பின்னர்தான் ஏனைய கிறிஸ்த்துவ நாடுகள் அங்கீகரித்தன. ஐரோப்பாவிலே கி.பி 1000 ஆண்டளவில்தான் நடைமுறைக்குவந்தது. இன்று பரவலாகி நடைமுறையிலிருக்கும் நிலை 14ம் நூற்றான்டிலேதான் அமுலுக்குவந்தது.

கிறிஸ்த்துக் காலண்டர் நடைமுறைக்குமுன் கிரேக்க நாட்டில் ஒலிம்பியா (Olympiads)  ஆண்டும் உரோமர்கள் நிர்மாண ஆண்டைக்கொண்டும்(abr urbe condita A.U.C) கணக்கிட்டனர். உரோமர்களின் ஆண்டுமானம் காலத்துக்குக்காலம் மாறக்கூடியதாய் காணப்பட்டது.

இந்தக்கிறிஸ்த்துக் கலண்டரின் ஆரம்ப மாதம் பல்வேறு ஆண்டுகளுக்கும் பல்வேறு பிரதேசங்களிலும் மாற்றங்காணக்கூடியதாய் இருந்தது. உதாரணமாக


25
ம் திகதி மார்ச்மாதம் (இயேசுநாதரின் அவதார நாள்)


25
ம் திகதி டிசம்பர்மாதம் (இயேசுநாதர் பிறந்தநாள் “Style of the Nativity”)

01ம் திகதி ஜனவரிமாதம்

இவ்வாறு ஏராளமான மாற்றங்களும் திருத்தங்களும் காணப்படுவதால் கிறிஸ்த்துக்கு முன்னுள்ள காலத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் பல்வேறு முறைகள் நடைமுறையில் கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றுதான் கி.மு.Catholic Encyclopedia (General Chronology) அது சம்பந்தமான சில விபரங்களைத்தருகிறது.

VIII  (கிரிகோரியன் காலண்டர்)

“The Gregorian Calendar today serves as an international Standard for civil use. In addition, it regulates the ceremonials cycle of the Roman Catholic and protestant Churches. Infect its original purpose was ecclesiastical. Although a variety of other calendars are in use today, they are restricted a particular religions or cultures.”

(The Explanatory Supplement to the Astronomical Alamance. P. Kennath)

“சர்வதேசமட்டம் எனும் அளவில் கிலிகோரியன் காலண்டர் இன்று நாடு சம்பந்தமான விடயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேலாக உரோமன் கத்தோலிக்க, புரடஸ்தான்து மத சம்பந்தமான விடயங்களை ஒழுங்குறக்கணிக்கிறது. உண்மையிலே அதன் அடிப்படை நோக்கமே மதசம்பந்தமான கிரியைகள்தான். இன்று உலகில் வேறுபல காலண்டர்கள் காணப்பட்டபோதும் அவைகள் யாவும் தனிப்பட்ட மார்க்க விடயங்களிலும் அல்லது கலாச்சார அமைவுடன் மட்டடுப்படுத்தப்பட்டேயுள்ளன.”

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கணக்குகளைப்பரிசீலித்ததில் 125 ஆண்டுகட்கு ஒரு முறை லீப்  (Leap) ஆண்டு ஒன்றை விடவேண்டும் என்பது எகிப்தியர்களால் கண்டறியப்பட்டது. ஆண்டின் சரியான நீளம் 365 ¼ நாட்களுக்குப் பதில் 365.2422 நாள்களாக இருப்பதுவே இதற்கான காரணம் ஆகும். இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆண்டு ஒன்றுக்கு 11 நிமிடம் 14 நொடிமட்டுமே. எனினும் 125 ஆண்டுகளில் இவ்வேறுபாடு ஒரு முழு நாளாக ஆகிவிடுகிறது. இதன்மூலம் ஆயிரம் ஆண்டுகளில் 8 நாள் வேறுபாடு ஏற்படுகிறது. ஆசியா மைனரிலிருந்து நிகயீயா (Nicaea)  என்னும் நகரில் கி.பி 325 ல் தேவாலய சபை ஒன்றுகூடி, இளவேனிக் கலாச்சமராப்பகல் நாளுக்கும், இளவேனில் வரும் ஈஸ்டர் பண்டிகை(Easter) நாளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தது. அதற்குப்பின் 1,220 அண்டுகள் கழித்து இத்தாலி நாட்டின் திரண்ட்(Trent) நகரில் கூடிய தேவால சபை ஒன்று இளவேனிற்கால சமராப்பகல் நாள்வரும் காலம்குறித்த விவாதித்தது.

இளவேனிற்க்காலச் சமராப்பகல் நாள் கி.பி 325 இல் மார்ச்சு 21ம் நாள் வந்திருந்தது. ஆனால் கி.பி 1257ம் ஆண்டுகளுக்குப்பின்னர் கி.பி 1582ல் இளவேனிற்காலச் சமராப்பகல் நாள் மார்ச்சு 11ம் திகதி வந்தது. இதன்காரணமாகக் காலக்கணிப்பு முறையில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. போப்பாண்டவர் பதிமூன்றாம் கிரிகரி (Gregory XIII) என்பவர் காலக்கணிப்பு முறையைச் சரிசெய்யும் பொருட்டு அப்பத்து நாள்களைத் தள்ளிவிட முடிவெடுத்தார்.

அவர் முடிவின்படி கி.பி 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி நாளுக்கு அடுத்த நாளாக அக்டோபர் 15ம் நாள் வந்தது. நூற்றாண்டு ஆண்டுகளின்போது எண் 4 ஆல் மீதமன்றி வகுக்கப்பட்டால் “லீப்” லீப் ஆண்டு என எடுத்துக்கொள்வதற்குப் பதில் 400 ஆல் மீதமன்றி வகுபட்டால் மட்டுமே லீப் ஆண்டாக கொள்ளப்படும் என்னும் திருத்தம் புகுத்தப்பட்டது. பிரிட்டனும் அதன் அமெரிக்கக் குடியேற்றங்களும் போப்பு கிரிகரி கொண்டுவந்த திருத்தத்தை கி.பி 1752ம் ஆண்டில்தான் ஏற்றுக்கொண்டன.”

மாற்றம் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் 10 நாட்கள் வீழ்த்தப்பட்டன. ஆகையால் 1582 ஒக்டோபர் 4 க்கு அடுத்து ஒக்டோபர் 15 ஆகக் கருதப்பட்டது. கிரிகோரியின் மாற்றத்திலே ஜனவரி முதல் மாதமாக மீண்டும்(Julian Calendar) இன் அடிப்படையிலே அமைக்கப்பட்டதால் நிர்வாகப்பாவினை, மதப்பாவினை என இருவகையாக மாறியது. ஆயினும் கிறிஸ்த்து ஆண்டையே அது வெகுவாகக் கவனித்ததால் அந்த மதச்செல்வாக்கு இல்லாத அங்கீகாரம் கிடைக்க காலதாமதமாகியது. எவ்வாறெனினும் கிறிஸ்த்துவ மதங்களின் பெயர்கள் யாவும் உரோம, கிரேக்க தெய்வங்களையும், மன்னர்களையும் ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளன. டிசம்பர் 25 ஐயோ அல்லது மார்ச் 25 ஐயோ வருடத்தின் முதல் மாதமாகக் கணிப்பதற்கு கிறிஸ்த்துவர்களிடம் மதரீதியான காரணம் உண்டு. ஜனவரியை முதல் மாதமாகக் கருதுவதற்கு ஜேனஸ் என்ற ரோமானிய போர்தெய்வம் காரணமாக உள்ளத எனசில தரவுகள் தெரிவித்தாலும் ஆதாரபூர்வமான காரணங்கள் எதுவும் தென்படவில்லை.

இன்று எம்மத்தியில் உள்ளது கி.பி 1582ம் ஆண்டு (Pope Gregory XIII)ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட காலண்டரேயாகும்.

 

VII (கிறிஸ்த்துக்கலண்டர்)

ஜுலியன் கலண்டர்தான் கிறிஸ்துக் கலண்டர் என பெயர்மாற்றம் பெற்றது. ஆண்டுமானம் மாற்றம் பெற்றதே அதற்குரிய காரணம். அவர்களுக்கு மத்தியிலே கிறிஸ்து ஆண்டுமானத்தை குறித்தவர் யார் என கருத்து முரண்பாடு இருந்தபோதும் பெரும்பாலானோர் டயோனீஸிஸ் (Dionysius Exiguus)  என்பவரே அதன்காரணகர்;த்தா என ஏற்றுள்ளார்கள். உரோம் நிர்மாணிக்கப் பட்டதிலிருந்து 753 ஆம் ஆண்டில் கிறிஸ்த்து பிறந்தார் என்பதே அவரது கருத்து. என்றாலும் சரியான ஆண்டு எது என்ற கருத்து முரண்பாடு காணப்படவே செய்கிறது. இந்த ஆண்டுமானத்தைத்தான் நாம் தமிழில் கி.மு, கி.பி என்றும் ஆங்கிலத்தில் A.D (Anno Domini), A.C (Ante Christum) அல்லது B.C (Before Christ) என்றும் குறிப்பிடுகின்றோம். முதல் முதலில் இந்த ஆண்டுமானம் மூலம் கணக்கிடப்பட்ட கலண்டர் அமோகவரவேற்புப்பெற்று அங்கீகரிக்கப்பட்டது இத்தாலியிலேதான். பின்னர்தான் ஏனைய கிறிஸ்த்துவ நாடுகள் அங்கீகரித்தன. ஐரோப்பாவிலே கி.பி 1000 ஆண்டளவில்தான் நடைமுறைக்குவந்தது. இன்று பரவலாகி நடைமுறையிலிருக்கும் நிலை 14ம் நூற்றான்டிலேதான் அமுலுக்குவந்தது.

கிறிஸ்த்துக் காலண்டர் நடைமுறைக்குமுன் கிரேக்க நாட்டில் ஒலிம்பியா (Olympiads)  ஆண்டும் உரோமர்கள் நிர்மாண ஆண்டைக்கொண்டும்(abr urbe condita A.U.C) கணக்கிட்டனர். உரோமர்களின் ஆண்டுமானம் காலத்துக்குக்காலம் மாறக்கூடியதாய் காணப்பட்டது.

இந்தக்கிறிஸ்த்துக் கலண்டரின் ஆரம்ப மாதம் பல்வேறு ஆண்டுகளுக்கும் பல்வேறு பிரதேசங்களிலும் மாற்றங்காணக்கூடியதாய் இருந்தது. உதாரணமாக


25
ம் திகதி மார்ச்மாதம் (இயேசுநாதரின் அவதார நாள்)


25
ம் திகதி டிசம்பர்மாதம் (இயேசுநாதர் பிறந்தநாள் “Style of the Nativity”)

01ம் திகதி ஜனவரிமாதம்

இவ்வாறு ஏராளமான மாற்றங்களும் திருத்தங்களும் காணப்படுவதால் கிறிஸ்த்துக்கு முன்னுள்ள காலத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் பல்வேறு முறைகள் நடைமுறையில் கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றுதான் கி.மு.Catholic Encyclopedia (General Chronology) அது சம்பந்தமான சில விபரங்களைத்தருகிறது.

VIII  (கிரிகோரியன் காலண்டர்)

“The Gregorian Calendar today serves as an international Standard for civil use. In addition, it regulates the ceremonials cycle of the Roman Catholic and protestant Churches. Infect its original purpose was ecclesiastical. Although a variety of other calendars are in use today, they are restricted a particular religions or cultures.”

(The Explanatory Supplement to the Astronomical Alamance. P. Kennath)

“சர்வதேசமட்டம் எனும் அளவில் கிலிகோரியன் காலண்டர் இன்று நாடு சம்பந்தமான விடயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேலாக உரோமன் கத்தோலிக்க, புரடஸ்தான்து மத சம்பந்தமான விடயங்களை ஒழுங்குறக்கணிக்கிறது. உண்மையிலே அதன் அடிப்படை நோக்கமே மதசம்பந்தமான கிரியைகள்தான். இன்று உலகில் வேறுபல காலண்டர்கள் காணப்பட்டபோதும் அவைகள் யாவும் தனிப்பட்ட மார்க்க விடயங்களிலும் அல்லது கலாச்சார அமைவுடன் மட்டடுப்படுத்தப்பட்டேயுள்ளன.”

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கணக்குகளைப்பரிசீலித்ததில் 125 ஆண்டுகட்கு ஒரு முறை லீப்  (Leap) ஆண்டு ஒன்றை விடவேண்டும் என்பது எகிப்தியர்களால் கண்டறியப்பட்டது. ஆண்டின் சரியான நீளம் 365 ¼ நாட்களுக்குப் பதில் 365.2422 நாள்களாக இருப்பதுவே இதற்கான காரணம் ஆகும். இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆண்டு ஒன்றுக்கு 11 நிமிடம் 14 நொடிமட்டுமே. எனினும் 125 ஆண்டுகளில் இவ்வேறுபாடு ஒரு முழு நாளாக ஆகிவிடுகிறது. இதன்மூலம் ஆயிரம் ஆண்டுகளில் 8 நாள் வேறுபாடு ஏற்படுகிறது. ஆசியா மைனரிலிருந்து நிகயீயா (Nicaea)  என்னும் நகரில் கி.பி 325 ல் தேவாலய சபை ஒன்றுகூடி, இளவேனிக் கலாச்சமராப்பகல் நாளுக்கும், இளவேனில் வரும் ஈஸ்டர் பண்டிகை(Easter) நாளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தது. அதற்குப்பின் 1,220 அண்டுகள் கழித்து இத்தாலி நாட்டின் திரண்ட்(Trent) நகரில் கூடிய தேவால சபை ஒன்று இளவேனிற்கால சமராப்பகல் நாள்வரும் காலம்குறித்த விவாதித்தது.

இளவேனிற்க்காலச் சமராப்பகல் நாள் கி.பி 325 இல் மார்ச்சு 21ம் நாள் வந்திருந்தது. ஆனால் கி.பி 1257ம் ஆண்டுகளுக்குப்பின்னர் கி.பி 1582ல் இளவேனிற்காலச் சமராப்பகல் நாள் மார்ச்சு 11ம் திகதி வந்தது. இதன்காரணமாகக் காலக்கணிப்பு முறையில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. போப்பாண்டவர் பதிமூன்றாம் கிரிகரி (Gregory XIII) என்பவர் காலக்கணிப்பு முறையைச் சரிசெய்யும் பொருட்டு அப்பத்து நாள்களைத் தள்ளிவிட முடிவெடுத்தார்.

அவர் முடிவின்படி கி.பி 1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி நாளுக்கு அடுத்த நாளாக அக்டோபர் 15ம் நாள் வந்தது. நூற்றாண்டு ஆண்டுகளின்போது எண் 4 ஆல் மீதமன்றி வகுக்கப்பட்டால் “லீப்” லீப் ஆண்டு என எடுத்துக்கொள்வதற்குப் பதில் 400 ஆல் மீதமன்றி வகுபட்டால் மட்டுமே லீப் ஆண்டாக கொள்ளப்படும் என்னும் திருத்தம் புகுத்தப்பட்டது. பிரிட்டனும் அதன் அமெரிக்கக் குடியேற்றங்களும் போப்பு கிரிகரி கொண்டுவந்த திருத்தத்தை கி.பி 1752ம் ஆண்டில்தான் ஏற்றுக்கொண்டன.”

மாற்றம் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் 10 நாட்கள் வீழ்த்தப்பட்டன. ஆகையால் 1582 ஒக்டோபர் 4 க்கு அடுத்து ஒக்டோபர் 15 ஆகக் கருதப்பட்டது. கிரிகோரியின் மாற்றத்திலே ஜனவரி முதல் மாதமாக மீண்டும்(Julian Calendar) இன் அடிப்படையிலே அமைக்கப்பட்டதால் நிர்வாகப்பாவினை, மதப்பாவினை என இருவகையாக மாறியது. ஆயினும் கிறிஸ்த்து ஆண்டையே அது வெகுவாகக் கவனித்ததால் அந்த மதச்செல்வாக்கு இல்லாத அங்கீகாரம் கிடைக்க காலதாமதமாகியது. எவ்வாறெனினும் கிறிஸ்த்துவ மதங்களின் பெயர்கள் யாவும் உரோம, கிரேக்க தெய்வங்களையும், மன்னர்களையும் ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளன. டிசம்பர் 25 ஐயோ அல்லது மார்ச் 25 ஐயோ வருடத்தின் முதல் மாதமாகக் கணிப்பதற்கு கிறிஸ்த்துவர்களிடம் மதரீதியான காரணம் உண்டு. ஜனவரியை முதல் மாதமாகக் கருதுவதற்கு ஜேனஸ் என்ற ரோமானிய போர்தெய்வம் காரணமாக உள்ளத எனசில தரவுகள் தெரிவித்தாலும் ஆதாரபூர்வமான காரணங்கள் எதுவும் தென்படவில்லை.

இன்று எம்மத்தியில் உள்ளது கி.பி 1582ம் ஆண்டு (Pope Gregory XIII)ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட காலண்டரேயாகும்.

 

(காலப்பகுப்பு முறைமை)

இதுவரை சுருக்கமாக முக்கியமான ஒருசில கலண்டர்களைப்பற்றிப் பார்த்தோம். இங்கே எமக்கு ஒரு கேள்வியெழுவதற்கு வாய்ப்பு உண்டு:- “வருடம் 12 மாதங்களைக்கொண்டது. 12 மாதங்கள் ஒரு வருடம் ஆகும் மாதங்கள் 30 அல்லது31 நாட்களைக்கொண்டது. மாதத்தின் வாரங்கள் 7 நாட்களைக்கொண்டன நாட்கள் 24 மணித்தியாளங்களைக் கொண்டன. ஒரு மணித்தியாலம் 60 நிமிடங்களைக் கொண்டது ஒவ்வொரு நிமிடமும் 60 வினாடிகளைக்டிகொண்டது.” எனத்தீர்மானித்தவர்கள் யார்? இவைகளுக்கு ஓர் அடிப்படையுண்டா? என்ற கேள்வியே அது. இவைகளுக்கெல்லாம் இஸ்லாம் அழகிய பதிலைச் சொல்கிறது. இஸ்லாம்  உறுதியான பிறர்கையடித்து பிற கணிப்புக்கு நிகழ்ந்தது போன்று நிகழ்வுகள் ஏற்படாதவகையில் அடிப்படைகளை இட்டுத்தந்துள்ளது.

ஆனாலும் இஸ்லாமிய வட்டத்திற்கு வெளியே எவ்வாறு அவைகள் விவரிக்கப்படுகின்றன என்பதை சிறிது தெரிந்துகொள்வது நல்லது.

(வருடம்)

வருடம் இத்தனை மாதங்களைக் கொண்டதுதான் எனவரையறுத்துச் சொன்ன முதல் சமுதாயம் எது? உபயோகித்த நாகரீகம் எது? என்று போதியளவு வரலாற்றுச் சான்றுகள் இல்லை கலண்டர் சம்பந்தமான ஆய்வுகளை செய்த அதிகமான நூற்கள் வரலாற்றாதாரங்கள் இதற்குப்போதியதாக இல்லை என ஏற்றுக்கொள்கின்றன. வசந்தகாலம்இ கோடைக்காலம்இ இலையுதிர்காலம்இ குளிர்காலம் என்ற முக்கியமான நான்கு பருவங்கள் ஒரு வரிசையில் காலத்தில் மாறிமாறி வருவதை வைத்தும் சூரிய ஓட்டத்தின் அவதானிப்பை வைத்தும் அன்றைய வானியல் அறிஞர்களின் தகவல்களை வைத்தும் பெயரிடப்படாத ஒரு வகையான பகுப்பு நிலை அன்றைய  சமுதாயங்களில் காணப்பட்டது. ஆனாலும் அனைவரும் பார்த்து அறியும் வகையில் சந்திரனே தென்பட்டது. அதன் மாற்றங்களை கண்கூடாகப் பார்த்து அறியமுடியுமாக இருந்ததனால் சந்திரனின் சுழற்சியே வருடஇ மாதத்தீர்மானங்களிற்கு அடிப்படையாக இருந்தது எனலாம். ஏனெனில் ஜுலியன் காலண்டர் (Julian Calendar) ஹீப்ரு காலண்டர் (Hebrew Calendar)போன்ற காலண்டர்களிலே புவியின் சுழற்ச்சிக்கேற்ப மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதற்குமுன் இதுவல்லாத ஒரு அடிப்படை இருந்ததைக் காட்டுகிறது. இன்று வரையில் சந்திரோதய விழா யூதர்களிடத்தில் காணப்படுகிறது. இதனால்தான் பண்டைய சமுதாயங்களின் மாதப்பெயர்கள் காலத்தைக் காட்டுவனவாக இருக்கவில்லை. தெய்வங்கள்இ மன்னர்களின் பெயர்களாலேயே மாதங்கள் அழைக்கப்பட்டு  நினைத்தமாத்திரத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டன. உரோமியஇ ஜுலியன்இ கிறிஸ்த்துவ காலண்டர்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். மாதங்களிற்கு காலத்தை ஒத்த அடிப்படையில் முதல்முதலில் பெயரிட்டவர்கள் பாபிலோனியர்கள் எனலாம். ஆனாலும் முழுமையாக அது காலங்களை பிரித்துக்காட்டவில்லை. எனவே முதன்முதலின் மக்களால் கணக்கிடப்பட்டது சந்திரவருடம்இ பின்னர் சூரியவருடம்இ நட்சத்திரவருடம் எனலாம்.

1.    
சூரியவருடம் 30 அல்லது 31 நாட்களைக்கொண்ட 12 மாதங்களால் அமைந்த 365 ¼ அல்லது 366 மொத்த நாட்களைக்கொண்டது.
2.    
சுந்திரவருடம் 29 அதல்லது 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்களால் அமைந்த 353 அல்லது 354 அமாத்த நாட்களைக்கொண்டது.
3.    
நட்சத்திரவருடம் (Sidereal Year) புவிச்சுழற்ச்சியை நட்சத்திரங்களை வைத்துத்தீர்மானிப்பதே நட்சத்திரவருடம். இதுவும் பெரும்பாலும் 365 ¼ நாட்களைக் கொண்டதாகவே அமைகிறது.

எப்பொழுது சந்திரமாதங்களை சூரியவருடங்களுடன் இணைத்துப்பார்க்க ஆரம்பித்தார்களோ அன்றுமுதல் கூட்டல்கள் கழித்தல்கள் பெருக்கல்களும் வகுத்தல்களும் நுழைந்து காலக்கணிப்பு முறையில் குழப்பங்களுக்கு வழிவகுத்தன.

(மாதம்)

மாதம் என்பது அமாவாசையின் அடுத்தநாள் சந்திரப்பிறப்பிலிருந்து அடுத்த அமாவாசை இடம்பெரும்வரை கணக்கிடப்பட்டது. இதுவே பண்டைய சமுதாயங்களிலும் ஆரம்பமாதங்களிலும் காணப்பட்டது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஜுலியஸ்ஸீசரின் மாற்றத்திற்குமுன்னர் எப்பொழுதும் மாதம் 31 நாட்களாக இருந்ததில்லை. எவ்வாறாயினும் பருவகாலங்களிற்கு ஒத்தவகையில் கணிப்பை ஆக்கிவிடுவதுதான் நோக்கமாக இருந்ததே அன்றி சூரிய சுழற்சிபோன்று தோன்றும் புவிச்சுழற்ச்சிக்கு(?) எந்தவொரு மாதரீதியான அடிப்படையும் இல்லை. இதனால்தான் நட்சத்திர அமைவை சிலர் கையாண்டார்கள். சூரியன் உதிப்பதற்கு முன்னால் கிழக்கில் தோன்றும் ஒரு சட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து சிலர் மாதத்தைக் கணித்தனர். சிலர் வான நட்சத்திரங்களை இராசிகளாக மேடம் இரிடபம்….. எனவகுத்து எந்த இராசியில் சூரியன் அன்று  காணப்படுகிறதேh அதைவைத்து மாதத்தைக் கணித்தார்கள். கேரளத்தில் மாதங்கள் இவைகளின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

மாதங்களிற்கொரு ஒழுங்கு காணப்படாததனால்தான் பெப்ரவரி 29 ஆகவும் பின்னர் 28 ஆகவும் ஆக்கப்பட்து. டிசம்பர் 30 ஆகவும் பின்னர் 31 ஆகவும் ஆக்கப்பட்டது. ஒக்டோபர் 30 ஆகவும் பின்னர் 31 ஆகவும் ஆக்கப்பட்டது. தோத் (Thoth)  இன் கணிப்பில் பருவங்களுடன் கணிப்பு ஒத்துவருவதற்காக சேர்க்கப்பட்ட மேலதிக நாட்கள் வருடங்களில் கணக்கிடப்பட வில்லை. சீசர் அதனைப்பரித்து மேலும் ஒன்றைச்சோர்த்து மாதங்களிற்கு பகிர்ந்தளித்து 31 29 30 31 30……. என்ற வரிசையில் அமைத்தார். லீப்வருடங்களின்போது பெப்ரவரியில் 1 நாள் கூட்டப்படுகின்றது. அதே ஒருநாள் 125 வருடங்களிற்கொருமுறை கூட்டப்படுவதில்லை. நினைத்தமாதத்தில் மாதங்களில் சிலநாட்கள் கணக்கெடுகப்படுவதில்லை. நினைத்த மாதத்தில் கூட்டப்படுகின்றன. சிலவருடங்களின் நாட்கள் நானூறிற்கும் அதிகமாக்கப்படுகின்றன. எந்த மாதம் முதலாவது வரவேண்டுமென்ற மார்க்கரீதியான அடிப்படை கிடையாது. நாடும்பட்சத்தில் டிசம்பர் 25 முதல்மாதத்தில் ஆரம்பநாள் அல்லது மார்ச்சின் 1ம் திகதி ஆரம்பநாள் அல்லது மார்ச்சின் 25ம் திகதி ஆரம்பநாள் அல்லது ஜனவரி 1ம் திகதி ஆரம்பநாள் பருவங்களிற்கேற்ப கணித்தலை வகுத்தல் என்ற தத்துவமே இதற்குக் காரணம்.

(வாரம்)

நாட்களின் தொகுப்பே மாதம். இத்தொகுதியைய் வாரங்களாய் வகுத்தது யார்? அவ்வாறு வகுக்கப்பட்ட வாரங்களிற்கு 7 நாட்கள் மாத்திரம்தானா இருந்தன? சற்றுக்கடினமான வினாக்களாக இது இருந்தாலும் ஒரு சில விடைகள் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு சில மதக்கலாச்சாரப் பின்னணிகள் இருந்தாகவேண்டும். கிழமைக்கு சம்பந்தமில்லாமல் மாதங்களும் வருடங்களும் துவங்குகின்றன. திங்கள் முதல்நாள் என்றால் திங்களிலேயே மாதமோ வருடமோ ஆரம்பிப்பதில்லை மாதத்திலே 30 அல்லது 31 நாளிற்கு 7 நாட்களின் பெயர்களே மாறிமாறி வருகின்றன. ஜுலியன் காலண்டரிலோஇ கிறிஸ்த்துக் காலண்டரின் ஆரம்பங்களிலோ கிழமைகளோ நாட்களிற்குப் பெயர்களோ காணப்படவில்லை. 5000 வருடங்களிற்கு முன்னால் வாழ்ந்த தோத் (Thoth) என்பவரே மாதங்களை மூன்று பிரிவுகளாக பிரித்ததாக அறியப்படுகிறார். அவ்வாறெனின் வாரத்தின் ஆரம்பம் 10 நாட்களைக்கொண்டதாக அமைந்தது எனலாம். வாரம் ஒன்றில் ஏழு நாட்கள் இருக்கும் நடைமுறை கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான் நடைமுறைக்கு வந்தது. “வாரத்தில் நான்குஇ ஐந்துஇ ஆறுஇ எட்டுஇ பத்து நாட்கள்கூட பழங்காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களில் கடைப்பிடிக்கப்படடு வந்திருக்கின்றன.

இன்றுஞ்சில நம்பகமான தரவுகள் பின்வரும் விபரங்களைத்தருகின்றன. கி.மு 2000 அளவில் பாபிலோனியர்களிடமும்இ பாரசீகர்களிடமும்இ சீனர்களிடமும் கிழமைக்கால அளவு பயனபடுத்தப்பட்டுட்டது. கல்தானியர்களே முதன்முதலாக ஏழு நாட்கள் ஒருவாரம் என்ற அளவை உபயோகித்திருக்கவேண்டும். சந்திரனுக்கும் வாரங்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும். யூதர்கள் இச்சிந்தனைக்கேற்ப வாரங்களை அமைத்ததன் காரணம் அல்லாஹ் 6 நாட்களில் படைப்புக்களை படைத்ததன்பின்னர் 7ம் நாள் ஓய்வெடுத்தான் என்ற நம்பிக்கையே.  சட்டபூர்வமாக உரோம் நகரம் வந்தபின் இச்சிந்தனை தழுவிக்கொண்டது. அதுவே இன்று உலகெங்கிலும் பின்பற்றப்படுகின்றன.

கிழமை நாட்களுக்குப் பெயர் சூட்டப்படும் காலங்களில் நெப்டியூன்இ புளுட்டோஇ யுரேனஸ் போன்ற கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கவில்லை. 5 அல்லது 6 கோள்களே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதுவும் கிழமைநாட்கள் ஏழாகவர காரணமாக அமைந்திருக்கலாம். ஏனெனில் இப்பொழுதுள்ள கிழமைநாட்கள் கோள்களைக்கொண்டே பெயர் சூட்டப்பட்டுள்ளன. ஞாயிறு(சூரியன்) திங்கள்(சந்திரன்) செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி(கோள்கள்).

கிழமைநாட்கள் ஆறாக மாற்றப்படவேண்டும் என்ற சிந்தனை வலுப்பெறவேண்டும். தஞ்சைவூர் தமப்பல்கலைக்கழகம் பின்வரும்  வேண்டுகோளை விடுகின்றது.

“புதியகாலக்கணிப்பு முறைப்படி ஐந்து அல்லது ஆறுவாரங்கள் தவிர மற்றவாரங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைவிடப்படும் ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமையில் தொடங்கிஇ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் முடிவடையும் சனி ஞாயிறுகள் அனைத்தும் விடுமுறை நாட்களாக இருக்கும். இப்புதிய கணிப்பு முறையில் மாதம் ஒவ்வொன்றிலும் ஐந்து வாரங்கள் வீதம் ஆண்டு ஒன்றில் அறுபது வாரங்கள் இருக்கும்…….”                (வாழ்வியற்களஞ்சியம் 7:240)

இங்கே வாழ;வியற்களஞ்சியம் சுட்டிக்காட்டும் அந்தப்புதிய திட்டம். “கி.பி 1887 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு 1930 ஆண்டு உருவாக்கப்பட்டது. உலகக்காலக்கணிப்புச்சங்கம் (World Calendar Association)  இதனை ஆதரித்தபோதும் அதைச்சார்ந்த ஒருகுழு (Committe)  ஏற்க மறுத்ததால் இச்சபையின் பொதுச்சங்கம் (General Assembly)இதனை வாதிக்க எடுத்துக் கொள்ளவிலலை.” (வாழ்வியற்களஞ்சியம் 7:240)

 (நாள்  மணித்தியாலம்  நிமிடம் வினாடி)

ஒரு முழுமையான இரவும் ஒரு முழுமையான பகலுமே ஒருநாள் என்பது இயற்கையிலே அமைந்துவிட்டது. நாளின் ஆரம்பம் பல நாடுகளில் பலவாறு உள்ளது.

பெரும்பான்மையான நாடுகள் நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒருநாள் என்றே கணிக்கின்றன. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனபூமியில் உள்ள யூதர்கள் மாலைமுதல் அடுத்தநாள் மாலைவரை என்று நாளைக் கணக்கிடுகின்றனர். சில நாடுகளில் காலையில் இருந்து நாட்கள் ஆரம்பிக்கின்றன. வானியல் அறிஞர்கள் நண்பகல் தொட்டு அடுத்தநாள நண்பகல் வரை ஒருநாளைக் கணக்கிடுகின்றனர். பிந்திய இரவு முதலாவதாகவும் முந்திய இரவு இரண்டாவதாகவும் வரச்செய்யும் இந்நாள் பொருத்தமாக இல்லை. இதை முதல் முதலில் கையாண்டவரககள் எகிப்தியர்களும் உரோமர்களுமே.

நாட்களை அளக்கும்(Horology) மணித்தியாலம் 24 மணிநேர அளவாக ஆக்கப்பட்டது புதிதாகவே. ஆரம்பத்தில் 10 மணித்தியாலங்களாகவும் 100 நிமிடங்களாகவும் ஒவ்வொரு நிமிடமும் 100 நொடிகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன.

“24 மணத்தியாலங்கள் 60 நிமிடங்கள்  என்ற கணிப்பு பண்டையகால பாபிலோனிய கணிப்பாகும். அவர்கள் பூமிச்சுழற்சியை 12 சமபகுதிகளாகப் பிரித்தனர். இவ்வாறுதான் 24 மணித்தயால முறை ஏற்படுத்தப்பட்டது….. பாபிலோனியர்கள்(தான்) வட்டத்தை 360 பகுதிகளாகப் பிரித்தனர். இன்று அப்பரிவுகள் பாகை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. வானவியலாளர்கள் ஒவ்வொரு பாகையையும் 60 நிமிடங்களாகப் பிரித்தனர்.” (World Book Encyclopedia 19/256)

ஆனாலும் உறுதியாக இந்த முறை காலப்பகுப்பு எப்பொழுது ஆரம்பித்தது எனச்சொல்லமுடியாது என்பது (World Book Encyclopedia) வினதும்(Houdon Encyclopedia)  வினதும் முடிவாகும்.

(ஆண்டுமானம் (Era))

காலத்தைக் கணித்தல் ஒரு பிரபல்யமான  நிகழ்வை எல்லையாக வைத்தே நடந்து வருகிறது. இதனையே ஆண்டுமானம் என்கிறோம். உதாரணமாக

  1.  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் (Abraham)  1 ஒக்டோபர் 2016 கி.மு
    2.    
    ஓலிம்பியா 13 ஜுலை 776 கி.மு
    3.    
    சட்டபூர்வமான உரோமின் நிர்மாணம் 21 ஏப்ரல் 753 கி.மு
    4.    
    அலக்சான்டர் 12 நவம்பர 324.
    5.    
    ஜுலியஸ் சீசர் 1 ஜனவரி 45 கி.மு.
    6.    
    ஹிஜ்ரி 16 ஜுலை கி.பி 622.

இன்னும் ஏராளமான முக்கிய நிகழ்வுகளில் இருந்து காலங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இவைகள்தான் மிகப்பிரபல்யமானவைகள். யூதஇ கிறிஸ்த்துவ மதங்களில் பற்பல ஆண்டு மானங்கள் தோற்றப்பட்டு வழக்கொழிந்துள்ளன. ஆனாலும் மிகவும் ஆச்சரியமான ஆண்டுமானம் யாதெனில் ஆர்கபிஷொப் (Archbishop usher)போன்ற காலக்கணிப்பாளர்களால் -கிறிஸ்த்துவர்- உருவாக்கப்பட்ட ஆண்டுமானமும் யூஸா -யூதர்- மூலம் ஆக்கப்பட்ட உலக ஆரம்ப ஆண்டுமானமும்தான். இதனை கிறிஸ்த்துவர்கள் கைவிட்டாலும் யூதர்களிடம் இன்றும் அந்தக் காலண்டரே நடைமுறையில் உள்ளது. இது ஒரு காலத்தில் A.M (Annomundi) என்ற ஆண்டுமானப் பெயரில் நடைமுறையில் இருந்தது. இவைகள் தனியாக ஆய்வு செய்யப்படுதல் சில யதார்த்தங்களை புரியவைக்கும் என நம்புகின்றன.

இனி நாம் இஸ்லாமிய உலகிற்கு வருவோம். இந்த வரலாற்றுப் பின்னணியில் இஸ்லாமிய காலக்கணிப்பை(Islamic Chronology) ஆயும்போதுதான் இஸ்லாமிய சட்ட ஒழுங்குகள் எவ்வளவு உறுதியானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.உண்மையில் இஸ்லாம் எந்தத்துறையை உடுத்து நோக்கினாலும் ஓர் அறிவுப்பூர்வமான அடிப்படையிலே அனைத்து அம்சங்களை அமைத்துத்தருகிறது. இங்கே நாம் ஹிஜ்ரி ஆண்டுமானத்தையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் ஆராயும் முன்னால் ஜாஹிலிய்யாக்கால அரபு மக்களது காலக்கணிப்புமுறையை சிறிது நோக்குவது சிறந்தது.

(ஜாஹிலிய்யாக்கால காலக்கணிப்புமுறையும் ஆண்டுமானங்களும்)

இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாத்தின் பரம்பரையில் வந்தவர்களையே நாம் அரபுல் முதஅர்ரிபா என்கின்றோம். இந்த அரபுல் முதஅர்ரிபாவும் அரபுல் ஆரிபாவும் சேர்ந்தே அரபிகள் என அழைக்கப்படுகின்றார்கள். இவர் ஹாஜரா(அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக)   என்னும் அரபிப்பெண்ணுக்கு பிறந்ததன்காரணமாக இவர்கள் யஹ{திகள் மூலம் இழிவானவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்களை யஹ{திகள் “உம்மியூன்” என அழைத்தனர். இதனால் நபியவர்கள் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில் வந்ததால் நிராகரித்தார்கள். ரஸ{ல் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் வருவதற்கு முன்னர் அந்த மக்களுக்கென ஒரு வேதம் இருக்கவில்லை. இணைவைப்பும், அநியாயங்களும், வீணான யுத்தங்களும் மலிந்து காணப்பட்டன. இதனாலே அக்காலப்பகுதி “ஜாஹிலிய்யாக்காலம்” என அழைக்கப்படுகிறது. வேதத்தை அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பிவைத்து மார்க்க அறிவை அவர்களுக்கு இறைவன் அளித்த பின்னர் அவர்களே உண்மையான அறிஞர்களாக மாறினார்கள்.

அரபுகளுக்கு மத்தியிலே பரம்பரை சம்பந்தமான அறிவும் கவிதை இயற்றும் திறனும், மனனனும் உயிர் நிலையில் காணப்பட்டன. அவர்களும் சில முக்கயமான நிகழ்வுகளை வைத்து சில வரலாறுகளைக் கணித்துவந்தார்கள்.

உதாரணமாக:- யவ்முல் பர்தான், யவ்மு கஸாஸ், யவ்மு உபைத் உபாக், யவ்மு உவாரா, யவ்மு மபாகிழ், யவ்முல் கைத், யவ்முஸ்ஸல்வான், யவ்முல் பலஜ், யவமுர்ரபீஃ, யவ்முல் பகீஃ, யவ்முல் பஜார்.

இதுபோன்ற முக்கியமான யுத்த நாட்கள் ஆண்டுமானங்களை காணக்கிடைக் கிடைக்கின்றன. முக்கியமான சில நாட்களை வரலாற்றாகவைத்து கவிதைகளும் இயற்றியும் வந்தார்கள்.

  1.  நாபிகாவின் கவிதையில் காணப்படும் “யவ்முஹலிமா”,“அஸ்மானுஆத்” போன்ற பிரசித்திபெற்ற நாட்கள்.         (ஷவாஹிதுத் தவ்லீஹ் வத்தஸ்ஸீஹ் லிஇப்னிமாலிக் ப-132)
    2.   அதேபோல் நாபிகாவின் கவிதைகளிலும் பிறரது கவிதைகளிலும் அதிகமாகப்பயன்  படுத்தப்படும் “யவ்முல் குனான்” அவர்களுக்கு வரலாறாக இருந்தது.
    (அல்முஅம்மரீன மினல் அரப் லிஅபீஹாதிம் பஸரி ப-89)
    யவ்முல் ஹலீமா:– “முன்திர் இப்னுல் முன்திரின் ஒரு முக்கிய நிழ்வுடன் சம்பந்தப்படுகிறது”      அந்நிகழ்வு எது என்பதில் முரண்பாடு உள்ளது.
    யவ்முல் குனான்:– முன்திர் பின் பாகஇஸ்மாவின் காலத்திலே மூக்கைப்பாதிக்கும் ஒரு நோய் பரவியது இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவே இப்பெயரால் பிரபல்யமானது.

அரபுகளுடைய ஜாஹிலியாக்கால ஆண்டுமானங்களைப் பற்றி இமாம் இப்னுல் அஸீர் இவ்வாறு கூறுகிறார்:-
“இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் அரபுநாடுகளில் இப்ராஹீமுடைய மக்கள் நபி இப்ராஹீம் நெருப்பில் இடப்பட்ட நாளையும் பின்னர் இவரும் நபி இஸ்மாஈலும் கஃபா கட்டிய நாளையும் பின்னர் இஸ்மாஈலுடைய மக்களும் கஃபா கட்டிய நாளையும் ஆண்டுமானங்களாக வைத்து கணித்தார்கள் பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது……. பின்னர் கஃப் இப்னு லுஆவின் மௌத்தை யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே ஆண்டுமானமாய் இருந்தது…… அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப்படுத்தினார்கள். அவர்கள் அனைவருக்குமாக ஒரு ஆண்டுமானம் இருக்கவில்லை …… அவர்களுக்கு ஒரு ஒன்றுபடக்கூடிய ஆண்டுமானம் இருந்திருந்தால் வரலாறிலே இவ்வாறு வேறுபட்டிருக்க மாட்டார்கள். (அல்காமில் 1:11.12)

இது அவர்களின் ஆண்டுமானங்களின் நிலை. அரபுகள் மாதங்களை “முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல்……” என்று அழைக்க முன்னர் வேறு பெயர்களும் காணப்பட்டன. அரபுகளிடம் ஜாஹிலிய்யாக் காலத்தில் சந்திர மாதங்களை சூரியவருடத்துடன் இணைப்பதற்காக ஏனைய சமுதாயங்கள் எவ்வாறு ஒரு மாதத்தை கூட்டினார்களோ அந்நடைமுறையும் காணப்பட்டது. இதனை “நஸீஆ” (Interclation) என அழைத்தனர். அதிகரிக்கபப்படும் அவ்வருடம் “அல்கப்ஸா” என அழைக்கப்பட்டது. இந்த சந்திர சூரிய(Lunisolar) அமைப்பு அவர்களுக்கு மத்தியில் பிரபல்யமாகக் காணப்பட்டது. அரபுகள் 4 மாதங்களை கண்ணியமான மாதங்களாகக் கருதி வந்தார்கள். முஹர்ரம், ரஜப், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா என்பவையே அம்மாதங்கள். ஆனாலும் இந்த வரிசைப்படுத்துதல் ஒழுங்கு சீர்குழைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மத்தியில் மாதங்களை தீர்மாணிக்கக் கூடிய ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் “கலம்மஸ்” (القلمس) என அழைக்கப்பட்டார். ஒவ்வொவொரு  கோத்திரமும் இன்னொரு கோத்திரத்துடன் போர் செய்ய நாடினால் அவர்கள் கண்ணியமான நான்கு மாதங்களில் ஆரம்பிப்பதில்லை ஆனாலும் அம்மாதம் யுத்தத்துக்கு பொருத்தமாகக் காணப்படின் “கலம்மஸ்” இற்கு இலஞ்சம் வாங்கி கண்ணியமான மாதம் ஒன்றை முற்படுத்தி இன்னொரு மாதத்தை அதற்கு மன்னராக வரச்செய்தனர். துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் என ஹராமான மாதங்கள் தொடர்ச்சியாக வருவதால் அவர்களுக்கு அது தடங்களாக இருந்தது. ஸபர் மாதத்தை முற்படுத்தி முஹர்ரம் இரண்டாவதாக வரச்செய்வார்கள். அதனால் மாதங்களின் ஒழுங்கு மீறப்பட்டது. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ் நிகழவில்லை. நபியவர்களுக்கு முன்னர் அபூபக்கர் செய்த ஹஜ் கூட துல்கஃதாவிலேயே நிகழந்தது. நபிகளார் தங்கள் ஹஜ்ஜைப் பிற்படுத்திய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதனாலேயே நபியவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜிலே இவ்வாறு கூறினார்கள்.

“வானங்கள் பூமியைப் படைக்கும் நாளில் இருந்ததற்கமைய காலம் அதன் அமைப்பை பெற்றுவிட்டது. வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும். அதில் நான்கு கண்ணியமான (ஹராமான) தாகும். துல்கஃதாஇ துல்ஹிஜ்ஜாஇ முஹர்ரம் என்பன என்பன தொர்ந்து வருபவையாகும். (அடுத்து) ஜமாதாவிற்கும் ஷஃபானிற்கும் இடைப்பட்ட ரஜபுமாகும்.”

அதே போல் இறைவன் திருமறையிலே “நஸீஃ (மாத அதிகரிப்பு) குப்ரில் இன்னும் மேலோங்குதலாகும். இறை நிராகரிப்பாளர் அதன் மூலம் வழிகெடுக்கப்படுகிறார்கள்.” என்று கூறுகின்றான்.

இமாம் இப்னு தைமியா அவர்கள் (பயானுல் ஹ{தா மினல்லலால் பீ அம்ரில்ஹிலால்) என்ற நூலிலே “நபிகளாரின் ஹஜ்ஜிற்கு முன்னர் துல்ஹிஜ்ஜாவிலே ஹஜ் வருவதில்லை அபூபக்ரின் ஹஜ் கூட துல்கஃதாவிலேயே நிகழ்ந்தது.” எனக்கூறுகிறார்.

இங்கே ஒரு முக்கிய விடயத்தை சுட்டவேண்டும் P.H.D ஹஸன்லால் அவர்கள் “கலம்மஸ்” என்ற வார்த்தையை பின்வருமாறு சொற்பகுப்பாய்வு (Derivation) செய்கிறார்:

“கலம்மஸ்” (القلمس) என்ற வார்த்தை லத்தீன் (Lathin) மூலத்தைக் கொண்டதாக இருக்கலாம். ஏனென்றால் மாதங்களை சொல்லக்கூடிய “கலன்தஸ்” (كلندس) என்ற வார்த்தை அம்மொழியில் காணப்படுகிறது. இதிலிருந்துதான் ஆங்கிலத்திலும்(Calendar)  பிரெஞ்சு மொழியிலும், இத்தாலிய மொழியிலும் உபயோகிக்கக்கூடிய காலக்கணிப்பு என்ற கருத்தைக்கொண்ட சொற்கள் பிறந்தன. “… பைரூஸ் ஆபாதியின் காமூஸ் அல் முஹீதின் வார்த்தைப் பிரயோகத்தை நோக்கையில் “கலம்மஸ்” என்று மாதங்கணிப்பாளர் என்ற கருத்தில் வரக்கூடிய சொல் சிறப்புப்பெயர் அல்ல “காலக்கணிப்புச் செய்தல்” என்றதொழிற் பெயரே என்பது விளங்குகிறது. ஜாஹிலிய்யா இணைவாப்பாளர்களுக்கு மத்தியில் காணப்பட்ட குறிபார்த்தல், சாஸ்த்திரம் போன்ற ஒரு தொழிலாக இது இருந்திருக்கலாம்.”

கலம்மஸ் என்று பெயர் பெற்றவர்கள் கினானா கோத்திரத்தைச் சேர்நதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கினானா வழிவந்த “கலம்மஸ்” சம்பந்தமான ஒரு வரலாற்றுக் குறிப்பை முஅம்மரீன மினல் அரப்” என்ற நூல் எமக்குத் தருகிறது.

உண்மையில் ஜாஹிலியக்காலக் கணிப்புமுறை தனியான தலைப்பில் விரிவாக ஆயப்படவேண்டிய அம்சமாகும். ஆயினும் மேற்சொல்லப்பட்ட விபரங்கள் ஒரு சுருக்கமான பார்வையை அதுபற்றி எமக்களிக்கப் போதுமனதாகும்.

இஸ்லாமியசட்டங்களை ஆயமுற்படும் ஒவ்வொருவரும் அவைகளை அலசி ஆராய்கையில் அதன் சீரிய நோக்கங்கள் ஒரு முழு அடிப்படையுடன் தொடர்புருவதை கண்டு கொள்வார்கள். அதேபோன்று காலக்கணிப்பு முறைக்கு இஸ்லாம் வகுத்துத் தந்த அடிப்படைகளும் குர்ஆன் ஸுன்னா தெளிவாக வார்த்தைப்படுத்திச் சொன்னவைகளும் அல்குர்ஆனில் அதுவின்றி வரலாற்றை ஒப்புவிக்க கையாளப்படும் முறைகளும் நபியவர்களதும் தோழர்களதும் காலக்கணிப்பு சம்பந்தமான நடைமுறைகளும் இவ்வடிப்படைகளின் மூலாதாரங்களாகக் கொள்ளப்படும். காலக்கணிப்பிற்கு இருகூறுகள் உள்ளன.

(ஒன்று) இயற்கைக்கூறுகள்,

(இரண்டு) இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக் கூறுகள்.

இயற்கைக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக்கூறுகள் தோற்றங்கண்டு வளர்ச்சியுற்று திட்டமிடப்பட்டன. இன்று இயற்கைக்கூறுகளின் செல்வாக்கைவிட செயற்கைக்கூறுகளின் செல்வாக்கே வியாபித்திருக்கின்றது. அதேபோல் இயற்கைக்கூறுகள் இரு கிளைகளைக்கொண்டதாகும்.

(1) புலனியல் சார்ந்தது.

(2)கணிப்பியல் சார்ந்தது.

அதேபோன்று இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக்கூறுகளும் மூன்று வகைப்படும்.

(1) புலனியற் சார்ந்த செயற்கைக்கூறுகள்.

(2) கணிப்பியல் சார்ந்த செயற்கைக்கூறுகள்.

(3) புலனியலிலும் கணிப்பியலிலும் சார்ந்த செயற்கைக்கூறுகள்.

(இயற்கைக்கூறுகள்)

அதாவது உலகம் படைக்கப்பட்ட நாள் முதற்கொண்டு காலத்தை அறிந்து கொள்ள அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அடையாளங்களையே இயற்கைக்கூறுகள் என வார்த்தைப் படுத்துகின்றோம். சூரியன். சந்திரன். நட்சத்திரங்கள். பருவமாற்றங்கள். இரவு. பகல். நிழல்கள் என்பனவே அந்த இயற்கைக் கூறுகள். பருவம் தவிர்ந்த அனைத்தும் தன்னிலேயே தங்கியிருப்பதால் அல்லாஹ் அதற்கு பிரிதொன்றில் அடையாளங்களை ஆக்கவில்லை. ஆனால் பருவங்கள் வசந்த காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என நால்வகைப்படுவதால் அல்லாஹ் தனித்தனியாக, பிரத்தியேகமான அடையாளங்களை அவைகளுக்கேற்படுத்தியுள்ளான். மழை, மேகம், மலர் பூத்தல்,  இலையுதிர்வு, பசுமை, …… என வேறு அடையாளங்களை ஏற்படுத்தியுள்ளான். இதை இன்னொரு வகையில் அடையாளப்படுத்துவதாயின் பருவம் தவிர்ந்த அனைத்திற்கும் பகுத்துப்பார்க்கக்கூடிய வடிவமைப்பும் உண்டு ஆனால் பருவங்களிற்கு அடையாளங்கள் மாத்திரமே உள்ளன. சூரியனை அறிய அடையாளம் தேவையில்லை. ஆனாலும் சூரியனுக்கு சில தன்மைகள் உண்டு அவ்வாறே ஏனையவைகளும். இந்த இயற்கைக்கூறுகள் புலன்களாலேயே அறியப்படுகின்றன. இயற்கைக்கூறுகள் மாற்றங்காட்டும் போது காலங்கள் மாறுகின்றன அடையாளப்படுத்தப் படுகின்றன.     இப்புலனியியல் மையமாகவைத்தே கணிப்பியல் ஏற்படுத்தப்படுகிறது.

பகலில் சூரியன் வரும் என்பது கணிப்பியல்.

சூரியன் வந்தால் பகல் என்பது புலனியல்.

இன்று ஏப்ரல் முதல் மே வரை வசந்தகாலமும், மே முதல் ஆகஸ்ட் வரை கோடைகாலமும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இலையுதிர்காலமும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமும், மார்ச் முதல் மே வரை பின்பனிக்காலமும் வரும் என்பது கணிப்பியல்.

வசந்தகாலம் (இளவேனிற்காலம்) இரவும் பகலும் உள்ள மார்ச் 21ம் திகதி முதல் மிகநீண்ட பகல் கொண்ட ஜுன் 21ம் திகதி வரை வடஉருளப்பாதையில் (Northen Hemisphere) நீடிக்கிறது என்பது கணிப்பியல்.

மிகநீண்ட பகல் கொண்ட ஜுன் 21ம் திகதி முதல் இரவும் பகலும் மீண்டும் மீண்டும் சமமாக உள்ளது செப்டம்பர் 21ம் நாள் வரை வடஉருளப்பாதியில் நீண்ட இரவு காணப்படும் என்பது கணிப்பியல்.

டிசம்பர் 22ம் திகதி வரை இலையுதிர்காலம் அங்கு காணப்படுகிறது. டிசம்பர் 22 முதல் மார்ச் 21 வரை குளிர்காலம் வடஉருளப்பாதியில் வருகிறது என்பது கணிப்பியல்.

இவ்வாறு அடையாளங்களை வைத்துத் தீரமானிக்கப்பட்டு கணிப்பிடப்படும் யாவும் கணிப்பியலாகும். அதுவல்லாமல் பொது அடையாளங்களை வைத்து நாம் கண்டு, கேட்டு, உணர்ந்து தீர்மானித்துப் பழகிய இயற்கைச் செயற்பாடு புலனியலாகும். கணிப்பியல் தவறலாம். புலனியல் தவறாது. புலனியல் இயற்கையானது கணிப்பியல் செயற்கையானது. காலண்டர்கள் திருத்தங்கள் கணிப்பியலிலேதான் மேற்கொள்ளப்பட்டன. திருத்தங்களை மேற்கொள்ள உதவியாக இருந்ததும் அடிப்படையாக இருந்ததும் புலனியலே.

(இயற்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக்கூறுகள்)

நூற்றாண்டு, அரையாண்டு, காலாண்டு, வருடம், மாதம், கிழமை, நாள், மணித்தியாலங்கள், நிமிடம், வினாடி, மாதப்பெயர்கள், தினப்பெயர்கள், திகதியெண்கள் இவைகள் யாவும் செயற்கைக்கூறுகளாகும். இவைகளில் வருடம், மாதம், நாள் என்பன புலனியல் கொண்டும் தீர்மானிக்கப்படுகின்றன. கணிப்பியல் வைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. புலனியலும் கணிப்பியலும் இணைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன:

  1. புவி சூரியனைச்சுற்றிவர 365¼ எடுக்கும் நாள் ஒரு வருடம் என்றும் மாதம் 30 அல்லது 31 நாட்களைக்கொண்டது என்று தீர்மானிப்பது சுத்தமாக் கணிப்பியலாகும். ஆனாலும் இங்கு மாதம் என்ற செயற்கைக்கூறிற்கு இயற்கை அடிப்படையில்லை.
  2. பிறையின் முதற்பிறப்பை கண்ணால் கண்டு அடுத்த முதற்பிறப்பு வரை மாதம் என்றும் அவ்வாறான 12 சுழற்ச்சிகள் வருடம் என்பதும் புலனியலாகும். ஆனாலும் இங்கு வருடம் என்ற செயற்கைக்கூறிற்கு:- அதாவது 12 என்ற எண்ணிக்கைக்கு இயற்கைக்கூறு அடிப்படையாக இல்லை.
  3. மேற்சொன்னதையே Degree யைக்கொண்டு அல்லது விண்மீன் குழுக்களின் ஊடாக (Constllations) பயணத்தைக்கொண்டு தீர்மானித்தல் சந்திரக்கட்புலக்காட்சி எதுவும் இல்லாவிடின் அது கணிப்பியலாகும்.
  4. மாதத்தை பிறைமுதற்பிறப்பின் காட்சியைக்கொண்டும் வருடத்தை பூமி சூரியனைச்சுற்றிவர எடுக்கும் 365¼ நாள் எனக்கருதப்படும் அளவைக்கொண்டும் தீர்மானிப்பது புலனியலும் கணிப்பியலும் களந்ததுவாகும்.

அதிகமாக மூன்றாவது குழுவினர்களிடம் சூரியவருடம் கணிப்பியலாக அமையும். அது எவ்வாறெனில் சந்திரன் பூமியைச்சுற்றி 12 முறைகள் வர எடுக்கும் காலம் 354 ஆகும். ஆனால் சூரியவருடம் 365¼ நாட்களைக் கொண்டதாகும். எனவே இரண்டிற்குமிடையிலே உள்ள வித்தயாசம் கிட்டத்தட்ட 11 நாட்களாகும். இந்தவித்தயாசம் 33 வருடங்களில் 1வருடமாகப் பெருகிவிடும். ஆனாலும் 3 வருடங்களிற்கொருமுறை இந்தவித்தியாசம் மாத இணைப்பின் மூலம் (IntercLation) நிவர்த்திசெய்யப்படுகிறது.

செயற்கைக்கூறுகளும், கணிப்பியலும் பொதுவானவைகளல்ல . செயற்கைக்கூறு அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஆனாலும் கணிப்பியல் சிரமங்களுக்கு மத்தியில் காலங்கள் செலவழித்தும் பெறப்படுவதால் அத்துறையில் புலமை பெற்றவர்களுக்கு உரியது.

அதேபோல் மணித்தியாலம் என்ற செயற்கூறு கணிப்பியலிலும் அமையும் புலனியலிலும் அமையும். புலனியல் நிழலைக்கொண்டு தீர்மானிக்கப்படுவது. கணிப்பியல் புவிச்சுழல்வைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நிமிடம், வினாடி போன்ற செயற்கைக்கூறுகள் மிக நுண்ணிய இயற்கையாய் கருதப்படும் யூகங்களால் அமைந்தவையே இவைகள் கணிப்பியல் மூலம் மாத்திரமே தீர்மானிக்கலாம். புலனில் உணர்வாக அது இருந்தாலும் வெளிப்படுத்தும்போது செயற்பாடொன்றை அடிப்படையாகக் கொண்ட கணிப்பியலாகவே அது வெளிப்படும்.    மாதப்பெயர்கள், தினப்பெயர்கள் (திகதியெண்கள்) இருவகையாக அமையும்.

(1) காலம் சார்ந்தவை.

(2) காலம் சாராதவை

உரிய மாதத்தின் அல்லது நாளின் காலநிலையையோ சம்பவமொன்றையோ எண்ணிக்கையோ, உரியநாளில் நடக்கும், அல்லது தொடர்ந்து நடக்கும் நிகழ்வையோ வைத்து பெயரிடுவது முடியாதவற்றிற்கு இலக்கமிடுவது காலம் சார்ந்தவை. பெயரிற்கு காலத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லாமல் தெய்வப்பெயர்கள், அரசியற்பெயர்கள், மிருகப்பெயர்கள் வருவது காலம் சாராதவையாகும். இவைகளிலும் மக்களால் புரிந்து கொள்ளத்தக்க இயற்கையுடன் ஒன்றிப்போகக்கூடிய நிலையில் இருப்பது காலம் சார்ந்தவையே. மற்றவைகளைவிட மாற்றம்பெறாத நிரந்தர நிலையில் தங்கியிருப்பதும் காலம் சார்ந்தவையே.மேற்சொன்ன அடிப்படைகளை சிந்தித்து இஸ்லாத்தின காலக்கணிப்பீட்டு முறைமையை அவதானிப்பீர்கள் என்றால் அதன் சீர்மையையும் எளிமையையும் புரிந்துகொள்ளலாம் காலக்கணிப்பை நோக்கிய இஸ்லாத்தின் பார்வை வித்தியாசமானது. எனவே ஒவ்வொரு தலைப்பாக இஸ்லாத்தின் கண்ணோட்டங்களை பார்ப்போம்.

 ‘உம்மிடம் பிறைகளைப்பற்றிக் கேட்கின்றனர். அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜிக்கும் உரிய நேரம் காட்டுவையாகும்.’ (02:189)

‘அவனே அதிகாலை நேரத்தை வெடிக்கச்செய்கின்றவன் அவனே இரவை அமைதியானதகவும் காலக்கணக்கிற்காக சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான். இவையாவும் மிகைத்தோனாகிய, மிக்க அறிந்தோனின் ஏற்பாடாகும்.’ (06:96)

‘அவன் எத்தகையவன் என்றால், சூரியனை மின்னும் ஒளி மிகுந்ததாகவும் சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கினான். இன்னும் வருடங்களின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதற்கு தங்குமிடங்களையும் அவன் ஏற்படுத்தினான். உண்மையைக்கொண்டே தவிர இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய சமூகத்தாருக்கு சான்றுகளை அவன் விவரிக்கிறான்.’ (10:05)

‘அல்லாஹ் எத்தகையவனென்றால் வானங்களை தூணின்றி உயர்த்தினான். அவற்றை நீங்கள் காண்கின்றீர்கள். பின்னர் அவன் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். அவனே சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. சகல காரியங்களையும் அவனே நிர்வகிக்கின்றான். ஊங்கள் இரட்சகனின் சந்திப்பில் உறுதிகொள்வதற்காக வசனங்களை விவரிக்கின்றான்.’ (13:02)

‘…..சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவனையின்பால் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.’ (31:29)

‘சூரியன் அதற்குரிய தங்குமிடத்தின்பால் ஓடிக்கொண்டிருக்கறது. இது மிகைத்தவன் நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும். இன்னும் சந்திரனை பழைய பேரீச்சங்குழையின் குச்சிப்போல் அது மீண்டு விழும்வரையில் அதற்கு நாம் பல ‘மன்ஸில்’ களை ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் அதற்குச் சந்திரனை அடையவும் முடியாது இரவு பகலை முந்தவும் முடியாது. ஒவ்வொன்றும் வட்டத்தில் நீந்திச்செல்கின்றன.’ (36:38,39,40)

இன்னும் இதுபோன்ற ஏராளமான திருமறை வசனங்கள் சூரியன், சந்திரனைப்பற்றி தகவல்களை எமக்களிக்கின்றன. இவைகளையெல்லாம் இறைவன், சிந்தித்து தன்னை ஈமான் கொள்ளவேண்டும் என்பதற்காகவே, எனவும் தெளிவுபடுத்துகின்றான்.

(இரவு பகல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம்)

‘வானங்கள், பூமியை படைத்ததிலும் இரவும் பகலும் மாறிவருவதிலும்….. விளங்கக் கூடியவர்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (02:164)

‘…… இரவைப் பகலால் அவன் மூடுகின்றான் சிந்திக்கக்கூடிய கூட்டத்திற்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (13:03)

‘இரவையும், பகலையும் இருசான்றுகளாக நாம ஆக்கினோம். இரவின் சான்றினை மங்கச்செய்தோம். நீங்கள் உங்கள் இரட்சகனின் பேரருளைத்தேடிக் கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் அறிந்துகொள்வதற்காகவும் பகலின் சான்றினை பார்ப்பதற்குரியதாகவும் ஆக்கினோம். ஓவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்துள்ளோம்.’ (17:12)

‘… இரவு பகலை முந்தவும் முடியாது ஒவ்வொன்றும் வட்டத்தில் நீந்துகின்றன.’ (36:40)

(நிழல்கள் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம்)

‘உம் இரட்சகன் பக்கம் நிழலை அவன் எவ்வாறு நீட்டுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலைபெற்றதாகவும் ஆக்கிவிடுவான். பிறகு சூரியனை அதற்கு ஆதாரமாகவும் நாம் ஆக்கினோம். பின்னர், நாம் அதனைச் சிறுசிறுகக்குறைத்து நம் அளவில் அதைக்கைப்பற்றிக் கொண்டோம்.’ (25:45,46)

மேற் சொல்லப்பட்ட வசனங்களைக் கவனத்தில் கொண்டு நாம் பின்வரும் இமாம் இப்னு தைமியாவின் விளக்கத்தை அவதானித்தோம் என்றால் இஸ்லாத்தின் காலக் கணிப்பு கணிப்பியல் சார்ந்ததா ? புலனியல் சார்ந்ததா? அறிவுப்பூர்வமானதும் இலகுவானதும் கணிப்பியலா? புலனியலா? என்பது தெளிவாகும்.

“ஆகையால் எங்களது ஷரீஅத் எங்களுக்குத் தந்துள்ள முறைமையே பூரணத்துவமிக்கதாகும். ஏனெனில் அனைத்து மனிதர்களும் பார்த்து தீர்மானிக்கக் கூடிய அளவில் அது மாதத்தை நிர்ணயிக்க வழிசெய்துள்ளது. இதனால் மார்க்கத்தை விட்டும் அவன் தவறமாட்டான். அதைக் கவனித்து வருவது அவனது வாழ்வின் நலவுகளைப் பாதிக்கவும் செய்யாது. பிற மார்க்க அறிஞர்கள் அவர்களது மார்க்கத்தில் ஏற்படுத்தியது போல் எம்மார்க்கத்தில் ஏற்பட வழிகோளாது. வருடத்தை கணக்கிட வானத்தில் காணக்கூடிய அளவில் எதுவும் வெளிப்படையான அடையாளமாக இல்லாததால் இங்கே கணக்கும் எண்ணுதலும் அவசியமாகிறது. சூரிய ஓட்டத்தை கணக்கிட்டு சொல்வதை விட சந்திர ஓட்டம் எல்லோராலும் கணக்கிட்டுச் சொல்ல மிகவும் இலகுவாக இருப்பதாலும் சந்திர மாதங்களின் தொகுப்பே சூரிய மாதங்களின் தொகுப்பை விட வருடமாய் அமைய பொருத்தமானதாக அமைந்துவிட்டது. நாம் இப்போது சொன்னவற்றின் மூலம் மாத வருட கணக்கிற்கு சந்திரனைப் போன்று வெளிப்படையாக தெரியக்கூடிய ஒன்று இல்லை. இது எல்லோருக்கும் இலகுவான விடயம். வாழ்வின் சுக போகங்களுக்கு அதை கணக்கிடுவது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. யூத கிருஸ்தவர்களதும், ஸாபியாக்கள், மஜுஸிகளது மார்க்கத்தில் பெருநாள் கொண்டாட்டங்கள், வணக்க வழிபாடுகள், வரலாறுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னென்ன (நூதனங்களும், குழப்பங்களும் இதன் மூலம்) நுழைந்துள்ளன என்பதை எவர் அறிகிறாரோ இந்த மார்க்கத்தை அவனுக்களித்ததற்காய் அதிகமதிகமாய் நன்றி செலுத்துவான். தங்களது எந்த நபிமாரும் இந்த நடைமுறையில் (அவர்களிடத்தில்) இருக்கக் கூடிய அமைப்பை ஏற்படுத்தவில்லை என்பதை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஸாபிஆ மதத்தினர் வழியாகவே இந்தக் குழப்பங்கள் அவர்களுள் நுழைந்தன. நாம் இதனைக் குறிப்பிட்டதெல்லாம் இது போன்ற நூதன வழிமுறைகள் எங்களது மார்க்கத்திலும் நுழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே. உண்மையில் இது அஞ்சத்தக்க ஒன்றாகும். ஜாஹிலியாக்காலத்தில் அரபிகள் மூலம் (intercalation) இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தை மாற்றியிருந்தார்கள். வருடத்தின் கடைசியிலே ஒரு மாதத்தை ‘கபீஸ்’ (كبيس) என்ற பெயரில் அதிகரித்தார்கள். (பயானுல் ஹுதா மினல்லலால் லிஇப்னிதைமியா)

இங்கே இமாம் இப்னு தைமியா அவர்கள் வருட மாதத்தீர்மானங்கள் எப்போதும் அனைவராலும் தீர்மானிக்க முடியுமான அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் மாதக்கிரியைகளில் வேறுபாடு நுழையும் எனத்தெளிவுபடுத்துகிறார். மாதம் வருடம் என்பவை இஸ்லாத்திலே அழகிய முறையில் இயற்கையோடு ஒன்றிக்கம் வன்னம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாதங்களின் எண்ணிக்கை இறைவனது ஏட்டில் பூமி படைக்கப்பட்ட நாள் தொடக்கம் 12 ஆகும். அதில் நான்கு மாதம் ஹராமானதாகும்.’ (10:36) நாங்கள் உம்மியான ஒரு சமுதாயம். எழுதத் தெரியாதவர்கள், கணக்கிடத் தெரியாதவர்கள். மாதம் என்பது 30ஆகவும், 29ஆகவும் அமையும்.’ (புஹாரி, முஸ்லிம்) 12 மாதங்களைக் கொண்டதுதான் ஒரு வருடம் என்பது கணிப்பியலாகும். மாதம் 29 அல்லது 30 நாளைக் கொண்டது என்பது புலனியலாகும். ஆனாலும் 12 மாதங்கள் என்ற அடிப்படைக்கு அல்குர்ஆனே வழிகாட்டுகிறது. ஆதலால் இந்த முடிவில் கூடுதல் குறைகள் இடம் பெறாது. அதே போல் மாதம் 28ஆக அமையாது, 30ஆகவும் அமையாது. 29ஆக அல்லது 30ஆகவே அமையும். எனவே விரும்பிய ஆட்சியாளர்கள், மதகுருமார்கள் தலையடித்து பெப்ரவரிக்கு நிகழ்ந்தது போன்ற மாற்றங்கள் செய்ய முடியாது. 29அல்லது 30 என்று தீர்மானிக்கும் பொறுப்பு காழிமார்களுக்கு உரியதாக இருந்தாலும் மக்கள் பார்வைக்கே மாதத்தீர்மானப் பிறை விடப்படுகிறது. எனவே இஸ்லாமியக் கால கணிப்பில் மாதங்கள் என்றும் 12 தான். வருடத்தீர்மானத்திற்கும் மாதத்தீர்மானத்திற்கும் சூரியனுக்கும் தொடர்பில்லை. மாதத்தின் நாற்கள் கூடிக் குறைய இடமில்லை. என்றும் மாதம் 28ஆக அமையாது. அது போல் 31ஆகவும் அமையாது. முஹர்ரம் 15ம் பிறை ஒரு குழந்தை பிறந்தால் அடுத்த முஹர்ரம் 15ம் பிறையன்று அக்குழந்தைக்கு ஒரு வருடமாகும். மாத உட்புகுத்தல் (intercalation), நாள் கூட்டல் (leap) இற்கோ இடமில்லை. அனைத்தும் ஜாஹிலிய்யச் செயல். இறை நிராகரிப்பு. ஏனைய மதங்களிளுள்ள சிக்கல்கள் எங்கள் மார்க்கத்தில் இல்லை. யூத கிருஸ்தவ அறிஞர்கள் தங்கள் மாதத்தின் பெயர்கள் அல்லாஹ்வினால் தௌராத்திலோ, இஞ்சீலிலோ குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்ட முடியுமா? எப்போதாவது மாதம் 28ஆக அமையும் என்பதை காட்ட முடியுமா? மாதம் என்பது இத்தனை நாட்களைக் கொண்டது, வருடம் என்பது இத்தனை நாட்களைக் கொண்டது என்ற வரையறையை எடுத்துக்காட்ட முடியுமா? முடியவே முடியாது.

எனவே! ஓவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் எங்களுக்கு இவ்வளவு தெளிவான காலக் கணிப்பு முறையொன்றை ஏற்படுத்தித் தந்ததற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் எங்கள் மாதங்களின் பெயர்கள் கூட அரசியல் வாதிகளின் பெயர்களுடனோ, அல்லது ஆட்சியானர்களின் பெயர்களுடனோ, அல்லது தெய்வங்களின் பெயர்களுடனோ, சம்பந்தப் படவில்லை. அனைத்தும் இஸ்லாத்திலே அங்கீகரிக்கப்பட்டுள்ள பெயர்களாகும். மாத உட்புகுத்தல் (intercalation) இஸ்லாத்தின் மூலம் நிராகரிக்கப்படுவதற்கு முன்னால் அப்பெயர்கள் பருவங்களுடன் ஒத்து நிற்கின்றன. ஆனாலும் இஸ்லாம் மாத உட்புகுத்தலை நிராகரித்து பெயர்களை அவ்வாறே அங்கீகரித்தது.

எனவே இஸ்லாமிய சகோதரர்களே! பிறை பார்த்தல் பிரச்சினையை வைத்து  இஸ்லாமிய கலண்டர் ஒழுங்கற்றது என்ற தகவல்கள் இன்டநெட்டில் காணக்கிடைக்கின்றன. அவர்கள் அனைவரும் இஸ்லாத்தின் தூய்மையான கணிப்பு முறையை அறியாதவர்களல்லர்.ஏதோ ஒன்றிற்காய் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தில் அனைத்து முஸ்லிம்களும் அவதானமாக இருக்க வேண்டும். ஆனாலும்  இவைகளிலிருந்து கலண்டர் கணிப்பு முறை உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்பது தவறானது எனத் தெளிவாகின்றதல்லவா? உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது ஹிஜ்ரி ஆண்டு மட்டுமேயாகும். வேறு எந்த மாற்றமும் செய்யப்படடவில்லை. இமாம் இப்னு அஸீர் தனது வரலாற்று நூலிலே பின்வருமாறு பதிவு செய்கிறார் :- அபூ மூஸா அல் அஷ்அரியின் வேண்டு கோளிற்கிணங்க உமர் மக்களை ஒன்று கூட்டி ஆலோசனை செய்தார். சிலர் நபித்துவ நாளை ஆண்டுமானமாக எடுக்கும் படியும், இன்னும் சிலர் ஹிஜ்ரத்தை ஆண்டுமானமாக எடுக்கும் படியும் ஆலோசனை சொன்னார்கள். உமர் இரண்டாவது கருத்தை ஏற்றார்‘;. (சுருக்கம்) இன்னொரு அறிவிப்பில்: உரோமர்களின் ஆண்டுமானத்தை எடுக்கும் படியும், சிலர் பாரசீகர்களின் ஆண்டுமானத்தை எடுக்கும் படியும் ஆலோசனை சொன்னார்கள். உமர் ஹிஜ்ரி ஆண்டுமானத்தை தேர்ந்தெடுத்தார்கள’. (சுருக்கம்) (1:10,11) ஆண்டுமானத்தில் கூட – எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே – எந்தவொரு மாற்றமும் 1400 வருடமாக நிகழவில்லை. ஆனால் கிருஸ்தவக் கலண்டரான கிறிகோரியரின் கலண்டரின் ஆண்டுமானம் 2000 வருடம் பழையதானாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அண்மைக் காலத்திலேதான். அதற்கு முன் பல ஆண்டுமானங்கள் அவர்கள் மத்தியில் நடைமுறையில் இருந்தன. இவ்வளவு தூய்மையான காலக் கணிப்பும் சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலாவது முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டால் தூய்மையான காலங்களிலொன்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களாக நாங்கள் ஆகுவோம். வஸ்ஸலாம்

  1. “Evolution of the Calender”“The Actual Saudi dating system”(S. Khalid shaukat www. moonsighting. Com)
  2. “Calenders” Dogget        (www. Astro. Nmsu. Wdu /lhuber/leaplist .html)
  3. “CatholicEncyclopedia” : General Chronology (www.newdvent . org / cathen / 037389. Html)
  4. “Our solar system”        (www. Astronomy. com)
  5. “World encyclopedia” (1992,1993)
  6. “Encyclopedia of London”
  7. “Al – Faysal” (Issu 211)    (al – yahood wa isabuzzaman)           {Hassan  lala  (p.h.d)}
  8. “Bayanul huda minallalal fee amril hilal”       Ibnu thaimiyah)
  9. “Al – Muammareena  minal arab (Abuhatim Al – Basari)
  10. “Mausooathul Mawridil arabeeyah”                                                                   (Baulabakky)
  11. “Al – Kamil fiththaarikh” (P 1:2)             (Ibnu – Al- Atheer)
  12. “Fathhul Bari” (P 3:4)                                                                                                      (Ibnu – Hajar)
  13. “Walwiyat  kalanijiyam”      (Tamil University – Tanjauoor)
  14. “Piray parthal piraohohinaihalum theer wakalum”      (Abu Asia, prof Ahmotkulti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts