டைனோஸர் பற்றி ஏதும் செய்திகள் உண்டா?
டைனோஸர் பற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு வசனமும் கிடையாது.அதே நேரத்தில் டைனோஸர்கள் இருந்தன என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதை நம்புவதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது. தாப்பா என்ற சொல் நகர்ந்து நடந்து செல்லும் ஒவ்வொரு உயிரையும் குறிக்கும்.
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ (6) [هود : 6
‘பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்வாழிக்கும் உணவளிப்பதை இறைவன் பொறுப்பு……” ஹ{த்:6
இந்த வசனத்திலும் இது போன்று உள்ள ஏராளமான குர்ஆன் வசனங்களிலும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் தாப்பா என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டைனோஸரைக் குறிக்கும் என்று சொல்வது அறபு மொழி பற்றிய அறியாமை. டைனோஸர் என்ற ஒரு உயிர் வாழ்ந்திருந்தால் இந்த தாப்பா என்ற வார்த்தைக்குள் அதுவும் அடங்கும்.
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) [النمل : 82
எமது வார்த்தை அவர்கள் மீது நிகழும் போது பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம். எமது வார்த்தைகளை மனிதர்கள் நம்பாமல் இருந்தார்கள் என மனிதர்களோடு அது பேசும். நம்ல் 82
இந்த வசனத்தில் ஒரு பிராணி என்று அல்லாஹ் சொல்கிறானே தவிர அது பற்றிய விவரங்களைச் சொல்லவில்லை. ஆனால் அது டைனோஸர் போன்ற ஒரு மிருகம் அல்ல. காரணம் டைனோஸர் நம்பிக்கை பிரகாரம் அது ஏற்கனவே வாழந்து அழிந்து போன மிருக இனம். இந்தப் பிராணி மறுமை நாளின் பொழுதுதான் வெளியாகும். அடுத்தது உருவகித்துக் காட்டப்படும் டைனோஸரைப் பார்த்தால் வழிகேடு நேர்வழி பற்றிய தெளிவில் இருப்பது போன்று தெரியவில்லை.