Friday, December 6, 2024

பைத்தியம் பிடிக்கும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்தல் என்ற ஹதீஸின் தரம் என்ன?

அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவது ஒரு மிகச் சிறந்த நல்லமல், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தலாம், ஆனாலும் தன்னிலையை மறந்து இன்று தரீக்காக்களில் திக்ரு என்ற பெயரில் சில செயல்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.இது நபி வழியல்ல, அவர்கள் செய்வது திக்ரும் அல்ல.அவர்கள் அதற்காக எடுத்துவைக்கும் ஆதாரங்கள் மிக பலஹீனமானவையாகும்:-

1-““
நீங்கள் முகஸ்துதிக்காக செய்கிறீர்கள்என்று நயவஞ்சகர்கள் உங்களைப்பார்த்து கூறும் அளவிற்கு அல்லாஹ்வைத் தியானியுங்கள்என நபியவர்கள் சொன்னார்கள்.

இது மிகவும் பலஹீனமான நபிமொழியாகும்;

இதனை இமாம் தபரானி அவர்கள் தனது (முஃஜமுல் கபீர்-12786) எனும் நூலிலேயும் அவர் வழியாக இமாம் அபூநுஅய்ம் அவர்கள் தனது (ஹில்யதுல் அவ்லியா 1-426) எனும் நூலிலும் பதிவு செய்துள்ளனர். இவ்வாசகம் இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் வழியாக அறிவிக்கப்படுகிறது.

இதன் அறிவிப்பாளர் வரிசையிலே:-

1- “ஹஸன் இப்னு அபூஜஃபர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய் சொல்பவர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்.

2-அதேபோல் இவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஸஈத் இப்னு ஸ{ப்யான் அல் ஜஹ்தரீ என்பவரும் பலஹீனமானவரே. இவரைப்பற்றி இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் “ “அறிவிக்கும்போது தவறுவிடுபவர்களில் உள்ளவர்” என விமர்சிக்கிறார்.

3- இதே கருத்தில் அறிவிப்பாளர் வரிசையில் சில மாற்றங்களுடன் இவ்வசனத்தை இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்கள் தனது (ஸ{ஹ்த்- 1022) எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்.

4- ஆனால் அதில் ஸஈத் இப்னு ஸைத் எனும் பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.

5-இன்னும் அது முர்ஸல் வகையைச் சார்ந்ததுமாகும்.

02- “ “உங்களைப்பார்த்து பைத்தியக்காரன் என்று கூறும்வரை நீங்கள் அல்லாஹ்வைத் தியானியுங்கள்என நபியவர்கள் சொன்னார்கள்.

இது பலஹீனமான நபிமொழியாகும்;.

இதனை இமாம் அபூ அப்தில்லாஹ் அல்ஹாகிம் அவர்கள் தனது (முஸ்தரக் அலஸ் ஸஹீஹைன் 1839) எனும் நூலிலேயும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தனது (முஸ்னத்11674) இலேயும் அபூ ஸஈத் அல்குத்ரீ எனும் நபித்தோழர் வழியாகப் பதிவுசெய்துள்ளார்கள்.

இவ்வறிவிப்பாளர் வரிசையிலே:-

தர்ராஜ் அபுஸ்ஸம்ஹ் எனும் பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் இமாம் அஹ்மத், இமாம் நஸஈ, இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு அதீ போன்ற ஏராளமான அறிஞர்களால் “ “அறிவிப்பதில் “மோசமான தவறுகளை அதிகமாகவே விட்டுள்ளார்” என விமர்சிக்கப்பட்டவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts