Monday, November 11, 2024

மறைமுகக் காரணிகளின் பாதிப்புக்களும் அதற்கான மருத்துவமும்

மறைமுகக் காரணிகளின் பாதிப்புக்களும் அதற்கான மருத்துவமும்

சூனியம்இ ஜின்பிடித்தல், கண்ணேறு என்பன இஸ்லாமிய நம்பிக்கையின் படி உண்மையாயின் இவற்றுக்கு இஸ்லாம் கூறும் மருத்துவ முறைகளென்ன என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். அதற்கு முன்னர் மருத்துவம் பற்றிய சில அடிப்படைகளை ஆரம்பமாகத் தெரிந்து கொள்வோம்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களை இரு வகைகளானப்பிரிக்கலாம்.

1-    எல்லோராலும் அறிய முடியுமான வெளிப்படையான காரணிகள். தலைவலி போன்ற அனைவராலும் காரணங்கள் புரிய முடிகின்ற அளவில் உள்ள நோய்கள். இவ்வாறான அம்சங்கள் இதற்குள் அடங்கும்.

2-    நோய் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள் முடியாத சில காரணிகளுமுள்ளன. இவற்றை ஆன்மீகக் காரணிகள் என்று கூட சொல்லலாம். உலகில் காணப்படும் பெரும்பாலான மதங்களில் இந்த நம்பிக்கை காணப்படுகிறது.

சிலர் திடீரென்று பயங்கரமான கோலத்தில் ஆடுவர். இவரைப் பார்த்து பௌத்த மதத்தில் பேய் பிடித்தவர் என்பார்கள். அவர்களது பார்வையில இது ஒரு மறைமுகமான காரணியாகும். இவ்வாறே வேறுமதத்தவர்களும் சொல்வதைக் காணலாம். இவை சரியா பிழையா என்பதற்கப்பால் இவற்றையெல்லாம் மறைமுகமான காரணிகள் எனலாம். ஆனால் இதுபோன்ற மறைமுமான எல்லா காரணிகளையும் இஸ்லாம் ஏற்கவில்லை. பேய், பிசாசு பிடித்தல், இரவில் எண்ணெய் சாப்பாடு உண்டு விட்டுப் போனால் பேய்பிடிப்பதாகக் கூறுதல், இரவில் ஆல மரம் போன்ற மரங்களுக்குக் கீழிருந்தால் பேய்பிடிப்பதாகக் கூறுதல் போன்றவாறான அனைத்து நம்பிக்கைகளையும் இஸ்லாம் தகர்த்தெரியக் கூடியதாகும். இவ்வாறு நம்புவது ஒருவரை குப்ர், ஷிர்க்கிலே விழ வைத்து விடும். ஆனாலும் மறைமுக் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மறுக்கவும் இல்லை.  சூனியம் , கண்ணேறு, ஜின் பிடித்தல் போன்றவற்றை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. இவைகளெல்லாம் மறைமுகக் காரணிகளாகும். இவை எமக்கு அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லித் தந்த காரணிகளாகும். மார்க்கத்திலே விளக்கமுள்ள ஒருவரால் இவற்றை நம்ப முடியும். மதச்சார்பில்லாத ஒருவர் இந்நோய்களுக்கு வேறு காரணங்ககளைக் கூறுவார். எனவே இந்நோய்களுக்கான காரணிகளை நாம் இரு வகையாக வகைப்படுத்தலாம். நாம் ஆரம்பத்தில் கூறியது போன்று வெளிப்டையான காரணிகள், அடுத்தது நோயேற்பட்டுள்ளது ஆனால் இதற்கு மறைமுகமாக ஏதோ காரணிகளுள்ளன என்று சொல்கின்றளவில் உள்ள காரணிகள்.

உலகம் முழுவதும் இவ்வாறான நோய்கள் காணப்படுகின்றன. மனநல மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் சில நோய்களுக்கு என்ன காரணம் என்ற விவரங்களை அறிய முடியாதிருக்கும். இவ்வாறான நோய்களையும் உடலியல் சார்ந்தவை, உளவியல் சார்ந்தவை என இரு வகையாகப் பிரிக்கலாம். வெளிப்படையான காரணிகளால் உடலியல், உளவியல் ரீதியாக நோய்களேற்படுவதைப் போன்று  சூனியத்தாலும் உடலியல், உளவியல் ரீதியாக நோய்களேற்படலாம்.

நாம் ஏற்கனவே கண்ணேறு பற்றிய உம்மு ஸலமா (ரழி) அவர்களுடைய ஹதீஸில் பார்த்தோம். நபியவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களுடைய வீட்டுக்குச் செல்கிறார்கள் அங்கிருந்த பெண்ணுடைய முகத்தில் ஒரு வகை அடையாளம் காணப்படுகிறது. அதை நபியவர்கள் கண்ணேறு என்று கூறிவிட்டு அதற்காக மந்திரிக்குமாறும் கூறினார்கள் என்று வரும் செய்தியை நாம் முன்னர் பார்த்தோம். கண்ணேறால்தான் இப்பாதிப்பு ஏற்பட்டது என்பது எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியுமான வெளிப்படையான காரணியல்ல. இந்த இடத்தில் குறிப்பிடப்பட்ட  பாதிப்பு உடலியல் சார்ந்தவையாகும்.

அதுபோன்று உத்மான் பின் அபில் ஆஸ் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்கு ஏதோ குறுக்கிடுவதாகத் தெரிகிறது. என்று கூறுகிறார். அதற்கு நபியவர்கள் மறைமுகமான காரணியொன்றைக் கூறுகிறார்கள். அதாவது அவ்வாறு ஏற்படக் காரணம் ஷெய்தானே என்று கூறுகிறார்கள். பின்னர் அவரின் நெஞ்சில் அடித்து வாயில் துப்பி ‘அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு’ என்று சொன்னார்கள். என்று  ஹதீஸையும் முன்னர்  பார்த்தோம். இங்கே மறைமுகமான ஒரு காரணியை நபியவர்கள் சொல்கிறார்கள். அதனால் ஏற்பட்ட பாதிப்பு உளவியல் சார்ந்ததாகும். ஆகவே இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவத்தை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது சட ரீதியான மருத்துவமாகும். இன்று உலகில் காணப்படும் ஆங்கிலமருத்துவம், சித்த வைத்தியம், சீன வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்ற அனைத்தும் இதிலடங்கும்.
இந்த மருத்துவ முறைகளை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.  இம்மருத்துவ முறை தேசத்துக்குத் தேசம் வித்தியாசப்படலாம். ஆரம்ப காலமாக அரபுகளிடம் ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தால்) என்ற மருத்துவ முறை காணப்பட்டது. சர்வதேச சுகாதார அமைப்பும் இதை அங்கீகரித்துள்ளது. இதுவும் சீன மருத்துவமும் கிட்டத்தட்ட ஒன்றெனலாம். இவையெல்லாம் சட ரீதியான மருத்துவ முறைகளாகும். இவற்றில் இஸ்லாம் சிலதைப் வரவேற்றுள்ளது. சிலதை மறுத்துள்ளது. தேனைப்பற்றி அல்லாஹ்வும் தூததுரும் வரவேற்றுள்ளார்கள். கருஞ்சீகரத்தைப் பற்றி நபியவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இவையனைத்தும் சடரீதியான மருத்துவ முறைகளாகும்.

இரண்டாவது வகை மருத்துவத்தை உயிரியல் ரீதியான அல்லது சில வார்த்தைகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம் எனலாம். இதற்கு ஆங்கிலத்தில் Abra Kadabara என்றழைப்பார்கள். இவை வரலாற்று வாயிலாக வந்த இரு சொற்களாகும். உரோமர்களிடத்திலிருந்து கி.பி 2ம் நூற்றாண்டில்தான் உரோமர்களிடத்திலிருந்து எழுத்து மூலமாக இது அறியப்படுகிறது. அனைத்து சமூகத்திலும் வார்த்தைகளைக் கொண்டு செய்யப்படும் இம்மருத்துவ முறை காணப்படுகிறது. Abra Kadabara என்ற இந்த சொற்களை வித்தியாசமாக எழுதலாம். சடரீதியான மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற   ஒரு வைத்தியரே இதை எழுதியுள்ளார். இவ்வாறான சில சொற்களின் மூலம் சில நோய்கள் குணமாகலாம் எனும் நம்பிக்கை மதவேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. உண்மையாகவே இதனால் நோய்கள் குணமாகிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இரத்த நரம்புகளை அழுத்திச் செய்யப்படும் மருத்துவ முறையைப் போல சில வார்த்தைகளைக் கூறி செய்யப்படும் மருத்துவ முறைக்கு அரபியில் ருகிய்யா என்பார்கள். இதையே தமிழில் மந்திரித்தல் என்கிறோம். பெரும்பாலும் இது போன்ற மருத்துவத்தில் ஷிர்க் காணப்படுகிறது. இஸலாம் நிராகரிக்கும் மருத்துவமாகவே இது காணப்படுகிறது. இன்றைக்குள்ள ஆங்கில மருத்துவ வைத்தியர்கள் போன்றோரே ஆரம்ப காலங்களில் இதைச் செய்து வந்தனர். இது இஸ்லாம் வரவேற்ற ஒரு முறையல்ல. மூட நம்பிக்கைகளும், ஷிர்க்கும் காணப்படுவதே அதற்குக் காரணமாகும். அதே நேரம் இஸ்லாம் இதனை முற்றாகத் தடை செய்யவுமில்லை. இது பற்றி பின்னர் தெளிவாக விளக்குவோம்

சூனியம்இ ஜின்பிடித்தல், கண்ணேறு என்பன இஸ்லாமிய நம்பிக்கையின் படி உண்மையாயின் இவற்றுக்கு இஸ்லாம் கூறும் மருத்துவ முறைகளென்ன என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். அதற்கு முன்னர் மருத்துவம் பற்றிய சில அடிப்படைகளை ஆரம்பமாகத் தெரிந்து கொள்வோம்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களை இரு வகைகளானப்பிரிக்கலாம்.

1-    எல்லோராலும் அறிய முடியுமான வெளிப்படையான காரணிகள். தலைவலி போன்ற அனைவராலும் காரணங்கள் புரிய முடிகின்ற அளவில் உள்ள நோய்கள். இவ்வாறான அம்சங்கள் இதற்குள் அடங்கும்.

2-    நோய் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள் முடியாத சில காரணிகளுமுள்ளன. இவற்றை ஆன்மீகக் காரணிகள் என்று கூட சொல்லலாம். உலகில் காணப்படும் பெரும்பாலான மதங்களில் இந்த நம்பிக்கை காணப்படுகிறது.

சிலர் திடீரென்று பயங்கரமான கோலத்தில் ஆடுவர். இவரைப் பார்த்து பௌத்த மதத்தில் பேய் பிடித்தவர் என்பார்கள். அவர்களது பார்வையில இது ஒரு மறைமுகமான காரணியாகும். இவ்வாறே வேறுமதத்தவர்களும் சொல்வதைக் காணலாம். இவை சரியா பிழையா என்பதற்கப்பால் இவற்றையெல்லாம் மறைமுகமான காரணிகள் எனலாம். ஆனால் இதுபோன்ற மறைமுமான எல்லா காரணிகளையும் இஸ்லாம் ஏற்கவில்லை. பேய், பிசாசு பிடித்தல், இரவில் எண்ணெய் சாப்பாடு உண்டு விட்டுப் போனால் பேய்பிடிப்பதாகக் கூறுதல், இரவில் ஆல மரம் போன்ற மரங்களுக்குக் கீழிருந்தால் பேய்பிடிப்பதாகக் கூறுதல் போன்றவாறான அனைத்து நம்பிக்கைகளையும் இஸ்லாம் தகர்த்தெரியக் கூடியதாகும். இவ்வாறு நம்புவது ஒருவரை குப்ர், ஷிர்க்கிலே விழ வைத்து விடும். ஆனாலும் மறைமுக் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மறுக்கவும் இல்லை.  சூனியம் , கண்ணேறு, ஜின் பிடித்தல் போன்றவற்றை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. இவைகளெல்லாம் மறைமுகக் காரணிகளாகும். இவை எமக்கு அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லித் தந்த காரணிகளாகும். மார்க்கத்திலே விளக்கமுள்ள ஒருவரால் இவற்றை நம்ப முடியும். மதச்சார்பில்லாத ஒருவர் இந்நோய்களுக்கு வேறு காரணங்ககளைக் கூறுவார். எனவே இந்நோய்களுக்கான காரணிகளை நாம் இரு வகையாக வகைப்படுத்தலாம். நாம் ஆரம்பத்தில் கூறியது போன்று வெளிப்டையான காரணிகள், அடுத்தது நோயேற்பட்டுள்ளது ஆனால் இதற்கு மறைமுகமாக ஏதோ காரணிகளுள்ளன என்று சொல்கின்றளவில் உள்ள காரணிகள்.

உலகம் முழுவதும் இவ்வாறான நோய்கள் காணப்படுகின்றன. மனநல மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் சில நோய்களுக்கு என்ன காரணம் என்ற விவரங்களை அறிய முடியாதிருக்கும். இவ்வாறான நோய்களையும் உடலியல் சார்ந்தவை, உளவியல் சார்ந்தவை என இரு வகையாகப் பிரிக்கலாம். வெளிப்படையான காரணிகளால் உடலியல், உளவியல் ரீதியாக நோய்களேற்படுவதைப் போன்று  சூனியத்தாலும் உடலியல், உளவியல் ரீதியாக நோய்களேற்படலாம்.

நாம் ஏற்கனவே கண்ணேறு பற்றிய உம்மு ஸலமா (ரழி) அவர்களுடைய ஹதீஸில் பார்த்தோம். நபியவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களுடைய வீட்டுக்குச் செல்கிறார்கள் அங்கிருந்த பெண்ணுடைய முகத்தில் ஒரு வகை அடையாளம் காணப்படுகிறது. அதை நபியவர்கள் கண்ணேறு என்று கூறிவிட்டு அதற்காக மந்திரிக்குமாறும் கூறினார்கள் என்று வரும் செய்தியை நாம் முன்னர் பார்த்தோம். கண்ணேறால்தான் இப்பாதிப்பு ஏற்பட்டது என்பது எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியுமான வெளிப்படையான காரணியல்ல. இந்த இடத்தில் குறிப்பிடப்பட்ட  பாதிப்பு உடலியல் சார்ந்தவையாகும்.

அதுபோன்று உத்மான் பின் அபில் ஆஸ் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்கு ஏதோ குறுக்கிடுவதாகத் தெரிகிறது. என்று கூறுகிறார். அதற்கு நபியவர்கள் மறைமுகமான காரணியொன்றைக் கூறுகிறார்கள். அதாவது அவ்வாறு ஏற்படக் காரணம் ஷெய்தானே என்று கூறுகிறார்கள். பின்னர் அவரின் நெஞ்சில் அடித்து வாயில் துப்பி ‘அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு’ என்று சொன்னார்கள். என்று  ஹதீஸையும் முன்னர்  பார்த்தோம். இங்கே மறைமுகமான ஒரு காரணியை நபியவர்கள் சொல்கிறார்கள். அதனால் ஏற்பட்ட பாதிப்பு உளவியல் சார்ந்ததாகும். ஆகவே இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவத்தை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது சட ரீதியான மருத்துவமாகும். இன்று உலகில் காணப்படும் ஆங்கிலமருத்துவம், சித்த வைத்தியம், சீன வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்ற அனைத்தும் இதிலடங்கும்.
இந்த மருத்துவ முறைகளை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.  இம்மருத்துவ முறை தேசத்துக்குத் தேசம் வித்தியாசப்படலாம். ஆரம்ப காலமாக அரபுகளிடம் ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தால்) என்ற மருத்துவ முறை காணப்பட்டது. சர்வதேச சுகாதார அமைப்பும் இதை அங்கீகரித்துள்ளது. இதுவும் சீன மருத்துவமும் கிட்டத்தட்ட ஒன்றெனலாம். இவையெல்லாம் சட ரீதியான மருத்துவ முறைகளாகும். இவற்றில் இஸ்லாம் சிலதைப் வரவேற்றுள்ளது. சிலதை மறுத்துள்ளது. தேனைப்பற்றி அல்லாஹ்வும் தூததுரும் வரவேற்றுள்ளார்கள். கருஞ்சீகரத்தைப் பற்றி நபியவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இவையனைத்தும் சடரீதியான மருத்துவ முறைகளாகும்.

இரண்டாவது வகை மருத்துவத்தை உயிரியல் ரீதியான அல்லது சில வார்த்தைகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம் எனலாம். இதற்கு ஆங்கிலத்தில் Abra Kadabara என்றழைப்பார்கள். இவை வரலாற்று வாயிலாக வந்த இரு சொற்களாகும். உரோமர்களிடத்திலிருந்து கி.பி 2ம் நூற்றாண்டில்தான் உரோமர்களிடத்திலிருந்து எழுத்து மூலமாக இது அறியப்படுகிறது. அனைத்து சமூகத்திலும் வார்த்தைகளைக் கொண்டு செய்யப்படும் இம்மருத்துவ முறை காணப்படுகிறது. Abra Kadabara என்ற இந்த சொற்களை வித்தியாசமாக எழுதலாம். சடரீதியான மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற   ஒரு வைத்தியரே இதை எழுதியுள்ளார். இவ்வாறான சில சொற்களின் மூலம் சில நோய்கள் குணமாகலாம் எனும் நம்பிக்கை மதவேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. உண்மையாகவே இதனால் நோய்கள் குணமாகிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இரத்த நரம்புகளை அழுத்திச் செய்யப்படும் மருத்துவ முறையைப் போல சில வார்த்தைகளைக் கூறி செய்யப்படும் மருத்துவ முறைக்கு அரபியில் ருகிய்யா என்பார்கள். இதையே தமிழில் மந்திரித்தல் என்கிறோம். பெரும்பாலும் இது போன்ற மருத்துவத்தில் ஷிர்க் காணப்படுகிறது. இஸலாம் நிராகரிக்கும் மருத்துவமாகவே இது காணப்படுகிறது. இன்றைக்குள்ள ஆங்கில மருத்துவ வைத்தியர்கள் போன்றோரே ஆரம்ப காலங்களில் இதைச் செய்து வந்தனர். இது இஸ்லாம் வரவேற்ற ஒரு முறையல்ல. மூட நம்பிக்கைகளும், ஷிர்க்கும் காணப்படுவதே அதற்குக் காரணமாகும். அதே நேரம் இஸ்லாம் இதனை முற்றாகத் தடை செய்யவுமில்லை. இது பற்றி பின்னர் தெளிவாக விளக்குவோம்

1.அனைவருக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் இவ்வுலகில் உண்டு

சூனியம், ஜின்பிடித்தல், கண்ணேறு போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படலாம் என்றால் இவைகளால் நினைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் தமக்கு எதிரானவர்களுக்கு  நோய்கள் ஏற்படுத்தலாம்தானே . ஜின்களுக்கு மனித உடலுக்குள் புக முடியுமென்றால் இருட்டில் செல்லும் போது ஜின் பிடிக்கலாமல்லவா? ஆகவே இத்தகைய பயங்கரமான உலகில் எவ்வாறு பாதுகாப்பாக எம்மால் வாழ முடியும்? என்ற கேள்வியெழலாம்.      அல்லாஹ்வுடைய ஸுன்னாவைப் பற்றி அறிந்திருப்போமானால் இவ்வுலகை அல்லாஹ் அமைத்துள்ள முறைகளை நாம் அறிவோமானால் இதுவெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. நினைத்தவர்கள் நினைத்தவாறு பிறரின் உரிமைகளில் அடந்தேறும் முறையில் நடப்பதற்கு ஏற்றவாறு அல்லாஹ் இவ்வுலகைப் படைக்கவில்லை. நாம் ஒரு வீட்டைக் கட்டி ஒருவருக்கு வாடகைக்குக் கொடுக்கிறோம் என்றால் அவர் நினைத்த மாதிரி வீட்டைப் பயன்படுத்த நாம் அனுமதிப்பதில்லை. அவரிடமிருந்து  முற்பணமாக ஒரு தொகைப் பணத்தை நாம் பெறுவது வீட்டில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அப்பணத்தினால் அதைச் சீர்செய்யலாம் என்பதற்காகவே. அற்ப சக்தியுள்ள மனிதனால் கட்டப்பட்ட வீட்டுக்கு இவ்வளவு பாதுகாப்பும் அவதானமும் இருக்குமென்றால் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ் வடிவமைத்த இப்பூமியில் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஓரிரண்டு நிகழ்வுகள் நடந்தாலும் தொடர்ந்தும் அவ்வாறு நடைபெற அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். பூமியில் தவறிழைப்போரை ஏன் அல்லாஹ் விட்டு வைத்துள்ளான் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறன்.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ النحل : 61
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்கமாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள். (அந்நஹ்ல் : 61)

தவறுகளை எல்லோராலும் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் செய்து விட முடியாது. அதற்கு அல்லாஹ்வின் நாட்டமிருக்கவேண்டும் அத்துடன் அவன் கொடுக்கும் அவகாசத்துக்குள் அவை நடைபெறவேண்டும். என்பதையே மேலுள்ள வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

ஓர் இறைமறுப்பாளனாகவிருந்தாலும் அவனும் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற அமைப்பில்தான் இவ்வுலகம்  படைக்கப்பட்டுள்ளது என்பதை அல்லாஹ் கீழ் வருமாறு கூறுகின்றான்.

مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا (18) وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا (19) كُلًّا نُمِدُّ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا الإسراء : 18 – 20

அவசர உலகத்தை விரும்புவோரில் நாம் நாடியோருக்கு, நாம் நாடியதை அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்குஅப்பாற்பட்டு அதில் கருகுவார்கள். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். இவர்களுக்கும் , அவர்களுக்கும் அனைவருக்கும் நாம் நமது அருளை அதிகமாகக் கொடுப்போம். உமது இறைவனின் அருள் மறுக்கப்பட்டதாக இல்லை.   (அல்இஸ்ரா: 18-20)

அநியாயம் இழைக்கப்பட்டவனின் துஆ ஏற்கப்படும் அவன் காபிராக இருந்தாலும் சரியே என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

கடலில் பயணிக்கும் முஷ்ரிகீன்களின் பிராத்தனை பற்றி அல்லாஹ் கூறும் போது

فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ  العنكبوت : 65
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரிதாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்அன்கபூத் : 65)

இந்த உலக விடயங்களின் அசௌகரியங்களின் போது இணை வைப்போரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்பது இதன் மூலம் விளங்குகின்றது.

எல்லலோருக்கும் பொதுவானதாகவே இவ்வுலகை அல்லாஹ் படைத்துள்ளான். இவ்வுலகின்  சௌகரியங்களில் அவன் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கும் கொடுக்காமல் விடவுமில்லை. இது இவ்வுலகில் வைத்துள்ள விதியாகும்.

இன்னோரிடத்தில் அல்லாஹ் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றான்.

فَهَلْ يَنْظُرُونَ إِلَّا سُنَّتَ الْأَوَّلِينَ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا فاطر : 43
முன்னோர்களின் கதியைத் தவிர (வறு எதையும்) அவர்கள் எதிர் பார்க்கிறார்களாஅல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர். (பாதிர் : 43)

இப்லீஸ் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த போது அல்லாஹ் அவனை வெளியேற்றினான். ஆதம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்த போது அவரை சுவனத்திலிருந்து அல்லாஹ் வெளியேற்றினான்.  தனது கட்டளைக்குப் பணிய மறுத்த பல சமூகங்களை அல்லாஹ் அழித்தான். இவர்களையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை அல்லாஹ் விட்டு வைத்தான். அவர்கள் நினைத்தவாறெல்லாம் நடப்பதற்கு அல்லாஹ் அவர்களை விடவில்லை.

மற்றுமோரிடத்தில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا الإسراء : 76
உம்மை இப்பூமிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அவ்வாறு நிகழ்ந்தால்உமக்குப் பின்னர் அவர்கள் கொஞ்சம் காலமே தங்கியிருப்பார்கள்.(அல்இஸ்ரா:76)

ஆகவே அல்லாஹ் தனது பூமியை அவதானித்துக் கொண்டேயிருக்கிறான். நினைத்தவற்றையெல்லாம் புரிவதற்கு யாரையும் அவன் அனுமதிக்கப் போவதில்லை. என்றாலும் காலக்கெடு வரைக்கும் சிலரை அல்லாஹ் விட்டு வைத்துள்ளான்.

எனவே ஷெய்தானாலும் தான் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியாது. இந்த பூமியை சுதந்திரமானதாக அல்லாஹ் படைத்துள்ளான். ஆகவே ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் கை வைக்க அல்லாஹ் ஒரு போதும் அனுமதிக்கமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையை ஆழ்மனதில் நாம் நன்கு பதிய வைக்க வேண்டும். இதுவே அல்லாஹ்வின் ஸுன்னத் பற்றிய சரியான பார்வை. உள்ளத்திலிருக்கும் இவ்வாறான நம்பிக்கைகளும் ஒரு மருத்துவமே.

2.உலகத்தை நிர்வகிக்கும் இறைவனின் படை

இவ்வுலகை நிர்வகிக்க மலக்குமார்கள் எனும் பெரும்படையணியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இவ்வுலகிலுள்ள படைகளையெல்லாம் ஒன்று சேர்த்தாலும் எவ்வகையிலும் அவர்கள் எண்ணிக்கையில் மலக்குகளுக்கு ஈடாகப் போவதில்லை. அந்தளவுக்கு மலக்குமார்கள் இப்பூமியை நிர்வகித்துக் கொண்டேயுள்ளனர். அதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا الفتح : 7
வானங்கள், பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்பத்ஹ் : 7)

தனது படைகளின் அளவு பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ المدثر : 31
உமது இறைவனின் படையை அவனைத்தவிர யாரும் அறிய மாட்டார்கள்.
(
அல் முத்தஸிர் : 31)

மலக்குமார்கள் இரவு பகலாக பூமிக்கு வந்து செல்வதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح البخاري  – (2    59)
عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تَفْضُلُ صَلَاةُ الْجَمِيعِ صَلَاةَ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الْفَجْرِ
ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி)
ஆதாரம் : புஹாரி

மலக்குமார்கள் இவ்வுலகுக்கு மிகப்பெரும் பாதுகாப்பாகவுள்ளனர் என்பதற்குக் கீழ்வரும் செய்தி சிறந்த சான்றாகவுள்ளது.

பத்ர் போரின் போது ஷெய்தான் மனித உருவில் வந்து காபிர்களுக்கு உற்சாகமூட்டினான். போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த  போது நீங்கள் காணாதவற்றை நான் காண்கின்றேன் என்று கூறி விலகிக்கொண்டான். இதை சூறா அன்பாலில் 48 ம் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பத்ர் போரின் போது ஷெய்தான் மலக்குமார்களைக் கண்டான். அதனால் அவனுக்கு அங்கிருக்க முடியவில்லை. நாம் தொழும் போதும், துஆக்களை ஓதி உறங்கும் போதும் நம்மைச் சூழ மலக்குமார்கள் இருப்பதால் அவனால் நம்மை  நெருங்க முடியாது. மலக்குமார்கள் இருப்பதனால் ஷெய்தானால் தான் நினைத்தவற்றைச் செய்ய முடியாது. ஏனெனில் நாளை மறுமையில் சுவனமிருப்பதையும், நரகமிருப்பதையும், மலக்குமார்களின் உருவமைப்பையும் அவன் அறிந்திருந்தான். தான் நினைத்தவற்றையெல்லாம் அவனால் செய்ய முடியுமென்றால் இன்று உலகிலே இஸ்லாலாமிய அழைப்பாளர்கள் பலர் காணப்படுகிறார்கள். அவர்களையெல்லாம் அவனால் ஏன் கொலை செய்து விட முடியாது? என்ற கேள்வியெழுகிறது. ஆகவே மலக்குமார்களைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வலையத்தை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். அதை மீறி எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே அல்குர்ஆன் பற்றிய அறிவுள்ளவர்களின் பதிலாகும்.

அல்குர்ஆனைக் கொண்டு மருத்துவம்

அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் எதுவெனில், அல்குர்ஆனை அல்லாஹ் நமக்கொரு மருந்தாக ஆக்கியுள்ளான். இதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ يونس : 57
மனிதர்களே உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (யூனுஸ் : 57)

தனக்கு நோய்கள் ஏற்படும் போது ஒரு முஃமினுடைய நிலைப்பாடு எப்படியிருக்குமென்றால் பூமியில் மலக்குமார்களின் பாதுகாப்பிருக்கின்றது, அல்குர்ஆனிலே மருத்துவம் இருக்கிறது அதை ஓதுவதனால் மறைமுகக் காரணிகளால் ஏற்பட்டுள்ள நோய்கள் குணமடைகின்றன. என்ற உறுதியான நம்பிக்கை அவனிடம் காணப்படும்.

மேலும் அல்லாஹ் இது பற்றிக் கூறும் போது

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ الإسراء : 82
நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல்இஸ்ரா:82)

எனவே உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் அல்குர்ஆனிலே மருந்து இருக்கிறது. என்ற நம்பிக்கை நம்மிடமிருக்க வேண்டும். இந்த நம்பிக்கையில் எந்தளவுக்கு ஒருவர் உறுதியாக இருக்கிறரோ அந்தளவுக்கு அது அவருக்குப் பயனளிக்கும். ஒருவர் எந்தளவுக்கு அதில்  நம்பிக்கை குறைவாக இருக்கிறாரோ அந்தளவுக்கு அது அவருக்குப் பயனளிக்காது இருக்கும்.

பிரார்த்தனைகள் மூலம் பரிகாரம்

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் எதுவென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதவேண்டிய பலதுஆக்களை இஸ்லாம் சொல்லித்தந்துள்ளது. இதில் இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த துஆக்களை ஓதுபவர்கள், ஓதாதவர்கள், ஓதாத காபிர்கள் அனைவருக்கும் நோய்வரலாம். திடமான நம்பிக்கையுடனும் அகீதாவில் தெளிவுடனும் இப்பிரார்த்தனைகளை செய்வார்கள். ஏனெனில் இந்நோய்கள் பற்றிய சரியான நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள் எனவே நோய் நிவாரணம் தேடி ஷிர்கின் பக்கம் போகமாட்டார்கள். யாரிடம் இந்நோய்கள் பற்றிய சரியான நம்பிக்கையில்லையோ அவர்கள் தங்களது நோய் குணமடைய வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான எதையும் செய்வார்கள்.

எனவே துஆக்களை ஓதிவருவது நோய் நிவாரணம் கிடைப்பதற்காகவல்ல. நமது அகீதாவைப் பாதுகாத்து அதற்குற்பட்டவாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதே துஆக்களை ஓதிவருவதால் நாம் பெறும் நன்மையாகும்.

ஒவ்வொரு நாளும் மோசமான பல வார்த்தைகளை நாம் பேசுகிறோம். இசை பாடல் போன்றவை நமைக் குடிகொண்டுள்ளன. பொறாமை, வஞ்சகம் உலக மோகம் போன்ற துர்குணங்கள் நம்மை ஆட்கொண்டுவிட்டன. எனவே நமது வாழ்வில் சில நல்ல பகுதிகள் இருக்க வேண்டும் என்பற்காக இஸ்லாம் துஆக்களை நமக்குக் கற்றுத்தந்துள்ளது. எப்போதும் ஒருவர் நல்ல வார்த்தைகளையே பேசிக்கொண்டிருக்கமாட்டார். ஒரு நாளைக்கு நல்ல வார்த்தைகளைப் பேசினால் மறு நாளைக்கு கெட்ட வார்த்தைகளை அவர் பேசலாம். ஆனால் நாளாந்தம் துஆக்களை ஓதி வரும் வழமை அவருக்கிருக்குமாயின் என்றைக்குமே அவர் அதை செய்து வருவதால் சில நல்ல வார்த்தைகளும் தொடர்ச்சியாக அவரது வாயில் வெளிப்படும் சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் அல்லாஹ் அவர் உள்ளத்தில் நல்ல நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறான்.

இவ்வாறான துஆக்கள் பற்றிய ஹதீஸ்களைப் பார்ப்போம்.

صحيح مسلم – (2  200)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أُنْزِلَ – أَوْ أُنْزِلَتْ – عَلَىَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ الْمُعَوِّذَتَيْنِ
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டன அவை போன்ற ஒன்றை நான் கணவேயில்லை. குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்பனவே அவையாகும்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

இதே ஹதீஸ் நஸாயீ கிரந்தத்தில்இன்னொரு விதத்தில் பதியப்பட்டுள்ளது.

سنن النسائي – (8  253)
عن عقبة بن عامر قال كنت أمشي مع رسول الله صلى الله عليه و سلم فقال : يا عقبة قل فقلت ماذا أقول يا رسول الله فسكت عني ثم قال يا عقبة قل قلت ماذا أقول يا رسول الله فسكت عني فقلت اللهم أردده علي فقال يا عقبة قل قلت ماذا أقول يا رسول الله فقال قل أعوذ برب الفلق فقرأتها حتى أتيت على آخرها ثم قال قل قلت ماذا أقول يا رسول الله قال قل أعوذ برب الناس فقرأتها حتى أتيت على آخرها ثم قال رسول الله صلى الله عليه و سلم عند ذلك ما سأل سائل بمثلهما ولا استعاذ مستعيذ بمثلهما
நபியவர்களுடன் நான் சென்று கொண்டிருச்த போது உக்பாவே ஓதுவீராக என்று என்னைப்பாhத்து  நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும் என்று அவர்களிடம் நான் கேட்டதும் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் உக்பாவே ஓதுவீராக என்றார்கள் இவ்வாறு மூன்று முறை சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும்? என்று நான் கேட்டதும் குல்அஊது பிரப்பில் பலக்கை ஓதச்சொன்னார்கள். அதை முழுமையாக நான் ஓதினேன். பின்னர் ஓதுவீராக என்று என்னைப்பாhத்து  நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே எதை நான் ஓதவேண்டும் என்று அவர்களிடம் நான் கேட்டதும் குல்அஊது பிரப்பின்னாஸை ஓதச்சொன்னார்கள். அதை முழுமையாக நான் ஓதினேன். அப்போது நபிவர்கள் ஒருவர் துஆச்செய்யும் போது முற்படுத்துவதற்கு இவையிரண்டையும் தவிர வேறொன்றும் கிடையாது. ஒருவர் பாதுகாப்புத் தேடும் போது முற்படுத்துவதற்கு இவையிரண்டையும் தவிர வேறொன்றும் கிடையாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி)
ஆதாரம் : நஸாயீ

இரண்டாவது ஹதீஸ்

سنن أبى داود-ن – (4  480)
عَنْ أَبِى عَيَّاشٍ – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ قَالَ إِذَا أَصْبَحَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عِدْلُ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِى حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِىَ وَإِنْ قَالَهَا إِذَا أَمْسَى كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ

مَنْ قَالَ إِذَا أَصْبَحَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ காலையில் யார் இந்த துஆவை ஓதுகிறாரோ அவருக்கு இஸ்மாஈலுடைய சந்ததியில் ஓர் அடிமையை விடுதலை செய்த கூலி வழங்கப்படுவதுடன் பத்து நன்மைகள் எழுதப்படுகிறது. அவரின் பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பத்துப் படிகள் அவருக்காக உயர்த்தப்படுகின்றன. மாலை வரும் வரை ஷெய்தானை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார். மாலையில் இதை ஓதினால் காலையாகும் வரை இதே சிறப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூ அய்யாஷ்(ரழி)
ஆதாரம் : அபூதாவூத்

மூன்றாவது ஹதீஸ்

سنن الترمذي – (5  465)
عن أبان بن عثمان قال : سمعت عثمان بن عفان رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه  و سلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم يضر بشيء
ஓவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் யார்
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
என்ற துஆவை மூன்று முறை ஓதுகிறாரோ அவரை எதுவும் தீண்டாது
அறிவிப்பவர் : உத்மான் பின் அப்பான் (ரழி)
ஆதாரம் : திர்மிதி 

நான்காவது ஹதீஸ்

صحيح مسلم – (876)
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِى الْبَارِحَةَ قَالَ « أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرُّكَ
அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு எனக்கு தேள் கொட்டிவிட்டது என்று ஒரு மனிதர் நபியவர்களிடம் கூறினார். ஆதற்கு நபியவர்கள் நீ மாலையில் أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ என்ற துஆவை ஓதியிருந்தால் உன்னை அது தீண்டியிருக்காது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

ஐந்தாவது ஹதீஸ்

ஷெய்தான் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் வந்து ஆயத்துல் குர்ஸியைச் சொல்லிக் கொடுத்து அதை படுக்கையின் போது ஓதினால் ஷெய்தான் நெருங்கமாட்டான் என்று கூறியது பற்றிய செய்தியை நாம் முன்னர் பார்த்தோம்.

ஆறாவது ஹதீஸ்

صحيح البخاري ت – (10  36)
عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ
அல்பகராஅத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை  ஆகிவிடும்.
அறிவிப்பவர் : அபுமஸ்ஊத் (ரழி)
ஆதாரம் : புஹாரி

இவைகள் ஷெய்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுவது பற்றி பொதுவாக வரும் ஹதீஸ்களாகும். அல்லாஹ் இவ்வுலகின் பாதுகாப்பக்காக மலக்குமார்களை வைத்துள்ளான் ஆகவே நினைத்தவர்கள் நினைத்தவற்றையெல்லாம் செய்ய முடியாது எனும் உறுதியான நம்பிக்கை இருப்பதுடன் இந்த துஆக்களை ஒதிவரும் வழமைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நாம் ஓதிவருமோனால் சிலவேளை நமக்கு ஏதேனும் தீங்குகள் ஏற்பட்டாலும் ‘நான் துஆக்களை ஓதிவருகிறேன் அதனால் ஒரு போதும் ஷெய்தானின் தீங்குகள் எனக்கு ஏற்படப் போவதில்லை என்ற திடமான உறுதி நமக்கு உண்டாகும். இவ்வழமை இல்லாதவிடத்து ஷிர்கின் பக்கம் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

இனி மந்திரித்தல் பற்றிய ஹதீஸ்களை விரிவாக நாம்; பார்ப்போம்.

سنن أبى داود-ن – (4  0)
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ ». قَالَتْ قُلْتُ لِمَ تَقُولُ هَذَا وَاللَّهِ لَقَدْ كَانَتْ عَيْنِى تَقْذِفُ وَكُنْتُ أَخْتَلِفُ إِلَى فُلاَنٍ الْيَهُودِىِّ يَرْقِينِى فَإِذَا رَقَانِى سَكَنَتْ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّمَا ذَاكِ عَمَلُ الشَّيْطَانِ كَانَ يَنْخَسُهَا بِيَدِهِ فَإِذَا رَقَاهَا كَفَّ عَنْهَا
மந்திரித்தல், தாயத்து அணிதல், கணவன், மனைவியை சேர்ப்பதற்காக செய்யப்படும் மருத்துவ முறை போன்றன ஷிர்க்காகும் என நபியவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் கூறினார். அதற்கு நான் அப்துல்லாஹ்விடம்   ‘ஏன் அவ்வாறு கூறுகிறீர் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது கண்ணில் நோயேற்பட்டிருந்து போது மந்திரிப்பதற்காக ஒரு யூத மனிதரிடம் செல்வேன் அவர் மந்திரித்தால் அது குணமாகிவிடுகிறதேஎன்று கூறினேன். அதற்கவர் அது ஷெய்தானுடைய வேளையாகும். நீங்கள் அவனைத் திருப்திப்படுத்தும் போது அவன் அமைதியடைகிறான். நீங்கள் அவனுக்கு எதிரான வேளைகளைச் செய்யும் போது நோயை ஏற்படுத்துகின்றான்.
அறிவிப்பவர் : ஸைனப் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத்

மந்திரித்தல் முறையில் ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் ஷிர்க் காணப்பட்டதால் நபியவர்கள் ஒட்டு மொத்தமாகவே அதைத் தடை செய்திருந்தார்கள். இஸ்லாம் அனுமதித்த மந்திரித்தல் முறை, இஸ்லாம் அனுமதிக்காத மந்திரித்தல் முறை என இருவகையாக பிரித்ததை அவரது நடைமுறையில் தெளிவாகக் காணலாம்.இஸ்லாம் அனுமதிக்காத மந்திரித்தல் முறை பற்றி வரும் செய்திகளைப் பார்ப்போம். இதை இருவகையாகப் பிரிக்கலாம்.

1.குர்ஆன் மற்றும் துஆக்கள் மூலம் மந்திரிக்கும் போது ஏற்படும் தவறுகள்
2.
குர்ஆனுக்கும் வெளியே இருந்து மந்திரிக்கும் போது ஏற்படும் தவறுகள் என இதை இரு வகைப்படுத்தலாம்.

குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் வெளியே இருந்து மந்திரிக்கும் முறை பற்றிப் பார்க்கும் போது  மந்திரிப்பதாகக் கூறி முனுமுனுத்தல், இதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சில வாசகங்களை எழுதி உடலில் ஒட்டிக் கொள்ளல், தொங்க விடுதல் இதையும் இஸ்லாம் தடை செய்கிறது. இது போல புரியாத வார்த்தைகளால், புரியாத பொருட்களால் செய்யப்படும் அனைத்து மந்திரித்தல் முறைகளையும் இஸ்லாம் இணை வைத்தல் என்று சொல்கிறது.

குர்ஆன் ஸுன்னாவோடு தொடர்புற்றிருந்தாலும் சில மந்திரித்தல் முறைகளை இஸ்லாம் தடை செய்கிறது. அவை பற்றிப் ஆராயும் பொழுது:சில குர்ஆன் வசனங்களை ஒரு தாளில் எழுதி அதைப் பாதுகாத்து வைப்பது,போத்தலில் அடைத்து வைப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவைகளை தடை செய்துள்ளது.குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடித்தல், கழுத்தில் தொங்கவிடுதல், மருத்துவம் செய்வதாகக் கூறி சத்தமிட்டு குர்ஆன் வசனங்களை ஓதுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் இஸ்லாம் தடை செய்யும் முறைகளாகும். தண்ணீரிலே குர்ஆன் வசனங்களை ஓதி ஊதிக் கொடுக்கும் மருத்துவ முறை பரவலாகக் காணப்படுகிறது. இது நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறையல்ல.

குர்ஆன் ஸுன்னாவை வைத்து செய்யப்படும் மருத்துவ முறைகளில் குர்ஆன் ஸுன்னாவிலும் கூறப்பட்ட வழிமுறைகள் காணப்பட வேண்டும். அதுவல்லாமல் குர்ஆன் ஸுன்னாவை வைத்து மருத்துவம் செய்கின்றோம் என்று மேற் கூறப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவது கூடாததாகும்.

இஸ்லாம் அனுமதித்துள்ள மந்திரிக்கும் முறையை நாம் மூன்று கட்டங்களாக நோக்கலாம்.

முதலாவது :

குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் வெளியே இருந்து மந்திரிக்கும் முறைகளில் ஷிர்க் கணப்பட்டால் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது. ஷிர்க் இல்லாமலிருந்தால் இஸ்லாம் அதை அனுமதித்துள்ளது. இவ்வாறு செய்யப்படும் மந்திரித்தல் முறையொன்றுள்ளது. ஆனால் அது பற்றிய போதுமான அறிவு இன்று மக்களிடம் இல்லை. ஜாஹிலிய்யாக் கால அரபுகளிடமும் இது காணப்பட்டது. உடம்பில் புண் வந்தால் அதற்கு மந்திரிக்கும் வழமை அன்று காணப்பட்டது. தேள் கொட்டினால் அதற்கு மந்திரிக்கும் முறை காணப்பட்டது. அது போன்று பாம்பு கடித்தால் அதற்கென்ற மந்திரித்தல் முறை போன்ற  பல மந்திரித்தல் முறைகள் அவர்களிடம் காணப்பட்டன. நபியவர்களுக்கும் இவை பற்றித் தெரியாது என்பதால் அவற்றைக் காட்டுமாறு நபியவர்கள் வேண்டுவார்கள் அதைப் பார்த்த பின்புதான் நபியவர்கள் அனுமதிப்பார்கள். இவைகளை நபியவர்கள் பெரிதாக வரவேற்கவில்லை. அனுமதித்துள்ளார்கள்.

இரண்டாவது :

அடுத்தது இஸ்லாம் வரவேற்கின்ற, குர்ஆனும், ஸுன்னாவும் அனுமதிக்கின்ற மந்திரித்தல் முறையாகும். அல்லாஹ்வும் தூதரும் எவற்றைக் கொண்டெல்லாம் ஓதிப்பாதுகாப்புத் தேடுமாறு சொன்னார்களோ அத்துனையும் இதிலடங்கும். ஆனாலும் எனக்காக ஓதிப்பாருங்கள் என்று பிறரிடம் வேண்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

மந்திரித்தலை இஸ்லாம் அனுமதிக்கின்றது என்பதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

صحيح البخاري ت – (14  387)
بَاب رُقْيَةِ الْحَيَّةِ وَالْعَقْرَبِ
5741- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ الرُّقْيَةِ مِنْ الْحُمَةِ فَقَالَتْ رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّقْيَةَ مِنْ كُلِّ ذِي حُمَةٍ
ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

صحيح البخاري- (14  337)

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَا رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ
கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது.
அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி)
ஆதாரம் : புஹாரி


صحيح مسلم – (7  18)
عَنْ أَنَسٍ قَالَ رَخَّصَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الرُّقْيَةِ مِنَ الْعَيْنِ وَالْحُمَةِ وَالنَّمْلَةِ
கண்ணேறு, விஷம், புண் போன்றவற்றுக்கு மந்திரிப்பதை நபியவர்கள் அனுமதித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

இஸ்லாம் முறையான மந்திரித்தலை அனுமதிக்கின்றது என்பதற்கு மேல் நாம் முன்வைத்த மூன்று ஹதீஸ்களும் சான்றாக அமைகின்றன.

அல்லாஹ்வும் தூரும் சொல்லித்தந்த மந்திரிக்கும் முறையை ஒருவர் அறிந்து வைத்துள்ளார் என்றால் இவர் மற்றவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா என்பது தொடர்பில் சில அம்சங்களை தற்போது அவதானிப்போம்.

ஒருவர், தனக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கு தானே மந்திரித்துக் கொள்வதை இஸ்லாம் அனுமதிப்பதைப் போன்று பிறருக்கு மந்திரிப்பதையும் அனுமதிக்கின்றது.

صحيح مسلم – (7  18)
5856 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ أَرْخَصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فِى رُقْيَةِ الْحَيَّةِ لِبَنِى عَمْرٍو.
பாம்புக் கடிக்கு மந்திரிப்பதற்கு  அம்ர் கோத்திரத்திற்கு நபியவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

صحيح مسلم – (7 18)
5857 – قَالَ أَبُو الزُّبَيْرِ وَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ لَدَغَتْ رَجُلاً مِنَّا عَقْرَبٌ وَنَحْنُ جُلُوسٌ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَرْقِى قَالَ « مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ».


நபியவர்களுடன் நாம் அமர்ந்திருந்த போது எங்களில் ஒருவருக்கு தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒருவர் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நான் ஓதிப்பார்க்கவா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் உங்கள் சகோதரனுக்கு யாரால் உதவி செய்ய முடியுமோ அவர் செய்யட்டும்என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 

صحيح البخاري ت – (14  378)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَوْا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ لُدِغَ سَيِّدُ أُولَئِكَ فَقَالُوا هَلْ مَعَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رَاقٍ فَقَالُوا إِنَّكُمْ لَمْ تَقْرُونَا وَلَا نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَجَعَلُوا لَهُمْ قَطِيعًا مِنْ الشَّاءِ فَجَعَلَ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَيَجْمَعُ بُزَاقَهُ وَيَتْفِلُ فَبَرَأَ فَأَتَوْا بِالشَّاءِ فَقَالُوا لَا نَأْخُذُهُ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهُ فَضَحِكَ وَقَالَ وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ خُذُوهَا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ
நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?’ என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், ‘நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்என்று கூறினர்.உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) குர்ஆனின் அன்னைஎனப்படும் அல்ஃபாத்திஹாஅத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், ‘நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாதுஎன்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு அல்ஃபாத்திஹாஅத்தியாயம் ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ  (ரழி)
ஆதாரம் : புஹாரி

ஆகவே மந்திரிக்கும் போது எந்த சூறாக்களை ஓதுமாறு குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதோ அவற்றையே நாம் மந்திரிக்கும் போது ஓத வேண்டும். அதுவல்லாமல் ஜின் பிடித்தால் சூறத்துல் ஜின்னை ஓதுவது போன்ற ஆதாரமற்ற விடயங்களை நாம் இதன் போது செய்யக் கூடாது. மேலே ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள முறைகளினடிப்படையில்  மற்றவர்களுக்கு  மந்திரிக்கலாம் என்பதை சுருக்கமாக விளங்கலாம்.

மூன்றாவது:

ஜாஹிலிய்யாக் காலத்தில் காணப்பட்ட சில மந்திரித்தல் முறைகளை இஸ்லாம் அனுமதிக்கின்றது. அவை பற்றிப் பார்ப்போம்.

صحيح مسلم – (7  18)
عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ وَأَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لآلِ حَزْمٍ فِى رُقْيَةِ الْحَيَّةِ وَقَالَ لأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ « مَا لِى أَرَى أَجْسَامَ بَنِى أَخِى ضَارِعَةً تُصِيبُهُمُ الْحَاجَةُ ». قَالَتْ لاَ وَلَكِنِ الْعَيْنُ تُسْرِعُ إِلَيْهِمْ.
قَالَ « ارْقِيهِمْ ». قَالَتْ فَعَرَضْتُ عَلَيْهِ فَقَالَ « ارْقِيهِمْ ».
பாம்பு கடித்தால் ஓதிப்பார்ப்பதற்கு ஹஸ்ம் குடும்பத்தாருக்கு நபியவர்கள் அனுமதித்தார்கள். எனது சகோதரன் ஜஃபரிப்னு அபீதாலிபுடைய குடும்பத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உடல் டெமலிந்தவர்களாகவுள்ளார்கள். என்ன அவர்களுக்கு என்றைக்கும் வறுமையாகவுள்ளது?’ என்று அஸ்மா பின்த் உமைஸிடம் நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே அது ஏனென்றால் அவர்களுக்கு அடிக்கடி கண்ணேறு ஏற்படுகிறதுஎன்று அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) கூறினார்கள். அதற்கு அவர்களுக்கு ஓதிப்பார்க்குமாறு நபியவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களிடம் கேட்டார்கள். நான் மந்திரிக்கும் முறையை நபியவர்களிடம் எடுத்துக்காட்டினேன். (அதைப்பார்த்த நபியவர்கள்) அவர்களுக்கு (ஜஃபர் குடும்பத்துக்கு) ஓதிப்பார்க்குமாறு என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

ஜாஹிலிய்யாக் காலத்தில் காணப்பட்ட மந்திரித்தல் முறையைச் சரி பார்த்த பின்னர் நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.

மற்றொரு ஹதீஸ் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
صحيح مسلم – (7  19)
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِىِّ قَالَ كُنَّا نَرْقِى فِى الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِى ذَلِكَ فَقَالَ « اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ
ஜாஹிலிய்யாக் காலத்தில் நாங்கள் மந்திரிப்பவர்களாகவிருந்தோம். அல்லாஹ்வின் தூதரே அதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று நபியவர்களிடம் வினவினோம். அதற்கவர்கள் உங்களுடைய மந்திரித்தல் முறையை என்னிடம் காட்டுங்கள் ஷிர்க் அதிலில்லை என்றால் மந்திரிப்பதில் பரவாயில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்பிப்னு மாலிக் அல் அஷ்ஜஈ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 

سنن أبى داود-ن – (4  13)
عَنِ الشِّفَاءِ بِنْتِ عَبْدِ اللَّهِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَنَا عِنْدَ حَفْصَةَ فَقَالَ لِى « أَلاَ تُعَلِّمِينَ هَذِهِ رُقْيَةَ النَّمْلَةِ كَمَا عَلَّمْتِيهَا الْكِتَابَةَ
நான் ஹப்ஸாவோடு நபியவர்கள் அங்கே நுழைந்தார்கள். ஹப்ஸாவுக்கு எழுதுவதற்குச் சொல்லிக் கொடுத்தது போல எறும்புக்கடிக்கு மந்திரிக்கும் முறையை நீ கற்றுக்கொடுக்கக் கூடாதா?’ என என்னிடம் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஷபா பின்த் அப்துல்லாஹ் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத்

வார்த்தை ரீதியாக செய்யப்படும் மருத்துவத்தில் ஷிர்க் காணப்படாத போது இஸ்லாம் அதை அனுமதித்துள்ளது. என்பதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து அறியமுடிகிறது. ஆனால் அது இன்றில்லை. காலத்தால் அது அழிந்து விட்டது. மந்திரித்தல் முறைகளில் தற்போது எம்மிடம் எஞ்சியிருப்பது குர்ஆனும், ஸுன்னாவும் மட்டுமே ஆகவே இது பற்றி இஸ்லாம் என்ன கூறியிருக்கிறதோ அதில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. உள்ளதை உள்ளவாறே செய்தல் வேண்டும். இதற்கு மாற்றமாக செய்யப்படும் அனைத்து முறைகளும் புறந்தள்ளப்பட வேண்டும்.

நபியவர்கள் சிலருக்கு மருத்துவம் பற்றி சொல்லிக்கொடுத்துள்ளார்கள் அது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

முதலாவது ஹதீஸ்

صحيح البخاري ت – (14 290)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِهِ قَالَ أَذْهِبْ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்அல்லது நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

أَذْهِبْ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

இரண்டாவது ஹதீஸ்

صحيح البخاري ت – (14  392)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ لِلْمَرِيضِ بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيمُنَا
நபி(ஸல்) அவர்கள் நோயாளிக்காக, ‘பிஸ்மில்லாஹி துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினாஎன்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால்எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எம்முடைய இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின்பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيمُنَا

மூன்றாவது ஹதீஸ்

صحيح مسلم – (7  20)
عَنْ عُثْمَانَ بْنِ أَبِى الْعَاصِ الثَّقَفِىِّ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَجَعًا يَجِدُهُ فِى جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ضَعْ يَدَكَ عَلَى الَّذِى تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ. ثَلاَثًا. وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
இஸ்லாத்தைத் தழுவிய காலம் முதல் தனது உடலில் நோவொன்று இருப்பதாக நபித்தோழர் உத்மான்  பின் அபில் ஆஸ் அவர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள். அதற்கு நபியவர்கள் உனது உடலில் நோவுள்ள இடத்தில் உனது கையை வைத்து பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை கூறி அஊது பில்லாஹஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என ஏழு முறை கூறுவீராக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உத்மான்  பின் அபில் ஆஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

நான்காவது  ஹதீஸ்

صحيح البخاري ت – (8 443)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

ஐந்தாவது ஹதீஸ்

صحيح مسلم – (7  13)
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ كَانَ إِذَا اشْتَكَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- رَقَاهُ جِبْرِيلُ قَالَ بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِى عَيْنٍ
நபியவர்கள் நோய்வாய்பட்டால் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு இவ்வாறு ஓதிப்பார்ப்பார்கள்

بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِى عَيْنٍ


அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

ஆறாவது ஹதீஸ்

سنن أبى داود-ن – (3  155)
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَقَالَ عِنْدَهُ سَبْعَ مِرَارٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عَافَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ الْمَرَضِ
யார் ஒரு நோயாளியிடம் போய் பின்வரும் துஆவை ஏழு முறை ஓதுகிறாரோ அவருடைய நோயை அல்லாஹ் குணப்படுத்துவான்.

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ (ரழி)
ஆதாரம் அபூதாவூத்

மேலே நாம் பார்த்த துஆக்களை வைத்து மந்திரிக்கலாம் என்பதை இலகுவாக ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது.

இம்மந்திரித்தல் முறையில் மேலதிகமாக எதையும் சேர்க்கலாமா என்பது தொடர்பாக சில விடயங்களை அவதானிப்போம்.

எச்சிலை வைத்துப் பிராத்திப்பது, வலியுள்ள இடத்தில் கையை வைத்து பிராத்திப்பது போன்றவை முன்னர் நாம் பார்த்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. நபியவர்கள் சில துஆக்களை ஒதி ஊதிக் கொள்வார்கள் அதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

صحيح البخاري ت – (10  535)
عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ طَفِقْتُ أَنْفِثُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ الَّتِي كَانَ يَنْفِثُ وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள்.  நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

மற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம்பெற்றுள்ளது.

صحيح البخاري ت – (12 463)
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ
நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ஊதுவார்கள் பின்னர்குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

கண்ணேறுக்காகக் கழுவிக்கேட்கப்பட்டால் கழுவிக் கொடுக்க வேண்டும் என்று முஸ்லிமில் வருகின்ற  செய்தியையும் நாம் முன்னர் பார்த்தோம். இந்த முறைகளை ஓதிப்பார்த்தலின் போது மேலதிகமாகக் கடைபிடிக்கவேண்டியவையாகும் இவையல்லாத வேறுவழிமுறைகள் நபிவழியில் கூறப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மந்திரித்தலின் போது பரவலாக செய்யப்படும் பிரம்படி, முடியை வெட்டுதல், அறைதல், அடித்தல் போன்றன நபி வழிக்கு முரணான நடவடிக்கைகளாகும். இவற்றுக்கு நபிவழியில் எந்த ஆதாரமும் கிடையாது.

ஆகவே ஜின்பிடித்தல், கண்ணேறு, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களுக்கு மேலே நாம் பார்த்த வழிமுறைகளில்தான் மருத்துவம் செய்ய வேண்டும் என்பதை நாம் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறைகளைக் கொண்டு நமக்கும் நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கும், பிறருக்கும் நாம் மருத்துவம் செய்யலாம். இது மருத்துவம் என்பதற்கப்பால் ஒரு சகோதரனுக்கு நாம் செய்யும் பேருதவியாவும் அமைகின்றது.

ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது என்றால் எதனால் அது ஏற்பட்டது என்பது பற்றி சரியாக நமக்குத் தெரியாது. ஆகவே அதற்கு நாம் மருத்துவம் செய்வதற்கு சடரீதியான மருத்துவமுறை, மந்திரித்தல் முறை என்ற இரு வழிமுறைகளே இருக்கின்றன. இதில் எதை நாம் பயன்படுத்தினாலும் அல்லாஹ் நாடினால்தான் அந்த நோய் குணமாகும். முஸ்லிமாகத்தான் அல்லாஹ் நம்மை மரணிக்கச் சொன்னானே தவிர சுகதேகியாக மரணிக்கச் சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஹிப்னோட்டிச மருத்துவ முறையும் இஸ்லாம் தடைசெய்துள்ள மருத்துவ முறையில்தான் அடங்கும். ஹிப்னோட்டிசம் செய்பவருக்கும் நோயாளிக்குமிடையில் என்ன நடைபெறுகிறது என்பது தெரியாது ஆனால் நோய் குணமாகின்றது. அது மந்திரித்தல் மருத்துவமுறைக்குள் வரக்கூடியதாகும். ஆகவே மந்திரித்தல் முறையில் எதை இஸ்லாம் அனுமதித்துள்ளது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். அவற்றையே நாம் செய்ய வேண்டும். ஹிப்னோட்டிசம் போன்ற ஏனைய மருத்துவ முறைகளைப் பார்க்கும் போது மருந்தை விட அதைச்செய்யும் நபரில்தான் நோயாளிக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. குர்ஆன்,ஸுன்னாவை வைத்து செய்யும் மருத்துவத்தால் ஏற்படும் மனஉறுதி இம்மருத்துவ முறைகளால் ஏற்படாது. ஆகவே எப்பேற்பட்ட நோயேற்பட்டாலும் இஸலாம் சொல்லித்தந்த மருத்துவ முறைகளை விட்டுவிட்டு ஷிர்க், பித்அத் என்பவற்றின் பக்கம் ஒருபோதும் நான் போகமாட்டேன் என்ற திடமான கொள்கையை நாம் உள்ளத்தில் மிக ஆழமாய் பதித்துக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts