Friday, September 13, 2024

மௌலவி பீஜே அவர்கள் இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்-(முதல் பாகம்)

ததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்களை முடிந்தவரை தொகுத்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் முதல் பகுதியாக இதனை வெளியிடுகின்றேன்.

2003ம் ஆண்டு (ஸபர் 1424 ஹி) வெயியீடப்பட்ட 2nd Edition பீஜெ-யின் தர்ஜமா-வில் அடிகுறிப்பு எண் 357ல் (பக்கம்- 1198 மற்றும் 1199)

…சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட் ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50-க்கும் குறைவான உள்ளன.

இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்…
– பீஜே குர்ஆன் தர்ஜமா

ஆரம்பகாலங்களில் 50-க்கும் குறைவான ஹதீஸ் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்றவர்கள் இன்று எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரித்துகொண்டுயுள்ளார்கள் என்பதனை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

1- நபிகளாருக்கு சூனியம் பாதித்ததை சொல்லும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)

2- அஜ்வா ஈத்தம் பழம் நஞ்சுக்கெதிரான மருந்து (புகாரி,முஸ்லிம்)

3- கண்ணேறு உண்மையானது (புகாரி,முஸ்லிம்)

4- ஜஃபரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

5- உம்மு ஸலமா வீட்டுப் பெண்ணுக்கு கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

6- நபித்தோழர் ஸஹ்ல் கண்ணேரால் பாதிப்புறல் (இப்னு மாஜாஹ்)

7- கண்ணேறுக்கு மருத்துவம் (முஸ்லிம்)

8- கத்ருக்கும் கண்ணேறுக்கும் இடையிலான தொடர்பு (முஸ்லிம்)

9- கண்ணேறுக்காக  கழுவிக்கேட்டல் (முஸ்லிம்)

10-கண்ணேறுக்கு எதிரான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமின் துஆ (முஸ்லிம்)

11-கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிற்கு நபிகளாரின் கட்டளை (முஸ்லிம்)

12- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அனஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

13- நபியவர்கள் தன் பேரர்களுக்கு கண்ணேறிலிருந்து பாதுகாக்கக் கேட்ட துஆ (முஸ்லிம்)

14- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

15- கண்ணேறு உண்மை என்ற ஹாபிஸ் தமீமி ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

16- கண்ணேறு உண்மை என்ற இப்னு அப்பாஸ்  ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

17- கண்ணேறுக்காக வுழூ எடுத்தல் (அபூ தாவூத்)

18- கண்ணேறு உண்மை என்ற ஆமிர்  ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு(இப்னு மாஜாஹ்)

19- கண்ணேறிலிருந்து நபிகளார் பாதுகாப்புத் தேடுதல்(திர்மிதி)

20- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை புரைதா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

21-நபியவர்களுக்கு ஆயிஷா  ரலியால்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடல்

22- தந்தை உறவை மறுத்தல் பற்றிய ஹதீஸ் (புகாரி)

23- 5 தடவை தாய்ப் பாலருந்தினால் உறவு முறை உண்டாதல்(முஸ்லிம்)

24- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து  கொல்லல் பற்றிய வசன ஓதல் மாற்றம் உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

25- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லல் பற்றிய வசன ஓதல் மாற்றம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு(இப்னு மாஜா)

26- பிஃரு முஊனாவில் கொல்லப்பட்டவர்கள் பற்றி வசன ஓதல் மாற்றம் (புகாரி,முஸ்லிம்)

27- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)

28- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய உபை ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)

29- அஸர் தொழுகை பற்றிய வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

30- ஸூரதுல்லைலின் வசன ஓதல் மாற்றம் (புகாரி)

31-  கருஞ்சீரகத்தின் சிறப்பு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

32-கருஞ்சீரகத்தின் சிறப்பு அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

33-மாலையில் ஓதும் அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத் என்ற பிரார்த்தனை (முஸ்லிம்)

34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு

35- பல்லியைக் கொல்லுமாறு  நபியவர்களின் கட்டளை உம்மு ஷரீக் ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)

36- …………………..குர்ஆனைத் தொகுக்க இரண்டு சாட்சி (புகாரி)

37- பல்லியைக் கொல்லுவதன் நன்மை பற்றிய அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

38- ……………..குர்ஆனைத் தொகுக்க இரண்டு சாட்சி (மஸாஹிப்)

39- பல்லியைக் கொல்லுமாறு  நபியவர்களின் கட்டளையை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா நடைமுறைப்படுத்திவிட்டு நபிகளாரின் கூற்றை விளக்கும் அறிவிப்பு (நஸாஈ)

40- ஸாலிம் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸ்(முஸ்லிம்)

41- 100 கொலை செய்தவனின் பாவமன்னிப்பு (புகாரி)

42- உம்மு ஹராம் ரலியால்லாஹு அன்ஹா  வீட்டில் நபிகளார் உறங்குதல்(புகாரி,முஸ்லிம்)

43- பிலால் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் கடன் (அபூ தாவூத்)

44- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் (புகாரி)

45- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் என்று நபிகளார் சான்று பகரக் காரணமான ஹதீஸ்

46- ஹுதைபியாவில் நபிகளார் மீது நபித்தோழர்கள் காட்டிய அளவற்ற அன்பு (புகாரி)

47- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 100 திருமணங்கள் (புகாரி)

48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் (புகாரி)

49- பாதிமா பின்து கைஸ் ரலியால்லாஹு அன்ஹா அவர்களின் விவாகரத்து (புகாரி)

50- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

52- 7 நாட்களில் அல்லாஹ் படைத்த படைப்புக்களின் விபரங்கள் (முஸ்லிம்)

53- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையின் மறுமைத் தீர்ப்பு (புகாரி)

54- மாடும் ஓநாயும் பேசியதாக வரும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)

55- எலியை பனூ இஸ்ரேலின் உருமாற்றத்துடன் சம்பந்தப்படுத்தி நபிகளார் சந்தேகித்த செய்தி (முஸ்லிம்)

56- ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் பற்றிய ஹதீஸ் (புகாரி)

57- சூரியனின் ஸுஜூத் (புகாரி)

58- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

59- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு  (புகாரி)

60- தரித்திரியம் இருந்தால் 3 இல்  இருக்கும். இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

61- தரித்திரியம் இருந்தால் 3 இல்  இருக்கும் ஸஹ்ல் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

62- இப்னு உமரின் மனைவியை தலாக் செய்யுமாறு உமரிட்ட கட்டளைக்கு வழிப்பபடுமாறு நபியவர்களின் உத்தரவு. (திர்மிதி)

63- தொழுகை ஆரம்பமாக 2 ரக்அத்துக்களாக கடமையாக்கப்படல் (புகாரி)

64-ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் வயதில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மறந்துவிடல் (திர்மிதி)

65- சிறு வயதில் நபிகளாரின் இதயம் பிளக்கப்பட்டு சீர் செய்யப்படல் (முஸ்லிம்)

66- குனூத் ஓதுதலை தடுத்து இறங்கிய அல் குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸ் (முஸ்லிம்)

67- ஸூரதுல் புர்கானை  2விதமாக ஓதல் (புகாரி)

68- வரஹ்துக மின்ஹுமுல் முக்லஸீன் என்ற வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

69- ஸூரா தரியாதின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)

70- ஸூரா பய்யினாவின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)

71- மணமுடித்தவரின் விபச்சாரத் தண்டனைகள் கல்லெறிந்து கொல்லல் வசன ஓதல் மாற்றம் (இப்னு மாஜாஹ்)

72- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான இறைவனின் முன்னறிவிப்பு (முஸ்லிம்)

73- விவாசய உபகரணங்கள் மூலம் இறைவன் இழிவைக் கொடுத்தல். (புகாரி)

74- ஈத்தம்பழம் உள்ள வீட்டவர்க்கு பசியேற்படாது (முஸ்லிம்)

75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

ததஜ குர்ஆனுக்கு முரண்படுகிறது என ஒரு ஹதீஸை மறுக்கிறது என்றால் அவர்களது எல்லா உலமாக்களும் ஒன்று கூடி ஆய்வு செய்யாமல் மறுக்கமாட்டார்கள்என்பது அவர்களது அறிவிப்பு.

எனவே பீஜெ மறுக்கிறார் என்பதும் அவர்களது கிளை உலமாக்களில் யாராவது ஒருவர் மறுப்பதும் ததஜ பொது அறிவிப்பின் மூலம் மறுப்பதும் சமமே.

நான் பட்டியிலிட்டுள்ள

“மௌலவி பீஜே குர்ஆனுக்கு முரண்படும் என்று மறுத்த ஹதீஸ்கள்” என்பதை

அப்படியே புரிந்துகொள்ள வேண்டும். நான் முரண்படுகிறது என்று பட்டியலில் இட்ட ஹதீஸ்களில் ஒன்று ஒன்லைன் பீஜேயில் ஆதாரப்புர்வமானதாக எழுதப்பட்டிருந்தால் அது அவர்களே அவர்களுக்குள் முரண்பட்டுள்ளார்கள் என்பதற்குத்தான் ஆதாரம் . நான் அவர்கள் மறுத்ததற்கான ஆதாரத்தை வைத்திருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts