Saturday, September 14, 2024

யூடியூப் விளம்பர வருமானம் தொடர்பான நிலைப்பாடு

1-இன்றைய நவீன உலகில் அனேகமானதில் ஜாஹிலிய செல்வாக்கே இருக்கிறது. மார்க்கத்திற்கும் பித்ரத்திற்கும் மாற்றமான சட்டங்களே நிர்வாகம் செய்கின்றன

உதாரணங்கள்: வட்டி, இசை, ஆபாசம், விரசம், விபச்சாரம், ஓரினச்சேர்க்கை மற்றும் LGBTQ கொள்கை.

2-ஒரு முஸ்லிம் தன் தீனை இயன்றளவு பாதுகாத்துக் கொண்டும் தவிர்க்க முடியாத இடங்களில் பங்காளர்களாக மாறாமல் கடந்து விடுவதே கடமை. அந்த சூழலே வியாபித்திருக்கும் பட்சத்தில் மார்க்க வரையரையத்தாண்டி தான் சென்று விடாத இடத்தில் தன்னை நிறுத்த முயல வேண்டும்

3-இது இன்று ஜாஹிலியத் நிர்வகிக்கும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

4-இவைகளே யூடியூப் நிறுவனத்தாரின் யூடியூப் தள நிர்வாகக் கொள்கையும். இதனால் இதுவும் விபச்சாரத்தை கொள்கையாக கொண்ட தளமே.

5-அதில் கெட்டதில் பங்கெடுக்காமல் நல்லதை பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் தவறில்லை.

6-அங்கே பொருளீட்டும் பொழுது அந்த ஜாஹிலியக் கொள்கையின் பங்காளர்களாக நாம் மாறிவிடுகிறோம். அவர்களது கேடுகெட்ட யூடியூப் தள கொள்கைக்கு வலுசேர்க்கிறோம்.

7-எந்த வித மார்க்க முரணும் இல்லாத விளம்பரங்களாயின் அப்பொருள் குறித்தும் அதன் தரம் குறித்தும் ஓரளவு அறிவுடன் இருந்து பொருள் குறித்த விளம்பரத் தேர்வுக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டால் அந்த வருமானம் அனுமதிக்கப்பட்டதாக அமையலாம்

8-உலமாக்கள், மார்க்க அழைப்பாளர்கள் இந்த ஜாஹிலியக் கொள்கையைக் கொண்ட தளத்தின் ஊடாக வருமானம் பெறுவதையும் அதனை பெருமைப் படுத்துவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts