Tuesday, April 30, 2024

இன்று நான் வாசித்த அழகிய அரபு வரிகள் (இற்றைப்படுத்தப்படுவை)


1-யுஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை

அவரின் சகோதரர்கள் கொல்ல நினைத்தார்கள். அவர் மரணிக்கவில்லை.

அவரின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள் அவரது தரம் உயர்ந்தது

அடிமையாக வாழ விற்கப்பட்டார்கள் அவர் ஆட்சியளாராக மாறினார்

பின்னர் அவரது தந்தையின் உள்ளத்திலிருந்து அவர் மீதுள்ள அன்பை அழிக்க நினைத்தார்கள் அன்பு அதிகாித்தது.

எனவே மனித சதிகளைப் பற்றி களங்காதீர்கள். இறைவனின் முடிவு எல்லாவற்றையும் மிகைத்தது.

2-மக்கா வெற்றியின் போது அபுபக்ர் (ரழி) அவர்களின் தந்தை அபு குஹாபா தள்ளாத வயதடைந்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள்.

நபிகளார் அவரது கையைப்பிடித்து ஷஹாவைச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த மகிழ்ச்சியான நேரத்தில் அபுபக்ர் (ரழி) அவர்கள் அழுதார்கள்.

ஏன் அழுகிறீர்கள் என நபியவர்கள் அவரிடத்தில் கேட்ட போது அருமைத் தோழர் அபுபக்ர் (ரழி) அவர்கள் சொன்னார்கள்

”நீங்கள் இப்பொழுது பிடித்துக் கொண்டிருக்கும் கை உங்கள் பொிய தந்தை அபு தாலிபின் கையாக இருந்திருக்கக் கூடாதா. அவர் இஸ்லாத்தை ஏற்று உங்கள் கண்கள் குளிர்வது என் தந்தையின் இஸ்லாத்தை விட எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்”

3-எந்த சூழலில், எந்த நேரத்தில், எதன் காரணமாய், யாருடன் இருப்பதால், நான் பாவம் செய்கிறேன் என்பதை சிந்திக்காமல்

”பாவத்தை இதன் பின்னால் செய்வதில்லை”என வெறுமனே முடிவெடுப்பதனால்தான்

அதிகமானவர்களால் பாவங்களை விட முடிவதில்லை

4-ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸாி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதாடத்தில்

”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறைவன் சந்தர்ப்பம் கொடுத்தால் பழையபடி பாவங்கள் செய்வானா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு அந்த மனிதர் ”நிச்சயமாக இல்லை. பாவமன்னிப்புக் கேட்டு சிறந்த ஒரு வாழ்க்கை வாழுவார்” என பதில் சொன்னார்.

அதற்கு ஹஸன் அல்பஸாி அவர்கள் ”அவ்வாறு மறுபடி வாழ இறைவன் அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பானா?” என அந்த மனிதரைக் கேட்டார்.

”இல்லையே” என அந்த மனிதர் கவலையுடன் சொன்னார்.

அதற்கு இமாம் ஹஸனுல் பஸாி அவர்கள் ”இந்த ஜனாஸாவிற்கு அந்த சந்தர்ப்பத்தை இறைவன் வழங்காது விட்டாலும் இப்பொழுது உனக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறான் அதனைப் பயன்படுத்திக்கொள்” எனச் சொன்னார்கள்

5-இந்திய மன்னர்களில் ஒருவர் தன் அமைச்சாிடம் தனது மோதிரத்தில்

”கவலையான நேரத்தில் வாசித்தால் மகிழ்ச்சியும் மகிழ்ச்சியான நேரத்தில் வாசித்தால் கவலையும் ” ஏற்படுத்தும் ஒரு வசனத்தை பதியுமாறு பணித்தார். அதை ஏற்று அமைச்சர் பதிந்த வசனம் என்ன தொியுமா!

”இந்த நேரம் முடிந்துவிடும்”

 

6-இந்திய மருத்தவம் பற்றி நபிகளார்-

நபியவர்கள் கூறினார்கள். (புகாாி-5692. )

நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன.

அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடலாம்.

(மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கலாம்.

7-(இன்று நான் வாசித்த அழகிய அரபு வரிகள்)

மனிதர்களின் ஆச்சாியமான செயல்பாடுகளில் ஒன்று தான்-

நீ ஒருவருக்கு எவ்வளவு நலவு செய்தாலும் கடைசியாக ஏதாவது தவறு செய்துவிட்டால் உன் கடந்த கால அனைத்து அழகான செயல்களையும் அழித்துவிடுவார்கள்.

ஆனால்..

இறைவனோ நீ கடைசியாகச் செய்யும் பாவமன்னிப்பின் மூலம் உன் கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்துவிடுகிறான்

8-நான் வாசித்த அழகிய அரபு வாிகள்

உனது ஆளுமையை மக்கள் மத்தியில் 2 விடயங்கள் தீர்மானிக்கின்றன.

உனக்கு எந்த வழியும் இல்லாமல் மிக நெருக்கடிக்குள்ளான நேரத்தில் உனது பொறுமை

உனக்கு எல்லாமே இருக்கும் நேரத்தில் உனது நடவடிக்கைகள்

9-(இமாம் குர்துபி சொல்கிறார்)-

“யாருடைய பாவம் அதிகமாக இருக்கிறதோ அவர் பிறருக்கு (தாகமான சூழ்நிலையில்) தண்ணீர் கொடுப்பதை அதிகாிக்கட்டும்.

ஒரு நாயிற்கு தண்ணீர் கொடுத்த மனிதனின் பாவங்களை இறைவன் மன்னித்திருக்கிறான்.

அப்படியானால் ஒரு முஃமினுக்கு தண்ணீர் கொடுத்தவனின் நிலை எப்படி இருக்கும்!”

10-(இமாம்களின் பொன்மொழிகளில் ஒன்று)

நான் கேட்டதை இறைவன் தந்தால் நான் ஒரு முறை சந்தோசப்படுவேன். இறைவன் அதைத் தராது விட்டால் பத்து முறை சந்தோசப்படுவேன். காரணம் முதலாவது எனது தேர்வு இரண்டாவது இறைவன் எனக்குத் தேர்வு செய்தது.

Top of Form

Bottom of Form

11-என் பெற்றோர்கள் தள்ளாடும் வயதில் அவர்களுக்கு நான் உபகாரம் செய்து வருகிறேன். அவர்கள் என்னை சிறு வயதில் வளர்த்ததற்கு இது ஈடாகுமா?” என ஒருவர் இமாம் ஹஸனுல் பஸாி இடத்திலே கேட்டார்.

அதற்கு ஹஸனுல் பஸாி அவர்கள் சொன்னார்கள் –

”ஒருபொழுதும் ஈடாகாது காரணம் நீ வாழ வேண்டும் என்பதற்காய் அவர்கள் உன்னைக் கவனித்தார்கள். ஆனால் நீ அவர்களது மரணத்தை எதிர்பார்த்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்”

12-நபியவர்கள் முயல் சாப்பிட்டுள்ளார்களா?

மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார்கள்.

நான் அதைப் பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது – தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள்.

அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று ஓர் அறிவிப்பாளர் கேட்க, மற்றோர் அறிவிப்பாளர், (ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் . (புகாாி-2572. அனஸ் ரழியல்லாஹு அன்ஹு)

13-(மறுமையை ஞாபகப்படுத்தும் அழகிய அரபு வாிகள்)

கனவு காண்பவன் விழித்த பின்னரே கண்டது கனவு என்பதை உணர்கிறான்

அது போன்றே உலக வாழ்வில் மூழ்கியிருப்பவன் மரணிக்கும் போதுதான் உலகம் ஓர் ஏமாற்றம் மறுமையே நிரந்தரம் என்பதை உணர்கிறான்.

14-(நான் வாசித்த அழகிய அரபு வாிகள்)

உறிய சந்தர்ப்பங்களில் (கோபம், கவலை, ஆத்திரம்) போன்ற உன் மன உணர்வகளை கட்டுப்படுத்துவதனால்

பொருத்தமற்ற நேரங்களில் அந்த உணர்வுகளை நீ வெளிப்படுத்த வாய்ப்புக்கள் அதிகம்

15-(நான் வாசித்த அழகிய அரபு வாிகள்)

நெருக்கமானவர்கள் மரணிக்கின்ற பொழுது அதிகமானவர்கள் அழுவதெல்லாம் அவாின் மரணத்திற்காக அல்ல

இது போன்றவர்கள் நமது வாழ்வில் மறுபடி கிடைக்கமாட்டார்கள் என்ற உணர்வினால்தான்.

16-(அழகான அரபுவாிகள்)

“அதிகமானவர்கள் அந்நியர்கள் போல் வாழவும் நபித்தோழர்கள் போல் மரணிக்கவும் விரும்புகிறார்கள்”

17-ஒரு மனிதனின் குணங்களில் 90 சதவீதமானவற்றை அவன் தன்னைப் பெற்றெடுத்த தாயோடு நடந்துகொள்ளும் முறையை வைத்துத் தீர்மானிக்கலாம்

18-(இன்று நான் வாசித்த அழகிய அரபு வாிகள்)

மனிதர்களின் ஆச்சாியமான செயல்பாடுகளில் ஒன்று தான்-

நீ ஒருவருக்கு எவ்வளவு நலவு செய்தாலும் கடைசியாக ஏதாவது தவறு செய்துவிட்டால் உன் கடந்த கால அனைத்து அழகான செயல்களையும் மறந்து விடுவார்கள்.

ஆனால்..

இறைவனோ நீ கடைசியாகச் செய்யும் பாவமன்னிப்பின் மூலம் உன் கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்துவிடுகிறான்

19-யா அல்லாஹ் உமருக்கு ரஹ்மத் செய்வாயாக!
————————————————————————

உமர் ஆட்சியில் இருக்கும் போது ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் இப்னு மஸ்லமா என்ற நபித் தோழாிடம் உமர் கேட்டார் –

“எனது ஆட்சியில் என்னை எப்படி நினைக்கிறீர்கள்?”

அதற்கு மஸ்லமா சொன்னார் – “நேர்மையாக நடக்கிறீர்கள். நீங்கள் தவறிழைத்தால் நாம் உங்களை நேராக்குவோம்” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் அவர்கள் “நான் தவறு செய்யும் போது திருத்தக் கூடிய சமூகத்தில் என்னை ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று சொன்னார்கள்” ரழியல்லாஹு அன்ஹும் ஜமீஆ

20-கல்வி ஸ்தாபனங்கள், மத்ரஸாக்கள், பள்ளிவாயல்கள் வேறு பொதுப் பணிகள் செய்து இறைவனிடத்தில் மிகப் பொிய நன்மையை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆனால் பொருளாதாரம் இல்லையே என்ற கவலையா? இதோ நபியர்கள் வழிகாட்டுகிறார்கள் கேளுங்கள்.
——————————————————————————-

அல்லாஹ் அறிவைக் கொடுத்து பொருளாதாரத்தைக் கொடுக்காத ஒரு மனிதர் உண்மையாக நிறைவேற்றும் உள்ளத்துடன்

“என்னிடம் இந்த அளவு பணம் இருந்தால் நான் இவைகளையெல்லாம் செய்திருப்பேன் (என்று நல்ல காாியங்களுக்கு ஆசைவைப்பானாயில்)

அவனும் பொருளாதாரம் இருந்து செலவளித்தனும் நன்மையில் சமனானவர்கள் என நபிகளார் கூறினார்கள். (திர்மிதீ-2325)

21-அன்னையின் அன்பு
———————————
தனது மகன் மனைவியின்றி வாழ்வதை தாய்மார்கள் விரும்புவதில்லை

ஆனால்

பெரும்பாலான மனைவியர்கள் தனது கணவன் தாயில்லாமல் இருப்பதை பொிதும் விரும்புகின்றனர்.

22-நான் இன்று வாசித்த அழகிய அரபு வாி

“நான் ஒரு கழுதையில் நபியவர்களுக்குப் பின் உற்கார்ந்திருந்தேன்” (முஆத் ரலியல்லாஹு அன்ஹு-புகாரி)

நீ எந்த வாகனத்தில் ஏறுகிறாய் என்பதல்ல முக்கியம் எவருடன் ஏறுகிறாய் என்பதுதான்.

23-அாிய தகவல் இது
———————————————–
“அதகிமாகவும் ஆபத்தான நோய்கள் வருவதும் இலையுதிர்காலத்தில்தான்.

வசந்த காலம் காலங்களிலேயே மிகவும் ஆரோக்கியமிக்கதும் மரணங்கள் குறைந்ததுமான காலம்.

மருந்தாளர்களும் சடலங்களுக்கு பொறுப்பானவர்களும் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் கடனெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இலையுதிர்காலத்தை எதிர்பார்த்தே அவர்கள் இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதுதான் அவர்களுடைய வசந்த காலமும் விருப்பமான காலமும் (இமாம் இப்னுல் கையிம்- அத்திப்புன் நபவி)

24-நான் வாசித்த சிறந்த அரபு வரிகள்

(ஸஹீஹுல் புகாரி இமாம் புகாரியின் தொகுப்பா? என்று கேட்டவருக்கு ஒரு அறிஞர் தன் பதிலுக்கு முன் சொன்ன வரிகள்)
———————————————–

தெளிவற்ற விடயங்களில் மட்டுமல்ல உலகம் மாற்றுக்கருத்தின்றி ஏற்றுள்ள விடயங்களில் கண்கூடாக அனைவரும் காணும் விதத்தில் நிரூபணமான விடயங்களில் மனிதர்கள் ஒருமித்து சிந்திக்கும் முறைமைகளில் சந்தேகங்களை தோற்றவித்தல் மிக இளகுவானது மட்டுமல்ல எல்லாத் தரப்பினருக்கும் சாத்தியமானது.

கட்டுப்பாடடின்றி சிந்தனைப் போக்கிற்கு சுதந்திரம் கொடுத்தவர்களில் சிலர் தாங்கள் இருக்கிறோமா? என்று தங்களது உலக இருப்பை சந்தேகிக்கும் அளவுக்கு அவர்களை இழுத்துச் சென்றது. ஆரோக்கியமானவர்கள் வட்டத்திலிருந்து வெளியேரும் நிலமை ஏற்பட்டது. எனவே சிந்தனையை வழி நடத்த உறுதியான நம்பிக்கைகள் மிக முக்கியமானவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts