இதுபோன்ற எந்த ஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் கூட இல்லை. இந்த மூட நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. இமாம் இப்னு தைமிய்யா இன்னும் பல ஆரம்ப கால அறிஞர்கள் இதற்கான பதில்களை அளித்துள்ளனர்.
முடிகள், நகங்கள் நம் உடலின் ஒரு பகுதியாக இருப்பதால் நாம் குளிப்பு கடமையான நிலையில் இவற்றை அகற்றினால் நாளை மறுமையில் அசுத்தமான நிலையில் அதாவது குளிப்பு கடமையான நிலையில் இவைகள் வரும் என்ற தவறான சிந்தனையே இந்த நம்பிக்கையின் பின்னணி இதனாலேயே குளிக்காத நிலையில் இவைகளைக் களைய கூடாது குளித்து சுத்தமான பிறகே இவைகளைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் إِنَّ الْمُؤْمِنَ لا يَنْجُسُ” “
“ஒரு முஃமின் எப்பொழுதுமே நஜீஸ் (அசுத்தமாக) ஆக மாட்டான் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தவரைப் பார்த்து “நீங்கள் குஃப்ருடைய முடிகளைக் களைந்து விட்டு கத்னா செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதாக ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் உள்ளது .
இந்த நபி மொழிகள் மூலம் நாம் குளிப்பு கடமையான நிலையில் நகங்கள் மற்றும் முடிகளைக் களையலாம் என்பதை தெளிவாக சொல்கிறது.
குளிப்பு கடமையான நிலையில் முடிகள், நகங்களைக் களைவதால் அவை அசுத்தங்களாக ஆகிவிடுமோ என்று எண்ணுவது மார்க்கத்தில் ஆதாரம் இல்லாமல் கடைபிடிக்கப்படும் மிதமிஞ்சிய போக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.