Monday, May 6, 2024

யார் வசதி பெற்றும் உள்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நம் தொழுமிடத்தை நெருங்கவேண்டாம். (ஆதாரம்: இப்னு மாஜா-3123) என்ற ஹதீஸ் பலஹீனமானதா?

குறிப்பிட்ட ஹதீஸ் இப்னு மாஜா , அஹ்மத் ஹாகிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸைஅபு ஹு ரைராவிடமிருந்து  அப்துர்ரஹ்மான் அல்

அஃரஜ் அவரிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு அய்யாஷ் அறிவிக்கிறார்

அவரிடமிருந்து

1.
முக்ரி
2.
ஸைத் இப்னுல் ஹுபாப்

3.ஹய்வா
4.
இப்னு வஹப்

என 4ல்வர் அறிவிப்புக்களை காண முடிகிறது. இவர்களில் முதல் மூவரும் நபியவர்களின் கூற்றாக مرفوع ஆக அறிவிக்கின்றனர். இப்னு வஹப் மாத்திரம் அபூ ஹு ரைராவின் கூற்றாக இதை அறிவிக்கிறார். இதில் இப்னு வஹப் மிக பலமானவர் அதே அளவிற்கு மனனத்தில் ஆற்றலுள்ளவரே முக்ரி என்ற அறிஞரும். அதுவல்லாமல் அவரோடு இந்தச் செய்தியை இன்னும் இருவர் அவ்வாறே அறிவித்திருப்பது இது நபியவர்களின் கூற்றுத்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால்தான் இமாம் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்:

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص -7566 أوقفة عبد الله بن وهب إلا أن الزيادة من الثقة مقبولة و أبو عبد الرحمن المقري فوق الثقة
இப்னு வஹப் இதை அபூ ஹு ரைராவின் கூற்றாக அறிவிக்கிறார். ஆனாலும் அபூ அப்திர்ரஹ்மான் முக்ரி அறிவிக்கும் அதிகப்படியான தகவலைக்கொண்ட செய்தியே ஏற்கத்தக்கது. அவர் பலமானவர் என்ற தரத்திற்கம் மேலானவர்” முஸ்தத்ரக்: 7566

அதே நேரம் சில அறிஞர்கள் இது அபு ஹு ரைராவின் கருத்தாக அறிவிக்கப்படும் அறிவிப்பே சரியாக இருக்கப் பொருத்தமானது எனவும் கூறியுள்ளனர். அஹ்மத் சாகிர் அல்பானி போன்ற அறிஞர்கள் இந்தச் செய்தி நபியவர்களின் கூற்றாகப் பதிவு செய்யபட்ட அறிவுப்புக்களையே பலம் என்கின்றனர். அதுவே சரியானதாகும் இன்சா அல்லாஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts