Friday, May 3, 2024

நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா?

நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா?

நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாக இஸ்லாத்தை குறைகண் கொண்டு ஆய்வு செய்யக் கூடிய சிலர் ஒரு சில அறிவிப்புக்களை எடுத்துக் காட்டி விமரிசிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களைப் பற்றியும் அவைகளின் தரம் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது. அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அறிவிப்பு புகாரியில் இடம்பெறுகிறது.

صحيح البخاري ـ  6982 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ ح و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ …………………..ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ وَفَتَرَ الْوَحْيُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا بَلَغَنَا حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ ابْنُ عَبَّاسٍ { فَالِقُ الْإِصْبَاحِ } ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். …………………………………………….பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர். ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ‘ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போதுமறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.

புகாரியில் இடம்பெறும் 6982 வது இலக்கத்தில் இடம்பெறும் இவ்வறிவிப்பில் முதல் வஹியுடன் இறைச் செய்தி தடைப்பட்டதால் நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது என்பதே அவர்களால் முன்வைக்கப்படும் வாதம். ஆனால்  இந்த அறிவிப்பில் இடம் பெறும் கடைசிப் பகுதி பலஹீனமானது என்பதை இமாம் புகாரி இந்த ஹதீஸிலேயே மறை முகமாக தெளிவுபடுத்தியுள்ளார்.

புகாரியில் இரண்டு விதமான அறிவுப்புக்கள் இடம்பெறும். ஓன்று இமாம் புகாரி தனது ஆசிரியர் தொடங்கி நபியவர்கள் வரை உள்ள அறிவிப்பாளர்களைச் சொல்லி அறிவிக்கும் செய்திகள். ஸஹீஹ் புகாரியில் வருகிறது என்றால் அது இந்த விதமான அறிவிப்புக்களையே குறிக்கும். 2வது அறிவிப்பாளர் வரிசை இன்றியோ அல்லது நபித்தோழர் அல்லது தாபிஈ ஒருவர் சொல்வதாக அறிவிப்பாளர் வரிசை இன்றிக் குறிப்பிடும் செய்திகள் இவைகள் முஅல்லகான அறிவிப்புகள் எனக் குறிப்பிடப்படும். ஸஹீஹுல் புகாரியில் இடம் பெறும் மொத்த ஹதீஸ் எண்ணிக்கையில் இந்த வகை அறிவிப்புக்கள் எண்ணப்படமாட்டாது. இவைகளை இமாம் புகாரி அவர்கள் துணைச் செய்திகளாகக் கொண்டு வருவார்கள். இவைகளுடைய தரங்களைப் பொருத்த வரையில் அதற்குறிய அறிவிப்பாளர் வரிசைகள் வேறு நூற்களில் இடம்பெற்றிருந்தால் அவைகளை ஆய்வுக்குற்படுத்தி ஒரு முடிவுக்கு வரலாம். அவைகளுக்கான அறிவிப்பாளர் வரிசைகளை வேறு நூற்களில் காண முடியாது விட்டால் அவைகள் பலவீனமானவைகள் என்ற முடிவுக்கே வரவேண்டும். மேலுள்ள ஹதீஸில் நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்ததாக இடம்பெறும் தகவல் இவ்வகையைச் சார்ந்ததே. இந்த ஹதீஸை நபியவர்களிடமிருந்து ஆயிசா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும்அவரிடமிருந்து உர்வா அவர்களும் அவரிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்களும் அறிவிப்புச் செய்கிறார்கள் அவரிடமிருந்து பலர் அறிவிப்புச் செய்கின்றனர். இதை அறிவிப்புச் செய்பவர்களில் 3வது நபரான இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி அவர்கள் நபியவர்களின் வஹி பற்றிய ஹதீஸை அறிவித்த பின்னர் தமக்குக் கிடைத்த இன்னொரு தகவலை சொல்கிறார்கள் நாம் மேலுள்ள ஹதீஸில்நீல நிறப்படுத்தியிருப்பதே அத்தகவல் அத்தகவலை சொல்லும்போது தமக்கு அந்தச் செய்தி எவ்வாறு யார் வழியாகக் கிடைத்தது என்பதைச் சொல்லவில்லை எமக்குக் கிடைத்த தகவலின்படி என்றே சொல்கிறர் அந்த தகவலைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அவ்வாறு ஆரம்பிக்கிறார்.மேலே உள்ள அறிவிப்பிலே நமக்குக் கிடைத்த தகவலின்படி என்று சொல்பவர் இமாம் ஸுஹ்ரி அவர்கள். இவர் இத்தகவலை யார் தமக்குச் சொன்னது அவருக்கு யார் சொன்னது என்ற அறிவிப்பாளர் தொடர் இன்றிச் சொல்வதால் இச்செய்தி பலஹீனமானது. குறிப்பிட்ட இந்த ஹதீஸை இமாம் புகாரி அவர்கள் வஹியின் ஆரம்பம் என்ற பாடத்தில் ஸுஹ்ரியின் இந்த தற்கொலை பற்றிய மேலதிக அறிவிப்பின்றி பதிவு செய்துள்ளார்.

فتح الباري – ابن حجر – (ج 12 ص 359)

وهو من بلاغات الزهري وليس موصولا

‘இந்த அறிவிப்பு ஸுஹ்ரி அவர்கள் தமக்குக்கிடைத்த தகவல் என அறிவிப்பாளர் வரிசையின்றி அறிவிக்கும் அறிவிப்பாகும்’ (பத்ஹுல்பாரி:12-359) என்று புகாரிக்கு விரிவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவது அறிவிப்பு:

الطبقات الكبرى – (ج 1 ص 196)
أخبرنا محمد بن عمر قال حدثني إبراهيم بن محمد بن أبي موسى عن داود بن الحصين عن أبي غطفان بن طريف عن بن عباس أن رسول الله صلى الله عليه وسلم لما نزل عليه الوحي بحراء مكث أياما لا يرى جبريل فحزن حزنا شديدا حتى كان يغدو إلى ثبير مرة وإلى حراء مرة يريد أن يلقي نفسه منه فبينا رسول الله صلى الله عليه وسلم كذلك عامدا لبعض تلك الجبال إلى أن سمع صوتا من السماء فوقف رسول الله صلى الله عليه وسلم صعقا للصوت ثم رفع رأسه فإذا جبريل على كرسي بين السماء والارض متربعا عليه يقول يا محمد أنت رسول الله حقا وأنا جبريل قال فانصرف رسول الله صلى الله عليه وسلم وقد أقر الله عينه وربط جأشه ثم تتابع الوحي بعد وحمي

முதல் ஹதீஸில் நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றபோது எப்படி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றி ஆறதல்படுத்தினார்களோ அதே விடயத்தையே மெலுள்ள அளிவிப்பும் சொல்கிறது. இது இமாம் இப்னு ஸஃதின் தபகாத் என்ற நூலில் 1-196 இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட மவ்லூ தரத்தில் அமைந்த செய்தியாகும் இந்த அறிவிப்பில் இடம்பெறும் இப்னு ஸஃதின் ஆசிரியர் வாகிதீ என்பவர் ஒரு பெய்யர் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. அது போன்று அவரின் ஆசிரியரான இப்ராஹீம் இப்னு முஹம்மத் இப்னு அபியஹ்யா என்பவரையும் பல அறிஞர்கள் பொய்யர் என விமரிசித்துள்ளனர். இந்த அறிவிப்பாளர் வரிசையை விமரிசிக்கும் அறிஞர் அல்பானி அவர்கள் உலகத்திலேயே மிகத் தரம் தாழ்ந்த ஒரு அறிவிப்பாளர் வரிசையே இது எனக் குறிப்பிடுகிறார்கள்.

எனவே பாவங்களிலிருந்து இறைவனது பாதுகாப்பைப் பெற்ற கண்ணியமிக்கு எமது தலைவர் இறைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை களங்கப்படுத்தும் இது போன் செய்திகளின் தன்மைகளையம் தரங்களையும் நாம் அறிந்துகொள்வதோடு நமது மாற்றுமத அன்பர்களின் உள்ளங்களில் இது போன்ற தவறான செய்திகள் இருந்தால் அவைகளையும் நீக்கிவிட முயல்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts