Sunday, April 28, 2024

நோன்பு திறக்கும்போது ஓதும் துஆக்கள் அனைத்தும் பலஹீனமானதா?

நோன்பு திறக்கும்போது ஓதும் துஆக்கள் அனைத்தும் பலஹீனமானதா?

நோன்பு திறக்கும்போது சொல்ல வேண்டிய பிரார்த்தனைகள் பலவிதமாக ஹதீஸ் நூல்களிலே பதியப்பட்டுள்ளன.அவைகளில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான செய்தியல்ல.இவைகளில் பிரபல்யமானவைகள் கீழ்வரும் இரு செய்திகள்தான்.

முதலாவது செய்தி

سنن أبي داود للسجستاني – 2360 – حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا أَفْطَرَ قَالَ « اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

அல்லாஹ{ம்ம லக ஸ{ம்து வஅலா ரிஸ்கிக அப்தர்து’(அபூதாவூத்-2358,)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஆத் இப்னு ஸஹ்ரா என்பவரின் நம்பகத் தன்மை சம்பந்தமாக எந்தத் தகவலும் கிடையாது. அது மாத்திரமல்ல இந்தச் செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை,மாறாக நபியவர்கள் சொன்னதாக தனக்கு செய்தி கிடைத்தது என்றே குறிப்பிடுகிறார்.

இதே செய்தி முஃஜமுல் அவ்ஸத்தில்-(7549) அனஸ் ரழியல்லாஹ{அன்ஹ{வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் அறிவிப்பாளர் வரிசையில் தாவூத் இப்னு ஸபர்கான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் நிராகரிக்கப்பட்டவர்,சிலர் இவரைப் பொய்யர் என்றும் விமர்சித்துள்ளனர்.

இதே செய்தி அபூஹ{ரைரா ரழியல்லாஹ{அன்ஹ{வழியாக முஸன்னப் இப்னு அபீஷைபாவில்-(9744) பதியப்பட்டுள்ளது.இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹ{ஸைன் அபூஹ{ரைராவின் காலத்திற்குப் பிந்தியவர்,தனக்கு யார் இந்தச் செய்தியை அபூஹ{ரைராவிடமிருந்து சொன்னார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

இதே செய்தி “வஅலைக தவக்கல்து”என்ற சில அதிகப்படியான வாசகங்களோடு அலீ ரழியல்லாஹ{அன்ஹ{வழியாக முஸ்னதுல் ஹாரிஸிலே-(469) பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹம்மாத் இப்னு உமர் இடம்பெறுகிறார்.இவர் ஹதீஸ்களை புனைந்துரைப்பவர்.

இதே செய்தி “பதகப்பல் மின்னீ” என்ற சில மேலதிக வாசகங்களுடன் இப்னு அப்பாஸ் வழியாக முஃஜமுல் கபீரிலே-(12720) பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும் அப்துல் மலிக் இப்னு ஹாரூன் ஹதீஸ்களை புனைந்துரைப்பவர்.

இந்த பலஹீனங்களின் தொகுப்பே இந்த துஆவின் வாசகம்.

இரண்டாவது செய்தி

سنن أبي داود للسجستاني – 2359 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِى الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ – يَعْنِى ابْنَ سَالِمٍ – الْمُقَفَّعُ – قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا أَفْطَرَ قَالَ « ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது தஹப்பல்லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்என்று கூறுவார்கள். (அபூதாவூத் – 2357)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே இப்பொழுதும் மர்வான் இப்னு ஸாலிம் என்பவர் அறியப்படாதவர். இவரை தகவல் கிடைக்காதவர்களும் நம்பகமானவர்களே என்ற நிலைப்பாட்டில் இருக்கும் இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாறும் உறுதிப்படுத்தவில்லை.இமாம் இப்னு ஹிப்பான் இப்படியான நிலைப்பாடு கொண்டவர் என்பதைத் தெரியாமல் இந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் இந்தவிதமான குறை இருக்கிறது என்பது தெரியவந்த பின்னர் அதுவும் பலஹீனமான செய்திதான் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல் குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ற முடிவில் நாம் உறுதியாக இருப்பதே இதற்கான காரணம்.எனவே வழமையாக சாப்பாட்டிற்குப் பின்னர் ஓதும் துஆவையே நோன்பு திறந்த பின்னரும் கூறிக்கொள்ள வேண்டும். சாப்பிட்டபின் ஓதும் துஆக்களில் மிகச் சரியானது புகாரியில் 5458 இடம்பெறும் பின்வரும் துஆதான் :

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

அல்ஹம்துலில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி ஙைர மக்பீயின் வலா முவத்தஇன் வலா முஸ்தங்னன் அன்ஹ் ரப்பனா

அல்லது புகாரியில் 5459 இடம்பெறும் பின்வரும் துஆ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلَا مَكْفُورٍ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபானா வஅர்வானா ஙைர மக்பீயின் வலா மக்பூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts