Thursday, May 9, 2024

Credit Cards பயன்படுத்தலாமா?

நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட தவணையில் பணம் செலுத்தத் தவறினால் நான் அதற்காக வட்டி செலுத்துவேன் என்று கிரடிட் காட் பெறும் போது நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளதால் இது வட்டியாகும்.’ என்பதும் ஒரு வலுவான வாதம்தான். ஆனால் இந்த வாதம் அடிப்படையில் ஞாயமாக இருந்தாலும்; நடைமுறையில் பலவற்றுக்கு நாம் இதே ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம். மின்சாரம், தொலை பேசி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இவ்வொப்பந்த அடிப்படையில்தான் செலுத்துகிறோம். ஆம் இரண்டிற்கு ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. கடனுக்கு வட்டி என்ற ஒப்பந்தம் ஹராம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மின்சாரம், தொலை பேசி போன்றவைகள் சேவைகள். அவைகளுக்கான நுகர்வுக் கூலியை நாம் உரிய நேரத்தில் வழங்கத் தவறும் போது வட்டி அல்லது பெனல்டி இடப்படுகிறது. அதையும் வட்டி என்று சொல்வதே பொருத்தமானது. கிரடிட் காட் பாவனை மார்க்கத்திற்கு முரணானது வட்டியை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள அதன் முறைமை பற்றி ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

Visa, Master  போன்ற நிறுவனங்கள் நிறுவனங்களின் வளர்ந்த உலகலாவிய ரீதியிலான இணையத் தொலை தொடர்பு தொழிநுற்பத்தின் விளைவுகளில் ஒன்றே கடனட்டைப் பயன்பாட்டின் இன்றைய வடிவம். உங்கள் கடனட்டையில் விஸா என்றும் மாஸ்டர் என்றும் இடப்பட்டிருப்பதன் அர்த்தம் நீங்கள் கடனட்டையைப் பயன்படுத்திய வங்கி குறிப்பிடப்பட்ட அந்நிறுவனங்களின் நெட்வேர்க்கைப் பயன்படுத்தியே உங்களுக்கு அந்த சேவையை வழங்குகிறது என்பதுவே. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட வங்கியின் மூலம் நீங்கள் பெற்றுள்ள கிரடிட் அட்டையை இன்னொரு வங்கியின் ATM இல் உபயோகப்படுத்த முடிகிறது. ஆக இந்த அட்டைகளை நீங்கள் வங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டாலும் அந்த அட்டைகள் உலகத்தில் எங்கும் செயல்படுத்தும் வண்ணம் அந்த சேவைகளை வழங்குவதும் நிர்வகிப்பதும் விஸா மாஸ்டர் போன்ற நிறுவனங்களே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வங்கிகளிலிருந்து நாம் இவற்றைப் பெறுகிறோம். நாம் பெறும் இந்தக் கடன் அட்டைகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் கிரடிட் காட் இணைப்பைப் பெற்ற நிறுவனங்களுக்கு விஸா மாஸ்டர் போன்ற நிருவனங்கள்  வழங்கி விடுகின்றன. அதாவது கணக்கில் வைப்புச் செய்து விடுகின்றன. எனவே வங்கிகளுக்கு இதில் பொறுப்பேதுமில்லை. கிரடிட் காட் வினியோகம் செய்யும் நிறுவனங்களே அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுள்ளதால் வங்கிகள் அச்சமின்றி அவற்றை வினியோகிக்கின்றன. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிக்கின்றன. இந்த சேவைக்காக நூற்றுக்கு இரண்டரை முதல் ஏழரை வரையிலான தொகையை வட்டியாக தமக்கு வழங்க வேண்டும் என்று கிரடிட்காட் நிறுவனங்கள் வங்கிகளோடு உடன்படிக்கை செய்கின்றன. இவ்வுடன்படிக்கையின் அடிப்படையில்தான் கிரடிட் காட் வினியோகமே நடைபெறுகின்றன. ஆகவே வங்கிகள் செலுத்தும் இந்த வட்டியை வங்கிகள் குறிப்பிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் தொழில் ஸ்தாபனங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இந்த வட்டி முறைக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறா விட்டால் நாம் கிரடிட் காட்டை உபயோகிக் முடியாது. நாம் பெறும் கிரடிட்காட்களே காரணம் என்பதால் வட்டிக்கு நாம் இங்கே துணை போகின்றோம். இவ்வடிப்படையில்தான் கிரடிட் காட் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக ஆகின்றது. அது மட்டுமல் இந்த அட்டைகளைப் பயன்படுத்தும் பொழுது மறை முகமாக நமது பணம் சிறுதுளி பெருவள்ளம் என்பதற்கு இணங்க பல காரணங்கள் காட்டி உருவப்படுவதைப் பார்க்கலாம். எமக்கும் வியாபரிக்கும் வங்கிக்கும் இடையிலான இந்த கடன் சேவைக்கு வட்டி பெறப்படுவதும் அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்த கடனட்டை சேவை Visa, Master, American Express  போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுவதும் இந்தக் கிரடிட் காட் பயன்பாடு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற உறுதியான மார்க்கத் தீர்ப்பை எமக்குச் சொல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இந்த சுரண்டல் முறைப் பொருளாதராத்திலிருந்து காப்பானாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts