Tuesday, September 17, 2024

இசையை இஸ்லாம் தடை செய்கிறதா?

இசையை இஸ்லாம் தடை செய்கிறதா?

இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சிற்சில இடங்களிலேயே அவைகள் தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம் அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடைசெய்வதை

01. وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ (6) لقمان : 6

மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)

வீணான செய்திகள் ஏராளமாக இருந்தாலும் விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கொத்த அம்சம் என்ன என்பதை பின்வருகின்ற, சட்ட ரீதியாக ஹதீஸின் தரத்தில் அமைந்த இரண்டு அதர்களும் தெளிவுபடுத்துகின்றன.

2:

مصنف ابن أبي شيبة –  21130 – حدثنا أبو بكر قال حدثنا حاتم بن إسماعيل عن حميد بن صخر عن عمار الدهني عن سعيد بن جبير عن أبي الصهباء عن عبد الله بن مسعود أنه سئل عنها فقال الغناء والذي لا إله الا هو

எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீணான செய்திகள் என்பது (இசை கலந்த) பாடலையே குறிக்கிறது.என்று இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

03. الأدب المفرد – 1265 – حدثنا حفص بن عمر قال حدثنا خالد بن عبد الله قال أخبرنا عطاء بن السائب عن سعيد بن جبير عن بن عباس : في قوله عز و جل ومن الناس من يشتري لهو الحديث قال الغناء وأشباهه

பாடல் அது போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (அதபுல் முப்ரத்-1265, பைஹகீ-10-221-223)

இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் இவ்வசனம் தெளிவாக விளங்கப்படுத்துகிறது. இந்த ஒரு வசனமே இசை ஹராம் என்பதற்கு போதுமானதெனினும் நபியவர்கள் தன் கூற்றுக்கள் மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்திருக்கிறார்கள்.அவற்றில் சிலதை கீழே தருகிறோம்.

04. صحيح البخاري-5590- وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلَابِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகளை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)

விபச்சாரம், மது போன்றவைகளை ஹலாலாகக் கருதுவோர்களுடன் இசையைக் ஹலாலாகக் கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை நபியவர்கள் எவ்வளவு மோசமான ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது

. البزار في ” مسنده ” ( 1  377 795 – كشف الأستار ) 05

عن أنس بن مالك رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : صوتان ملعونان في الدنيا والآخرة : مزمار عند نعمة ورنة عند مصيبة

இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.என்று நபியவர்கள் கூறினார்கள். {அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹ{ அன்ஹ{, ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 (பார்க்க: தஹ்ரீமு ஆலாதீத் தர்ப் – 52)}

சந்தோசத்தின் போது கூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையை தடைசெய்தது மட்டுமல்லாமல் சபிப்பதன் மூலம் Wind Instrumentஎன்றழைக்கப்படும் வகை சார்ந்த அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளை தடை செய்தது மாத்திரமின்றி குறிப்பிட்டும் தடைசெய்வது நபியவர்கள் இசையை எவ்வளவு அஞ்சுகிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்கிறது.

06. سنن البيهقي الكبرى – (10  221) 20779 – أخبرنا أبو الحسين بن بشران أنبأ الحسين بن صفوان ثنا عبد الله بن محمد بن أبي الدنيا ثنا يحيى بن يوسف الزمي ثنا عبيد الله بن عمرو عن عبد الكريم هو الجزري عن قيس بن حبتر عن بن عباس عن النبي صلى الله عليه و سلم قال : إن الله تبارك وتعالى حرم عليكم الخمر والميسر والكوبة وهو الطبل وقال كل مسكر حرام

மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் என்மீது தடைசெய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{, ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)

பொதுவாக இசைக் கருவிகளை தடைசெய்தது போன்று இன்று Drum வகை போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக் கூறுகிறார்கள். மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடைசெய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

சொல் விளக்கம்:- நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட எத்தனையோ கருவிகள் இன்று பல் வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து ஒரு கலையம்சமாக மாறிவிட்டன. ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள் சில நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளை குறித்துப் பேசினாலும் அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம் இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வன்னம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும் முழுமையாகத் தடைசெய்கின்றது. பின்வருவனவைகளே அவ்வார்த்தைகள்:

01- معازف அனைத்து இசைக் கருவிகளையும் இது குறிக்கும்.

02- الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை போன்ற Drum வகைகளை இது குறிக்கும்.

03- مزمار புல்லாங்குழல் போன்ற காற்று வாத்தியங்கள் (Wind Instrument) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.

04- القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள்(Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.

அத்துப் (الدف) என அழைக்கப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை பெருநாட்களிலும் திருமண நேரங்களிலும் மாத்திரம் நபியவர்கள் அனுமதித்ததாக புகாரி-906,909,2750,3716 என்ற இலக்கங்களில் ஆயிஷா ரழியல்லாஹ{ அன்ஹா வழியாக இடம்பெறும் ஹதீஸ{ம் புகாரி-3779,4852 என்ற இலக்கங்களில் ருபைஃ பின்த் முஅவ்வித் ரழியல்லாஹ{ அன்ஹா வழியாக இடம்nறும் ஹதீஸ{ம் வந்துள்ளமையால் அந்நேரங்களில் மாத்திரம் இது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அல்லாஹ்வுடைய அவனது தூதருடைய எச்சரிக்கையை தெளிவாக அறிந்த பின் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் தவிர்த்து அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts