தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரங்கள் என்ன?
தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரங்கள் 3 . பின்வரும் செய்தி முஸ்லிமில் 1996ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح مسلم للنيسابوري – 1966 – عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِىَّ يَقُولُ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَانَا أَنْ نُصَلِّىَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ.
‘மூன்று நேரங்களில் தொழுவதையோ எம்மில் இறந்தவர்களை அடக்குவதையோ நபிகளார் தடை செய்தார்கள்.
1.சூரியன் உதயமாக ஆரம்பித்ததிலிருந்து (நில எல்லையிலிருந்து) உயரும் வரை
2.உச்சியில் இருக்கும் நேரத்தில் இருந்து சூரியன் சாயும் வரை
3.மறைவதற்காக சாய்ந்ததிலிருந்து (முழுமையாக) மறையும் வரை”.
இன்று அன்றாடக் கலண்டர்களில் தொழுகை நேரம் இடம் பெறும் பகுதியில் சூரியன் உதிக்க ஆரம்பிக்கும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்திலிருந்து 15 அல்லது 20 நிமிடங்கள் வரை தொழுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போன்று ழுஹருக்கு அதான் ஒளிப்பதற்கு முன்னர் உள்ள 10 அல்லது 15 நிமிடங்களிலும் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். மஃரிபின் அதானுக்கு முன்னுள்ள அரை மணி நேரங்களிலும் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். அன்னளவாகவே நேரங்களைக் குறிப்பிட முடியும். ஆனால் ஜும்ஆத்தினத்தில் மாத்திரம் உச்சியில் சூரியன் இருக்கும் நேரத்திலும் தொழுவதற்கு அனுமதி உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் சொல்கிறது.
صحيح البخاري ـ 883 – عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى
‘வெள்ளிக்கிழமை நாளில் யார் குளித்து முடிந்தவரை சுத்தமாகி தனது எண்ணையிலிருந்து பூசி தனது வீட்டிலுள்ள வாசைன தடவி அங்கிருந்து வெளியேறி மஸ்ஜிதிற்கு வருகை தருகிறாரோ மஸ்ஜிதிலே இருவருக்கு மத்தியில் பிரிக்காமல் நடந்து சென்று தனக்கு எழுதப்பட்ட அளவு தொழுது.பின்னர் இமாம் உரை நிகழ்த்தும் போது மௌனமாகக் கேட்கிறாரோ அவரது இந்த ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவிற்கும் இடைபட்ட காலத்தில் நடக்கும் தவறுகள் மன்னிக்கப்படும். என நபிகளார் கூறினார்கள். புகாரி 883
இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘ தனக்கு எழுதப்பட்ட அளவு தொழுது” என்ற வாசகம் இமாம் மின்பரில் ஏறும் வரை தொழலாம் என்பதைக் குறிக்கிறது.இமாம் மின்பரில் ஏறும் நேரத்தில்தான் அதான் சொல்லப்படும். இமாம் மின்பருக்கு ஏறும் முன்னுள்ள அந்த நேரத்தில் சூரியன் உச்சங் கொடுக்கும் நேரமும் அடங்கும் என்பதால் ஜும்ஆத் தினத்தில் மாத்திரம் இந்த நேரத்தில் தொழத் தடை இல்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் இன்னும் விளங்கப்படுத்தப்பட வேண்டிய சில விதிவிலக்குகளும் உண்டு.