புறம் பேசுவது பெருமாவம்.நோன்பு நோற்ற நிலையில் புறம் பேசுவாராயின் அந்த நோன்பில் அல்லாஹ்வுக்குத் தேவையுமில்லை.ஆனாலும் அவ்வாறு நடந்துவிட்டால் நோன்பைக் களாச் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அது பற்றிவரும் பின்வரும் செய்திப பலஹீனமானது.
“இந்த இரு பெண்களும் அல்லாஹ் ஹலாலாக்கியதைவிட்டும் நோன்பிருந்தார்கள். அவன் ஹராமாக்கியதிலே நோன்பைத் திறந்துவிட்டார்கள். இருவரும் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து மக்கள் இறைச்சியை சாப்பிட்டார்கள்” என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப்படுகிறது.
நோன்பை நோற்ற நிலையில் புறம்பேசிய இரண்டு பெண்கள் விடயத்தில் நபிகளார் சொன்னதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு பலஹீனமானதாகும்.
இதனை இமாம் அஹ்மத் அவர்கள் தனது (முஸ்னத் 5-431) இலேயும் இமாம் அபூதாவூத் தயாலிஸீ தனது (முஸ்னத் 1-188) இலேயும் உபைத் எனும் நபிகளாரின் மவ்லா வழியாக இருவேறு அறிவிப்பாளர் வரிசை மூலம் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் அஹ்மதுடைய அறிவிப்பாளர் வரிசையிலே பெயரே அறியப்படாத அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இமாம் அபூ தாவூத் தயலிஸீயுடைய அறிவிப்hளர் வரிசையிலே:-
1- ரபீஃ இப்னு ஸபீஹ்,
2-யஸீத் இப்னு அபான் அர்ருகாசி
என்ற இருவர் இடம்பெறுகிறார்கள். முதலாமவர் பலஹீனமானவர் இரண்டாமவர் நிராகரிக்கப்பட்டவர்.