Tuesday, October 8, 2024

இரவுத் தொழுகையை மஸ்ஜிதில் ஜமாஅத்தாகத் தொழுவது சிறப்புக்குறியதா? வீட்டில் பிந்திய இரவில் தொழுவது சிறப்புக்குறியதா?

இரவுத் தொழுகையை மஸ்ஜிதில் ஜமாஅத்தாகத் தொழுவது சிறப்புக்குறியதா? வீட்டில் பிந்திய இரவில் தொழுவது சிறப்புக்குறியதா?


صحيح البخاري ـ7290 – عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً فِي الْمَسْجِدِ مِنْ حَصِيرٍ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا لَيَالِيَ حَتَّى اجْتَمَعَ إِلَيْهِ نَاسٌ ثُمَّ فَقَدُوا صَوْتَهُ لَيْلَةً فَظَنُّوا أَنَّهُ قَدْ نَامَ فَجَعَلَ بَعْضُهُمْ يَتَنَحْنَحُ لِيَخْرُجَ إِلَيْهِمْ فَقَالَ مَا زَالَ بِكُمْ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ حَتَّى خَشِيتُ أَنْ يُكْتَبَ عَلَيْكُمْ وَلَوْ كُتِبَ عَلَيْكُمْ مَا قُمْتُمْ بِهِ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الصَّلَاةَ الْمَكْتُوبَةَ

“நபியவர்கள் பள்ளியிலே (ரமழானில்) பாயினால் அறையமைத்து சில இரவுகள் தொழலானார்கள். இதனால் மக்கள் அவர் பின்னால் திரண்டு தொழ ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாள் நபியவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. நபியவர்கள் (வீட்டில்) உறங்கிவிட்டார்கள் என எண்ணி அவர்கள் வெளியே வருவதற்காக கனைக்கலானார்கள். மறுநாள் நபியவர்கள் அவர்களிடம் “நீங்கள் செய்து வந்ததை நான் அறிவேன். ஆனால் இத்தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என அஞ்சினேன். அவ்வாறு கடமையாக்கப்பட்டு விட்டால் அதை நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளமாட்டீர்கள். எனவே மக்களே உங்கள் வீடுகளில் தொழுதுகொள்ளுங்கள். கடமையான தொழுகையைத் தவிர ஏனைய தொழுகைகளை ஒருவர் தனது வீட்டிலே தொழுவதே சிறந்ததுஎனக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 7290                                     அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்

மேற் கண்ட ஹதீஸ் இரவுத் தொழுகை நபியவர்கள் ஜமாஅத் நடத்தினாலும் வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. நீண்ட நேரம் ஓதித் தொழுவதற்கான மனனம் இல்லாதவர்கள் அல்லது தொழ முடியாமல் போய்விடும் என்று அஞ்சுபவர்களுக்காகவும் இளகுபடுத்தலுக்குமாவே இரவுத் தொழுகை ஜமாஅத்தாகச் செய்யவும் அனுமதிக்கிறது. ஆனாலும் வீட்டில் தொழுவதே மிகச் சிறந்தது. அந்தச் சிறப்பு எந்தளவிற்கு உயர்ந்தது அதன் கூலியின் அளவுகள் என்ன என்பதையெல்லாம் நபியவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் தன்னுடன் ஜமாஅத்தாக தொழுதவர்களை நபியவர்கள் வீட்டில் தொழ வழிகாட்டிவிட்டு வீட்டில் தொழுவதே சிறந்தது என்று சொன்னது அதன் சிறப்பு உயர்ந்தது என்பதைக் காட்டுகிறது.

அதே நேரம் நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடுக்கவுமில்லை. இத்தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என அஞ்சினேன். அவ்வாறு கடமையாக்கப்பட்டு விட்டால் அதை நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளமாட்டீர்கள். எனவே மக்களே உங்கள் வீடுகளில் தொழுதுகொள்ளுங்கள்.” என்று சொல்வதிலிருந்து ஜமாஅத்தாக தொழாத காரணத்தையும் சொல்லிவிடுகிறார்கள். ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ஒரு சிறப்பை நபியவர்கள் சொல்லியுள்ளார்கள்.

الجامع الصحيح سنن الترمذي – [ 806 ] عن أبي ذر قال صمنا مع رسول الله صلى الله عليه وسلم فلم يصل بنا حتى بقي سبع من الشهر فقام بنا حتى ذهب ثلث الليل ثم لم يقم بنا في السادسة وقام بنا في الخامسة حتى ذهب شطر الليل فقلنا له يا رسول الله لو نفلتنا بقية ليلتنا هذه فقال إنه من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة ثم لم يصل بنا حتى بقي ثلاث من الشهر وصلى بنا في الثالثة ودعا أهله ونساءه فقام بنا حتى تخوفنا الفلاح قلت له وما الفلاح قال السحور

“ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அல்லாஹ்வின் தூதர்  அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம்.  இன்றைய இரவின் எஞ்சிய பகுதியையும் எங்களுக்குத் தொழுவித்தால் என்ன என்று நபியவர்களிடம் நாம் வினவினோம். அதற்கு நபியவர்கள் இமாம் தொழுகையை முடிக்கும் வரை யார் இமாமுடன் நின்றுதொழுகிறாறோ அவருக்கு முழு இரவிலும் தொழுத நன்மை  எழுதப்படும் என்று  கூறினார்கள். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்”

ஆதாரம்: திர்மிதீ 768          அறிவிப்பவர்: அபூதர் ரழியல்லாஹ் அன்ஹ்

இது ஏற்றுக்கொள்ளத்தக் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்யப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்.இந்த ஹதீஸில் நபியவர்கள் ஜமாஅத்தாக இரவுத் தொழுகையை நிறைவேற்றுபவர் முழுத் தொழுகையையும் இமாமுமுடன் நின்று வணங்கினால் பாதி இரவு தொழுதாலும் முழு இரவும் வணங்கிய கூலி கிடைக்கும் என்கிறார்கள். ஜமாஅத்தாகத் தொழுவதிலும் ஒரு சிறப்பிருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. ஆனாலும் வீட்டில் பிந்திய இரவில் தொழுவதன் சிறப்பிற்கு இது ஈடாகாது. காரணம் இன்னொரு ஹதீஸில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

صحيح مسلم للنيسابوري – 1523 – دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ الْمَسْجِدَ بَعْدَ صَلاَةِ الْمَغْرِبِ فَقَعَدَ وَحْدَهُ فَقَعَدْتُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَ أَخِى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ صَلَّى الْعِشَاءَ فِى جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِى جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ ».

“யார் இசாவை ஜமாஅத்தாகத் தொழுகிறாரோ அவர் பாதி இரவு நின்று தொழுதவரைப் போன்றவர். யார் சுப்ஹை ஜமாஅத்தாகத் தொழுகிறரோ அவர் முழு இரவிலும் தொழுதவரைப் போன்றவர்

புகாரி: 1523                       அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹ் அன்ஹ்

இசா சுப்ஹ் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதாலே இந்தக் கூலி கிடைக்கும் என்று நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் விளங்கப்படுத்துவதால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதற்கு ஒரு சிறப்பிருந்தாலும் அது வீட்டில் பிந்திய இரவில் தொழும் தொழுகைக்கு ஈடாகாது என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts